Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
கண்ணா எங்களை காப்பவனே உன்னை என்றும் மறவேனே

க்ஷேத்ர பலனே நலம் வழங்கும் ஈசனே

நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்

அடியவர் போற்றும் பைரவனே ஆனந்த வாழ்வு தருபவனே
திருவடி நாளும் வணங்கிடுவோம் கவலைகளெல்லாம் மறந்திடுவோம்

உன்னை நினைத்து தொடங்கும் எதுவும் வெற்றியாகுமே
துன்பம் துயரம் தொல்லைகளெல்லாம் விரைந்து ஓடுமே

உன்னைத்தான் கேட்கிறேன் மௌனமாய் இருக்கத் தகுமோ

கண்கள் கசிந்து உள்ளம் சிலிர்த்து வணங்குவேனே
கயிலைநாதன் உந்தன் புகழை முழங்குவேனே

முக்கண்ப் படைத்த செஞ்சடையானே காலபைரவா
முன்வினைத் தீர்க்க நல்வினை சேர்க்க நேரமல்லவா

உன்னை நான் பாடினால் நெஞ்சிலே அச்சம் வருமோ

தேய்பிறை அஷ்டமித் திதியில் உன்னை வணங்குவேனே
தேவைகளெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டுவேனே

எதிரியின் அச்சம் எளிதில் நீங்கும் உன்னை வேண்டினால்
ஏற்றம் வாழ்வில் நாளும் சேரும் உன்னை நாடினால்

உன்னை நான் போற்றினால் விதியும் என்னைத் தொடுமோ

ஆயிரம் பிறவி நானும் எதுத்து வணங்குவேனே
அம்பலவாணன் உந்தன் பெருமை முழங்குவேனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணக்கின்ற துளசி மனமார சாற்றி

கல்யாண வைபோகம் கண்டேன்
ஸ்ரீநிவாசன் கல்யாண வைபோகம் கண்டேன்

அழகிய மார்பில் அலர்மேல் மங்கையின்
திருமுகம் வரம் தருமே..திருமுகம் வரம் தருமே

தாமரை பூமுகமே தாங்கிடும் திருமகளே
திருமால் மார்பினிலே திருவருள் பொழிபவளே

நாராயணா லக்ஷ்மிநாராயணா
நாராயணா ஸ்ரீமன்நாராயணா

ஸ்ரீதேவி பூதேவி பூஜிக்கும் மலர்முகம்
நான் காண ஏங்கினேன்

நினைவெனும் கனக இறைமாலையாய்
சூட்டவே உன்னை தேடியே வந்தேன்

கருவிழி இரண்டும் கருணை பொழிந்திட
நறுமலர்மாலை மார்பில் துலங்கிட

அகத்திலே உனைவைத்தேன் அண்டி
சரணடைந்தேன் அரைக்கணம் இனி அகலேன்

சுழலும் சக்கரமும் சுடர்விடும் சங்கும்
கோவிந்தன் நாமமும் துணைவருமே

இணையிலா அமுதனே இனிக்கும் உன்நாமம்
அணைத்திடும் தாய் உன் அருட்கரம்தானே

பரமன்பதம்பெற பரிந்தருள்வாயே
திருப்பதி வேங்கடநாதா

கோடித்தவம் செய்தோம்
வேதப்பொருள் கண்டோம்

சார்ந்திடும் உன்னை பரந்தாமனே

பாற்கடல் உறையும் ஹரியைகண்டோம்
திருமலை திருப்பதி சந்நிதி வந்தோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாத்தமுன் நபி தோட்டத்திலே... கதிஜா மலர்க் கொடியினிலே || T.M.சவுந்தர்ராஜன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் க்லீம்  குமாராய குங்கும வர்ணாய
மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய
பேராசைஞ விக்ரம்ச காய
வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ
சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ
தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தந்ன சண்முக ப்ரசோதயாத்

வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே

கந்தனின் அழகை காண்கையிலே
என் கண்களும் குளிர்ந்தது காலையிலே

கண்களும் குளிர்ந்தது காலையிலே

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

மலையினிலே . . . சென்னிமலையினிலே . . .

முருகா முருகா முருகையா
உருகாதோ உந்தன் மனமய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
என் கண்களில் நீரும் கசியுதய்யா

உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்டதும் கவலைகள் பறந்தய்யா

மலையினிலே . . . ஆதி பழநியிலே . . .

காலடி ஓசையை கேட்டேனம்மா
வருவது குகனென்று அறிந்தேனம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா
என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

அலங்கார தீபம் அழைக்கின்றதே
அந்த சிங்கார சென்னிமலையினிலே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே
அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
 
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
 
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா
 
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
 
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயமே லாகாயா
 
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
சேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
 
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
 
நேணவிராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணணே
 
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
 
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணை மழையில்

 

கருணை மழையில் நனைந்தேன் 
கவிதை விழியில் பறந்தேன் 
உயிரே உயிரே உனிலே சரணம் அடைந்தேன்
உறவின் புனிதம் அடைந்தேன் - 2

தாய்மையின் தேடலில் தோன்றிடும் போலிகள் 
வாழ்வின் வேலியல்லவா - அதில் 
விழைவது வலியல்லவா - 2
உணர்வினில் தோன்றி உயிர் கொடி தீண்டி 
உதித்தெழும் உறவுகளே - உயிர் 
நிறைந்திடும் மகிழ்வல்லவா 
உருகிடும் உடல் வழியே 
உயர்ந்திடும் அருட்திரியே - 2
இழந்திடும் கர்வம் இணைந்திடும் இதயம் 
இருப்பினில் இன்பம் இதுவே - 2

இரக்கத்தை சுரந்திடும் இதயத்தின் சுனைகளில் 
பொங்கும் புனிதம் அல்லவா - அது
புண்ணிய நதியல்லவா - 2
தன்னலம் கரைந்து தியாகத்தில் குழைந்து 
வளர்ந்திடும் கனி தருவேன் - நான் 
கும்பிடும் மரமல்லவா 
எழுந்திடும் திசைகளிலே 
சிறகுகள் விரிகின்றதே - 2
புன்னகை பூக்கும் பூமியை நோக்கும் 
நெஞ்சினில் என்றும் இன்பம் - 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணரவைக்கும் இப்ராஹிம் நபியின் தியாகப் பெருநாள் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது      நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது      விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது      கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும      யங்கலாமோ?

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி      கந்தவேளே!

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது      ரங்கவீரா!

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென      நின்றநாதா!

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர்      தம்பிரானே!

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.