-
Tell a friend
-
Topics
-
Posts
-
பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மொஹூவா மொய்த்ரா மற்றும் பலர், பிபிசி ஆவணப்படத்தை இணைத்து பதிவிட்டிருந்த தங்களுடைய ட்வீட்களை நீக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. “மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். மத்திய அரசிடம் இருந்து பதில் வர வேண்டும். அடுத்த ஏப்ரலில் விசாரணை மேற்கொள்வோம்,” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று உத்தரவிட்டுள்ளது. ட்வீட்டுகளை நீக்குமாறு விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான அசல் கோப்புகளைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கூறியதுடன், “இடைக்கால உத்தரவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் அடுத்த தேதி இல்லை” என்றும் கூறியது. “பிரதிவாதிகள், மத்திய அரசு மற்றும் பிறருக்கு அசல் பதிவுகளை, அடுத்த விசாரணை தேதியில், ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்,” என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூரே இயங்க முடியாதா? - பிபிசி கள நிலவரம்3 பிப்ரவரி 2023 ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயல்வதாக பாஜக அறிவிப்பு6 மணி நேரங்களுக்கு முன்னர் என்.ராம், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர், டாக்டர் சந்தர் உதய் சிங், இது பொதுவெளியில் உத்தரவுகளை வைக்காமல் அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட வழக்கு என்று கூறினார். அந்த ட்வீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். முதல் மனுவை பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் கூட்டாகத் தாக்கல் செய்தனர். இரண்டாவது மனுவை வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா தாக்கல் செய்தார். “இதுவோர் அசாதாரண வழக்கு. பொதுவெளியில் உத்தரவுகளை இடாமல், அவசரகால அதிகாரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ட்வீட்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவொரு தீவிரமான பிரச்னை,” என்று அவர் கூறினார். ரகசிய உத்தரவின் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் மற்றும் பலர் நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறியதுடன் சந்தர் உதய் சிங் இந்தப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். அந்த ஆவணப் படங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதும் உண்மை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. சந்தர் உதய் சிங், “லட்சக்கணக்கான அதிகாரிகள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், இங்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார். பிபிசியின் ‘இந்தியா: மோதி கேள்வி’ என்ற ஆவணப்படத்தை பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம், மனுக்களின் தொகுப்பை பிப்ரவரி 6ஆம் தேதி, திங்கள் கிழமையன்று விசாரிப்பதாக நிர்ணயித்திருந்தது. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் அதன் காரணப் பட்டியல் மூலம், மனுக்கள் விசாரணையின் தேதியை மாற்றவே அது விசாரணைக்கு முன்பாகவே வந்தது. என்.ராம், பிரசாந்த் பூஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய யஷ்வந்த சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு, என்.ராம் மற்றும் பிரசாந்த பூஷனின் ட்வீட் எப்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படத்தை திரையிட்டதற்காக ராஜஸ்தானின் அஜ்மீரில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES காணொளி துணுக்குகள், ட்வீட்டுகளை தடுப்பதற்கு ‘அவசரகால அதிகாரங்களை’ பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இது. தயவு செய்து பரிசீலிக்கவும்,” என்று உச்சநீதிமன்றத்தில் சந்தர் உதய் சிங் மனு அளித்திருந்தார். 2002 குஜராத் கலவர வழக்குகள் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்த வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மாவின் பொதுநல வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்தத் தடை தவறானது, அரசமைப்புக்கு விரோதமானது எனக் கூறி, வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஷர்மாவின் மனு பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்கக் கோரியது. குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கு ஆவணப்படத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். வழக்கறிஞர் ஷர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆவணத் தொடரின் இரு பகுதிகளையும் ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது. கடந்த காலங்களில் நடந்த தவறை மறைக்க மத்திய அரசு முயலக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஷர்மா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஷர்மாவின் மனு, பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்குமாறு கோரியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckmdn2vlkpzo
-
By goshan_che · Posted
3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள். -
By goshan_che · Posted
கிம்முதான் பெஸ்ட்டு மற்றவன்லாம் புஸ்கு🤣 உங்கள் கருத்துக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்🤣 பிகு டிவிட்டரில் பலூனை விட பலூன் பற்றிய சதி கோட்பாடுகள் அதிகம் பறக்கிறது. யாழில் இன்னும் காணவில்லை. -
Looser ன் பேச்சை கேட்க 7.5 மில்லியன் யூரோவா?
-
வடகொரியாவுக்கு வாய்வீரத்தைத் தவிர அமெரிக்காவோடு உரசிப் பார்க்க இவ்வளவு தைரியம் கிடையாது. வடகொரியா தவறுதலாக அணுகுண்டை வெடித்துவிடும் என்ற பயம்தான் எல்லோருக்கும் உள்ளதெ ஒழிய போர் வந்தால் தாக்குப் பிடிக்கக் கூடிய இராணுவம் இல்லை.
-
Recommended Posts