Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் 
இல்லை என்று சொல்லுவதில்லை 
பொறுமை யுடன் கேட்டுப் பாருங்கள் அவன் 
பொக்கிஷத்தை மூடுவதில்லை 

( இறைவனிடம் கையேந்துங்கள் அவன்)

இல்லை என்று சொல்லும் 
மனம் இல்லாதவன் 
ஈடு இணை இல்லாத 
கருணை உள்ளவன் 
இன்னல் பட்டு இருப்போரை 
எழுப்புகிறவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன் 

( இறைவனிடம் கையேந்துங்கள் அவன் 
இல்லை என்று சொல்லுவதில்லை)

ஆசையுடன் கேட்போர்க்கு 
அள்ளி தருபவன் 
அல்லல் துன்பம் துயரங்களை 
கிள்ளி எறிபவன் 
பாசத்தோடு யாவரையும் 
பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன் 
அல்லல் படும் மாந்தர்களே 
அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை 
நம்பி நில்லுங்கள் 
அவனிடத்தில் குறை 
அனைத்தும் 
சொல்லி காட்டுங்கள் 
அன்பு நோக்கி தருக வென்று நீங்கள் 
கேளுங்கள் 

( இறைவனிடம் கையேந்துங்கள் அவன் 
இல்லை என்று சொல்லுவதில்லை 
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் 
பொக்கிஷத்தை மூடுவதில்லை )

ஏழை நெஞ்சம் தன்னில் 
குடியிருப்பவன் 
ஏலாத மனிதருக்கும் 
உணவளிப்பவன்
வாடும் மனித இதயம் 
மலர்வதற்கு வழி வகுப்பவன் 
வாஞ்சையோடு யாவருக்கும் 
துணை இருப்பவன் 
அலை கடந்து கடல் 
படைத்து 
அழகு பார்ப்பவன் 
அலை மீதும் மலைமீதும் 
ஆட்சி செய்பவன் 
தலை வணங்கி கேட்போர்க்கு 
தந்து மகிழ்பவன் 
தரணி எங்கும் 
நிலைத்து நிற்கும் 
மகா வல்லவன் 

( இறைவனிடம் கையேந்துங்கள் அவன் 
இல்லை என்று சொல்லுவதில்லை)

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 1.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

 • கருத்துக்கள உறவுகள்

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ…

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்த துன்பம் வந்த போதும்... துணிந்து நில்லு

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சகல கலைகளும் அருளும் சகலகலாவல்லி மாலை

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா 
தீஞ்சுவை ஆகவில்லையே
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா  
தீஞ்சுவை ஆகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா 
இன்பம் ஏதும் இல்லையே
.
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா 
அங்கம் மணக்கவில்லையே
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா 
அங்கம் மணக்கவில்லையே
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா 
சீர் மணம் வேறு இல்லையே
.
முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா  
முதற் பொருள் ஆகவில்லையே 
சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா  
மெய்ப் பொருள் வேறு இல்லையே
.
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா  
எண்ணத்தில் ஆடவில்லையே
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா   
எண்ணத்தில் ஆடவில்லையே
மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா  
மற்றொரு தெய்வமில்லையே
.
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா   
தீஞ்சுவை ஆகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா 
இன்பம் ஏதும் இல்லையே
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா.   

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்

தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

முருகா.....முருகா.....முருகா..

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அத்ரிக்னீ...... யா ஹபீபீ (4)
யா நபி... அஸ்ஸலாம்.....(4)

கண்ணுக்குள் மின்னிடும் பேரொளி ஊற்றே 
விண்ணுக்குள் உலவிடும் நூரொளிக் கீற்றே
மண்ணுக்குள் மலர்ந்திடும் மதீனத்து பூவே
எண்ணுக்குள் ஜொலித்திடும் இருதய நிலவே

அண்ணலே ஆருயிர் நபியே.... 
பொன்னுடல் கொண்டிலங்கும் வடிவே.....
வண்ணமே வானோங்கும் புகழே.....
நன்னயம் சிறந்தோங்கும் குருவே.....
சுவனம் சொக்கும் பேரெழிலே
சுவனம் சொக்கும் பேரெழிலே
தேடுதே எம்விழிகள் ரெண்டுமே

( கண்ணுக்குள்)

கானனும் கண்ணாளர் முகத்தை 
போக்கனும் பூலோக இருளை
ஏகனும் ஏகோனின் அருளை 
வாருமே வற்றாத ஒளியே
தீருமே எம் காதல் வலியை 
தீருமே எம் காதல் வலியை
வாடுதே நினைவூறும் மலரே
 
(கண்ணுக்குள்)

பாச மலரை பாடி பரிக்க
போதிய காதல் இல்லை...
நேசம் தாங்கிய காதல் நபியை
பாடிட தகுதியில்லை...
கோடி கோடி ஆஷிகீன்கள் பாடி உம்மை மகிழ்ந்திடவே!!
தேடி தேடி வாடிப்போகும் தேடும் ஆயிரம் உள்ளங்கள்...
[வேந்தர் உங்கள் பார்வை போதும் ஏனைய நோய்கள் குணமாகும்.] (2)

ஆனந்தம் வாராதோ வாழ்வில் 
பேரின்பம் தாரீரோ நபியே
வையமே வாழ்த்தோதும் நிதியே
ஐயமே போக்கனும் பதியே 
மறுமையில் ஈடேற்றும் கதியே
மறுமையில் ஈடேற்றும் கதியே 
பாடுதே எம் ஆசை மதியே

 ( கண்ணுக்குள்)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)

பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பார்த்திபனை யூத கோத்திரனை - என்றும்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்துக் கழுதவனை - (3)

முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை- (3)

மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை
வான பரன் என்னும் ஞான குணவானை

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குருவானை - (3)

அம்பரமேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)

 

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! 
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

முருகனைக் கூப்பிட்டு...
முருகா!!!

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் 
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருணை உன் வடிவல்லவா 
கடவுள்
உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் 
உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் 
உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம்
பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா
கருணை உன் வடிவல்லவா


வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று
சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள்மேகம் பொழிகின்ற மழை
என்றும் சொல்வார்
அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே
-2

தொடுந்தூரம் இருந்தாலும் நீதான்
என்றேன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி
போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல
ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்


செவியின்றிக் குயில் பாடல்
இனிதென்று சொன்னால்
புவிமீது இசைஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள்
அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன் மேன்மை
பழுதாகுமே - 2
உன் வான விண்மீனில் ஒன்றாய்
என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும்
இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத்
தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப்
போற்றுவேன்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.