Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தென் பாண்டி சீமையிலே இன்ப தீனை பரப்பியவர்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 1.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

 • கருத்துக்கள உறவுகள்

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு

3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா


வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா


யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு


ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே - 2 
நேசம் உன்னில் நான் காண்பதால் 
உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும்
1. உன்னைக் காணாமலே உடன் 
பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ... 
எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே 
நான் கலங்கிடுவேன் ஆ... 
நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன் உணர்வோடு போராடுதே - 2 
உயிராக வா... உறவாக வா... 
அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா
2. என் கோயில் தெய்வம் அது நீயானதால் 
உன்னை வணங்கிடுவேன் ஆ... 
உயிர் ஆதாரமே என்னில் நீயானதால் 
உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ... 
நீயில்லாமல் நானில்லையே - உந்தன் 
நினைவின்றி வாழ்வில்லையே - 2 
நிழலாக வா... நீங்காமல் வா... 
அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்து... நாளை போகும் நிலையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
(ரோமர் 3:23)

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8)

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
(பிலிப்பியர் 2:6-8)

உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(வெளிப்படுத்தின விசேஷம ் 1:5)

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
(2 கொரிந்தியர் 5:15)

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
( 1 தெசலோனிக்கேயர் 4:16-18)

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
(அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30)

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
(மத்தேயு 4:17)

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
(லுூக்கா 5:32)

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி
(அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-39)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(யோவான் 3:16)

குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
(அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31)

நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.