-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
தமிழ்க் கட்சிகளின் யோசனை வரைபை நிராகரிக்குக - அமைச்சர் தினேஷ் குணவர்தன.! "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரித்து அதைத் தூக்கிவீச வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது 'இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்' என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிள்ளமை தொடர்பில் இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் மூன்றும் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சதி வேலைகளில் களமிறங்கியுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு என்ன துணிவுடன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று எமக்குத் தெரியவில்லை. எனினும், அரசியலில் அனுபவம் மிகுந்த இவர்கள் இவ்வாறு செயற்படுவது அருவருக்கத்தக்கது. இலங்கையில் இனப்படுகொலையோ அல்லது போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் இந்தப் பொய்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை எப்படி நிறுத்த முடியும்? சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளாது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியுள்ள நிலையில், புதிய பிரேரணை மூலம் எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது. ஐ. நா. பொதுச்சபையிலும், ஐ. நா. பாதுகாப்புச் சபையிலும் இலங்கையை இறுக்க எமக்கு ஆதரவு வழங்கும் உறுப்பு நாடுகள் இடமளிக்கா. இலங்கை, சர்வதேச அரங்கில் பலம் இழந்த நாடு அல்ல. இது பலம் பொருந்திய நாடு. எமது நாட்டின் இறையாண்மைக்கு சர்வதேச நாடுகள் மதிப்பு வழங்கும். எம்முடன் எந்த நாடும் இதுவரை முட்டிமோதவில்லை. நாமும் எந்த நாட்டையும் பகைக்கவில்லை. எனவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அந்த யோசனை வரைபைத் தூக்கி வீச வேண்டும்" - என்றார். http://aruvi.com/article/tam/2021/01/21/21793/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
சென்னை - மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை.! இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது நினைவுகூர்வதற்கான வெளியும் தமிழ்மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னத்தை தமிழ்நாட்டு அரசு உருவாக்க வேண்டும் என கோருகின்றோம். இதற்கு தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம். இதுமட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக 'உலகத்தமிழர் தேசிய துக்க நாளாக' மே-18ஐ தமிழ்நாட்டு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். http://aruvi.com/article/tam/2021/01/21/21795/ டிஸ்கி : தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை JCB வைத்து நிரவ பெரு முயற்சி எடுத்தினம். தமிழ் ஆர்வலர்களால் தடுத்து நிறுத்த பட்டது. ரெல்லியின்ர " எடுப்பு " முதல்வர் என்ன செய்கிறார் பொறுத்து பார்க்கலாம்.👍 -
By அக்னியஷ்த்ரா · Posted
அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன பாஸ்டர்களுக்கு ஐயா தான் குருநாதர். அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள், சாதுவை யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy) என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும் -
By தமிழ் சிறி · Posted
மூன்றாம் கலைஞர்.... சீனாக்கு இந்தியா பதிலடி..! -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
யாழ்.நெடுந்தீவு, நயினா தீவு, அனலை தீவு பகுதிகளில் கால்பதிக்க போகும் சீனா - அமைச்சரவை அனுமதி.! யாழ்.நயினா தீவு மற்றும் நெடுந்தீவில், அனலை தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடை முறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே சீனாவுக்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்க தக்க எரி சக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் கூட்டு முயற்சி நிறுவனமான சைனோசோர் எச்வின் நிறுவனத்துக்கு இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/22823 டிஸ்கி :
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.