Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

2:
சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

3:
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

4:
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

5:
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

6:
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

7:
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

8:
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

9:
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

10:
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

11:
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

12:
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.

13:
கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

14:
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

15:
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.

16:
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

17:
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.

18:
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.

19:
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

20:
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.

21:
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.

22:
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.

23:
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

24:
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

25:
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.

26:
வைதோரைக் கூடவை யாதே - இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

27:
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.

28:
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.

29:
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.

30:
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.

31:
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.

32:
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

33:
எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.

34:
கள்ளவே டம்புனை யாதே - பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.

35:
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்
எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

முத்திரை நபியே முஹம்மது ரசூலே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே

இத்தரை மாந்தர் யாவரும் அன்று
பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார்
இத்தரை மாந்தர் யாவரும் அன்று
பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார்
முத்தொளி மார்க்கம் புகழ் வழி அமைக்க
சத்திய தூதே சர்தார் ரசூலே

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

தந்தையை இழந்து தாயையும் இழந்து 
மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து
தந்தையை இழந்து தாயையும் இழந்து 
மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து
சிந்தையுள் இறைவன் செய்தியை தாங்கி
வந்திடும் போது வம்பர்களாலே

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து
கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து
கொள்ளென சிரிக்கும் கும்பலை பார்த்து
முள் வழி நடந்து பொறுமையை சுமந்து

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

தாயஹம் துறந்து இருள் வழி நடந்து
தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து
தாயஹம் துறந்து இருள் வழி நடந்து
தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து
போய் மதினாவில் அடைக்கலம் புகுந்து
போர்ப்பகை சூழ வாழ்த்திடும் நாளில்

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ
துயர் பல சகித்த தாஹா ரசூலே
வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ
துயர் பல சகித்த தாஹா ரசூலே
மன்னுயிர் காத்து மாநிலம் வாழ
எண்ணியே வாழ்ந்த எம்மான் ரசூலே

 
எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

முத்திரை நபியே முஹம்மது ரசூலே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்

3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
                                                       ரோ. 8:15
1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

    நன்றி உமக்கு நன்றி - அப்பா

2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி

3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே                      சங். 40:2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே - நன்றி
                                                     வெளி. 1:6

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியாய் வந்த தேவி
ஸ்ரீ ஆதி லக்ஷ்மி தாயே போற்றி

மனபயங்கள் மாய்ப்பவளே
ஸ்ரீ தைரிய லக்ஷ்மி தாயே போற்றி

உயிர்களுக்கே உணவளிப்பாய்
ஸ்ரீ தான்ய லக்ஷ்மி தாயே போற்றி

பத்மராக மலர் அமர்ந்தாய்
ஸ்ரீ கஜலக்ஷ்மி தாயே போற்றி

புத்ர பாக்யம் தருபவளே
ஸ்ரீ சந்தான லக்ஷ்மி தாயே போற்றி

கல்வி செல்வம் தருபவளே
ஸ்ரீ வித்யா லக்ஷ்மி தாயே போற்றி

வெற்றிகள் தரும் மங்களையே
ஸ்ரீ வீரலக்ஷ்மி தாயே போற்றி

செல்வம் அளிக்கும் ஸ்ரீதேவி
ஸ்ரீ தனலக்ஷ்மி தாயே போற்றி

பூர்ணகும்பத்தில் அமர்ந்தவளே
ஸ்ரீ வரலக்ஷ்மி தாயே போற்றி

மாங்கல்யத்தை காப்பவளே
ஸ்ரீ சௌபாக்ய லக்ஷ்மி தாயே போற்றி

மனையோகம் தருபவளே
ஸ்ரீ கிரஹலக்ஷ்மி தாயே போற்றி

தேக சுகத்தைத் தரும் தேவி
ஸ்ரீ அன்னலட்சுமி தாயே போற்றி

பதினாறு பேறுதரும் தாயே
ஸ்ரீ பாக்கியலக்ஷ்மி தாயே போற்றி

விளக்கினிலே வீற்றிருப்பாய்
ஸ்ரீ தீபலக்ஷ்மி தாயே போற்றி

நவநிதிகள் வழங்கும் தேவி
ஸ்ரீ குபேரலக்ஷ்மி தாயே போற்றி

எட்டு சித்திகள் தருபவளே
ஸ்ரீ யோகலக்ஷ்மி தாயே போற்றி

இஷ்ட வரங்கள் கொடுப்பவளே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி

அஷ்டைஸ்வர்யம் தருபவளே
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி போற்றி

பரந்தாமன் நாயகிக்கு
பத்மபீடம் ஆடும் தேவிக்கு

துளசி தளம் அணிந்தவளுக்கு
திவ்ய சுப மங்களம்

அலையாழித் தோன்றி வந்த
ஹரிமாயன் நாயகிக்கு

கலையாவும் வழங்கும் செல்வதேவிக்கு
நித்ய மங்களம்

மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

ஊரை மாற்றி உலகை மாற்றி
உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை மாற்றி
சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய்
வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா
வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா
உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட
உயிரின் உயிரே இறைவா 

உலகம் வாழ நீயும் உந்தன் உடலை சிதைத்து
உறவு பலியாய் உயிரைத் தந்தாய்
உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து
உலகை மாற்றும் துணிவைத் தாராய்
உன் அன்பு பாதைகள் என் வாழ்வின் பாடங்கள்
உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள்
உலகெளாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா
உயிரின் உயிரே இறைவா

கருணை மொழிகள் பேசி 
கனிவு செயல்கள் காட்டி
கடவுள் ஆட்சி கனவைத் தந்தாய்
காணும் உயிர்கள் யாவும்
கடவுள் உருவைக் காணும்
புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய்
இறை ஆட்சி குடும்பமாய் 
இவ்வுலகம் அமைந்திட
இங்கு பகைமை அழிந்திட
நல் பகிர்வு வளர்ந்திட
நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட
உயிரின் உயிரே இறைவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம் 
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் 


இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே 
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம்
நாளைய உலகின் விடியலாகவே !

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே 
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் 
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவி அழைக்க கூடாதா கூவி அழைக்க கூடாதா குருபரா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்,  அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்,  உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன் (2)
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன், என் உயிரினிலே உன்னைக் காண்கின்றேன் 
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

பேதமில்லாமல் யாவினிலும் உன் பேரருளை நான் பார்க்கின்றேன் (2)
பேதமையால் உன்னை நான் மறந்தேன், அந்த வேதனையால் தான் பாடுகிறேன்  
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ...

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன், என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 
தூயவனே உன்னை துதிக்கின்றேன், உன் துணையே கதி எனப் பாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய், என் விழியுனுல் ஒளியாய் ஜொலிக்கின்றாய்
இதயத்தை நீயே ஆளுகிறாய், என்னை இசைத்திட  தூண்டி ரசிக்கின்றாய்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய், பெரும் மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய்
மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய், அங்கு தெரிவதை கண்டு சிரிக்கின்றாய்  
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .....

அல்லாஹு என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் ( 2 )
ஆயிரம் முறை  உன்னை நினைக்கின்றேன் உன் ஆதாரம் நாடி அழுகின்றேன் 
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ...

இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ( 3 )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுரைப் பாடல் 
திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 
2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

10 தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 
11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி

12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 
13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; 
இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி


14 `அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; 
அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 
15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; 
அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; 
அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமெனும் பிரணவம் - ஸ்வாமிமலை | அறுபடை வீடு கந்த சஷ்டி கவசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை
அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை

மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே

வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா
விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா

பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே
பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே

துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன்
வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே

அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே
எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே

பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில்
தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே

தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில்
திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில்

கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை
நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே

வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே
வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.