Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!


நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!


ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 2.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

 • கருத்துக்கள உறவுகள்

காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை

1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு (2)
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு

2. வருங்குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து (2)
சிரமே தாள் பணிந்து சிந்தனையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வானமும் பூமியும் படைத்தவரே
வார்தையால் உலகை காப்பவரே

பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே!
பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே!
பாவியை மீட்க்க, பாரினில் வந்தவரே!

வானமும் பூமியும் படைத்தவரே
வார்தையால் உலகை காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே. . 
சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2)

அதிசயமானவரே, அகிலத்தை ஆள்பவரே,
ஆலோசனை கர்த்தரே, பெரியவர் நீரே!(2)
சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2)

வல்லமை உள்ளவரே, அலகையை வென்றவரே
நித்திய பிதாவே, பெரியவர் நீரே(2)
சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2)

சமாதான பிரபுவே, சகலமும் செய்பவரே
சரித்திர நாயகனே, பெரியவர் நீர்!(2)
சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணமய்யா!(2)

வானமும் பூமியும் படைத்தவரே
வார்தையால் உலகை காப்பவரே!(2)
பார் போற்றும் வேந்தனே, பரம ரஜாவே!
பாவியை மீட்க்க, பாரினில் வந்தவரே!
வானமும் பூமியும் படைத்தவரே!!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தினந்தோறும் தினந்தோறும் உனைநானும் தேடி
வருவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவிநூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தீண்டல் அது போதுமே என்றும்
என் வாழ்வே உனதாகுமே

1. வழியெங்கே எனத்தேடி விழியேங்கும்போது
நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2)
வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக
கவிபாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை

2. சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது
சுமைதாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2)
சொந்தங்கள் இனியெங்கே என ஏங்கும்போது
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி

தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.

சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு
பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா
கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன்
அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்...

வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும்
மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா

ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு
ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா
ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே
ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா

சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா
ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா
பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து
நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா

ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு
ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு
உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு
உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா

வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே
மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள்
புரட்டாசித் திருநாள்... புரட்டாசித் திருநாள்

கைத்தல சேவையாம் ஐப்பசத் திங்களில்
இத்தரை மீதில் எங்கும் காணாத சேர்வையாம்
வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை
பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள்

கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும்
ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி
சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த
சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா

மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம்
பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம்
காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில்
நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம்

வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த
மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ
மங்கலத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா
எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா

காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன்
தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன்
தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று
சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு
தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா

கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை
மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா
வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல்
ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா
அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு
தெப்போற்சவத் திருவிழா திருவிழா

நம் இராமருக்கு
வரதராஜரருக்கு
பார்த்த சாரதிக்கு
நரசிம்மனுக்கு
ஸ்ரீமன்னாதருக்கு
தெப்போற்சவத் திருவிழா...திருவிழா

மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு
பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா

திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே
சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ கொடுத்ததற்க்கே நன்றி சொல்ல 

 

 

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே

உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இன்று கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே (2)

அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்கு தொடர்ந்திடுமே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிட வாருங்களே
புது உலகமைத்திட புதுவழி படைத்திட
அன்புடன் வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே

1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார்
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம்
சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்

2. ஏழை எளியவர் வாழும் இடங்களே
இறைவன் வீடாகும்
வறுமைப் பிடியிலே அலறும் குரல்களே
இறைவன் மொழியாகும்
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம்
இறைவனின் அரசின் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எட்டுக்குடி வேலோனுக்கு ஆடும் காவடி சேவல் காவடி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும்.
உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்துவிடும்.
அருளுக்கோர் அளவில்லை... அன்பிற்கோர் நிகரில்லை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா 
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா 

துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய் 
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் 
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் 

பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் 
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்  
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் 
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் 
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2)
சிந்தையிலே வந்து ஆடும் (2)
சீரலைவாய் முருகா முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா


எண்ணமதில் திண்ணமதாய் (2)
எப்போதும் வருவாய் அப்பா
ஏற்றி உன்னை பாடுகின்றேன்
ஏரகத்து முருகா முருகா முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா


அப்பனுக்கு உபதேசித்த (2)
அருமை குருநாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமிநாத குருவே அப்பா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா


பாலும் தேன் அபிஷேகமும் (2)
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா


அகங்காரமும் ஆத்திரமும் (2)
அகந்தைகளை விட்டு விட்டு
அடைக்கலமாய் ஓடி வந்தேன்
ஆறுமுக வேலவனே
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா


முக்திக்கு வழிதேடிய (2)
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் பால் மருகனே வாவா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.