Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • Replies 1.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா         கதிர்காம முருகையா உருகையா     

 • கருத்துக்கள உறவுகள்

தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருவேகம்பமாலை

 

அறந்தான் இயற்றும் அவனிலுங்கோடி அதிகமில்லம்
துறந்தான் அவனிற் சதகோடிஉள்ளத் துறவுடையோன்
மறந்தான் அறக்கற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியேகம்பனே.

கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.

கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து
அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே.

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்
தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்
உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே

நல்லரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே.

பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.

பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.

கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.

மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும்
வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந்
தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து
ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நனைகிறேன்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.

1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும்
ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர்
மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம்
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும்  எனக்காக தான்.
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.

2. தளர்ந்திடாமல் தகர்ந்திடாமல் தேவரீர் என்னை காத்திடும்
வீழ்ந்திடாமல் தாழ்ந்திடாமல் தேவரீர் என்னை பேணிடும்
இதயம் நினைத்துப்பாடும், தயவு நிறைந்த தெய்வசிநேகம்.
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும்  எனக்காக தான்.
(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தந்தைக்கு மந்திரத்தை சாரப் பொருள் உரைத்து 
தகப்பன் சாமியென பெயர் பெற்ற முருகா 
மண்ணுக்கும் விண்ணுக்கும் 
சுவாமியென வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமிநாதா 

சொல்ல  சொல்ல இனிக்குதடா முருகா 

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா 
உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (2)

பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே (2) 
உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (சொல்ல )


முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் 
அழகன் எந்தன் குமரனென்று  மனமொழிக் கூறும் (2)

உயிரினங்கள் ஒன்றையொன்று  வாழ்த்திடும்போது(2)
  அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா  (சொல்ல )

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
எழை எந்தன் என் உள்ளம் நீ வா
எங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா
அன்பே அன்பே

தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி  
சேயாக நீயும் சீறாட்டினாய்
நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்
உன்பாதம் சேர வழிகாட்டினாய் 
நீயில்லை என்றால் நானும் இல்லையே
நீயின்றிபோனால் வாழ்வும் இல்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே 
நீயின்றி  வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேலை
நிலமாக நின்று தாங்கிக்கொள்வாய்
மலர்சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லை என்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லை என்றால் கீதம் தோன்றுமா
நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே
நீ தந்த செல்வங்கள்
என்வாழ்வில் துன்பங்கள்
நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா..சர்வ காரணன் சுகுண நிர்குணன் பெருமாள் பாடல்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் ஞானவேல் வேல் வேல் சக்திவேல்

சென்னிமலை மீது ஒரு வீடு
அது கன்னித்தமிழ் முருகனின் அருள்கூடு

ஆண்டியின் பாதத்தையேத் தேடு

ஈராறு கண்களால் காத்திடுவான் அன்போடு

சென்னிமலை முருகன் சென்னிமலை

வேல்முருகா வெற்றி வேல்முருகா

அருணனைத் தாலாட்டும் திருக்கோயில்
திரு முருகன் அருள்ததும்பும் தமிழ் கோயில்

ஆதி பழனியே அருள்வாயா  . . .

உந்தன் திருவடி என்றுமே என்மனதில்
திருவடி என்றுமே என் மனதில்

வள்ளி தெய்வானையுடன் அருட்கோலம்
மலர்மாலையுடன் கல்யாணத் திருக்கோலம்

வையகம் வணங்கிடும் வைபோகம்

அதை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்
பார்க்க ஆயிரம் கண் வேண்டும்

பார்க்க ஆயிரம் கண் வேண்டும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா . . .

சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்

வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்

காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்

பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அறுபடை வீட்டில் அமர்ந்தவனே
நீ அழகுமுகம் ஆறும் கொண்டவனே

சென்னிமலை அருள் ஆண்டவனே

சென்னிமலை அருள் ஆண்டவனே
மன ஆறுதல் தந்திடும் வேலவனே

ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய
ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய

அறுபடை வீட்டில் அமர்ந்தவனே

தேவரைக் காத்திட அவதரித்தாய்
உன்னை வேண்டி வந்தவர்க்கு வரமளித்தாய்

பன்னிரு கரம்கொண்ட பாலகனே
அப்பன் பராமனுக்கே பாடம் சொன்ன வேலவனே

அன்னை தந்த வேலல்லவா
அது கண்ணீரைத் துடைத்திடும் உண்மையல்லவா

பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா

பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா
மயில்வாகனனே சிரகிரியின் வேலவா

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.