Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள்
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே
பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

 

 

Link to post
Share on other sites
 • Replies 2.1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்   சரி தானோ.. முறை தானோ.. எந்த

 • கருத்துக்கள உறவுகள்

புள்ளிக் கலாப மயில் ஏறும் பெருமான் திருவடி பணிவேன்
வள்ளல் தெய்வானை வேந்தனை தென்பரங்குன்ற நாதனை
செல்வன் சிங்கார வேலனை சிரகிரிக்குன்ற பாலனை
உள்ளம் இசை பாட நாத மலர்த்தூவி வேண்டுவேன்
நாளென் செயும் வினை தானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்
குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும்  சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை
விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனை
கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போதும்
மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே
 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாரணமாயிரம்

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கும் மெய்ஞானப் பேரின்ப கடலின் || நாகூர் சதாம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அற்புத அன்பனின் அடிதொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே (2)

1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2)
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2)
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2)

2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2)
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் ... ...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் (2)
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் (2)

1. இருளின் ஆட்சியை முறியடிக்க
அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய்
தன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2)
சுயநலம் மறைய சமத்துவம் மலர
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்

2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும்
திருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2)
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ

இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா

ஜபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
பெருமாளே . . .  பெருமாளே . . .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆலயத்தில் நாம் நுழைகையிலே
புது நினைவுகள் எழுகின்றன
அந்த நினைவுகளின் புது வருகையிலே
நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2)

1. அன்பான மகனைப் பலிகொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்

2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)
என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தன்னன்ன நாதினோம்
தன்னன்ன நாதினோம்
தன்னன்ன நாதினோம்
தன்னானே...
தன்னன்ன நாதினோம்
தன்னானே.... (2)

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவாம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)   தன்ன...... 

ரெண்டாம் படி எடுத்து ரத்தின கிளியாம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன..... 

மூனாம் படி எடுத்து முத்துப் பல்லக்காம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன..... 

நாளாம் படி எடுத்து நாக ரத்தினம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன...... 

அஞ்சாம் படி எடுத்து அஞ்சு வர்ணக்கிளி
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன...... 

ஆறாம் படி எடுத்து அரும்பு உதிர
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன..... 

ஏழாம் படி எடுத்து எசந்த பூவாம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)   தன்ன...... 

எட்டாம் படி எடுத்து பட்டுச்சேலயாம்
ஒர ஒரமா, பத்திரகாளியாம்,  கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம், 

சித்திர கோபுரம் கட்டவே(2) 

ஆளான பெண்ணுக்கு அழகு பூ  பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2)  தன்ன...... 

கொட்டிய கையும் வலிச்சுப்போச்சு  நல்ல கோடி வலவிகள் விட்டுப் போச்சு (2)

நித்திரம் வந்து நிலாபம் மறைக்கனும் உத்தரவு கொடு காளித் தாயே (2)   தன்ன...... 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, 

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், 

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!


நிச்சயதார்தம் 

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, 

பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் 

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!


பெரியோர்களின் அனுமதி 

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,

வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!


காப்பு கட்டுதல்

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,

காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!


பிடி சுற்றுதல் 

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,

சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் 

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!


பாணி க்ரஹணம் 

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,

முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் 

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

ஸப்தபதி 

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,

காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,

தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!

அம்மி மிதித்தல் 

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மை உடையவன் நாராயணன் நம்பி,

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!


பொறி இடுதல் 

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,

அரிமுகன்  அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

மஞ்சள் நீர் தெளித்தல்

குங்குமம்  அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம் செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!


பாராயண பலன்

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்

1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு

2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி
தன்னையே தருகின்ற தலைவன் வழி
பகிர்வில் உயர்வு காணும் நெறி - இந்த
உண்மையை நாளும் உணர்ந்திடவே -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு

 

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவர் இல்லம் செல்வோம் (2)
என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர
அருள் வேண்டி பலியிடுவோம் (2)

1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)
கானமும் காற்றும் வேறில்லையே - 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே

2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உம்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)
மனதினைக் காக்கும் மாண்புடனே (2)
மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.