Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சித்தன்குறிச்சி ஊரின் ஸ்ரீ முருகா

மூர்த்தியே எங்கள்  சித்தம் நிறைந்திருக்கும்

கருணை ஒளி கீர்த்தியே கோயில் கொண்டு

குடியமர்ந்து வாழ வந்த சாமியே

சின்ன கையியல்வேலை காவி உறைகாக்கும் கந்த சாமியே

மண்ணில் சிலை கொண்ட ஸ்ரீ முருகா
சித்தர் வரம் பொருளாய் கொலு அமர்ந்த சீர் அழகா

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்போது நீயறி வாயோ மனமே
அப்போதே சாந்தி யடைவாய்
இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

முற்போது தர்மமென்றும் தற்போ ததர்மமென்றும்
முயன்றேசீர் திருத்திட முடியுமுன் னாலேயென்றும்
அற்பாகந் தைச்செருக்கால் அலையாம லேயடங்கி
ஆண்டவன் ஆட்சியில் அதர்மமே யில்லையென்றே (எப்போது…)

எழுந்தவுன் னெழுச்சியா லெண்ணம் செயல்சொல்லாக
இயற்றிய கர்மமெல்லாம் இறைவனை நீங்குவதே
அழுந்தி யகமூலத்தி லகந்தை யழிவதொன்றே
அரிய க்ருதக்ருத்திய ஆன்மானு பவமென்றே (எப்போது…)

இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா  
உன்னை பார்த்து  பார்த்து நடப்பதினால் மனிதன் என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
உன்னை கடவுளென்பதா கருணைவடிவமென்பதா
உன்னை கடவுளென்பதா
கருணைவடிவமென்பதா
ஐயா ஞானாராகம்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகாளும் ஒளியாகி எமை ஆளும் கரமாகி
பெரும் வாழ்வை தருவாயே தாயே
கலயாடும் உள்ளங்கள் திருநாவில் வந்தேறி
அருள்வாக்கு சொல்வாயே தாயே
 லூர்ச்சேனின் அலையில் அருளாட்ச்சி புரியும்
திரிசூல காளி நிதானம்மா

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓமெனும் பிரணவ பொருளுடையோன்
பிள்ளையார் உள்ளமதில் அருள் ஞான வடிவுடையான்
சிலாவத்தை பதியினிலே இருந்து
எம் சிந்தைதனில் அருள்விருந்தாய் தினம் வந்து
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
அப்பா உன் அருள்தானப்பா அருள் மருந்து

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அகிலத்தை காக்கும் அரும் பொருளே
அதிசயம் காட்டும் பரம்பொருளே
எங்கும்சிவமே எதிலும் சிவனே
உலகினில் அற்புதம் காண்பதும் வரமே
எங்கும் சிவமே எதிலும் சிவனே
மயக்குது மாலையோ மயக்கிடும் இடமே 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மங்கலத்து தாழ்வாரம் பனிவிழும் பொன்நேரம்

சந்தானத்து பூஞ்சிலயே சாய்ந்தாடு மணிகண்டா

பச்சை பசுங்கொடியாகும்

அச்சுதனார் அவர் ரூபம் அதை

அஅரஹரா காற்றசைக்க

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண

கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை)

 

நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை)

நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி

 

ஆரநவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை)

 

சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட

சிதம்பர்த் தேராட பேரணி வேதியர்

 

தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட

காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
நன்னகர் தலமாம் சங்குவேலி
என்னும் பத்ர காளியம்மா
அன்பாய் எமையே ஆதரிப்பதை

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் கொண்ட அய்யப்பனுக்கு
பக்தன் எழுதும் கடிதம்
எதோ நானும் இருக்கிறேன்
வறுமையிலை  தவிக்கிறேன்
யாருமில்லை எனக்கு தினம்
அய்யப்பனைதான் நினைக்கிறன்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பரவசம் தருகிறதே உந்தன்
பாதச்சிலம்பின் ஒலி
அருள்தரும் கண்ணகியே
என்றும் நீதான் எங்கள் கதி
சிந்தை தணிந்து வந்து ஆறிய பூமி
இவள் வந்தாறுமூலை வந்த மாபெரும் சாமி 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காரைக்காலில் அய்யா உன் அருளாட்ச்சி
விசாலாட்சி சமேதராய்
எங்கும் உன் திருக்காட்ச்சி
இணுவைமண்ணின் பெருமையல்லவா
இக்காட்சி விஸ்வநாதர் எம்மனம் என்றும் உன் ஆட்சி

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சூரிச்சின்  அய்யனே சுகம் யாவும் தருபவனே
உன் புகழ் பாட நின்னருள் தாருமய்யா
அய்யப்பா நின்னருள் தாருமய்யா
மணிகண்டன் மலர்ப்பாதம் எந்நாளும்
என் தஞ்சம் அய்யனே உன் முகம் காண
என்மனம் தினம் தினம் ஏங்குதே

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருள் தாரும்  எங்கள் லுசெனில் வீற்றிருக்கும்
அன்னை எங்கள் துர்க்கையம்மா வினை இங்கே உனக்கேதம்மா

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சங்குவேலி பதியினிலே வந்தமர்ந்து கோவில் கொண்ட
மங்களம் சேர் நாயகியே பத்ரகாளி
 மலரடியே நீ அருள்வாய் பத்ரகாளி
பாலும் இளநீராலும் பன்னிர் தேனபிசேகம்
பக்த்தியுடன் செய்து வைத்தோம்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கற்பக விருட்ச்சம் உயர் சோலைதனிலேகீ
காவல்புரி  சின்னரர்கள் சூளவளர் வாவி
அற்புதமோடு இப்புவியை ஆளாவேன் எண்ணி ஆதிசிவனிடம்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்பனே ஈசனே சங்கரனே தில்லையில் கூத்தாடிய பெருமானே
பேண்ஞான லிங்கேஸ்வரனே ஓம் நமச்சிவாய  ஓம் நமச்சிவாய
 கூத்தனே உன்னை கும்பிடவந்தோம் குறைவில்லாதரூல் தருவாயே 

 

 

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.