-
Tell a friend
-
Topics
-
7
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ரஜினி-மக்கள்-மன்றத்தினர்/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழப்பு குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/குஜராத்தில்-கோர-விபத்து/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது! ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷெரெமெட்டியோ விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என நவால்னி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நவால்னியை அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நவால்னிக்கு விசம் வைக்கப்பட்டது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஷ்யாவை ஜேர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. நோவிசோக் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடு-திரும்பிய-ரஷ்ய-எதிர/ -
By தமிழ் சிறி · Posted
தானமாக கிடைத்த பசுமாட்டிற்கு, எத்தனை வயது என்று.... பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். சும்மா இந்தியா கொடுத்த... ஏவுகணையை, பத்து வருசத்துக்குப் பிறகு, ஸ்ரீலங்கா சோத்தித்து பார்க்குது என்றால்... இந்தியா... தங்களை, "பேய்க்காட்டிப்" போட்டுது என்று.... சந்தேகப் படுகிறார்கள் போலுள்ளது. 😂 அல்லது... இந்தியாவின் ஏவுகணை எல்லாம்... "சிவகாசி... ஈக்கில் வாண வேடிக்கை" காட்டுகின்ற அளவில் தான்.... அதன் தரம் உள்ளது போலுள்ளது. 🤣 ஒன்றை.... சீனாக்காரனிடம், கொடுத்தால், பிரித்து மேய்ந்து... அதன் தராதரத்தை, உடனே சொல்லி விடுவானே.... 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.