Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் மணியோசை கோலமயிலாட்டம்
கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா

சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . .

அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா
சிரகிரி வேலவனை அழைக்குதம்மா

அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . .
அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . .

பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி
சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .

கருணைப்பொழியும் கந்தன்
கந்தசஷ்டி கவச நாதன்

கடம்ப மலரினிலே அலங்காரம்
குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும்

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .
மயக்குதம்மா..  நம்மை மயக்குதம்மா. .

செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு

சரவணபொய்கையிலே அபிஷேகம்
மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம்

சென்னிமலையின் நாண்டி
அவன் கண் மலர்ந்து காப்பாண்டி

தேவியர் இருவருடன் வருவாண்டி
அந்த தேவர்குலம் காத்த வேலனடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில் மீது விளையாடும் வடிவேலனே முருகனே 

உன்னை மனமார நினைப்பவருக்கு அருள் பாலனே -மயில்
கயிலை வாழ் ஜகதீஷன் மைந்தனே கந்தனே 

கலங்காது என்னை காக்கும் கருணாகரனே -
 ஸ்வரங்கள் - மயில்

வண்ண மயில் மீது - தோகை மயில் மீது ...
ஒருநாள் ஒரு தரமேனும் குமரா என்று அழைப்பவருக்கு 

கர்மவினை தீர்த்திடுவாய் கார்த்திகேயனே
அருள் பாரி சொரிகின்ற அவதாரனே 
அருணகிரி பாவில் வந்த பால முருகனே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே.

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாயOm namah shivaya

 

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

 

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…

அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…

அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய

அருணகிரீசனே… சிவமலை வாசனே…

அமுதென ஆகுமே… உன் திரு நாமமே…

அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே…

அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே…

ஓம் நமஹ… சிவனே நமஹ…

ஓம் நமஹ… ஹர ஓம் நமஹ…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

 

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…

என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…

என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய

மந்திர கீதமாய்… வந்தொலி செய்யுமே…

மாமலை உன்னையும்… உருகிட செய்யுமே…

பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே…

உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே…

ஓம் நமஹ… சிவனே நமஹ…

ஓம் நமஹ… ஹர ஓம் நமஹ…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய

ஹர ஹர சிவமாய் ஈஸ்வர லிங்கம்..

அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம்..


பிரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் 
நிர்மல நல்லொளி தேற்றிடும் லிங்கம்
கர்ம துக்கவினை
 நீக்கிடும் லிங்கம் 
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்..

பவித்ர லிங்கம் பரமேச லிங்கம் 
பசுபதி லிங்கம் பரமாத்ம லிங்கம்
பக்தியை தந்திடும் பரமலிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

தேவர்கள் முனிவர்கள் போற்றிடும் லிங்கம்
காமதகணக்கருலாகர லிங்கம்
ராவண தர்ப்பமருத்திடும் லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பருவ லிங்கம் சொரூப லிங்கம்
குபேர லிங்கம் குருபர லிங்கம்
முக்தியை தந்திடும் ஸ்ரீமூர்த்தி லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

நினைப்பதை எல்லால் கொடுத்திடும் லிங்கம்
நினைப்பவர் உள்ளத்தில் ஜொலித்திடும் லிங்கம்
நிரந்தர சுகம் தரும் நித்ய லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

பரப்பிரம்ம லிங்கம் சதாசிவ.லிங்கம்
திகம்பர லிங்கம் ப்ரவஹார லிங்கம்
நலம் பல செய்திடும் நாகேஷலிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

கனகமஹா மணி பூஜைக்குள் லிங்கம்
மங்கல தாமரை மாலைக்குள் லிங்கம்
வஞ்சனை பாவம் அகற்றிடும் லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

வேதாந்த லிங்கம் நாதாந்த லிங்கம்
பரம லிங்கம் ப்ரணவ லிங்கம்
அச்சம் தவிர்த்திடும் அச்சுத லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்..

தேவகணங்களும் போற்றிடும் லிங்கம்
தேய்வுறு பக்தியை ஈவது லிங்கம்
சாம்பலின் தத்துவம் விண்ணூற்ற லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்..

 காசி லிங்கம் கைலாச லிங்கம்
கற்பக லிங்கம் காயத்ரி லிங்கம்
காற்றுருவாகிய வாயு லிங்கம் 
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

வரங்களை கொடுத்திடும் ஸ்ரீஹர லிங்கம்
வந்தென்னை காத்திடும் வடமலை லிங்கம்
சித்தி அளித்திடும் பவித்ர லிங்கம் 
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

கரியம லிங்கம் ஸ்ரீ வர்ம லிங்கம்
நாக லிங்கம் பூஜித்த லிங்கம்
பித்துக்கள் போக்கிடும் பித்தளை லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

அரூப லிங்கம் அருள்தரும் லிங்கம்
சொரூப லிங்கம் சொர்ண லீங்கம்
அன்பர்கள் மனதினில் அமர்ந்திட்ட லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்
வில்வமதை மாலைக்குள் லிங்கம்
அன்புடன் அருளை கொடுத்திடும் லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

ஜம்பு லிங்கம் தத்துவ லிங்கம்
சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்
சங்கடம் தவிர்த்திடும் சுந்தர லிங்கம் 
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

குங்கும சந்தன லேவிட்ட லிங்கம்
குறைகளை தீர்த்திடும் சோபித்த லிங்கம்
சஞ்சலம் தீர்க்கும் சதாசிவ லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

ஆத்ம லிங்கம் அருள்தரும் லிங்கம்
அபூர்வ லிங்கம் மாணிக்க லிங்கம்
இன்பத்தை கொடுத்திடும் ஈஸ்வர லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

எட்டோடு பத்தெனும் தத்துவ லிங்கம்
எனைத்துமாம் தோற்ற முக்காரனை லிங்கம்
எட்டெனும் வருமைகள் நீக்கிடும் லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

ஓங்கார லிங்கம் ஒளிர்தரும் லிங்கம்
சந்திர லிங்கம் சதாசிவ லிங்கம்
சுடர் ஒளியான வினாசக லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

வேதத்தின் சாரத்தை உணர்த்திடும் லிங்கம்
வேண்டும் வரங்களை கொடுத்திடும் லிங்கம்
வளம்பெறும் வாழ்க்கையை தந்திடும் லிங்கம்
அருள்தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்
இமய லிங்கம் ஈஸ்வர லிங்கம்
சிதையாத நெஞ்சினில் சிலையான லிங்கம்
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்...

மொத்த சுகத்தையும் தந்திடும் லிங்கம் 
புத்திமிருத்தருள் காரண லிங்கம்
சோதனை போக்கிடும் சோமநாத லிங்கம்
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்....

ஜலேஸ்வர லிங்கம் ஜகம்புகழ் லிங்கம்
பழமை லிங்கம் பார்புகழ் லிங்கம்
மகிமை புரிந்திடும் மண்ணு லிங்கம்
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்....

மங்களம் அருளும் மாசற்ற லிங்கம்
ஐஸ்வர்யம் அளிக்கும் ஐஸ்வர்ய லிங்கம்
ஓங்கார வடிவாய் ஒளி தரும் லிங்கம்
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்....

கலியுக லிங்கம் காரண லிங்கம்
சத்திய லிங்கம் நித்திய லிங்கம்
அமரரை காத்திட்ட அச்சுத லிங்கம்
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்....


ஓம் நமச்சிவாயா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானத்தின் திறவுகோல்...நபி நாயகம் அல்லவா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே.

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாயOm namah shivaya

 

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

 

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…

அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய…

அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய

அருணகிரீசனே… சிவமலை வாசனே…

அமுதென ஆகுமே… உன் திரு நாமமே…

அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே…

அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே…

ஓம் நமஹ… சிவனே நமஹ…

ஓம் நமஹ… ஹர ஓம் நமஹ…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

 

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…

என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய…

என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய

மந்திர கீதமாய்… வந்தொலி செய்யுமே…

மாமலை உன்னையும்… உருகிட செய்யுமே…

பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே…

உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே…

ஓம் நமஹ… சிவனே நமஹ…

ஓம் நமஹ… ஹர ஓம் நமஹ…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி காக்கும்…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

 

அருமையான‌ ப‌க்தி பாட‌ல் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,
 பூலோகத்தாரே.
 
 யேசு நாமம் ஒன்றை நம்பும்;
 ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;
 பேசும் வேறே நாமமெல்லாம்
 பேருலகை ரட்சிக்காதே, - யேசு
  
  பார்த்திபன் தவீது குல
  கோத்திரக் கன்னிமரிபால்,
  நேத்திரம் போலே உதித்து
  நேமியின் ரட்சகனான, - யேசு
  
   பூதலத் தஞ்ஞான இருள்
   போக்கவே மெஞ்ஞான பெருஞ்
   ஜோதியாய் விளங்கும் நீதிச்
   சூரிய னான மகத்வ - இயேசு
     
    பாவிகளீடேற மோட்ச
    பாக்கியம் பெறுவதற்காய்
    ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
    சேணுலகுக் கேறிச் சென்ற, - யேசு
     
     விண்டலத்தவர்கள் சூழ,
     வெருண்டலகை பதறி வீழ;
     மண்டலத்தைத் தீர்வை செய்ய
     மாமுகில் மீதேறி வரும், - யேசு

 

8 minutes ago, பையன்26 said:

அருமையான‌ ப‌க்தி பாட‌ல் 

ஆமாம் பையன், கண்ணை மூடி கேட்க மனம் நல்ல அமைதியாக இருக்கும்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனைப்போல் ஒரு கருணை உள்ள தெய்வம் இருந்திட காணுதல் அருமையுமன்றோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் அலங்காரம் - மண்ணாலும் நாயகியே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவ ஓம் சிவ ஓம் ஹர ஓம் சிவ ஓம்
சிவமெனும் சதாசிவா . . .
அன்னையும் நீயே தந்தையும் நீயே
அழகிய தீயே எமை அருள்வாயே
அருணகிரி நாதனே . . .
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஜோதியும் நீயே சுந்தரம் நீயே
மதுரை சொக்கேஸ்வரனே
ஆனந்தம் நீயே ஆரம்பம் நீயே
பாரெங்கும் நீயே பனியிலும் நீயே
ராம லிங்கேசனே . . .
நீரிலும் நீயே காற்றிலும் நீயே
வானிலும் நீயே மண்ணிலும் நீயே
தில்லை நடராஜனே . . .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுகத்து வடிவுடையோனே
காத்திடவேண்டும் பிள்ளையாரப்பா
அண்டிவருவோர் குறைதீர்ப்பவனே
பானைவயிறு கொண்டவன் நீயே
பற்றிடவந்தோம் உன்திருப்பதமே
ஊனை துறந்து உயிரை துறந்து
உன்னடிவந்து சேர்ந்திடவேண்டும்
வானவர் போற்றும் வலிவுடையோனே
வக்கிரதுண்ட நாயகன் நீயே
பார்வதிதேவி திருமுகத்தொளியே
பணிந்திடுவோமே உன்திருவடியே
சிவனாருக்கு மூத்தவன் நீயே
செவிக்கும்பேரை காத்திடுவாயே
சிவகாமசுந்தரி உந்தன் அன்னை
உன்னை பணிந்தால் துயரம் இல்லை
அவலுடன் பொரியும் அப்பம் உனக்கு
அன்புடன் நாங்கள் படைத்திடுவோமே
மகிழ்வுடன் நீயும் ஏற்றிடுவாயே
மனக்குறை யாவும் தீர்த்திடுவாயே
புகழுடன் வாழ வைத்திடுவாயே
புவியோர்க்கெல்லாம் அருள்செய்வாயே
காக்கையின் வடிவில் வந்தவன் நீயே
காவிரி நதியை தந்தவன் நீயே
உருமாமுனிவர் அகத்தியர் முன்னே
சிறுவன் வடிவில் நின்றவன் நீயே
தலையில் உன்னை குட்டிடும்போதே
தவறை உணர செய்தவன் நீயே
என்னை எண்ணி எவர்தன் தலையில்
குட்டு இடுவார் தரு நான் செய்தே
என்றே சொன்ன இறைவன் நீயே
எங்கள் பிழையை பொறுத்திடுவாயே
ஆணவத்துடனே இறுமாந்திருந்த
ஆதிசேடனின் அன்பினை ஏற்று
அவன் தலைகள் அழகுற செய்து
அருளும் தந்த ஐகரத்தோனே
ஆலயனாகி வானவர்க்கெல்லாம்
மலையாய் இடரும் நேர்ந்திடும் போதில்
ஞாலம் உய்ய நல்லருள் சிந்த
திருவடிவெடுத்த கணபதி நீயே
காலம் தோறும் உந்தன் பெருமை
கவியால் பாட அருளிடுவாயே
வியாச முனிவர் வேண்டுதல் கேட்டு
ஞானதந்தம் கையில் பிடித்து
மேரு மலையின் மீதில் அமர்ந்து
பாரதம் தன்னை தந்தவன் நீயே
மஞ்சளில் உன்னை பிடித்திடுவோமே
மங்களம் நீயும் தந்திடுவாயே
நெஞ்சினில் என்றும் உன்திருநாமம்
நிலைத்தே இருக்க அருளிடுவாயே
சங்கத்தமிழால் பாடிடவந்தோம்
சந்திரன் முடியில் அணிந்தவன் நீயே
விக்னேஸ்வரன் விக்கினராஜா
சிக்கலையெல்லாம் தீர்த்திடுவோனே
பக்கத்துணையாக இருப்பவன் நீயே
பணிந்திடுவோரை காத்திடுவாயே
பாலுடன் தயிரும் படைத்திடுவோமே
பதமலர் நாளும் வணங்கிடுவோமே
சந்தனம் உந்தன் மேனியில் பூசி
சங்கடம் தீர்க்க வேண்டிடுவோமே
வல்லபை தன்னை மணந்தவன் நீயே
வரங்களை அள்ளிதந்திடுவாயே
எண்ணியதெல்லாம் ஈடேறுமப்பா
எல்லாம் வல்ல முழுமுதலோனே
திருமால் பெற்ற பன்னிருபெண்ணும்
தேவியராக உன்னிடம் வந்தால்
வன்னியிலையும் மந்தாரப்பூவும்
வைத்து வணங்கும் அன்பருக்கெல்லாம்
பொன்னும் பொருளும் தந்திடுவாயே
புத்தியும் சித்தியும் கொண்டிருப்பவனே
தும்பிக்கைக் கொண்ட தூயவன் நீயே
தொழுதிடவந்தோம் உன்னடிதானே
அருகின் பெருமை ஆயிரம் உண்டு
அருகால் உன்னை அர்ச்சனை செய்தால்
அருகில் நன்மை அண்டிவருமே
அருளை நாளும் அள்ளித்தருமே
சதுர்த்தியில் செவ்வாய் வந்திடும் நாளில்
விரதம் இருந்தால் நலம் தருவாயே
பவளப் பிள்ளையா வடிவம் கொண்டு
பக்தரை காக்கும் தெய்வம் நீயே
கபிலர் போற்றிய நாயகன் நீயே
கலைகள் என்றும் காத்திடுவாயே
அனலாசுரனை அழித்தவன் நீயே
அருகால் வெப்பம் தணிந்தவன் நீயே
மனத்தால் உன்னை எண்ணிடும்போதே
மலையாய் வந்த இடர் நீங்கிடுமே
ஆயிரம் பூக்கள் பூமியில் உண்டு
ஆயினும் உனக்கு அருகே போதும்
மயிலும் சிங்கம் உன் வாகனமே
மகோற்கடராய் வந்தவன் நீயே
நறுமண புகையால் வணங்கிடுவோமே
நல்லருள் வேண்டும் தந்திடுவாயே
ஐந்து திருமுகம் கொண்டவன் நீயே
ஐகரத்தாலே அருளிடுவாயே
சிந்தாமணியை மீட்டவன் நீயே
சிரம்பணிந்தாரை காப்பவன் நீயே
உன்தாழ் பணிய வந்தோமய்யா
உலகம் ஆளும் உயர்ந்தோன் நீயே
கந்தனை வள்ளி கைபிடித்திடவே
கஜரூபத்தில் வந்தவன் நீயே
அன்புடன் உன்னை வணங்கிடுவோரை
அவயம் தந்து காத்திடுவாயே
நித்திய பெருமை கொண்டவன் நீயே
உன்னை பணிந்தால் நன்மைகள் தானே
நித்தம் உன்னை நினைப்போம் அய்யா
நெஞ்சினில் என்றும் வைப்போம் அய்யா
சித்தம் எல்லாம் குடியிருப்பவனே
சேவிக்க வந்தோம் உன்திருவடியே
பக்தருக்கெல்லாம் காவலும் நீயே
பணிந்திடவந்தோம் உன்னைத்தானே
சக்தியின் மூத்த பிள்ளையும் நீயே
சஞ்சலமெல்லாம் தீர்த்திடுவாயே
தொழுதிட வந்தோம் உன்னிடம் தானே
தொல்லைகள் யாவும் தீர்ப்பவன் நீயே
மந்திரம் இல்லை மாயமும் இல்லை
மனதால் நினைக்க துன்பங்கள் இல்லை
முந்திய வினைகள் நீக்கிடுவோனே
மூஞ்சூறுமீது வந்தவன் நீயே
சிந்தையில் உன்னை வைப்பதனாலே
செய்வது எல்லாம் வெற்றிகள் தானே
தந்தையும் தாயும் நீயே என்று
தாரணி உன்னை போற்றுது அய்யா
க்ருபாகரனே கீர்த்தி நாயகா
கேட்டது எல்லாம் தருவாயப்பா
உடும்பியாக வந்தவன் நீயே
உலகோர் இடரை தீர்த்தவன் நீயே
கரிமாமுகனே கடைக்கண் பாராய்
கணேஷா எங்கள் குறைகள் கேளாய்
அரிமா தன்னில் அமர்ந்தவன் நீயே
அகிலம் தன்னை காப்பவன் நீயே
புரிவாய் என்றும் பேரருள் நீயே
போற்றிடவந்தோம் உன்திருவடியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.

* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.

எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.

* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போவோம் மதீனா... புகழ் பாடியே நாம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கமில்லை கலக்கமில்லை உம்மை நம்பினோருக்கு கலக்கமில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்திருஷ்டி விநாயகா | விநாயகர் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி    
  சனிபாம்பி ரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  1 


என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 
  எருதேறி யேழையுடனே    
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்    
  உடனாய நாள்க ளவைதாம்    
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  2 


உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து    
  உமையோடும் வெள்ளை விடைமேல்    
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி    
  திசை தெய்வ மான பலவும்    
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  3 


மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து    
  மறையோதும் எங்கள் பரமன்    
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்    
  கொடுநோய்க ளான பலவும்    
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  4 


நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்    
  விடையேறு நங்கள் பரமன்    
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்    
  மிகையான பூத மவையும்    
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  5 


வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்    
  மடவாள் தனோடு முடனாய்    
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்    
  கொடுநாக மோடு கரடி    
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  6 


செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக    
  விடையேறு செல்வ னடைவார்    
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்    
  வினையான வந்து நலியா    
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  7 


வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து    
  மடவாள் தனோடும் உடனாய்    
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்    
  இடரான வந்து நலியா    
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  8 


பலபல வேடமாகும் பரனாரி பாகன்    
  பசுவேறும் எங்கள் பரமன்    
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்    
  வருகால மான பலவும்    
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  9 


கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு    
  குணமாய வேட விகிர்தன்    
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்    
  திருநீறு செம்மை திடமே    
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  10 


தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி    
  வளர்செம்பொன் எங்கும் நிகழ    
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து    
  மறைஞான ஞான முனிவன்    
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து    
  நலியாத வண்ணம் உரைசெய்    
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்    
  அரசாள்வர் ஆணை நமதே.  11 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆசைகள் மனதினிலே
அந்த சிரகிரி வேலனை நினைக்கையிலே

அருகே அழைத்தான் பக்தியிலே

அவன் அமுதாய் இனித்தான் பழநியிலே

ஆதி பழநியிலே சென்னிமலையினிலே

கருணைப்பொழியும் முருகையா
கையேந்தி நின்றேன் வேலய்யா

மயிலில் வரணும் கந்தய்யா
என்மன வீட்டில் முருகையா

முருகா... முருகா... முருகா... முருகா...

சக்தியின் மகனின் பழநியிலே
எழில் தைப்பூசத் திருநாளில் தேரினிலே

அடியார்கள் நின்றனர் நினைவினிலே

முருகன் அருளால் மலர்வேன் வாழ்வினிலே

என் வாழ்வினிலே . . .

தமிழும் அமுதாய் இனித்திடுமே
அந்தச் சென்னிமலை முருகன் திருப்புகழுமே

சொல்லச் சொல்ல வாய் மணக்கும்

இதை உணர்ந்தவர் வாழ்வு தேனாகும்

என்றும் தேனாகும் . . .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
நிலாவென குளிர்ந்திடும் ஸ்ரீனிவாச சந்நிதி

குபேரன் வாரி வழங்கிடும் சங்கம் பத்மம் இருநிதி
திருமகள் உறைவிடம் வருபவருக்கு நிம்மதி

ஒரே ஒரு தரம் திருமலைக்கு வந்திடு
கடவுளை நேரிலே காணலாம் வந்திடு

நினைத்தது கிடைத்ததும் மீண்டும் வந்து நின்றிடு
நித்தமும் அற்புதம் நிச்சயம் கண்டிடு

உலகமே திரண்டிடும் அதிசயம் கண்டிடு
அனுபவம் சொல்லிடும் அதனை அறிந்திடு

பழகிடும் அடியவர் பக்தியை ஏற்பவன்
கவலைகள் தீர்ப்பவன் கழலடி தொழுதிடு

ஓம் எனும் ஒலியினை சங்கது உணர்த்திடும்
உச்சியை தொட்டதும் சக்கரம் அழைத்திடும்

தானினை விட்டதும் தாழினை பற்றலாம்
ஞானமும் கிட்டிடும் வானினை எட்டலாம்

சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
நிலாவென குளிர்ந்திடும் ஸ்ரீனிவாச சந்நிதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்மறைச் சோலையில்... வள்ளல்நபி பாதையில் || இசை முரசு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2.  இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோள் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.