Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
     குலாவியவ மேதி ரிந்து      புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
     எலாவறுமை தீர அன்று      னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
     சுகாதரம தாயொ ழுங்கி      லொழுகாமல்

கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
     கிலாதவுட லாவி நொந்து      மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
     சொலேழுலக மீனு மம்பை      யருள்பாலா!

நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
     நபோமணி சமான துங்க      வடிவேலா!

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
     பசேலெனவு மேத ழைந்து      தினமேதான்

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
     விராலிமலை மீது கந்த     பெருமாளே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே

சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ...

சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே

முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . .

பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ...

பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ...

வாடாத பூமாலை அலங்காரம்

பாடாத நாவும் திருப்புகழ் பாடும்

கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும்

சென்னிமலை மேலே மயிலாடும்

தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ...

தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ...

வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ...

வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ...

நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக

முருகாவெனும் நாமம் எதிரொலிக்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கல நிலவே மாமரி அன்னையே 
வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே - (2) 
இறைவழி நின்று விரைந்தெம்மை காக்கும் 
சுகம் த௫ம் சுந்தாியே தாயே சுகம் த௫ம் சுந்தாியே 
மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(4) 

வேளாநகர் போற்றும் காவியமே 
வேளையில் துணை நிற்கும் காவலியே - (2) 
வரங்களை பொழியும் வான் மழையே 
வ௫முன் காத்திட வ௫பவளே - (2) 
மங்கல நிலவே மாமரி அன்னையே 
வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே 
மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(2) 

இறைவுளம் விளங்கிட உனை தந்தாய் 
மகனையே தந்திட எமை மீட்டாய் - (2) 
வழிகளை காட்டியே முன் சென்றாய் 
அவர் வழி நடப்பது முறை என்றாய் - (2) 

மங்கல நிலவே மாமரி அன்னையே 
வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே - (2) 
இறைவழி நின்று விரைந்தெம்மை காக்கும் 
சுகம் த௫ம் சுந்தாியே தாயே சுகம் த௫ம் சுந்தாியே 
மங்கல நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(4)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்து தமிழ் மாலை சிந்துபைரவியில் முருகா நான் உனக்கு தர வேண்டும்

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் 
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் 
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ 
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான் 
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் 
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும் 
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே 
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் 
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.

நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது 
நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் 
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை 
மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய 
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் 
உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் 
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே 
பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே 
அன்புடனே ஆதரிக்கும் 
தெய்வமும் நீயே 
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே 
தந்தை முகம் தாயின் முகம் 
கண்டறியோமே
மன சாந்தி தரும் இனிய சொல்லை
கேட்டறியோமே
எங்களுக்கு அன்பு செய்ய 
யாருமில்லையா
இதை அறியாமலோ முருகா
முருகா உன் கருணையில்லையா
முருகா முருகா முருகா 
முருகா முருகா முருகா 
அம்மாவும் நீயே அப்பாவும் நீய 
பூே ணை நாயும் கிழியும் 
கூட மனிதர் மடியிலே
பெற்ற  பிள்ளை போல
நல்லுறவாய் கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் 
இனிமை காணுதே  இதை
அரியாயோ முருகா 
உன் கருணை இல்லையா 
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி) 

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உனை
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன் அடியில் வைத்தேன் 
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா (விழி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குரு நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா...

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
கருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபனிஷத்-கதிதார்த னிதே |
ஹ்றுதயே கலயே விமலம் சரணம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 ||

கருணா வருணாலய பாலய மாம் 
பவஸாகர துஃக விதூன ஹ்றுதம் |
ரசயாகில தர்ஶன தத்த்வவிதம் 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 2 ||

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா 
னிஜபோத விசாரண சாருமதே |
கலயேஶ்வர ஜீவ விவேக விதம் 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 3 ||

பவ எவ பவானிதி மெ னிதராம் 
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 4 ||

ஸுக்றுதே‌உதிக்றுதே பஹுதா பவதோ 
பவிதா ஸமதர்ஶன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம் 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 5 ||

ஜகதீமவிதும் கலிதாக்றுதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலதஃ | 
அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 6 ||

குருபுங்கவ புங்கவகேதன தே 
ஸமதாமயதாம் ன ஹி கோ‌உபி ஸுதீஃ |
ஶரணாகத வத்ஸல தத்த்வனிதே 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 7 ||

விதிதா ன மயா விஶதைக கலா
ன ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ | 
த்றுதமேவ விதேஹி க்றுபாம் ஸஹஜாம் 
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 8 |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
 
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்மேல் கருணை வரவில்லையோ

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.