Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா   என்   வாழ்வு வலம்காண கடைகண் பாரையா  கடைகண் பாரையா  உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா.           பள்ளம் நோக்கி பாய்ந்துவரும் வெள்ளம் என அருள்படைத்த வல்லலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே        பள்ளம் நோக்கி பாய்ந்துவரும் வெள்ளம் என அருள்படைத்த வல்லலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே                உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா.   தென் பழனி மலைமேலேன தண்டபாணி கோலத்திலே கண்குளிரகண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் இன்னும் அருள்படைத்த வடிவம் தோன்றுமே தென் பழனி மலைமேலேன தண்டபாணி கோலத்திலே கண்குளிரகண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள் வடிவம் தோன்றுமே.    உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என் வாழ்வு வலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா   ஆடி வரும் மயில் மேலே அமர்ந்துவரும் பேரலகே நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா வாழ்வில் நலம்அனைத்து.  பெறஅருல்வா முருகையா ஆடி வரும் மயில் மேலே அமர்ந்துவரும் பேரலகே நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா வாழ்வில் நலம்அனைத்து பெறஅருல்வா முருகையா உல்லத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையாநின் மகனே வேலய்யா என்வாழ்வுவலம்காண கடைகண் பாரையா கடைகண் பாரையா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அக்குபர் |Allahu Akbar | நாகூர் ஹனிபா | தமிழ் முஸ்லீம் பாட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4

1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2

2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன பூக்கள் சிரிக்குது 
எங்கும் சிங்காரமாய் வண்டு பாடுது (2)
என்ன நினைத்து இந்த இன்ப அலையோ - 2
மன்னன் இன்று வந்த இரவில்

நெஞ்சில் உனக்கோர் இடம் தந்து ரசிப்பேன்
பூபாளம் உனக்காய் நான் பாடுவேன் (2)
எந்தன் விழி வாசலிலே நான் 
உனக்காய் காத்திருப்பேன் (2)
என் வாழ்வின் செல்வம் நீயாகுவாய்
இந்த ஏழையின் கனவும் நீயாகுவாய்
மன்னன் இன்று வந்த இரவில்

உந்தன் வரவால் மனம் பொங்கி மகிழும்
ஓயாத துன்பங்கள் எனை நீங்கிடும் (2)
நிலையான என் சொந்தமே 
மனம் நிறைவான என் பந்தமே (2)
என் மனக் கோட்டையில் பூவாகுவாய்
என் வாழ்வு மலர்ந்திட வழியாகுவாய்
மன்னன் இன்று வந்த இரவில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று அடைவேனோ
பகைகொள்துரி யோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பூர  நாயகியே .! கனகவல்லி ,
காலி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிகோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

                                    ----   கற்பூர  நாயகியே

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமைச் சிறியோனை நீ ஆதரி  

                                  ----   கற்பூர  நாயகியே

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே..! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரை துடைத்துவிட ஒடிவாம்மா
காத்திருக்க வைத்திருத்தல் சரியோ அம்மா
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு

                                 ----   கற்பூர  நாயகியே

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நா உன்னையே பாட வேண்டும்
பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுரம் மாரியம்மா
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா

                               ----   கற்பூர  நாயகியே

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்குச்   சொல்லலாமா..
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா

                             ----   கற்பூர  நாயகியே

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டா
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டா
கண்ணுக்கு இமையின்று காவலுண்டோ
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணைக்கும் விளக்குக்கும் பேத முண்டோ
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ

                            ----   கற்பூர  நாயகியே

அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என் காத்து கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் வாழ வேண்டும்

                          ----   கற்பூர  நாயகியே

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன் எழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

                        ----   கற்பூர  நாயகியே

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை

                       ----   கற்பூர  நாயகியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்நாளும் உம்மை மறவேன்... யாரஸூலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

உலகம் தோன்றிட காரணமான... உத்தம நபி மகள் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அனுப்பும் தெய்வமே உம் மக்களின் விடுதலைக்காய் (2)
என்னைத் தேர்ந்ததுவும் நீதான் என்றாய் 
என்னை அழைத்ததுவும் நீ தான் என்றாய் (2)

நான் சிறுவன் என்றேன் சொல்லாதே என்றாய் 
ஐயோ பயம் என்றேன் அஞ்சாதே என்றாய் (2)
பேசவும் தெரியாது என்றேன் பேசுவதோ நீ என்றாய் 
அசுத்த உதடுகள் என்றேன் அன்பின் தீயினால் சுட்டு விட்டாய் 
 
        என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் 
 பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் 
 கட்டவும் நடவும் இன்று நான் உன்னைப்
 பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்

நான் கலங்கி நின்றேன் கலங்காதே என்றாய் 
நான் தயங்கி நின்றேன் ஏன் தயக்கமென்றாய் (2)
பாதையும் தெரியாது என்றேன் பாதையுமே நீ என்றாய் 
தகுதிகள் எனக்கில்லை என்றேன் உந்தன் 
ஆவியால் என்னைத் தொட்டு விட்டாய் - என்னை அனுப்பும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று அடைவேனோ
பகைகொள்துரி யோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா (2)

1. எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனையாள்பவா (2)
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு -2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா

2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா (2)
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே -2
நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பனே விரைவில் வா - உன்
அடியேனைத் தேற்ற வா

1. பாவச் சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன்
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன்
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்
இதயம் நொந்து அழுகிறேன்
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன்

4. ஏழ்மை நிலையில் இருக்கிறேன்
என்பு உருகிக் கிடக்கிறேன்
வாழ்வின் விளக்கே உன்னையே நான்
வாழ்வின் துணையாய் பெறுகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளியில் நடந்துவா சகோதரா
ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா
வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா (2)
இயேசு நம் ஒளி -3 (2)

1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை (2)
மீட்கும் தேவன் அவரன்றோ - 2
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ

2. அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை
அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை (2)
நிரப்பும் தேவன் அவரன்றோ - 2
இன்பத்தின் இறைவன் அவரன்றோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் 
பரம் குன்றம் ஏறி நின்ற குமரா என்று 

பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான் 
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான் 

தேவியர் இருவர் மேவிய குகனே 
திங்களை அணிந்த சங்கரன் மகனே 
பாவையர் யாவரும் பாடிய வேந்தனே 
பொன்  மயில் ஏறிடும் ஷண்முகநாதனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)

அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால் - சிறு
பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திடப் (பிச்சை)

அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும்
பாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையால் பழ வினையால்
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜடாடவீக லஜ்ஜல ப்ரவாஹ பாவிதஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும் கமாலிகாம்  
|
டமட்ட மட்ட மட்ட மன்னி னாதவட்ட மர்வயம்

சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 ||

ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமன்னி லிம்ப னிர்ஜரீ-
-விலோலவீசி வல்லரீ விராஜமான மூர்தனி |

தகத் தகத் தகஜ்ஜ்வலல் லலாட பட்டபாவகே
கிஶோரசம் த்ரஶே கரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 ||

தராதரேம் த்ரனம் தினீ விலாஸபம் துபம்துர
ஸ்புரத்திகம் தஸம்ததி ப்ரமோதமான மானஸே |
க்றுபா கடாக்ஷ தோரணீ னிருத்த துர்தராபதி
க்வசித்தி கம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 ||

ஜடாபுஜம் கபிம்களஸ் புரத்பணா மணிப்ரபா
கதம்ப கும்குமத்ரவப் ரலிப்ததிக் வதூமுகே |
மதாம்தஸிம் துரஸ்புரத் த்வகுத்தரீய மேதுரே
மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி || 4 ||

ஸஹஸ்ர லோசன ப்ரப்றுத்ய ஶேஷலேக ஶேகர
ப்ரஸூன தூளிதோரணீ விதூஸ ராம்க்ரிபீடபூஃ |
புஜம் கராஜ மாலயா னிபத்த ஜாடஜூடக
ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம் துஶேகரஃ || 5 ||

லலாட சத்வ ரஜ்வலத் தனம்ஜயஸ் புலிம்கபா-
-னிபீதபம் சஸாயகம் னமன்னி லிம்ப னாயகம் |
ஸுதாம யூக லேகயா விராஜ மான ஶேகரம்
மஹாக பாலிஸ ம்பதேஶி ரோஜடால மஸ்து னஃ || 6 ||

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்ஜ்வல -
த்தனம் ஜயாத ரீக்றுதப் ரசம்டபம் சஸாயகே |
தராதரேம் த்ரனம்தினீ குசாக்ரசி த்ரபத்ரக-
-ப்ரகல்ப னைக ஶில்பினி த்ரிலோசனே மதிர்மம || 7 ||

னவீன மேகமம் டலீ னிருத்த துர்தரஸ் புரத்-குஹூனி ஶீதினீதமஃ ப்ரபம் தபம் துகம் தரஃ |
னிலிம் பனிர்ஜ ரீதரஸ் தனோது க்றுத்தி ஸிம்துரஃ
களானி தானபம் துரஃ ஶ்ரியம் ஜகத்துரம் தரஃ || 8 ||

ப்ரபுல்லனீ லபம்கஜ ப்ரபம்சகாலி மப்ரபா-
-விலம்பிகம் டகம்தலீ ருசிப்ர பத்தகம் தரம் |
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாம் தகச்சிதம் தமம் தகச்சிதம் பஜே || 9 ||

அகர்வ ஸர்வ மம்களாக ளாகதம் பமம்ஜரீ
ரஸப் ரவாஹ மாதுரீ விஜ்றும் பணாம துவ்ரதம் |
ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம்
கஜாம் தகாம் தகாம் தகம் தமம் தகாம்தகம் பஜே || 10 ||

ஜயத் வதப்ரவி ப்ரம ப்ரமத் புஜம் கமஶ்வஸ-
-த்வினி ர்கமத் க்ரமஸ் புரத்கரால பாலஹவ்ய வாட் |
திமித் திமித் திமித் வனன் ம்றுதம் கதும் கமம்கள
த்வனிக் ரமப் ரவர்தித ப்ரசம்ட தாம்டவஃ ஶிவஃ || 11 ||

த்றுஷத் விசித்ர தல்பயோர் புஜம்க மௌக்திகஸ் ரஜோர்-
-கரிஷ்ட ரத்னலோஷ்ட யோஃ ஸுஹ்றுத் விபக்ஷ பக்ஷ யோஃ |
த்றுஷ்ணா ரவிம் தசக்ஷு ஷோஃ ப்ரஜாம ஹீம ஹேம்த்ர யோஃ
ஸமம் ப்ரவர் தயன் மனஃ கதா ஸதாஶிவம் பஜே || 12 ||

கதா னிலிம் பனிர் ஜரீனி கும்ஜகோட ரேவஸன்
விமுக்த துர்மதிஃ ஸதா ஶிரஃஸ் தமம் ஜலிம் வஹன் |
விமுக்தbலோல லோசனோ லலாட பால லக்னகஃ
ஶிவேதி மம்த்ர முச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம் || 13 ||

இமம் ஹி னித்ய மேவமுக்த முத்த மோத்தமம் ஸ்தவம்
படன் ஸ்மரன் ப்ருவன்னரோ விஶுத்தி மேதி ஸம்ததம் |
ஹரே குரௌ ஸுபக்தி மாஶு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶம் கரஸ்ய சிம்தனம் || 14 ||

பூஜாவ ஸான ஸமயே தஶவக் த்ரகீதம் யஃ
ஶம்பு பூஜன பரம் படதி ப்ரதோஷே |
தஸ்ய ஸ்திராம் ரதகஜேம் த்ரதுரம் கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஶம்புஃ || 15 ||

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.