Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நூரு அய்ணீ யா க்கைரு க்கல்கில்லாஹ் (2)
யா நபி....ம்ம்ம்..... யா நபி....ஆ.........
யா நபி உங்கள் திருமுகம் ஒரு கனம் வேண்டுகிறேன்
யா நபி அதை கனவிலும் நினைவிலும் வேண்டுகிறேன்
உங்கள் திருமுகம் வேண்டும் பெருமானே
அந்த மலர் முகம் வேண்டும் எம்மானே
அந்த ஒரு முகம் வேண்டும் பெருமானே
அந்த ஒளி முகம் வேண்டும் எம்மானே

நான் என்ன செய்தேனோ ஏது செய்தேனோ எந்தன் மனம் அதை அறியவில்லை
என் நபிமுகம் காணும் பாக்கியம் எனக்கு தடையின் காரணம் புரியவில்லை
எங்கள் இறைவா......எங்கள் இறைவா பிழையிருந்தால் அதை பொறுப்பாய் நபி பொருட்டால்
பிழை பொறுப்பாய் எந்தன் இறைவா
நபி பொருட்டால் எந்தன் இறைவா (2)

( யா நபி )
( உங்கள் திருமுகம் )

ஒரு தம்பதிகள் கொண்ட தத்துப்பிள்ளை அது சொந்தமில்லை என தெரியவில்லை
சொந்த தாயும் தந்தையும் வந்த நிலை
இந்த குழந்தை அவருக்கு சொந்தமில்லை (2)
இந்த நிலையே தான்......இந்த நிலையே தான் அன்று சஹாபிகள் என் நபியை பிரிந்த அந்த கணம்
இந்தப் புவியினிலே......
இந்தப் புவியினிலே எந்த துன்பங்கள் அதற்கு ஈடாகும்
அந்த வலியினை நானும் உணருகிறேன்
நீ தருவாயே என கதறுகிறேன் (2)

(யா நபி) 
(உங்கள் திருமுகம்)

என் காதல் வலிகள் தீர வில்லை 
என் காதல் ஹபீபை காணவில்லை
என் கண்ணில் கண்ணீரும் கரையவில்லை என் புலம்பலும் கதறலும் ஓயவில்லை
உம் முகம் காணும்...
உம் முகம் காணும் கணம் மரணம் என்றால்
அந்த மரணம் எனக்கு உயர்வாகும்
அந்த மரணம் எனக்கு உயர்வாகும்

(யா நபி) 
(உங்கள் திருமுகம்)
யா நபி....ம்ம்ம்.....யா நபி....ஆ.........
(யா நபி)
(உங்கள் திருமுகம்)

 

Link to post
Share on other sites
 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    

களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் காவியம் கதிர்காம கந்தன் கும்மிப்பாடல்  

 • கருத்துக்கள உறவுகள்

கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா - Kallamila oru velli nila

 கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா என
உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய்
தீராத பாசமே நறும் தேனான இயேசுவே
அன்பே பாரினில் நீயும் நானும் ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே
வாரும் தேவா வாருமே

1. எங்கே நோக்கினும் தனிமையே உனை என் மனம் மறந்ததேன்
தீமையே - கண்களும் நீரினில் ஆடுதே இறைக்
கர்த்தருன் பூமுகம் தேடுதே
தேவ தேவா சிலுவை நாதா திரும்ப நாவினில் வாருமே -2
தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே
தாயும் நீயாய் சேயும் நானாய் வாழவேண்டும் நாளுமே

2. எல்லாம் தேவனின் மகிமையே அதை
எங்ஙனம் புகழ்வது ஏழையே
என் மனம் நீ வரும் போதிலே பெரும்
நிம்மதி ஆயிரம் வாழ்விலே
வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனி தேவனே - 2
வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே
ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழவேண்டும் நாளுமே

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி நிலா ஓடத்திலே விட்டிருக்கும் தாய் மரியே

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாடித் தேடித் தொழுவார்பால்
நானத் தாகத் திரிவேனோ

மாடக் கூடற் பதிஞான
வாழ்வைச் சேரத் தருவாயே

பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத் தருள்வோனே

ஆடற் றோகைக் கினியோனே
ஆனைக் காவில் பெருமாளே

ஆனைக் காவில் பெருமாளே

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யா ரசூலே... யா ஹபிபே... ரஹ்மத்துல் லில் ஆலமீன்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம், என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய, தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன, தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு, மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை, தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும, டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி, அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக, தம்பிரானே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
                                                       ரோ. 8:15
1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

    நன்றி உமக்கு நன்றி - அப்பா

2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி

3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே                      சங். 40:2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே - நன்றி
                                                     வெளி. 1:6

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது ' என்பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நிரில்லமால் நான் வாழ முடியாது ( 2 ) 
1 இருளானவாழ்க்கையிலே வெளிச்சம் ஆனிரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே ( 2 ) என்வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ( 2 ) - என்கூடவே ' 
2 . கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) - என் கூடவே

3 . வியாதியின்நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே என்வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) என் கூடவே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம கற்றிவளர்
அந்திபக லற்றநினை வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தி உன்னை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே அருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலையாத கல்வியும் குறையாத வயதும்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்

சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நன்றிசொல்வேன் உனக்குப் பாயிரம் பாடிடுவேன்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீதானே இறைவா நிலையான சொந்தம் 
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) 
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 
நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே 
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) 
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ 
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) 
நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.