• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
உடையார்

இறைவனிடம் கையேந்துங்கள்

Recommended Posts

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தோணி கேட்குதே

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்

6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும்

 

Share this post


Link to post
Share on other sites

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

 

Share this post


Link to post
Share on other sites

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

 

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

 

Share this post


Link to post
Share on other sites

நமசிவாய வாழ்க - நால்வர் அருளிய நமசிவாய பதிகம் | சோலார் சாய் |சிவலோகம் |

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க
 வேகங் கெடுத்தாண்ட வேந்த னடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடி போற்றி எந்தை அடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்
 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான்
 மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணிய
 வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே
 ஆக்கம் அளவிறுதியில்லாய், அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்ற மனங்கழிய நின்றமறை யோனே
 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள்ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான்…
 வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி,
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
 விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் கா அட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
 மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும்ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
 ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத்தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப்பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண்ணுணர்வே
 போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
பொருள்:
 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகாரவிடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று
 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
 அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
…திருச்சிற்றம்பலம்…

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

 

 

உலக மக்கள் யாவருக்கும்

 

காலை வணக்கம்! அருமையான பாடல்! ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்! 🎉🙏

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, தோழி said:

காலை வணக்கம்! அருமையான பாடல்! ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்! 🎉🙏

உங்களுக்கும் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்🙏

Share this post


Link to post
Share on other sites

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

 

Share this post


Link to post
Share on other sites

கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

வசுதேவ தவபால அசுர குல கால
வசுதேவ தவபால அசுர குல கால
சஷிவதனா ரூபிணி சத்யபாமா லோல
சஷிவதனா ரூபிணி சத்யபாமா லோல
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

 

 

Share this post


Link to post
Share on other sites

(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

 

Share this post


Link to post
Share on other sites

ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!
 

திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!

 

Share this post


Link to post
Share on other sites

(செஞ்சுருட்டி ராகம்)
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி      ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி 
ஆகம வேத கலாமய ரூபிணி    ஆகம வே…த கலாமய ரூ…பிணி 
அகில சராசர ஜனனி நாராயணி  அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி  நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே
(புன்னாகவராளி ராகம்) 
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும்
பாடிக் கொண்டாடும் .அன்பர் பதமலர் சூடவும் 
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும்
பாடிக் கொண்டா-டும் .அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும் 
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி 
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே
(நாதநாமக்ரியை ராகம்) 
 உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் 
 உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
 உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் 
 உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
 உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் 

 நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய் 
 நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
 நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
 நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே
(சிந்து பைரவி ராகம்) 
 துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் 
 துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
 தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் 
 தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
 அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
 அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் 
 அடைக்கலம் நீயே அம்மா.... அம்மா 
 அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி 
 அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி 
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி 
ஆகம வே…த கலாமய ரூ…பிணி   
அகில சராசர ஜனனி நாராயணி  
நாக கங்கண நடராஜ மனோகரி 
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி 
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி   ஸ்ரீலலிதாம்பிகையே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏ அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

 

Share this post


Link to post
Share on other sites

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )

 

Share this post


Link to post
Share on other sites

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

 

Share this post


Link to post
Share on other sites

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

 

Share this post


Link to post
Share on other sites

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்

 

Share this post


Link to post
Share on other sites

கண்ணாலே கண்டதும் கொஞ்சம் காதலே கேட்டதும் கொஞ்சம்

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.