Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    

 • கருத்துக்கள உறவுகள்

ஸல்லூ அலல் முஸ்தபா... யாரஸூலல்லா || நெல்லை S.M.அபுல் பரக்காத்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண்களின்தலைவி அண்னணஃபாத்திமாபின் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலை‌ஹிவஸல்லம்


 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் 
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2)
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2)
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின்
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
ஒன்றாக பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு
ஆண்டவன் தொண்டு என்றார்

முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்....

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் (x2)
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் (x2)
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் (x2)

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2)
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் (x2)

உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும்
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும்
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும்--உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ நின்ற திருக்கோலம் நான் கண்டேன் ஸ்ரீராம

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்க மாநகர் பிறந்தீரே... மதினாவில் சிறந்தீரே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.

 

மெய்நிலை கண்ட ஞானி... முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா - 2 
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய் 
என்றென்றும் வாழும் தேவா

1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா 
அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா 
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா 
ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா 
திக்கனைத்துமே உன்னை எதிரொலிக்க வா 
எதிரொலிக்க வா உன்னை எதிரொலிக்கவா 
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா 
உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா 
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே 
அன்பாலே வாழும் தேவா

2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா 
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா 
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா 
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா 
ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா 
பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா 
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா 
ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா 
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே 
அன்பாலே வாழும் தேவா
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகான பழநி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும்
மயில்மீது முருகையனே

முருகா....முருகா....

வெள்ளை திருநீறும் 
வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி 
வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

என்னை ஆழும் ஆண்டவனே எழில் வேலவா
இனியென்னும் உன்னை பாட அருள்வாய் அய்யா 

முருகா....முருகா....

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் 
தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்

உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாலும் ஆண்டவனே நீதான் அய்யா

முருகா....முருகா....

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1:

நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்
நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே.


2:
பராபர மானதடி அகப்பேய்
பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும் அகப்பேய்
தானே படைத்ததடி.


3:
நாத வேதமடி அகப்பேய்
நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி அகப்பேய்
பரவிந்து நாதமடி


4:
விந்து நாதமடி அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் அகப்பேய்
அதனிட மானதடி


5:
நாலு பாதமடி அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் அகப்பேய்
முத்தி யல்லவடி.


6:
வாக்காதி யைந்தடியோ அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம தானதடி அகப்பேய்
உண்மைய தல்லவடி.


7:
சத்தாதி யைந்தடியோ அகப்பேய்
சாத்திர மானதடி
மித்தையு மாகுமிடி அகப்பேய்
மெய்யது சொன்னேனே.


8:
வசனாதி யைந்தடியோ அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி அகப்பேய்
திடனிது கண்டாயே.


9:
காரண மானதெல்லாம் அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே அகப்பேய்
வந்தவி தங்களெல்லாம்


10:
ஆறு தத்துவமும் அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் அகப்பேய்
வந்தது மூன்றடியே.


11:
பிருதிவி பொன்னிறமே அகப்பேய்
பேதைமை யல்லவடி
உருவது நீரடியோ அகப்பேய்
உள்ளது வெள்ளையடி.


12:
தேயு செம்மையடி அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே.


13:
வான மஞ்சடியோ அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனம தாகாதே அகப்பேய்
உள்ளது சொன்னேனே.


14:
அகார மித்தனையும் அகப்பேய்
அங்கென் றெழுந்ததடி
உகாரங் கூடியடி அகப்பேய்
உருவாகி வந்ததடி.


15:
மாகார மாயையடி அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே.


16:
வன்னம் புவனமடி அகப்பேய்
மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே அகப்பேய்
இம்மென்று கேட்பாயே.


17:
அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே.


18:
தத்துவ மானதடி அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே அகப்பேய்
பூத வடிவலவோ.


19:
இந்த விதங்களெல்லாம் அகப்பேய்
எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ.


20:
பாவந் தீரவென்றால் அகப்பேய்
பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி அகப்பேய்
சற்குரு பாதமடி.


21:
எத்தனை சொன்னாலும் அகப்பேய்
என்மனந் தேறாதே
சித்து மசித்தும்விட்டே அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே.


22:
சமய மாறுபடி அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே.


23:
ஆறாறு மாகுமடி அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால் அகப்பேய்
மெய்யது சொல்வாயே.


24:
உன்னை யறிந்தக்கால் அகப்பேய்
ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை அகப்பேய்
உள்ளது சொல்வேனே.


25:
சரியை யாகாதே அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவ தொன்றுமில்லை.


26:
யோக மாகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே.


27:
ஐந்துதலை நாகமடி அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்தவிஷந் தீர்க்கும் அகப்பேய்
எம்மிறை கண்டாயே.


28:
இறைவ னென்றதெல்லாம் அகப்பேய்
எந்த விதமாகும்
அறை நீகேளாய் அகப்பேய்
ஆனந்த மானதடி.


29:
கண்டு கொண்டேனே அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே அகப்பேய்
உள்ளது சொன்னாயே.


30:
உள்ளது சொன்னாலும் அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே அகப்பேய்
கண்டாக்குக் காமமடி.


31:
அறிந்து நின்றாலும் அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் அகப்பேய்
போகாதே யுன்னைவிட்டு.


32:
ஈசன் பாசமடி அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி அகப்பேய்
பாரமது கண்டாயே.


33:
சாத்திர சூத்திரமும் அகப்பேய்
சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே அகப்பேய்
பாழ்பலங் கண்டாயே.


34:
ஆறு கண்டாயோ அகப்பேய்
அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே அகப்பேய்
தீர்த்தமு மாடாயே.


35:
எத்தனை காலமுந்தான் அகப்பேய்
யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ அகப்பேய்
மோட்சமு முண்டாமோ.


36:
நாச மாவதற்கே அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் அகப்பேய்
பசுக்களும் போகாவே.


37:
நாண மேதுக்கடி அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் அகப்பேய்
காணக் கிடையாதே.


38:
சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே.


39:
உன்றனைக் காணாதே அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே அகப்பேய்
இடத்தில் வந்தாயே.


40:
வான மோடிவரில் அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல் அகப்பேய்
தெருவோ டலைந்தாயே.


41:
சைவ மானதடி அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில் அகப்பேய்
சலம்வருங் கண்டாயே.


42:
ஆசை யற்றவிடம் அகப்பேய்
அசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும்.


43:
ஆணவ மூலமடி அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணு முகாரமடி அகப்பேய்
கூடப் பிறந்ததுவே.


44:
ஒன்று மில்லையடி அகப்பேய்
உள்ள படியாச்சே
நன்றில்லை தீதிலையே அகப்பேய்
நாணமு மில்லையடி.


45:
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எம்மாய மீதறியேன் அகப்பேய்
என்னையுங் காணேனே.


46:
கலைக ளேதுக்கடி அகப்பேய்
கண்டார் நகையாரோ
நிலைக ளேதுக்கடி அகப்பேய்
நீயார் சொல்வாயே.


47:
இந்த அமிர்தமடி அகப்பேய்
இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி அகப்பேய்
இரவி சிவப்பாமே.


48:
ஆணல பெண்ணலவே அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவு மிப்படியே அகப்பேய்
சற்குரு கண்டாயே.


49:
என்ன படித்தாலும் அகப்பேய்
எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே அகப்பேய்
சும்மா இருந்துவிடு.


50:
காடு மலையுமடி அகப்பேய்
கடுந்தவ மானாலென்
வீடும் வெளியாமோ அகப்பேய்
மெய்யாக வேண்டாமோ.


51:
பரத்தில் சென்றாலும் அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக் கடுத்தவிடம் அகப்பேய்
பாழது கண்டாயே.


52:
பஞ்ச முகமேது அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி அகப்பேய்
குருபாதங் கண்டாயே.


53:
பங்க மில்லையடி அகப்பேய்
பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் அகப்பேய்
கண்டு தெளிவாயே.


54:
தானது நின்றவிடம் அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே அகப்பேய்
ஊனமொன் றில்லையடி.


55:
சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம் அகப்பேய்
சற்குரு பாதமடி.


56:
பிறவி தீரவென்றால் அகப்பேய்
பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் அகப்பேய்
சும்மா இருப்பார்கள்.


57:
ஆர லைந்தாலும் அகப்பேய்
நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும் அகப்பேய்
ஒன்றையும் நாடாதே.


58:
தேனாறு பாயுமடி அகப்பேய்
திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி அகப்பேய்
ஒன்றையும் நாடாதே.


59:
வெள்ளை கறுப்பாமோ அகப்பேய்
வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி அகப்பேய்
உன்னாணை கண்டாயே.


60:
அறிவுள் மன்னுமடி அகப்பேய்
ஆதார மில்லையடி
அறிவு பாசமடி அகப்பேய்
அருளது கண்டாயே.


61:
வாசியி லேறியபடி அகப்பேய்
வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும் அகப்பேய்
வாராது சொன்னேனே.


62:
தூராதி தூரமடி அகப்பேய்
தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ அகப்பேய்
பாழ்வினை தீரவென்றால்.


63:
உண்டாக்கிக் கொண்டதல்ல அகப்பேய்
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய்
கற்பனை யற்றதடி.


64:
நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில் அகப்பேய்
நற்குரு பாதமடி.


65:
மூல மில்லையடி அகப்பேய்
முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால் அகப்பேய்
முத்தியு முண்டாமே.


66:
இந்திர சாலமடி அகப்பேய்
எண்பத் தொருபதமும்
மந்திர மப்படியே அகப்பேய்
வாயைத் திறவாதே.


67:
பாழாக வேணுமென்றால் அகப்பேய்
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே அகப்பேய்
கேள்வியு மில்லையடி


68:
சாதி பேதமில்லை அகப்பேய்
தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும் அகப்பேய்
ஒன்றுந்தா னில்லையடி.


69:
சூழ வானமடி அகப்பேய்
சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி அகப்பேய்
மெய்யது கண்டாயே.


70:
நானு மில்லையடி அகப்பேய்
நாதனு மில்லையடி
தானு மில்லையடி அகப்பேய்
சற்குரு வில்லையடி.


71:
மந்திர மில்லையடி அகப்பேய்
வாதனை யில்லையடி
தந்திர மில்லையடி அகப்பேய்
சமய மழிந்ததடி.


72:
பூசை பாசமடி அகப்பேய்
போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி அகப்பேய்
எல்லாமு மிப்படியே.


73:
சொல்ல லாகாதோ அகப்பேய்
சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி அகப்பேய்
ஏகாந்தங் கண்டாயே.


74:
தத்துவத் தெய்வமடி அகப்பேய்
சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் அகப்பேய்
மாயை வடிவாமே.


75:
வார்தை யல்லவடி அகப்பேய்
வாச மகோசரத்தே
ஏற்ற தல்லவடி அகப்பேய்
என்னுடன் வந்ததல்ல.


76:
சாத்திர மில்லையடி அகப்பேய்
சலனங் கடந்ததடி
பார்த்திட லாகாதே அகப்பேய்
பாவனைக் கெட்டாதே.


77:
என்ன படித்தாலென் அகப்பேய்
ஏதுதான் செய்தாலென்
சொன்ன விதங்களெல்லாம் அகப்பேய்
சுட்டது கண்டாயே.


78:
தன்னை யறியவேணும் அகப்பேய்
சாராமற் சாரவேணும்
பின்னை யறிவதெல்லாம் அகப்பேய்
பேயறி வாகுமடி


79:
பிச்சை யெடுத்தாலும் அகப்பேய்
பிறவி தொலையாதே
இச்சை யற்றவிடம் அகப்பேய்
எம்மிறை கண்டாயே.


80:
கோல மாகாதே அகப்பேய்
குதர்க்கம் ஆகாதே
சால மாகாதே அகப்பேய்
சஞ்சல மாகாதே.


81:
ஒப்பனை யல்லவடி அகப்பேய்
உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே அகப்பேய்
ஆராய்ந் திருப்பாயே.


82:
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய்
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் அகப்பேய்
சின்மய மானவர்கள்.


83:
பாலன் பிசாசமடி அகப்பேய்
பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல அகப்பேய்
காரிய மல்லவடி.


84:
கண்டது மில்லையடி அகப்பேய்
கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ அகப்பேய்
உன்னாணை சொன்னேனே.


85:
அஞ்சையு முண்ணாதே அகப்பேய்
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய்
நிஷ்டையிற் சாராதே.


86:
நாதாந்த வுண்மையிலே அகப்பேய்
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் அகப்பேய்
மெய்யென்று நம்பாதே.


87:
ஒன்றோ டொன்றுகூடில் அகப்பேய்
ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் அகப்பேய்
நில்லாது கண்டாயே.


88:
தோன்றும் வினைகளெல்லாம் அகப்பேய்
சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும் அகப்பேய்
சுத்த வெளிதனிலே.


89:
பொய்யென்று சொல்லாதே அகப்பேய்
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய்
வீடு பெறலாமே.


90:
வேத மோதாதே அகப்பேய்
மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய்
பாவித்துப் பாராதே.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Thank You, LARRY KING !!! , LARRY KING, அமெரிக்க ஊடகத்துறையில் 63 ஆண்டுகள் கோலோச்சிய ஜாம்பவான். அவருடைய 87வது வயதில் இன்று (January 23, 2021) காலமானார். ஆட்சியாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை, ஆறு தசாப்தங்களில் சுமார் 50,000 நேர்காணல்களூடாக வரலாற்றைப் பதிவுசெய்த சாதனையாளன். 9 வயதிலேயே தந்தையை இழந்த King, பாடசாலைப் படிப்போடு கல்வியை நிறுத்திவிட்டு, ஊடகவியலாளராகும் கனவுடன் பயணப்பட்டார். வானொலியொன்றில் சுத்திகரிப்பாளராகவும், தொட்டாட்டு வேலை செய்யும் ஒருவராகவும் பணிக்குச்சேர்ந்து, திடீரென்று கிடைத்த வாய்ப்பை, தனது திறமையாலும், அர்ப்பணிப்பாலும், உழைப்பாலும், உறுதியாலும் வரலாறாக மாற்றினார். 'LARRY KING SHOW' வாக வானொலியில் பரிணாமம் பெற்ற அவருடைய நிகழ்ச்சி, பின்னர் 'LARRY KING LIVE' ஆக தொலைக்காட்சியிலும், 'LARRY KING NOW' ஆக, DIGITAL பரிணாமமாகவும் வரலாற்றைப் பதிவு செய்தது. 'தனித்துவம்', 'மிடுக்கு', 'கம்பீரம்', 'அழுத்தமான' பேச்சு, 'ஊன்றிய' பார்வை என்று மக்களை வசியப்படுத்திய ஒரு இட்டு நிரப்பமுடியாத ஊடக ஆளுமை 'LARRY KING'. 'வானொலி', 'தொலைக்காட்சி', 'இணையம்' என அத்தனை தளங்களிலும் அவருடைய தடங்கள் பதிக்கப்பட்டாலும், 25 ஆண்டுகளாக அவர் தொகுத்து வழங்கிய, CNN தொலைக்காட்சியின் 'LARRY KING LiVE' நிகழ்ச்சி அவருக்கான தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்தது. 6000 தொடர் நேர்காணல் நிகழ்ச்சியோடு, 2010 இல் CNN இல் இருந்து அவர் விடைபெற்றாலும், வெவ்வேறு தளங்கள் ஊடாகப் பயணப்பட்டார். 'மார்ட்டின் லூதர் கிங் Jr.', 'நெல்சன் மண்டேலா', 'யசீர் அரஃபாத்' போன்ற புரட்சியாளர்களையும், 'ஜெரால்ட் ஃபோர்ட்' முதல் 'பறாக் ஒபாமா' வரையான அமெரிக்கத் தலைவர்களையும், எண்ணில் அடங்காத வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் விளையாட்டு, சினிமாப் பிரபலங்களையும் அவர் நேர்காணல் செய்துள்ளார். 7 மனைவிகள் 8 முறை திருணங்கள் என்று அசாத்தியங்களையும் சாத்தியமாக்கிய அசகாயசூரன். மாரடைப்பு, இதய சத்திரசிகிச்சை, நுரையீரல் புற்றுநோய், புறொஸ்டேற் புற்றுநோய், பக்கவாதம் என்று அத்தனை உடல் உபாதைகளையும் வதம் செய்து வென்ற போர்க்குணம் மிக்க ஒரு பேராற்றலை, 'கொறோனா' கொன்றுவிட்டது. சுருங்கக் கூறின், அமெரிக்க ஊடக வரலாற்றை, இவரைத் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. தொழிலையும், ஒலிவாங்கியையும் நேசித்த Larry King இன் வார்த்தைகள் இவை... ///// "I was in love with what I was doing. You know why it never lets me down. This is my blanket (Microphone)" ///// இந்த வரலாற்றுடல், அவர் விருப்பப்படி பதப்படுத்தப்பட்டால் மகிழ்ச்சி. ஒலிவாங்கியைப் போர்வையாக்கியவனே போய் வா... ஊடக உலகின் உயரம் தொட்ட 'பிதாமகருக்கு' இறுதி வணக்கம் !!! - உதயன் S. பிள்ளை -           arry King, renowned television and radio host, dies at 87   CNN broadcaster had conducted an estimated 50,000 on-air interviews The Associated Press · Posted: Jan 23, 2021 3:26 PM ET | Last Updated: January 23     Larry King, renowned television and radio host, dies at 87 19 hours agoVideo 8:39 U.S. talk show legend Larry King, 87, has died at Cedars-Sinai Medical Center in Los Angeles, the production company he founded said Saturday. No cause of death was given, but CNN had earlier reported he was hospitalized with COVID-19. 8:39 490 comments Larry King, the suspenders-sporting everyman whose broadcast interviews with world leaders, movie stars and ordinary people helped define American conversation for a half-century, died Saturday. He was 87. King died at Cedars-Sinai Medical Center in Los Angeles, Ora Media, the studio and network he co-founded, said on Twitter. No cause of death was given, but CNN had earlier reported he was hospitalized with COVID-19. A longtime nationally syndicated radio host, from 1985 through 2010 he was a nightly fixture on CNN, where he won many honours, including two Peabody awards.   With his celebrity interviews, political debates and topical discussions, King wasn't just an enduring on-air personality. He also set himself apart with the curiosity be brought to every interview — whether questioning the assault victim known as the "Central Park Jogger" or billionaire industrialist Ross Perot, who in 1992 rocked the presidential contest by announcing his candidacy on King's show. In its early years, Larry King Live was based in Washington, D.C., which gave the show an air of gravitas. Likewise King. He was the plain-spoken go-between through whom Beltway bigwigs could reach their public — and they did, earning the show prestige as a place where things happened, where news was made. Former CNN talk show host Larry King hospitalized with COVID-19, network says King conducted an estimated 50,000 on-air interviews. In 1995 he presided over a Middle East peace summit with PLO Chairman Yasser Arafat, King Hussein of Jordan and Israeli Prime Minister Yitzhak Rabin. He welcomed everyone from the Dalai Lama to Elizabeth Taylor, from Mikhail Gorbachev to Barack Obama, Bill Gates to Lady Gaga. Relocated to Los Angeles Especially after he relocated to Los Angeles, his shows were frequently in the thick of breaking celebrity news, including Paris Hilton talking about her stint in jail in 2007 and Michael Jackson's friends and family members talking about his death in 2009. King boasted of never overpreparing for an interview. His non-confrontational style relaxed his guests and made him readily relatable to his audience.   Former U.S. president Bill Clinton, right, speaks with Larry King on CNN in New York on Sept. 3, 2002. (Reuters) "I don't pretend to know it all," he said in a 1995 Associated Press interview. "Not, `What about Geneva or Cuba?' I ask, `Mr. President, what don't you like about this job?' Or 'What's the biggest mistake you made?' That's fascinating."   At a time when CNN, as the lone player in cable news, was deemed politically neutral and King was the essence of its middle-of-the-road stance, political figures and people at the centre of controversies would seek out his show. Interviewed Sinatra, Brando And he was known for getting guests who were notoriously elusive. Frank Sinatra, who rarely gave interviews and often lashed out at reporters, spoke to King in 1988 in what would be the singer's last major TV appearance. Sinatra was an old friend of King's and acted accordingly. "Why are you here?" King asks. Sinatra responds, "Because you asked me to come and I hadn't seen you in a long time to begin with, I thought we ought to get together and chat, just talk about a lot of things." King had never met Marlon Brando, who was even tougher to get and tougher to interview, when the acting giant asked to appear on King's show in 1994. The two hit it off so famously they ended their 90-minute talk with a song and an on-the-mouth kiss, an image that was all over media in subsequent weeks. 25-run year on Larry King Live After a gala week marking his 25th anniversary in June 2010, King abruptly announced he was retiring from his show, telling viewers, "It's time to hang up my nightly suspenders." Named as his successor in the time slot: British journalist and TV personality Piers Morgan. By King's departure that December, suspicion had grown that he had waited a little too long to hang up those suspenders. Once the leader in cable TV news, he ranked third in his time slot with less than half the nightly audience his peak year, 1998, when Larry King Live drew 1.64 million viewers.   His wide-eyed, regular-guy approach to interviewing by then felt dated in an era of edgy, pushy or loaded questioning by other hosts. Meanwhile, occasional flubs had made him seem out of touch, or worse. A prime example from 2007 found King asking Jerry Seinfeld if he had voluntarily left his sitcom or been cancelled by his network, NBC. "I was the No. 1 show in television, Larry," replied Seinfeld with a flabbergasted look. "Do you know who I am?" Always a workaholic, King would be back doing specials for CNN within a few months of performing his nightly duties. Big following on Twitter  He found a new sort of celebrity as a plain-spoken natural on Twitter when the platform emerged, winning over more than two million followers who simultaneously mocked and loved him for his esoteric style. "I've never been in a canoe," he said in a typical tweet in 2015.   His Twitter account was essentially a revival of a USA Today column he wrote for two decades full of one-off, disjointed thoughts. Norm Macdonald delivered a parody version of the column when he played King on Saturday Night Live, with deadpan lines like, "The more I think about it, the more I appreciate the equator." King was constantly parodied, often through old-age jokes on late-night talk shows from hosts including David Letterman and Conan O'Brien — often appearing with the latter to get in on the roasting himself. Born and raised in Brooklyn King came by his voracious but no-frills manner honestly. He was born Lawrence Harvey Zeiger in 1933, a son of Jewish immigrants from eastern Europe who ran a bar and grill in Brooklyn, N.Y. But after his father's death when Larry was a boy, he faced a troubled, sometimes destitute youth. A fan of such radio stars as Arthur Godfrey and comedians Bob & Ray, King on reaching adulthood set his sights on a broadcasting career. With word that Miami was a good place to break in, he headed south in 1957 and landed a job sweeping floors at a tiny AM radio station. When a deejay abruptly quit, King was put on the air — and was handed his new surname by the station manager, who thought Zeiger "too Jewish." Larry King recalls Trudeau interview fondly A year later he moved to a larger station, where his duties were expanded from the usual patter to serving as host of a daily interview show that aired from a local restaurant. He quickly proved equally adept at talking to the waitresses and the celebrities who began dropping by.   By the early 1960s, King had gone to yet a larger Miami station, scored a newspaper column and become a local celebrity himself. At the same time, he fell victim to living large. "It was important to me to come across as a `big man,"' he wrote in his autobiography, which meant "I made a lot of money and spread it around lavishly." Married 8 times to 7 women King accumulated debts and his first broken marriages (he was married eight times to seven women). He gambled, borrowed wildly and failed to pay his taxes. He also became involved with a shady financier in a scheme to bankroll an investigation of John F. Kennedy's assassination. But when King skimmed some of the cash to pay his overdue taxes, his partner sued him for grand larceny in 1971. The charges were dropped, but King's reputation appeared ruined. King lost his radio show and for several years struggled to find work. But by 1975, the scandal had largely blown over, and a Miami station gave him another chance. Regaining his local popularity, King was signed in 1978 to host radio's first nationwide call-in show.   Larry King poses with his wife, Shawn Southwick, and their sons, Chance Armstrong, left, and Cannon Edward, at the premiere of The Country Bears at the El Capitan Theatre in Hollywood on July 21, 2002. The couple filed for divorce in 2010, rescinded the filing, then filed for divorce again in 2019. (Reuters) Originating from Washington on the Mutual network, The Larry King Show was eventually heard on more than 300 stations and made King a national phenomenon.   A few years later, CNN founder Ted Turner offered King a slot on his young network. Larry King Live debuted on June 1, 1985, and became CNN's highest-rated program. King's starting salary of $100,000 a year eventually grew to more than $7 million. A three-packs-a-day cigarette habit led to a heart attack in 1987, but King's quintuple-bypass surgery didn't slow him down. Meanwhile, he continued to prove that, in his words, "I'm not good at marriage, but I'm a great boyfriend." He was just 18 when he married high school girlfriend Freda Miller, in 1952. The marriage lasted less than a year. In subsequent decades, he would marry Annette Kay, Alene Akins (twice), Mickey Sutfin, Sharon Lepore and Julie Alexander. In 1997, he wed Shawn Southwick, a country singer and actress 26 years his junior. They would file for divorce in 2010, rescind the filing, then file for divorce again in 2019. The couple had two sons, King's fourth and fifth children — Chance Armstrong, born in 1999, and Cannon Edward, born in 2000. In 2020, King lost his two eldest children, Andy King and Chaia King, who died of unrelated health problems within weeks of each other.   He had many other medical issues in recent decades, including more heart attacks and diagnoses of Type 2 diabetes and lung cancer. Early this year, CNN reported that King was hospitalized for more than a week with COVID-19. Through his setbacks, he continued to work into his late 80s, taking on online talk shows and infomercials as his appearances on CNN grew fewer. "Work," King once said. "It's the easiest thing I do." CBC's Journalistic Standards and Practices|About CBC News Report Typo or Error https://www.cbc.ca/news/entertainment/larry-king-obituary-1.5885208?fbclid=IwAR1pbZMDYTL2k2I-3TXwt8KTZ5OKfvVcOtpvDFp2lVLGj1MzCHLXJO_uf0Q
  • கடலை போடுபவர்களுக்கு தெருவோரக்கடையில் கொண்டல் கடலை.......!  😂
  • நாங்கள் யாழில் கருத்தாடிய விடயம்... இன்று பிபிசியின் முதன்மை கருதுபொருளாகி உள்ளது. Can vaccinated people spread coronavirus? David Shukman Science editor, BBC News It’s a key question but the fact is that no-one can be sure. That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both. But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still spread the virus to others. If a vaccinated person did become infected, they probably wouldn’t realise because they wouldn’t have any symptoms. That’s why health officials and ministers are so concerned. It’s possible that the antibodies boosted by the vaccine suppress the effects of the virus but don’t eliminate it from the upper airway. Many scientists are cautiously hopeful that in this scenario, the amount of virus would be reduced but they’re waiting for the results of studies under way now. And until there’s an answer, it’s difficult to calculate how and when it’s safe to ease restrictions and allow people to mix again.
  • ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது. மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர்.  அது மாத்திரமன்றி பலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பஸ்கள் மற்றும் தடுப்புக்காவல் லொறிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியாவும் உள்ளடங்குவார். பொலிசார் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை சதுக்கத்திலிருந்து வெளியேற்றினர். ஆயிரக்கணக்கானோர் பின்னர் ஒரு கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் உள்ள ஒரு இடத்தில் மீண்டும் அணிதிரண்டனர். அவர்களில் பலர் கலைக்கப்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் மீது பனிப்பந்துகளை வீசினர். பின்னர் சிலர் நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அருகே போராட்டத்திற்கு சென்றனர். காவல்துறையினர் அங்கு தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையிலான கைதுகளை மேற்கொண்டனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ரஷ்யாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மொஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்ததுடன், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜேர்மன் முன்வந்தது. உடனே ரஷ்ய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்தனர்.  தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜேர்மனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் புட்டின் மீதே குற்றம் சுமத்தின. இதற்கிடையே, கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷ்யாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜேர்மனில் இருந்து விமானம் மூலம் கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய  தலைநகர் மொஸ்கோ வந்தடைந்த அவரை, விமான நிலையத்தில் ரஷ்ய ‍பொலிஸார் கைது செய்தனர். இந் நிலையிலேயே நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மொஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   https://www.virakesari.lk/article/99043  
  • ஜெனிவாவில் இரட்டை நன்மை: சுமந்திரன் எம்.பி பிரத்தியேக செவ்வி..! (நேர்காணல் ஆர்.ராம்) •புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும் •வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை •சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும் •குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளுடனனேயே குற்றவியல் நீதிமன்றுக்கான முயற்சி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீள எடுப்பதால் அதனை உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதோடு, பேரவையினுள் இலங்கை பற்றிய புதிய தீர்மானமும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வை தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இது எமக்கு இரட்டை நன்மையை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது குறிப்பிட்டார்.  அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,  கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஜெனிவா மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையில் பின்னடித்த விடயங்கள் சிலவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றதே? பதில்:- கூட்டமைப்பு பின்னடித்த விடயங்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள். கேள்வி:- இனப்படுகொலை நடைபெற்றமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை தான் கூறுகின்றேன்? பதில்:- அவ்வாறில்லை. நான் 2013 ஆண்டில் முதன்முதலாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு இலங்கைப் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருந்தேன். அது பகிரங்கமாக கூறப்பட்டதொன்று தானே. கேள்வி:- நீங்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அல்லது தீர்மானங்களில் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவில்லையல்லவா? பதில்:- முதன் முதலாக 2011 ஆண்டு  மார்ச் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆணையின் பிரகாரம் இலங்கை பற்றிய மூன்று நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.  அந்த அறிக்கையில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. ‘துன்புறுத்தல்கள்’ என்ற சொற்பதமே உள்ளது. அதில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாமை தொடர்பில் நாம் நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்தோம்.  அச்சமயத்தில், ‘இனப்படுகொலை’ என்பதற்கான ‘நோக்கு’ மற்றும் ‘குற்றவியல்’ ரீதியான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமை, அத்துடன்  ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது நீண்டகாலமாக நடைபெறுவதால் அதனை குறிப்பிட்டு கூறி உள்ளீர்க்க முடியாமை தொடர்பில் எமக்கு தெளிவு படுத்தினார்கள்.  2012ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது, ‘பிரகடனத் தீர்மானத்தினையே’ செய்தது. அதன் பின்னர் 2012, 2013ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறே குறிப்பிட்டிருந்தன.  அரசாங்கம் அதனை முன்னெடுக்காததன் காரணத்தினாலேயே 2014இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மூலமாக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது.  அந்த தீர்மானத்திற்கு அமைவாகவே  விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு இலங்கை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அவலுவலகத்தினால் விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. இதிலும் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது,  பத்திரிகையாளர் ஒருவர் இனப்படுகொலை சொற்பதம் இடம்பெறாமை குறித்து கேள்வி எழுப்பிய சமயம் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹ{சைன், “போதுமான ஆதரங்கள் இல்லாமையாலேயே அச்சொற்பதத்தினை பயன்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார். நாம் சமூகவியல் சார்ந்து இனப்படுகொலை என்று குறிப்பிட்டாலும் குற்றவியல் அடிப்படையில் அதற்கான சான்றுகள் அப்போது போதுமானதாக இருக்கவில்லை.  கேள்வி:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் அவ்விடயம் இருக்கவில்லையே? பதில்:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினது இணை அனுசரணையை பெற்றுக்கொண்டதாகும். ஏற்கனவே ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொண்டிருந்தோம்.  முன்னதாக வெளியான ஐ.நா.வின் இரண்டு அறிக்கைகளில் அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் அச்சொற்பதத்தினை பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை நிரூபிக்க முடியாது போனால் அது எமக்கு பலத்த பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.  அதன் காரணத்தினால் தான், நாம் இனப்படுகொலை, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று தனித்தனியாக வகைப்படுத்தாது பொதுவாக ‘சர்வதேசச் சட்ட மீறல்கள்’ என்ற சொற்பதத்தினை ஒரு ‘உத்தியாக’ பயன்படுத்தி இருந்தோம்.  கேள்வி:- சட்ட நுட்பங்கள் அறிந்தவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து வடக்கு மாகாண சபையில் 2015 பெப்ரவரி 10இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இனப்படுகொலைச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே?  பதில்:- அந்த தீர்மானத்தினை அனைவரும் இனப்படுகொலைத் தீர்மானம் என்றே கூறுகின்றார்கள். அந்த தீர்மானத்தின் இறுதிப்பகுதியை மிகக் கவனமாக அவதானித்தால், அதில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி, ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது ‘சர்வதேச குற்றங்களில் ஒன்றாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ ஆகவே  அது வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றே அத்தீர்மானம் நிறைவடைகிறது.  அந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது ‘சர்வதேச குற்றங்கள் இல்லை’ என்ற செய்தியையே ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளது. அவ்விதமான எமது பலவீனங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் மக்களுக்கு நன்மை கிடைக்காத முறையிலும் நாம் செயற்படவில்லை.  கேள்வி:- நீண்டகாலமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறிவந்த நீங்கள் பொது ஆவணத்தில் அவ்விடயம் உள்வாங்கப்படுவதற்கு எவ்வாறு இணக்கம் தெரிவித்தீர்கள்?  பதில்:- கடந்த 10வருடங்களாக மனித உரிமைகள் பேரவை ஊடான முயற்சியில் பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி வாக்குறுதிகளை அளித்தாலும் உள்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.  பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தாது. சம்பந்தப்பட்ட நாடு இணங்கினால் மட்டுமே பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம். அதுவே மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு முறைமையாகும்.  அந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் கடந்த செப்டம்பர் கூட்டத்தொடரில் ஐ.நா.தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதன் பின்னர், பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை. ஆகவே தான் அதனை அங்கிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உள்ளதா?  பதில்:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மூன்று வழிகளே உள்ளன. முதலாவது, ‘ரோம்’ சாசனத்தில் சம்பந்தப்பட்ட நாடு கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அதில் கையொப்பமிடவில்லை.  இரண்டாவது, சம்பந்தப்பட்ட நாடு இணங்கி குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும். இலங்கை அவ்விதமான இணக்கத்தை ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை. மூன்றாவது ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஊடாக பரிந்துரைக்கப்பட வேண்டும்.  இதுவொன்றே எமக்குள்ள ஒரேவழியாகும். ஆனால் இதில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா, சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவ்விதமான விடயங்களில் சீனா வீட்டோவை பயன்படுத்தாது இருந்துள்ளதாக பொது ஆவணத் தயாரிப்பு கலந்துரையாடல்களின் போது எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமில்லை என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் ஒரு சதவீதமேனும்  உள்ள சாத்திய வழியில் முயற்சித்துப்பார்ப்போம் என்ற நிலைப்பாடு உடையவர்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்பவில்லை. அதனாலேயே சம்மதம் தெரிவித்தேன். அவ்விதமான முயற்சி வெற்றி பெற்றால் அதனை மனதார வரவேற்கும் முதல் நபரும் நானே.  கேள்வி:- மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விடயம் மீள எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்ன? பதில்:- பொறுப்புக்கூறல் மீளவும் எடுக்கப்பட்டு அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்புமாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைக் கோரியுள்ளோம்.  ஏனென்றால் அவரே இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்கு 2011இல் அனுப்பி வைத்தவர். அவர் அனுப்பி வைத்த விடயம் பத்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தினையும் எட்வில்லை என்ற செய்தியையும் அவருக்கே மீள அனுப்பி வைப்பதன் ஊடாக தெரிவிக்க முடியும்.  மேலும் மனித உரிமைகள் பேரவையாலோ அல்லது உயர்ஸ்தானிகராலோ இந்த விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது.  ஆகவே செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் பொதுச்சபையில் இந்த விடயத்தினை விவாதித்து தீர்மானம் எடுத்தே அவரால் சாத்தியமான பொறிமுறைகளில் ஒன்றை பரிந்துரைக்கலாம்.  உதாரணமாக, கூறுவதென்றால்  பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அவரால் அனுப்பபடலாம். அல்லது, சிரியா விடயத்திற்காக பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையைப் போன்தொரு கட்டமைப்பை உருவாக்கலாம்.  நாம் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் சிரியாவை ஒத்தபொறிமுறையை உதாரணமாக கூறியுள்ளமைக்கு காரணம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் விடயத்தினை நீதிமன்ற படிமுறைக்குள் கொண்டு  செல்வதற்காகவே. அவ்விதம் பரிந்துரைக்கும் கட்டமைப்பு செயற்படுவதற்காக ஒருவருட கால அவகாசம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.  கேள்வி:- இதில் மியன்மார் பொறிமுறைகள் ஒரு உதாரணமாக உள்ளீர்க்காமைக்கான காரணம் என்ன? பதில்:- மியன்மார் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையே அந்தப்பொறிமுறையை உருவாக்கியுள்ளது. நாங்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீள எடுப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் தான் அப்பொறிமுறையை உள்வாங்கவில்லை. கேள்வி:- இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியாதென கூறியுள்ளதே? பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் இறுதி தருணத்திலும் இலங்கை அரசாங்கத்தினை மார்ச் மாதம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு கோரியிருந்தன. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.  அது உண்மையிலேயே எமக்கு சாதகமான விடயம் தான்.  ஏனென்றால் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாக இணை அனுசரணை நாடுகளிடத்தில் சம்மதம் தெரிவித்திருந்தால் அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைந்திருப்பதற்கே அதிக சாத்தியங்கள் இருந்தன. அத்தோடு இம்முறை பாதிக்கப்பட்ட எமது தரப்புக்கு சாதகமான நிலைமைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இல்லை. பொறுப்புக்கூறல் பரிந்துரைகளுடன் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவதே மிகச் சவாலான விடயமாகவே உள்ளது.  குறிப்பாக பொறுப்புக்கூறலுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது. ஆனால், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை நாம் பேரவையிலிருந்து மீள எடுக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம், இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் நாடுகளுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது.  அதாவது பொறுப்புக்கூறல் விடயங்கள் இல்லாத தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெறுவதில் கடினமான நிலைமைகள் இருக்கப்போவதில்லை. அவை தயக்கங்களையும் தெரிவிக்காது. ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எமக்கு இம்முறை இரட்டை நன்மையே ஏற்படப்போகின்றது. முதலாவது பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து மீள எடுத்து உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டாவது, இலங்கை பற்றி தீர்மானமும் தடையின்றி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வையுடன் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கவுள்ளது. கேள்வி:- இலங்கை அரசாங்கம்  எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினையும் நிராகரித்தால் என்னவாகும்? பதில்:- இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் கடந்த ஐ.நா.தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான சில கட்டமைப்புக்களை இன்மும் வைத்திருக்கின்றன. அவற்றை வினைத்திறனாக செயற்பட இடமளிக்காது விட்டாலும் ஐ.நா.விற்கு காண்பிப்பதற்காக அவ்வாறே வைத்துள்ளன.  மேலும் இம்முறை இலங்கைக்கான பொறுப்புக்கூறல் விடயம் இல்லாத தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை.  அவ்வாறு நிராகரிக்கின்றபோது, ஒரே நேரத்தில் மேற்குலநாடுகள் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைப் பகைத்துக்கொள்ள அல்லது இருதரப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும். அவ்விதமான நிலைப்பாடொன்றை இந்த அரசாங்கம் எடுப்பதற்கு விரும்பாது.  கேள்வி:- வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையை ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் நீங்கள் உள்ளீர்க்க விரும்பாமைக்கான காரணம் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அதியுச்சமாக பகிரப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.  சர்வஜன வாக்கெடுப்பு என்பது பிரிந்து செல்லுதலை மையப்படுத்தியதாகும். அதிகாரப்பகிர்வினை கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களத் தரப்புக்கள் நாட்டை பிரிக்கப்போகின்றோம் என்றே பிரசாரம் செய்கின்றன.  அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பையும் கோரினால் அவர்கள் செய்யும் பிரசாரம் உண்மையாகிவிடும். மேலும் நாமும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தமையும் பொய்யாகிவிடும். அதன் காரணமாகவே அவ்விடயம் உள்ளீர்க்கப்படவில்லை. கேள்வி:- இறுதியாக, ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால்  பிறிதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே தற்போது இவ்விதமான குழுவை நியமித்து சர்வதேசத்திற்கு போலியானதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்த முனைகின்றது. அந்தக் குழுவை நாம் எள்ளளவும் நம்பவில்லை. அதுவெறுமனே கண்துடைப்பு செயற்பாடாகும். இதனை சர்வதேச நாடுகளும் நன்கு அறியும்.  https://www.virakesari.lk/article/99060    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.