Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    

குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே

 • கருத்துக்கள உறவுகள்

தருணம் இதையா தயை புரி துதிக்கையா உரிய

சரணம் என்ருன் மலரதி பணி தமியனை தவிக்க விடாமல்

உன் அருளலதோர் துணை இனி உலகில் இல்லையேஎந்தன்
முன்னவனே யானை முகனே முருகனுக்-கருளும் துதிக்கையான

முக்கட்பரன் மகனே விக்ன வினாயகனேமுக்கனி
மோதக ப்ரியனே அபயம் அபயம் விரைந்து வந்தருள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது மனம்
ராகம் : ஹரி காம்போதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்.

பல்லவி

எனது மனம் கவலை எனும் இருள் சூழ்ந்தால்
எவரிடம் முறையிடுவேன்! என் செய்வேன் (எனது மனம்)

அனுபல்லவி

உனது மலரடியில் விழுவேன்! தொழுவேன்!!
உருகி அம்மா அம்மாவென்றழுவேன் – அன்றி (எனது மனம்)

சரணம்

உலகுயிரெல்லாம் ஈன்ற ஜகன் மாதா
உன் உள்ளம் எனக்கு மட்டும் இரங்காதா!
கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சியதோ
கருணாநிதி என்றுனைப் புகழ்வதும் பழுதோ!! (எனது மனம்)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (x2)
பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் (x2)
... பசியாறி நின்றவன்

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (x2)
குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2)

பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (x2)
நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (x2)

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குழலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் மயிர்க்காலில்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசி தந்தருள்வாய் அம்மா அழகான காசியிலே வாழும் விசாலாட்சி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே || இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா | கச்சேரி பாடல்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உடுத்துறை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேம்படி வைரவர் புகழ் கூறும் பாடல் இது 
பாடல் இசை -இசை வேந்தன் .கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -சின்னப்பு பாலா (நோர்வே )
பாடல் தயாரிப்பு -S.S.சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் உடுவில் மீனாட்சி அம்மன் ஆலயம் பதிகம் 
பாடல் இசை -K.ஜெயந்தன் https://www.facebook.com/jeyanthancom...
வரிகள் -T.பிரதாபன் 
பாடியவர் -G.Gசாந்தன் 
தயாரிப்பு -கவிஞர் சிந்து ராகவன்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில். கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன். இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
     தனத்ததன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே

வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்

மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே

செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,
 பூலோகத்தாரே.
 
 யேசு நாமம் ஒன்றை நம்பும்;
 ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;
 பேசும் வேறே நாமமெல்லாம்
 பேருலகை ரட்சிக்காதே, - யேசு
  
  பார்த்திபன் தவீது குல
  கோத்திரக் கன்னிமரிபால்,
  நேத்திரம் போலே உதித்து
  நேமியின் ரட்சகனான, - யேசு
  
   பூதலத் தஞ்ஞான இருள்
   போக்கவே மெஞ்ஞான பெருஞ்
   ஜோதியாய் விளங்கும் நீதிச்
   சூரிய னான மகத்வ - இயேசு
     
    பாவிகளீடேற மோட்ச
    பாக்கியம் பெறுவதற்காய்
    ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
    சேணுலகுக் கேறிச் சென்ற, - யேசு
     
     விண்டலத்தவர்கள் சூழ,
     வெருண்டலகை பதறி வீழ;
     மண்டலத்தைத் தீர்வை செய்ய
     மாமுகில் மீதேறி வரும், - யேசு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு

கமலா சதி மூகக்கமல கமலஹித
கமலப்ரியா கமலெக்ஷனா
கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ
கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 ||

பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ
பரமபுருஷா பராத்பரா
பரமாத்மா பரமானுருப ஸ்ரீ
திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உலகை ஆளும் இனிய நாமம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோமான் நபிகள் தோன்றாவிட்டால்... || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பு என்றாலும் இயேசுபிரான் ஆதி என்றாலும் இயேசுபிரான் இரக்கமென்றாலும் இயேசுபிரான்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது - (2)

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான் - (2)
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார் - (2)

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார் - (2)
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே - (2)

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன் - (2)
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன் - (2) 

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே - (2) 
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை - (2)

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை - (2)
அநாதி சிநேகத்தால்
இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர் - (2)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
மருகச ரவண முருகனே

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.