Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்

தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும்
நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும்

முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா

மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை
நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே

கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான்
அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே

இலகாத  கல்நெஞ்சும் இலகும்படி செய்து
இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன்

மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய
நிறைவான அருளாசி புரிகின்றவன்

வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட
சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும்

வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய
தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன்

திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு
சீரான செல்வங்கள் சேர்கின்றவன்

பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு
வழியெல்லாம் துணையாக வருகிறவன்

படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு
மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன்

குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி
அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய்    நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்

இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா         கதிர்காம முருகையா உருகையா     

 • கருத்துக்கள உறவுகள்

கண்டு வரலாம்... சென்று வரலாம்...கனிவுடனே மாமதீனா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . 

ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்

ஆதி பழனியே சென்னிமலை

ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை

பன்னிரு கையிருக்க ஏன் கவலை

கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை

முருகா முருகா முருகா முருகா

அருள்பொழியும் தண்டபாணிமுகம்

கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை

சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்

அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்

ஓம் சரவணபவாய . . . 

பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்

ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்

திருநீறும் சந்தனமும் கமகமக்கும்

காவடிகள் ஆடிவரும் மலையினிலே

திருவடியில் பக்தர்கள் அலைபோலே

ஆடிவரும் அழகு முகம் தேரினிலே

பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்லிக்கட்டு காள பூட்டி

 

 

 

Edited by உடையார்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையானே
நான் தினம் தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னாற்மேனியனே.(2)
சித்தர் பூமியின்
ஜீவனாகிய சிவகுரு
நாயகனே(2) சிவபுராணமே
போற்றிடும் ஹரனே
சிந்தையின் ஒளியே
அண்ணாம

லையே. சிவம் சிவம்
சிவம் சிவம் அன்பே
சிவம்
தினம் தினம் தினம்
தினம் செய்வோம்
சிவதியானம்(2)
உன்னை நினைத்தாலே
முக்தி வந்திடும்
அண்ணாமலையானே
நான் தினம் தோறும்
என்னும் வரம் வேண்டும்
பொன்னாற்மேனியனே.
ஏழு ஜென்ம பாவம் தீரும்
இறைவா உன்னை என்ன.
தேவாரம் பாட அந்த ஞானம்
வருமே மனம் கொள்ள.

ஆதியான சிவனே சிவ
ஜோதியான சிவனே(2) ஏழு
ஜென்ம பாவம் தீரும்
இறைவா உன்னை
என்ன. தேவாரம் பாட அந்த
ஞானம் வருமே மனம்
கொள்ள.
தாழ்வும்நிலைவாராமல்
காப்பவன் நீதானே
வாழும் வழி சொல்பவனே
வல்லல் பெருமானே.

அண்ணாமலையானே அன்பில்
பொருள் நீயே.
அருணாச்சலசிவனே
ஆற்றல் வடிவோனே
சக்தியின் கலையாய்
பக்தியின்

நிலையாய் தோன்றும்
சுடரோனே...
உண்ணாமுலையின்
துணையோனே
சிவம் சிவம் சிவம்
சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம்
செய்வோம் சிவதியானம்(2)
(உன்னை நினைத்தாலே)
தேடுகின்ற உள்ளம்
யாவும் தேனாய் அருள்
பெருகும்
திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும்
(ஆதியான சிவனே)
தேடுகின்ற உள்ளம்
யாவும் தேனாய்
அருள் பெருகும்
திருவாசகத்தை பேச பேச
உள்ளம் உருகிவிடும்
ஶ்ரீதிநிலை
தருகின்ற சிவனே
அருளேசன் ஜீவ முக்தி
அருள்கின்ற தவனே
சோனேசன் உன்னைச்
சுற்றாமல் உயிரில்
உயிரில்லை உன்மண்ணைப்
பனியாமல் உய்யும்
வழியில்லை ஒரு
பித்தனின் பிறையினை
சூடிய பேரருள்
அத்தனும் நீதானே.
அண்ணாமலையின் இசை நீயே.
சிவம் சிவம் சிவம்
சிவம் அன்பே சிவம்
தினம் தினம் தவம் தவம்
செய்வோம் சிவதியானம்(2)
(உன்னை
நினைத்தாலே)(2)(சித்தர்
பூமியின்) சிவம் சிவம்
சிவம் சிவம் அன்பே
சிவம்
தினம் தினம் தவம் தவம்
செய்வோம் சிவதியானம்(2)
சிவமே... சிவமே... சிவமே...

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அரோகரா 

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் 
அப்பன் பழனியப்பன் - தினம் 
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் 
அப்பன் பழனியப்பன் 

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் 
காவலில் நின்றி ருப்பான் - அங்கு 
கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் 
கண்டுகளித்தி ருப்பான். 

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு 
ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த 
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை 
சொல்ல மொழியுமுண்டோ! 

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் 
வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி 
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் 
வேலனை வெல்வதுண்டோ! 

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் 
சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த 
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் 
சென்று கனிந்து நிற்போம்! 

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் 
பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு 
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் 
செய்து பணிந்திடுவோம்! 

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் 
தண்டாயுத மல்லவோ - அந்த 
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு 
செட்டி மகளல்லவோ! 

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட 
கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும் 
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி 
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! 

ஆறும் அறுபதும் ஆனஇருபதும் 
ஆடிநடந்து செல்வோம்-சில 
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும் 
அன்புடன் ஊர்ந்து செல்வோம்! 

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை 
உச்சத்தில் வைத்திருப்போம் - கையில் 
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து 
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! 

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில் 
வேட்டுவன் கந்தனுக்கு - இரு 
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர் 
கனிவு நிறைந்திருக்கு! 

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று 
கால்களிலே விழுவோம் - அவன் 
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும் 
காவிரிபோல் வளர்வோம்! 

ஓம் சரவணபவாய நம🙏

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் || நெல்லை அபூபக்கர்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே || இசை முரசு E.M. நாகூர் ஹனிபா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி
பாடியவர்: அனந்தலக்ஷ்மி சடகோபன்
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா


பல்லவி (பெஹாக்)
கான மழை பொழிகின்றான் கண்ணன் 
யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க
அனுபல்லவி
ஆனந்தமாகவே அருள் பெருகவே 
முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன்
சரணம் 1
தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே 
திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு-
சரணம் 2 (பெளளி)
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட 
ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட 
கோவிந்தன் குழல் ஊதி
சரணம் 3 (மணிரங்கு)
அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் 
ஆடல் பாடல் மறந்திட
அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் 
அம்புஜநாபன் ஆர்வமுடன் முரளி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயின் கருவில் என்னை 
அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து 
எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம் 
என் நெஞ்சில் கண்டேனே
உன்..னோடு நா..ன் கண்ட 
சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை 
கா..ணுதே என் மனம்


வராது வ..ந்த வாழ்வினில்  
நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வா..ழ நீயுமே
சொன்ன யாவும் ஞாபகம்(2)
ஒரு வழியில் ஆசைகள்
மனிதத் துயர் ஓ..சைகள்(2)
இன்பங்களால் என் உலகம் 
எழுவதை நான் காணவேண்டும்.

நெஞ்சோடு செய்..த வேள்வியில் 
நான் காணும் கேள்விகள்(2)
அஞ்சாத அன்று நீ..யுமே 
சென்ற பாதையின் தெளிவுகள்(2)
அறநெறியில் ஆட்சியும், 
அன்பு வழி வா..ழ்க்கையும்(2)
ஓ தேவனே! என்னுலகினில் 
எழுவதை நா..ன் காணவேண்டும்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.