Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • Replies 1.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் காவியம் கதிர்காம கந்தன் கும்மிப்பாடல்  

 • கருத்துக்கள உறவுகள்

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

2:
சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

3:
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

4:
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

5:
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

6:
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

7:
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

8:
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

9:
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

10:
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

11:
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

12:
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.

13:
கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

14:
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

15:
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.

16:
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

17:
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.

18:
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.

19:
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

20:
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.

21:
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.

22:
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.

23:
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

24:
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

25:
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.

26:
வைதோரைக் கூடவை யாதே - இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

27:
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.

28:
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.

29:
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.

30:
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.

31:
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.

32:
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

33:
எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.

34:
கள்ளவே டம்புனை யாதே - பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.

35:
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்
எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

முத்திரை நபியே முஹம்மது ரசூலே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே

இத்தரை மாந்தர் யாவரும் அன்று
பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார்
இத்தரை மாந்தர் யாவரும் அன்று
பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார்
முத்தொளி மார்க்கம் புகழ் வழி அமைக்க
சத்திய தூதே சர்தார் ரசூலே

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

தந்தையை இழந்து தாயையும் இழந்து 
மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து
தந்தையை இழந்து தாயையும் இழந்து 
மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து
சிந்தையுள் இறைவன் செய்தியை தாங்கி
வந்திடும் போது வம்பர்களாலே

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து
கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து
கொள்ளென சிரிக்கும் கும்பலை பார்த்து
முள் வழி நடந்து பொறுமையை சுமந்து

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

தாயஹம் துறந்து இருள் வழி நடந்து
தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து
தாயஹம் துறந்து இருள் வழி நடந்து
தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து
போய் மதினாவில் அடைக்கலம் புகுந்து
போர்ப்பகை சூழ வாழ்த்திடும் நாளில்

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ
துயர் பல சகித்த தாஹா ரசூலே
வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ
துயர் பல சகித்த தாஹா ரசூலே
மன்னுயிர் காத்து மாநிலம் வாழ
எண்ணியே வாழ்ந்த எம்மான் ரசூலே

 
எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்
பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில்

முத்திரை நபியே முஹம்மது ரசூலே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே
சித்திரை நிலவே செழுமலர் வடிவே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்

3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
                                                       ரோ. 8:15
1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

    நன்றி உமக்கு நன்றி - அப்பா

2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி

3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே                      சங். 40:2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே - நன்றி
                                                     வெளி. 1:6

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதியாய் வந்த தேவி
ஸ்ரீ ஆதி லக்ஷ்மி தாயே போற்றி

மனபயங்கள் மாய்ப்பவளே
ஸ்ரீ தைரிய லக்ஷ்மி தாயே போற்றி

உயிர்களுக்கே உணவளிப்பாய்
ஸ்ரீ தான்ய லக்ஷ்மி தாயே போற்றி

பத்மராக மலர் அமர்ந்தாய்
ஸ்ரீ கஜலக்ஷ்மி தாயே போற்றி

புத்ர பாக்யம் தருபவளே
ஸ்ரீ சந்தான லக்ஷ்மி தாயே போற்றி

கல்வி செல்வம் தருபவளே
ஸ்ரீ வித்யா லக்ஷ்மி தாயே போற்றி

வெற்றிகள் தரும் மங்களையே
ஸ்ரீ வீரலக்ஷ்மி தாயே போற்றி

செல்வம் அளிக்கும் ஸ்ரீதேவி
ஸ்ரீ தனலக்ஷ்மி தாயே போற்றி

பூர்ணகும்பத்தில் அமர்ந்தவளே
ஸ்ரீ வரலக்ஷ்மி தாயே போற்றி

மாங்கல்யத்தை காப்பவளே
ஸ்ரீ சௌபாக்ய லக்ஷ்மி தாயே போற்றி

மனையோகம் தருபவளே
ஸ்ரீ கிரஹலக்ஷ்மி தாயே போற்றி

தேக சுகத்தைத் தரும் தேவி
ஸ்ரீ அன்னலட்சுமி தாயே போற்றி

பதினாறு பேறுதரும் தாயே
ஸ்ரீ பாக்கியலக்ஷ்மி தாயே போற்றி

விளக்கினிலே வீற்றிருப்பாய்
ஸ்ரீ தீபலக்ஷ்மி தாயே போற்றி

நவநிதிகள் வழங்கும் தேவி
ஸ்ரீ குபேரலக்ஷ்மி தாயே போற்றி

எட்டு சித்திகள் தருபவளே
ஸ்ரீ யோகலக்ஷ்மி தாயே போற்றி

இஷ்ட வரங்கள் கொடுப்பவளே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி

அஷ்டைஸ்வர்யம் தருபவளே
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி போற்றி

பரந்தாமன் நாயகிக்கு
பத்மபீடம் ஆடும் தேவிக்கு

துளசி தளம் அணிந்தவளுக்கு
திவ்ய சுப மங்களம்

அலையாழித் தோன்றி வந்த
ஹரிமாயன் நாயகிக்கு

கலையாவும் வழங்கும் செல்வதேவிக்கு
நித்ய மங்களம்

மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

ஊரை மாற்றி உலகை மாற்றி
உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை மாற்றி
சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா ஆ
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய்
வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா
வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா
உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட
உயிரின் உயிரே இறைவா 

உலகம் வாழ நீயும் உந்தன் உடலை சிதைத்து
உறவு பலியாய் உயிரைத் தந்தாய்
உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து
உலகை மாற்றும் துணிவைத் தாராய்
உன் அன்பு பாதைகள் என் வாழ்வின் பாடங்கள்
உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள்
உலகெளாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா
உயிரின் உயிரே இறைவா

கருணை மொழிகள் பேசி 
கனிவு செயல்கள் காட்டி
கடவுள் ஆட்சி கனவைத் தந்தாய்
காணும் உயிர்கள் யாவும்
கடவுள் உருவைக் காணும்
புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய்
இறை ஆட்சி குடும்பமாய் 
இவ்வுலகம் அமைந்திட
இங்கு பகைமை அழிந்திட
நல் பகிர்வு வளர்ந்திட
நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட
உயிரின் உயிரே இறைவா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம் 
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் 


இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே 
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம்
நாளைய உலகின் விடியலாகவே !

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே 
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் 
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கூவி அழைக்க கூடாதா கூவி அழைக்க கூடாதா குருபரா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்,  அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்,  உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன் (2)
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன், என் உயிரினிலே உன்னைக் காண்கின்றேன் 
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

பேதமில்லாமல் யாவினிலும் உன் பேரருளை நான் பார்க்கின்றேன் (2)
பேதமையால் உன்னை நான் மறந்தேன், அந்த வேதனையால் தான் பாடுகிறேன்  
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ...

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன், என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 
தூயவனே உன்னை துதிக்கின்றேன், உன் துணையே கதி எனப் பாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய், என் விழியுனுல் ஒளியாய் ஜொலிக்கின்றாய்
இதயத்தை நீயே ஆளுகிறாய், என்னை இசைத்திட  தூண்டி ரசிக்கின்றாய்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ....

விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய், பெரும் மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய்
மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய், அங்கு தெரிவதை கண்டு சிரிக்கின்றாய்  
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .....

அல்லாஹு என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் ( 2 )
ஆயிரம் முறை  உன்னை நினைக்கின்றேன் உன் ஆதாரம் நாடி அழுகின்றேன் 
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ...

இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ( 3 )

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதிலுரைப் பாடல் 
திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 
2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

10 தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 
11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி

12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 
13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; 
இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி


14 `அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; 
அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 
15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; 
அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; 
அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓமெனும் பிரணவம் - ஸ்வாமிமலை | அறுபடை வீடு கந்த சஷ்டி கவசம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை
அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை

மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே

வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா
விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா

பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே
பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே

துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன்
வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே

அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே
எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே

பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில்
தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே

தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில்
திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில்

கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை
நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே

வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே
வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ரஞ்சித், 1970 களில் இலங்கையில் உள்ள நகரங்களில் மிக தூய்மையான நவீன நகரமாக யாழ்ப்பாணத்தை  கட்டி எழுப்பியவர் திரு அல்பிரட் துரையப்பா தான். நகரை தனது வீடு போல் பராமரித்தவர். அவர் ஒரு சாதாரண அரசியல் வாதி தான். மறுக்கவில்லை. ஆனால் தமிழரசு க்கட்சி போன்று, தமிழர் பிரச்சனையை  வைத்து மக்களை ஆத்திரமூட்டி போலி தேசிய அரசியல் செய்துதமிழ் தேசிய பிரச்சனையை  வன்முறைக்குள் தள்ளி, தமிழர்களை அவலத்துக்குள் அவர் தள்ளவில்லை. அரசாங்கத்துகுள் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை செய்தார்  திரு துரையப்பா.  யாழ் நகர மத்தியில் அழகாக காட்சியளிக்கும் நவீன சந்தை (New Market) அவர் மேயராக இருந்த போதே கட்டப்பட்டது.   அவர் மீது இல்லாத பொல்லாத  அவதூறுகளை அள்ளிக் கொட்டி அவரை கொலை செய்வித்த‍து தமிழரசுக்கட்சி. ஏற்கனவே தமிழர்களுக்கு  இருந்த‍தையும் அழித்து இலங்கையில் தமிழ் தேசியத்தை அவலத்தில் தள்ளியதே அளவுக்ககு அதிகமாக தேசியவாதம் பேசியவர்கள் தான்  ஆனால் யாழ்பாண நகர், என்றும் திரு துரையப்பா அவர்களை  நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும். நகரில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் துரையப்பா விளையாட்டரங்கம் அதற்கு சாட்சி. 
  • ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள் முன்னுரை - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடலும் அதன் குடிவழிகளும் தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா். புலவர்களும் கடலும் காதல், வணிகம் ஆகிய இரண்டுமே சங்கப் புலவர்களின் பொருண்மைக் கோட்டைகளான அகம், புறம் போல கடற்புறத்தில் பரவிக் கிடந்துள்ளன. நோக்கர்களான புலவர் பெருமக்களும் இக்காட்சிகளைக் கண்டுதெளிந்து நெய்தல் பாடல்களை வடித்துள்ளனா். அவர்களின் கட்புலனாக்கும் செயல்பாட்டிற்காகக் கடலைப் பல்வேறு முன்னொட்டுக்கள் (அடை) கொண்டு பாடியுள்ளனா். பொதுவாக வண்ணம், வடிவம், அளவு, மணம், உணர்வு முதலிய தன்மைகளால் கடலுக்குப் பல பெயர்கள் கிட்டுகின்றன. வடசொல்லும் கடலும் சங்கப் புலவர்கள் பலர் வடமொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மாட்சிமை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனா். வடவர் வரவு என்பது பிற்காலத்தில் வந்தது என்று கூறிவருவது இங்கு ஆராயத்தக்கதாகும். புலவர்கள் தம் அறிவை விசாலப்படுத்த, புலமை அறிவைப் போதிக்க வடமொழியை அதாவது வடவர் தொடர்பு கொண்டிருக்கலாம். நற்றிணையில் மட்டும் கடலை பௌவம் என்ற வடசொல்லால் மூன்று இடங்களில் புலப்படுத்தியுள்ளனா். அப்பாடல்கள் நற்றிணை 74, 207, 245 ஆகும். இவற்றில் 207 ஆம் பாடலுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மற்ற இரு பாடல்களும் உலோச்சனார், அல்லங்கீரனார் ஆகியோரால் பாடப்பெற்றுள்ளது. ‘‘இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்’’ – நற்., 74 (2)   ‘‘திரை எழு பௌவம் முன்னிய’’ – நற்., 207 (11) ‘‘துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி’’ – நற்., 245 (4) என்றவாறு வடசொல் பதிவு கடலைக் குறிப்பதற்குப் பயன்பட்டுள்ளது. இச்சொல்லைப் பயன்படுத்தியதற்குக் காரணம் இது ஆசிரியப்பாவில் இயற்றும் பாடல் ஆதலாலும் , சீர் மற்றும் தளையினை பெரிதாகப் பாதிக்காது என்பதனாலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுபோல சாகரம், சமுத்திரம் போன்ற சொற்களும் கடலைக் குறிக்கும் சொற்களாக வடமொழியில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் நற்றிணையில் பயன்படுத்தப்பெறவில்லை. முன்னரே சொன்னபடி சொற்செட்டுமானத்திற்கு இச்சொல் கச்சிதமாகப் பொருந்தி வருகின்றது. நெய்தல் – பலர் பழகும் நிலம் நெய்தல் நிலத்தில் மீன்களை வாங்கிச் செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்துள்ள செய்தியை, ‘‘கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென, நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே’’ நற்றிணை., 207 ( 3 – 4) என்ற அடிகளால் அறிந்து கொள்ளலாம். இதுபோக ஏனைய கடல் பொருள்கள் வாங்குவதற்கும் மக்கள் நெய்தல் நிலத்தை நாடியிருக்கலாம். இவர்களோடு புலவர்களும் அப்பகுதிகளுக்குப் பயணப்பட்டிருப்பர். இதனாலே நெய்தல் பாடல்கள் மொத்த சங்கப் பாடல்களில் பெரிய அளவினைப் பெற்றுள்ளன. மொத்தம் 344 பாடல்கள் நெய்தல் திணையைச் சார்ந்ததாக உள்ளன. மேற்கண்ட பாடல் பல செய்திகளைத் தருகின்றது. நெய்தல் நிலம் மக்கள் நடமாட்டம் மிகுந்த, பல்வேறு பழக்க வழக்கங்கள் உடைய மக்களைச் சந்திக்கவைத்த நிலமாக இருந்திருக்க வேண்டும். இவர்களில் காதலர்களும் அடங்குவர். நிறம் கொண்டு பெயர் பெறும் கடல்கள் பொதுவாகக் கடல்கள் நீல நிறத்தில் காட்சி தரும். மாலை நேரம், மழைக் காலங்களில் கருநிறத்தில் காட்சி தருவதைக் கண்டிருப்போம். மேலும் நேரத்திற்கு நேரம் கடல் பல வண்ணங்களில் காட்சிதரும். அலைகளை மிகுதியாகச் சுமந்துவரும் கடலானது தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவதைப் புலவர் பார்க்கிறார். மேலும் மாலை நேரத்தில் கடலானது நிலவின் ஒளியைக் கிரகித்து பால்போல் வெள்ளைநிறம் தரித்து காட்சிதருவதை வருணனை, உவமை உணர்வு பொங்க, ‘‘…… நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, பால் மலி கடலின் பரந்து பட்டன்றே’’ நற்றிணை., 348, (1 – 2) என்றவாறு வெள்ளிவீதியார் பதிவு செய்துள்ளார். கடல் தெளிந்த நிலையில் காணப்படுவதைக் காணும் புலவர்கள் ‘‘தெண்கடல்’’ என்ற பெயரால் நற்றிணை 303, 356, 363 ஆகிய பாடல்களில் பதிவு செய்துள்ளனா். தெண் என்ற சொல்லிற்கு தெளிந்த என்று பொருள் 1. தெண்கடல் என்பதற்கு தெள்ளிய கடல் என்று பொருள். ‘‘…… தெண்கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல்’’ நற்றிணை, 303 ( 4 – 5) என்ற பாடலடிகளால் அறியலாம். மேலும் நற்றிணை பாடல் 245 ‘‘துணி நீர்’’ என்ற பெயரால் தெளிவான நிலையில் இருக்கும் கடலைக் குறிக்கின்றது. ‘‘துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி’’ நற்றிணை, 245 (4) என்ற அடியினால் அறிந்து கொள்ளலாம். செயலால் கடல் பெறும் பெயர்கள் கடல் ஓயாது அலையினைக் கொண்டு மோதுவது வாடிக்கை நிகழ்வாகும். அச்செயல்கொண்டு பல பெயர்களைக் கடல் பெறுகின்றது. நற்றிணையின் 235 ஆவது பாடல் உரவுத்திரை, பொங்கு திரை, 378 ஆவது பாடல் முழங்கு திரை, 347 ஆவது பாடல் முழங்கு கடல், 17 ஆவது பாடல் உரவு நீர், 335 ஆவது பாடல் பொங்குதிரைப் புணரி, 211 ஆவது பாடல் ஊர்கடல், 319 ஆவது பாடல் ஓதம் என்றவாறு பெயர்பெற்று நிற்கின்றன. மணம் காரணமாகக் கடல்பெறும் பெயர் கடலின் கரையில் மீன், ஆமை, நண்டு ஆகிய உயிர்களின் எச்சம் மற்றும் இருப்பு காரணமாக நாற்றம் வீசுகின்றது. அதுகொண்ட கடலைக் குறிக்க நற்றிணை 385 ஆவது பாடல், ‘‘புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு அலவனும் அளைவயிற் செறிந்தன ..’’ நற்றிணை 385, (2 – 3) என்று கடலானது புலவு நீர் என்று சுட்டப்பெறுகின்றது. அளவின் அடிப்படையில் கடல் பெறும் பெயர்கள் கடலானது நீர்நிலை வகைகளில் ஆழமும் அகலமும் மிக்கதாகும். எனவே பல இடங்களில் அவற்றின் அடிப்படையில் பெயர்களைப் பெறுகின்றது. நற்றிணையின் 378 ஆவது பாடலில் ‘‘பரவை’’ என்ற பெயரால் கடல் குறிக்கப்பெறுகின்றது. இதனை வேர்ச்சொல் அடிப்படையில் பார்த்தால் பரந்துபட்டுக் கிடப்பது என்ற பொருளில் காணலாம். மேலும் பரவை என்ற சொல்லுக்குக் கடல் பரப்பு என்று அகராதி விளக்கம் தருகின்றது. 2 நற்றிணை 303 ஆவது பாடல் ‘‘நெடுநீர்’’ என்று கடலைச் சுட்டுகின்றது. இது நீளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். பாடல் எண் 74, 331 ஆகியன ‘‘வளைநீர்’’ என்ற பெயரில் கடல்கைளச் சுட்டுகின்றன. இப்பெயருக்கு நிலப்பரப்பை எல்லாம் சூழ்ந்திருக்கக் கூடிய நீர்ப்பரப்பு என்று பொருள் உணரலாம். குளிர்மையால் பெறும் பெயர்கள் கடலானது குளிந்து கிடப்பதைக் கண்ட புலவர் பெருமக்கள் நற்றிணை 291 ஆவது பாடலில் தண்கடல் என்றும், 287 இல் பனிநீர் என்றும் பதிவு செய்கின்றனா். மேலும் அவை கொண்டுள்ள அதிகப்படியான நீரினைக் கருத்தில் கொண்டு மலிநீர், மல்கு நீர், நளிகடல் என்ற பதங்களால் கடல்கள் குறிக்கப்பெறுகின்றன. நளி என்ற சொல்லிற்குத் தொல்காப்பிய உரியியல், ‘‘தடவும் கயவும் நளியும் பெருமை ’’ 3 ‘‘நளி என் கிளவி செறிவும் ஆகும் ’’ 4 என்ற இரு நூற்பாக்களில் நளி என்னும் சொல்லின் பொருள்களை உணர்த்துகின்றது. முடிவுரை கடல் பெயர்களுக்கெல்லாம் உள்ளிருக்கும் சூட்சமம் யாதெனில் அளக்கமுடியாத கடல்களை ஆசிரியப்பா வரம்பினுள் சீர் மற்றும் தளை வரம்பினுள் கொண்டுவந்து, அவற்றின் தன்மைகளை முன்னிறுத்தி புலவர் பெருமக்கள் பெயர்களை இட்டுள்ளனா். இதன்வாயிலாக உற்றுநோக்கல், புலமைத் திறம் கடற்பெயர்களுக்குக் காரணமாவதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகின்றது. சான்றெண்விளக்கம் https://ta.wiktionary.org/ https://ta.wiktionary.org/ தொல்காப்பியம், நூற்பா. 805 தொல்காப்பியம், நூற்பா, 808 துணைநூற்பட்டியல் நற்றிணை மூலமும் உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.,), கழக வெளியீடு, சென்னை – 1, 1952 தமிழ்க் காதல், வ.சுப. மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1 தமிழர் சால்பு, சு.வித்யானந்தன், தமிழ்மன்றம், கல்ஹின்னை, கண்டி, இலங்கை, 1954 தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108 * - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் - prasannamailbox@gmail.com   https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6419:2021-01-16-02-11-01&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
  • வெற்றி கொடி கையில் எடு   
  • சரியான பதில், பாராட்டுக்கள்  👍👏
  • பல காலத்தின் பின் பார்ப்பமென்று 5 குடும்பம் போனம், சேதுபதியின் நடிப்புதான் ஆறுதல் பரிசாக கிடைத்திச்சு😊   இங்கு ஒரு வருடத்திற்கு மேல் வழமையாக இயங்கி கொண்டிருக்கு, வெளி நாடுகள் போவதுதான் கட்டுப்பாடு
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.