Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் நீ இல்லாத இடமே இல்லை  நீ தானே உலகின் எல்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல தாயே | முழு பாடல் வரிகளுடன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஆஆ ஹா அஆஆ ஆஆ…..
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தந்தனா…..

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்

ஆண் : அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : முதலினை அறியாமல்…
முடிவினைப் புரியாமல்… ஹா ஆஆ…
நடுவினில் விளையாடும் மனிதா
உனை நீ உணர்ந்தாலே உயர்வாவாய்

ஆண் : சூதுவாதுகள் தீது சொல்லியே
வாழும் மனிதன் தானடா
நீதிக் கதைகளை எடுத்துச் சொல்லியும்
மாறாதிருப்பதேனடா

ஆண் : நீ கேட்டால் தர அவன் உண்டு
என்றும் அவன் இன்றி எது உண்டு
நாம் பாட நபி பெயர் உண்டு
நலன்கள் பெருகிடும் உனைக் கண்டு
சந்தனக் கூடு கண்டு
வந்தனம் செய்க இன்று
சொந்தமும் பந்தமும் ஒன்று சேர்ந்து

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : தொழுகை வழி தொட்டு
துணிந்து கொடி கட்டு
துணை யார் நபிகள் நாயகம்
தழுகை அமுதிட்டு
முழங்கும் புது மெட்டு
தளிரும் நமது தாயகம்

ஆண் : அல்லாவின் புகழ் அழியாது
அன்பு மொழியன்றி மொழி ஏது
மக்காவின் அருள் பெயர் ஓது
நித்தம் துணை வர துயர் ஏது

ஆண் : நன்மைக்குள் நன்மை என
உண்மைக்குள் உண்மை என
என்றைக்கும் நம்முடன்
வரும் ஜோதி..

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்

குழு : அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..
அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..

குழு : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே 

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே 

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே 
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே 
.
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே 
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே 

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே 

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே 
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே 
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே 
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே 

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே 
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
   அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
   பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
   பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவனின் கோவிலில்  
யாவரும் தீபங்களே  
பாவிகள் யாரும் இல்லை  
பேதங்கள் ஏதும் இல்லை

 

தேவனே என்னை பாருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
தெய்வத்தின் கட்டளை ஆறு 

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி 
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும் 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் 
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை.....
இதயம் சுமையில்லை.....

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை
என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
உம் அன்பு குறைவதில்லை

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெபமே என் வாழ்வில்

 

 

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )  
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து 
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் ) 
தில்லை அம்பலத்து இறைவனும் 
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் 
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே 
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே 
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே 
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை 
காணவரும் அடியார் எவராயினும் 
கனக மணி அசையும் உனது திருநடனம் 
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமலான் புனித ரமலான் 
புனித ரமலான் ஸ்பெஷல்
ரமலான் புனித ரமலான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் மணியோசை,
 நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
பாவிகள் மீதும்.., ஆண்டவன் காட்டும்,
 பாசத்தின், ஓசை.., மணியோசை.., 
தேவன், கோவில் மணியோசை, 

நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
ஊரார் வெறுத்தால், உலகம் பழித்தால்,
 உதவும், கோவில் மணியோசை.., 
தாயார்.., வடிவில்.., தாவி.., அணைத்தே.., 
தழுவும், நெஞ்சின், மணியோசை.., 
இது.., உறவினைக் கூறும், மணியோசை.., 
இவன், உயிரினைக் காக்கும்.., மணியோசை.., 
தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
அருமை மகனே.., என்றொரு வார்த்தை.., 
வழங்கும்.., கோவில், மணியோசை.., 
அண்ணா.., அண்ணா.., என்றோர் குரலில்..,
 அடங்கும், கோவில், மணியோசை.., 
இது ஆசைக் கிழவன்.., குரலோசை..,
 அவன், அன்பினைக், காட்டும்.., மணியோசை..,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
பாவிகள் மீதும், ஆண்டவன் காட்டும், 
பாசத்தின், ஓசை.., மணியோசை..,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.