Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

குதம்பாய்

அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் 
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் 
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை 
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை 
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.

என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி 
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
 

 

Link to post
Share on other sites
 • Replies 1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய்    நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

 • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே மனமே  திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார்

1.கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்

2.அநாதி தேவனே உனது அடைக்கலம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்

3.அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பல்லவி
ஓடோடி வந்தேன் கண்ணா நான்
உனக்கும் எனக்குமுள்ள உறவின்று அறிந்து


அனுபல்லவி
கோடானுகோடி தவம் செய்து உனைக்காண
கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனத்திடை


சரணம்
குழலூதும் எழில் காணவே கூடும்
கோபியர்கள் முகம் நாணவே காதல்
விழியுன்றன் முகம் நாடவே
முறுவல் இதழோரம் சுழித்தோடவே

ஜகன்னாதன் இசை பாட நங்கை ஜதி போட
கால காலமெல்லாம் ஸ்ருதியும் லயமுமென
வேதப்-பொருள் உன்னில் ஒன்றி உறைந்திடவே
போதம் மிகு காதல் பொன்னடி தனில் கொண்டு
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடி கிருத்திகை திருத்தணி முருகன் கவசம்
குரலிசை : வாணி ஜெயராம்
இசை : சுரும்பியன்
அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ண
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம் !
அவர் இல்லாமல் இல்லை இந்த நாநிலம்!

கோத்திரம் குலங்களும்
தேசமும் மொழிகளும்
மாறிய போதிலும்
மண்ணகமெங்கிலும் !

ரஹ்மத்துன்லில் ஆலமீன் !
ராஹத்துல் ஆஷிக்கீன் !
சொர்க்கத்தின் ஜோதியாம் !
சைய்யிதுன் முர்ஸலீன் !!

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம் 
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் 


இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே 
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம்
நாளைய உலகின் விடியலாகவே !

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே 
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் 
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில்
ஆனந்த ரசமய அற்புத நடனம்
(ஆடினயே)

ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி
நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில்
(ஆடினயே)

மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய
நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர
மகர குண்டலங்கள் இருசெவி இலங்க
மதிமுகம் தனிலே முறுவல் விளையாட

மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட
மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட
மதுர மோகன குழலிசை கூட்ட
மங்கையர் கண்கள் மையல் காட்ட

மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட
மனமறிந்து அருள்சொறிந்து
இணைந்து ஒன்றாய்
(ஆடினயே)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருக்கடையூரினில் திகழ்ந்திடும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கந்தன் குமரன் வள்ளி குறத்தி மானை துரத்தி வந்தானே

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓம் எனும் பிரணவ உரு அமைத்தாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
நாவினில் நல்லிசை அருள்வாய்.

முன்னவா மூத்தவா முழுமுதலே
மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே
அண்ணலே நின்மலரடி பணிந்தேன்
அனுதினம் பாடியே மனமகிழ்ந்தேன்.

அடியாரைக் காக்கும் சண்முக சோதரனே
ஆதி அந்தப் ப்ரபுவாக அவதரித்தாய்
தாயும் நீ தந்தை நீ சகலமும் நீ
சரணம் உன்சரணமே சரணம் ஐயா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தில்லைவாழ்அந்தணர்தம் அடியார்க்குமடியேன்

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே

நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய்   (2) -நீ ஒளியாகும்

விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும்   (2) -நீ ஒளியாகும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா

வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா
வாராயோ வேல் முருகா

மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா
வேலேறி வா முருகா

புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா
புகழாளும் வேல் முருகா

புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா
கொடியோடு வா முருகா

ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே
நீராடும் வேல் முருகா

பழம் தந்தநாதா பழம் கண்டநாதா
உன் பாதங்கள் தா முருகா

செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா
சீரலைவாய் வேல் முருகா

உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும்
நிலை என்றும் வேணும் முருகா

வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா
வாராயோ வேல் முருகா

வரம் தந்து ஆள மலை நின்ற தேவா
உன் நாமங்கள் தேன் முருகா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கானமழை பொழிகின்றான்-கண்ணன்
யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை)
 
ஆனந்தமாகவே அருள்பெருகவே
முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை)
 
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட
ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட
கோவிந்தன் குழலூதி (கானமழை)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2 
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே 
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2

1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ 
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ (2) 
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2 
ஆனாலும் உன் வார்த்தை உண்டு 
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

2. இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ 
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ (2) 
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்-2 
என்றென்றும் உன் ஆசீர் கொண்டு 
வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு 
இயேசுவே இயேசுவே - 2

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே 
பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே

பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்

முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ... அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே 
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே 


முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே

முருகா ...........முருகா ......முருகா.........முருகா.......

தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்

பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் 
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்

சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்

வேலனுக்கு ... அரோகரா
முருகனுக்கு ... அரோகரா
கந்தனுக்கு ... அரோகரா

அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி

வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே 
வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே

அந்த விராலிமலையிலே

மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
 விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்

முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கணபதியே வருவாய்
அருள்வாய் கணபதியே வருவாய்
அருள்வாய் கணபதியே வருவாய்
மனம் மொழி மெய்யாலே
தினம் உன்னைத் துதிக்க
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மனம் மொழி மெய்யாலே
 தினமுன்னைத் துதிக்க
 மங்கள இசையென்தன்
நாவினில் உதிக்க
 மங்கள இசையென்தன்
 நாவினில் உதிக்க
 கணபதியே வருவாய்
 ஏழு சுரங்களில் நானிசை பாட
 எங்குமே இன்பம் பொங்கியே ஓட
 ஏழு சுரங்களில் நானிசை பாட
 எங்குமே இன்பம் பொங்கியே ஓட
 தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
 தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
 தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
 கணபதியே வருவாய்
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
 தொனியும் மணியென
கணீரென்றொலிக்க
 தூக்கிய துதிக்கை
 வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென
 கணீரென்றொலிக்க
ஊத்துக நல்லிசை
உள்ளம் களிக்க
உண்மை ஞானம்
 செல்வம் கொழிக்க
கணபதியே வருவாய்
 அருள்வாய் கணபதியே வருவாய்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.