Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா – இனி
அச்சமென்ப தெனக்கில்லை

வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா

பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்க வா

வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ   ஆரோ   ஆரோ    ஆரோ
ஆ   ஆரோ   ஆரிரோ    ஆராரோ

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்

ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் தாங்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தை ஏன்

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே

வல்ல தேவ வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செந்தூர் இது திருச்செந்தூர் நீலக் கடல் அலைகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புல்லாய் பிறவி தர வேணும்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பாடியவர்: சுதா ரகுநாதன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
.
பல்லவி :

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா

புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….

அனுபல்லவி :

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென

சரணம் :

ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென  மலரடி பெய்துன்னை

தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே

சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !

தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(“தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்)

பாடல் எண் : 1
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

பாடல் எண் : 2
கீளார் கோவணமுந் திரு நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பெயர் தாங்கி ஒவ்வொரு செயலையும் நாங்கள் தொடங்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் 
தீங்கு என்னைஅணுகாது 
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் 
துளியும் என்னை நெருங்காது 

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் 
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் 
Chorus:
உயர் மலையோ சம வெளியோ 
இரண்டிலும் நீரே என் தேவன் 
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் 
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

#
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு 
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு 
விட்டு கொடுக்காத பேரழகு 
                                                       உயர் மலையோ
#
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் 
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு 
அட ஊர் என்ன சொன்னாலும் பார் 
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு 
நிகர் இல்லாத தகப்பனுக்கு 
                                                       உயர் மலையோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்பம்    : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
பாடல்        : சிவபுராணம் D V ரமணி
இசை         : சிவபுராணம் D V ரமணி
வீடியோ   : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

காந்தார பஞ்சமம்

திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே

நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமா ய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

வருக வருக திருமகளே வருக
தனம் தருக தருக மங்களங்கள் பெருக

குபேர லக்ஷ்மியே வருக
எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக

எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக

யக்ஷ ராஜன் மெச்சும் மோஹினி
பக்ஷி ராணி எனை ரக்ஷிப்பாய் நீ

கட்சி வரதனின் கனகவல்லியே
கச்சவ கர்வநிதி தாரும் அன்னையே

மட்சயவதாரனின் பாற்கடல் தன்னையே
துளியும் பிரியாத மட்சியகன்னியே

குறையா செல்வமே கோடி உண்டு உன்வசம்
வருகை தருவதற்கு அன்பு உண்டு என்னிடம்

அளிக்க சுமங்கலியே வா
மஹா பத்மநிதி பதுமநிதி தா

கோலக் கண்ணனின் கோதை ராதையே
குந்தமுகுந்தநிதி சிந்து பாவையே

எழவர் குழலே அலர்மேல் மங்கையே
ஏழு பிறவிக்கும் நீங்காது என்னையே

கோசை சங்கநிதி மஹாலக்ஷ்மி சீதனம்
ஆச குழந்தை மீது பார்வை வீசு சீக்கிரம்

நீல நிதியும் நீயே நித்தய ஸ்ரீநிதியே சிந்தாமணியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமலனாதிபிரான் | இசைத்தொகுப்பு : நித்யானுசந்தானம் | திருப்பாணாழ்வார் | பாராயணம் :  மாலோல கண்ணன் &  ரங்கநாதன் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா

அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்

காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரு உதருபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்

வாட்டமில் கண்கள் மேனி முனியேறித்தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பானர்தாள் பரவினோமே

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு  என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதில் அரங்கத்து அம்மான்
திருக்கமல பாதம் வந்து என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான்
அரைச்சிவந்த ஆடையின் மேல் சென்றதுஆம் என சிந்தனையே

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்தது
ஓர் எழில் உந்தி மேலதுஅன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே

சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன்

மதுரமா வண்டு பாட மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

பாரமாய பழவினை பற்றுஅறுத்து என்னைத்தன்
வாரம்ஆக்கி வைத்தான் வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன் அரங்கத்து அம்மான்
திருவார மார்பத‌ன்றோ அடியேனை ஆட்கொண்டதே

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேய அப்பன்

அண்டர் அண்ட‌ பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

கையினார் சுரி சங்கனல் ஆழியர் நீள்வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடியெம் ஐயனார்

அணிஅரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து

கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரிஓடி நீண்டவப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்

கோல மாமணி  ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்
நீல மேனி ஐயோ நிறை  கொண்டது என் நெஞ்சினையே

கொண்டல் வ‌ண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி  அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றுஒன்றினைக் காணாவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதினா எங்கள் தலைமையகம் மக்கள் விரும்பு இடம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் பல சென்றாலும்...கண்கள் மழை பெய்தாலும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காண்பேன் - (2)

1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே - (2)
அற்புதங்கள் நான் செய்திடுவேன் - (2)
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - (2)

2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன் - (2)
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - (2)
கவலைகள் யாவையும் போக்கிடுவேன் - (2)

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் - (2)
அத்திமரம் போல் செழித்திடுவாய் - (2)
நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் - (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாற்கடலில் அவதரித்த || திரிசக்தி || நித்யஸ்ரீ மஹாதேவன் || அம்மன் பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ் || இயற்றியவர் :  K V ஸ்ரீதரன் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்

பாடல்வரிகள் || LYRICS :

பாற்கடலில் அவதரித்த லக்ஷ்மியே
பாதம் நீட்டி உலகலந்தான் தேவியே

திருவேங்கடமால் பெருமாள் மதியே
அகலாதிருக்கும் அலர்மேல் மங்கையே

பத்மாசனி ஜெயஜானகி ஹரிமாதவன் துணையே
திருவாய் மலர்வாய் அருள்வாய் நின்தாழ் சரணம்

அம்மா . . . நின்தாழ் சரணம் . . .
அம்மா . . . நின்தாழ் சரணம் . . .

மங்கள மாங்கல்யம் சௌபாக்யமே
தந்திட மணிதீப விளக்கேற்றினேன்

மஞ்சள் குங்குமத்தால் அருளாசியே
தந்திட வந்தருள்வாய் நவராத்திரியே

பொன்மலை பொழிந்தாயே புகழ்காஞ்சி உமையே
கோலாசுரசம்ஹாரிணி பெரும்தேவியே

கண்பார்வை பொதுமம்மா கஜலக்ஷ்மியே
காலமெல்லாம் வாழ்ந்திருப்போம் உன்னை நம்பியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்புகழ் அமிர்தம் - திரு அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி பாடியவர் : பழனி K வெங்கடேசன் 
மிருதங்கம் : திருவண்ணாமலை T M சிவகுமார் 
வயலின் : Dr. D பத்ரி நாராயணன் 
முகர்சிங் : மதுரை V திருமுருகன் 
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் 
கடவுள் : முருகன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன், வடிவேலன், சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் 
விஜய் மியூஸிக்கல்

குருவாக வந்து அருளினான் கந்தன்
------------------------------------------------------------------------------
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
=======================================
பாடல்கள் :

பாக்கரைவி சித்திரமணி
மனக்கவலை யேதுமின்றி
அரையாடை இன்றி
அதலசேடனாராட
விறல்மாரனைந்து
தரணி தனில்
அண்டர்பதி குடியேற
அரோகரா அரோகரா
சேல்பட்டு அழிந்தது
நாடா பிறப்பு முடியாதோ
நாளென் செய்யும்
சிவனார் மனங்குளிர
தெய்வத் திருமலை
அதிருங்கழல் பணிந்து
மாணிக்க நிறை கங்கையாடி
வசனமிக வேற்றி
உன்னைத்தவிர மற்றொன்று
பழனிமலை முருகன்
கந்தர் அனுபூதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

520 
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதியிலே முளைக்கின்ற புல்லுக்கு விதை தந்தோன் யாரறிவீர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே
குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ...
நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்
என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா - 2

நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்
உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது
கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே
கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா - 2

எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல
நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை
எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம்
தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை - 2

தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே
அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன்
மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை
உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா - 2

எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார்
இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ
தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே
நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா - 2

தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே
ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம்
பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார்
நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் - 2

நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே
பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே
வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ
ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே - 2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிகிட்டு

பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிகிட்டு

பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா

பூப்போல சிரிச்சிகிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு

பூப்போல சிரிச்சிகிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு

ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா

ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா

கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா

கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா

பாம்பு படைசூழ்ந்திடவே
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா

பம்பை மேளம் முழங்கிடவே
பவனி வரும் முப்பாத்தா

பாம்பு படைசூழ்ந்திடவே
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா

பம்பை மேளம் முழங்கிடவே
பவனி வரும் முப்பாத்தா

நோன்பு கொண்டு தொழுபவரின்
நோய் தீர்க்கும் மாரியாத்தா

நோன்பு கொண்டு தொழுபவரின்
நோய் தீர்க்கும் மாரியாத்தா

வேண்டும் வரம் தந்து நம்மை
எப்போதும் காத்திடும் ஆத்தா

வேண்டும் வரம் தந்து நம்மை
எப்போதும் காத்திடும் ஆத்தா

சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா

சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா

பட்டு சேலை பளபளக்க குங்குமப்பொட்டு
சொலிசொலிக்க வெட்டருவாளுடன் மாகாளி
வினைகளை விரட்டிட ஓடி வந்தா

பட்டு சேலை பளபளக்க குங்குமப்பொட்டு
சொலிசொலிக்க வெட்டருவாளுடன் மாகாளி
வினைகளை விரட்டிட ஓடி வந்தா

எட்டுதிக்குகள் புகழ்மணக்க
கொட்டு வாத்தியம் இசையொலிக்க

எட்டுதிக்குகள் புகழ்மணக்க
கொட்டு வாத்தியம் இசையொலிக்க

பொட்டழகி பூமாயி பூவும்
பொட்டும் தந்து நிற்பா

பொட்டழகி பூமாயி பூவும்
பொட்டும் தந்து நிற்பா

எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா
வீராத்தா மேகாத்தா காளியாத்தா

எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா
வீராத்தா மேகாத்தா காளியாத்தா

பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிகிட்டு

பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிகிட்டு

பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா

பூப்போல சிரிச்சிகிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு

பூப்போல சிரிச்சிகிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு

ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா

ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா

கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா

கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழுகையை மறந்த மனிதர்களே... தொழுதிட வாருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு அன்பு 
இயேசு செய்த அறிமுகம்
உலகை வெல்லும் ஆயுதம்

அன்பு எனக்கில்லையேல்  நான் ஒன்றும் இல்லை
அன்பு இல்லையேல் பயன் ஒன்றும் இல்லை
அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே பிரதானம்
 
அன்பு ஒருபோதும் பொறாமைப்படாது
அன்பு ஒருபோதும் இழிவானதைச் செய்யாது
அன்பு ஒருபோதும் தன்னலம் நாடாது

அன்பு ஒருபோதும் இறுமாப்பு அடையாது
அன்பு ஒருபோதும் கோபம் கொள்ளாது
அன்பு ஒருபோதும் தீங்கு நினையாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலைக் கோடி தங்கக் கோயில் நாராயணி அம்மா
உன் குருவடி பாதம் சரணமடைந்தேன் குறைகள் இல்லையம்மா

வேல்விழியாளே நானுனைக் காண வேலூர் வந்தேனே
உன் காலடி கண்டே நீண்ட காலம் சுகமாய் வாழ்வேனே

நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி

தாமரைப்பூவில் வாழும் காமனின் தாயே
தயை செய்ய நேரமில்லையோ

பூ மகளே பொன்னருளே நானும் உன் மகள்தானம்மா
ஸ்ரீ மஹா லக்ஷ்மியே கண் பாராயம்மா

ஸ்ரீதர கேசவன் மாதவன் மார்பில் வாழும் ஸ்ரீமதியே
உன் திருவிளக்கேற்றி வணங்குகின்றேன் நற்றாரும் மாநிதியே

திருமகளே வரமருளே காலடியின் ஓரத்திலே நான் வாழ

ஆனந்த யோகம் நாளும் அளித்திடும் மாயே
அடியேனை மறந்தனையோ

ஸ்ரீபுரமே வாழ்பவளே ஸ்ரீரங்கன் மகிழ் தேவியே
நான் உன்னை பூஜித்தேன் மலர்த் தூவியே

ஜோதி அண்ணாமலை ஆதி திருமலை
இடையினில் வாழ்பவளே

உன் திருமலைக் கோடி வருபவர் கோடி
தருவாய்த் திருவருளே

பொன்மகளே மண்மகளே
யோகா சுப மங்களங்கள் எனை சேர

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.