Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்

3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


செம்மையானவள் துர்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் — உம்மைப்

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை போல மாறணுமே இயேசையா

நான் உம்மை போல மாறணுமே -2

உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை
உம்மை போல மாற்றிடுமே -2

1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே

உம்மை போல பரிசுத்தம் தாருமே

பரிசுத்த ஆவியால் நிரப்பியே

பரிசுத்த பாதையில் நடத்துமே

அன்புள்ள மனதுருக்கம் தாருமே

உம்மை போல அன்பாக மாற்றுமே

அன்புள்ள ஆவியால் நிப்பியே

அழகான பாதையில் நடத்துமே

2. சாந்தமும் தாழ்மையும் தாருமே

உம்மை போல மன்னிக்க உதவுமே

ஞானத்தின் ஆவியால் நிரப்பியே

பரலோக பாதையில் நடத்துமே

ஜெபத்தின் ஆவியை தாருமே

உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

உந்தனின் பாதையில் நடத்துமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட
பின்னும் குறையேதும் எனகேதடி சகியே  || 

அழகான மயில் ஆடவும் 
மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக)
காற்றில் அசைந்தாடும் கோடி போலவும் 

அகமழிந்திலவும் நிலவொளி தனிலே 
தனை மறந்து புல்லினம் கூவ 
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட 
தகுமிகு எனஒரு படம் பாட
தகிட ததுமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடை சூழ
என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி )

மகர குண்டலமாடவும் (கண்ணன்) 
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும் 
மிகவும் எழில்லாகவும் (தென்றல்)
காற்றில் மிளிரும் துகில்லாடவும் (அகமழிந்திலவும்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா( )

நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய ( )

வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து தோனுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும்
கானக்குழலோசை மயக்குதே ( )

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகிறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரின கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)
காளிங்கன் சிரத்திலே பதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை ( )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்பொடு  சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

 


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா...
இம்மையை நான் அறியாததா...
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா   பழ  வினையா 
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு  அலைந்திடும் பொருளற்ற  வாழ்க்கையும்  துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால்  தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு... சக்கர, சாமி .... வந்து,
ஜிங்கு... ஜிங்கு...  எண்டு,  ஆடுதாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இறைவா என் இறைவா உன் அருளை யாசிக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
கண்மணி போல காத்துக்கொள்ளும் - 2
கறைதிரை இல்லா வாழ்வளித்து 
பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும்

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
கண்மணி போல காத்துக்கொள்ளும் 

மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே 
மேய்த்திடும் மேய்ப்பன் உம் பின்னே செல்வேன் - 2
புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து 
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திச்செல்லும் - 2
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
கண்மணி போல காத்துக்கொள்ளும்

செட்டையில் உயர்த்திய தூக்கிச் செல்லும் 
கழுகினை போல என் பயங்கள் மாற்றும் - 2
வானிலும் பூவிலும் நிலை நிறுத்தும் 
வரங்களினாலே எனை நிரப்பும் - 2
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
கண்மணி போல காத்துக்கொள்ளும்

ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர் 
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் - 2
தோழ்களில் என்னை சுமந்து செல்லும் 
தோழரை போல அன்பு செய்யும் - 2
உம் அனைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும் 

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
கண்மணி போல காத்துக்கொள்ளும் - 2
கறைதிரை இல்லா வாழ்வளித்து 
பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா
(முகுந்தா முகுந்தா...)
வெண்ணை  உண்ட வாயால் ம‌ண்ணை  உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
(முகுந்தா முகுந்தா... )
என்ன செய்ய நானும் தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான்
(முகுந்தா முகுந்தா..)

நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்
உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதைபோலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஹே.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி  பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றங் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த் சிம்மமாகி இரணியனைக் கொன்றாய்
இராவணன் தன் தலையைக் கொய்ய இராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

(முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா)

உசுரோட இருக்கான் நான் பெத்த பிள்ளை
ஏனோ இன்னும் தகவல் வல்லே
வானத்துல இருந்து வந்து குதிப்பான்
சொன்னாக் கேளுங்கோ அசடுகளே
ஆராவமுதா அழகா வாடா
ஒடனே வாடா வாடா...
கோவிந்தா கோபாலா..

(முகுந்தா முகுந்தா..)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருகின்ற நேரம் கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக் குயிலோசைக்கிணையான
 தரமானக் குழலிசைக் கேழும்
போன ஆவியெல்லாம் கூட மீழும்

சல சலனமீ ட்டோடும் நதி பாடும் - வனம்
தங்கித் தங்கி சுழன்றாடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளி குதித்தோடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசை பாடும்

கண்ணன் நகைபோலும் முல்லை இணையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
கானமும் பொய்யொன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணனன்றி வேறு இல்லேன்

தாழை மடல் நீத்து நோக்கும் முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழிபேசிட இதுவே பொழுதெனவோ அது - வரும்
மாதவன் முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு 
நிலையானதொன்றும் இங்கில்லை 
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் 
நீ மட்டும் போதும் எப்போதும் 
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும்.

1.ஆசையில் பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து 
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை 
வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் 
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் 
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும்.

2.பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து 
பொழுதிங்கு போகுது கழிந்து 
உண்மைதனை உணர்ந்து உறுதியாக எழுந்தால் 
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு 
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கூடவே இரும் 
ஓ இயேசுவே
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும்
ஓ இயேசுவே
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆணீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாம் நீங்கதனப்பா
2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமாநீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனாணீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாம் நீங்காதானப்பா
 3.வியாதியின் நேரத்தில் வைத்யராநீரே
சோதனை நேரத்தில் நண்பரானீரே
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
எனக்கெல்லாம் நீங்கதானப்பா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இறைவனின் சந்தை மடம்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் 
உலகம் இறைவனின் சந்தை மடம் 
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் 
இதுவல்ல நமக்கு சொந்த இடம் 
இதுவல்ல நமக்கு சொந்த இடம் 
அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்.
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்

கருவூரில் இருந்து புறப்படுவான்
கருவூரில் இருந்து புறப்படுவான் 
கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான்
கருவூரில் இருந்து புறப்படுவான் தாயின் 
கருவூரில் இருந்து புறப்படுவான் 
கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான்

உறவோடு உரிமையும் கொண்டாடுவான் 
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன் 
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்

இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை
இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் 
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் 
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

 
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம் 
இதுவல்ல நமக்கு சொந்த இடம் 1
அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்...
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்

பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை
பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை 
அவன் இறந்ததும் தொழுகை உண்டு  பாங்குஇல்லை 
பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை
அவன் இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை

புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை 
புரியாதவன் அறிவு தெளிவதில்லை

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்


தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும்
தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் 
அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும் 
தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் 
அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும் 
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம்

நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ 
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும் 
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ 
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்

உலகம் இறைவனின் சந்தை மடம் 
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் 

இதுவல்ல நமக்கு சொந்த இடம் 
இதுவல்ல நமக்கு சொந்த இடம் 
அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல தாயே எங்கும் நிறைந்தாயே 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.