Jump to content

கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று – அனந்தி சசிதரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள். கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணா கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு தளபதியாக இருந்தார். அவருடைய துரோகம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலிவிட்டது. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் கருணா தளபதியாக இருந்து, 3000 இராணுவத்தை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தியதை பிழையாக காட்டுவதாக இருக்கும் என யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/கடந்த-காலத்தில்-இராணுவத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்பது தெரிகிறது .. முன்பு கொல்லப்பட்ட இராணுவத்தினர் தொடர்பாக நடவடிக்கை பொருத்தமற்றது ; அது போலவே முன்னர் கொல்லப்பட்ட போராளிகள் ( அவர்கள் எப்படிக் கொல்லப் பட்டிருந்தாலும் ) நடவடிக்கை தேவையில்லை . தனியொரு மனிதனாக போராட்டத்தை தோற்கடித்த கருணா, இப்ப தனியொரு மனிதனாக சிங்களத்தை மின்சாரக் கதிரையில் இருந்து பிணை எடுக்கிறார் . கருணாவிற்கு சிங்களம் கோயில் கட்டினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாமானியன் said:

அதைதான் பலர் விரும்புகின்றார்கள் 

Link to comment
Share on other sites

3000 இராணுவத்தை கொன்றேன் எனக் கருணா கூறியதால் அந்தாளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன….??

எந்தத் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள், இணையங்களைப் பார்த்தாலும் முதலில் வருவதும், தெரிவதும் அந்தாளின் பெயர்தான் கருணா

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்

மாரித் தவக்கை தன் வாயாலேயே கெடுமாம் என்கிறது  இதைத் தானோ?

“நுணலும் தன் வாயால் கெடும்”

அனந்திக்கு தேவையில்லாத வேலை இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவக்கு தெரிந்தது கூட  இங்கிருப்பவர்களுக்கு தெரியாமல் இருப்பது புதினம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? அவர் கிழக்கில் கொன்ற காவல்துறையினரும், இப்போது கொன்றதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ராணுவத்தினரும் கருணா புலிகளின் அமைப்பில் இருந்த போது செய்தவையென்பதால் நாம் கவனமாகத் தான் இருக்க வேண்டும்! 

சிங்கள ராணுவத்தைக் கொன்றதற்காக நாம் கருணாவைத் தண்டிக்கும் படி ஊக்கம் கொடுத்தால், சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுவிக்கும் படி எப்படி சிங்களவனிடம் கேட்பது?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

இவக்கு தெரிந்தது கூட  இங்கிருப்பவர்களுக்கு தெரியாமல் இருப்பது புதினம் தான்

16 minutes ago, Justin said:

அனந்தி சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? அவர் கிழக்கில் கொன்ற காவல்துறையினரும், இப்போது கொன்றதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ராணுவத்தினரும் கருணா புலிகளின் அமைப்பில் இருந்த போது செய்தவையென்பதால் நாம் கவனமாகத் தான் இருக்க வேண்டும்! 

சிங்கள ராணுவத்தைக் கொன்றதற்காக நாம் கருணாவைத் தண்டிக்கும் படி ஊக்கம் கொடுத்தால், சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுவிக்கும் படி எப்படி சிங்களவனிடம் கேட்பது?  

கும்மான் ஒரு போதும் தண்டிக்கப்பட போவதில்லை, ஆனால் இப்படியான குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு முயற்சிக்கலாமே?

கும்மானிற்கு சட்டரீதியான பொது மன்னிப்போ அல்லது புனர்வாழ்வோ இது வரை வழங்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுவிக்கும் படி எப்படி சிங்களவனிடம் கேட்பது?  

இந்த முரளிதரன் ஒரு கூட்டத்தில் கூறியிருந்தது, சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் யாரும் பயங்கரவாதிகள் கிடையாது. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் யாவரும் விடுவிப்பட்டுவிட்டாரக்ள். அவர்கள் சிறையில் இருந்தால், நான் எப்படி வெளியில் இருக்க முடியும்? என்றும் கேட்டிருந்தது. இந்த எழுபத்தாறு  அரசியல் கைதிகளை வெளியில் கொண்டு வருவது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை, தான் தன்னுடைய எஜமானருடன் கதைத்து விடுவிப்பதாகவும். அவர்களை வைத்தே தமிழ் தலைமைகளும், சிங்களமும் அரசியல் செய்யுது. அவர்களது இளமை, எதிர்காலம், ஏக்கம் இவற்றில் அரசியல் செய்யும் ஈனப்பிறவிகள் நல்லது ஏதும் செய்யுங்கள் என்றால், அது எமது மடைமை.  தங்கள் அரசியலுக்காகவே தமிழ்த் தலைமைகள் அவர்களை பாராமுகமாக வைத்திருக்கிறார்கள். சிங்களவன் தன் கொலைகாரர்களை விடுவிக்கிறான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அனந்தி சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? அவர் கிழக்கில் கொன்ற காவல்துறையினரும், இப்போது கொன்றதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ராணுவத்தினரும் கருணா புலிகளின் அமைப்பில் இருந்த போது செய்தவையென்பதால் நாம் கவனமாகத் தான் இருக்க வேண்டும்! 

சிங்கள ராணுவத்தைக் கொன்றதற்காக நாம் கருணாவைத் தண்டிக்கும் படி ஊக்கம் கொடுத்தால், சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுவிக்கும் படி எப்படி சிங்களவனிடம் கேட்பது?  

உங்கள் கணிப்பு சரியானது.

அனந்தி முரளீதரன் சார்பாகப் பேசவில்லை. முன்னாள் ஆயுதப் போராளிகள் தொடர்பாகப் பேசியுள்ளார். 👍

முரளீதனை விசாரணைக்குட்படுத்தினால் அதன் தொடர்ச்சியாக அவரின் கீழ் போராட்டத்திற்குப் பங்களிப்பு வழங்கிய தளபதிகள் முதல் கீழ் நிலைப் போராளிகள் வரை சட்ட நடவடிக்கைக்குட்டடுத்த வேண்டி ஏற்படும். 👍

முரளீதரன் மீதுள்ள கோபம் என்பது அவரின் கீழ் போராட்டத்தில் பங்கெடுத்த,  தேசியத்திற்கெதிராக இயங்காத போராளிகளைப் பதம் பார்ப்பதாக மாறக் கூடாது. 👍

முன்னாள் ஆயுதப் போராளியின் மன நிலையில் இருந்து பார்த்தால் அனந்தி சசிதரன் கூறியதில் உள்ள உண்மை விளங்கும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் காலங்களில் ( இது வரை தப்பியிருக்கும்)  இரண்டு பக்கங்களையும் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப் பட்ட கொலைகளை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்ப்பதற்காக கருணாவினால் சிங்கள அனுசரணையுடன் நடத்தப் படும் நாடகத்தின் முதல் கட்டம் அரங்கேறியிருக்கிறது . அநேக பார்வையாளர்கள் நாடகத்தில் பங்கு கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படும் இயல்பினதாக அமைத்திருக்கிறது இந்த நாடகம் ( இப்போதைக்கு அனந்தி ) .. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று .. (வழமை போலவே) ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சிங்கள ராணுவத்தைக் கொன்றதற்காக நாம் கருணாவைத் தண்டிக்கும் படி ஊக்கம் கொடுத்தால், சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுவிக்கும் படி எப்படி சிங்களவனிடம் கேட்பது?  

அதெப்பிடி கணக்கு சரியாகும் ... கும்மான்  செய்த குற்றத்தை செய்ததால் தானே அவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர், உண்மையில் கும்மானும் உள்ள போகவேண்டும், அவர்களை விடுதலை செய்யும் நாளில் கும்மானையும்  விடுதலை செய்யாலாம், 
கும்மானை வெளியில் வைத்துக்கொண்டு அரசியல் கைதிகளை வழக்கில்லாமல் விடுதலை செய் என்று கேட்க 
சிங்களமோ  கும்மான் எங்களுக்கு செய்த உபகாரம் போல் அரசியல் கைதிகள் செய்தவைகளா என்று கேட்டால் என்ன சொல்லப்போறீங்கோ ....? 
கும்மானையும் அரசியல் கைதிகளையும் சமப்படுத்தவே முடியாது, சமன்பாட்டில் பிழை வந்துகொண்டே இருக்கும்     

Link to comment
Share on other sites

On 23/6/2020 at 17:49, Gowin said:

மாரித் தவக்கை தன் வாயாலேயே கெடுமாம் என்கிறது  இதைத் தானோ?

“நுணலும் தன் வாயால் கெடும்”

அனந்திக்கு தேவையில்லாத வேலை இது.

மிகச்சரியா கணிச்சுள்ளீர்கள்!

அனந்தி சசிதரன் தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைப்பது நல்லதல்ல. 

முட்டாள்களின் ஊக்குவிப்புகளை கேட்டால் கருணாவின் திரிசங்கு நிலை தான் ஏற்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன்....
யாழ். களத்தில், உறுப்பினராகவும் இருந்தவர். 

Link to comment
Share on other sites

On 23/6/2020 at 22:37, சாமானியன் said:

போர்க் காலங்களில் ( இது வரை தப்பியிருக்கும்)  இரண்டு பக்கங்களையும் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப் பட்ட கொலைகளை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்ப்பதற்காக கருணாவினால் சிங்கள அனுசரணையுடன் நடத்தப் படும் நாடகத்தின் முதல் கட்டம் அரங்கேறியிருக்கிறது . அநேக பார்வையாளர்கள் நாடகத்தில் பங்கு கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படும் இயல்பினதாக அமைத்திருக்கிறது இந்த நாடகம் ( இப்போதைக்கு அனந்தி ) .. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று .. (வழமை போலவே) ... 

அந்த நாடகம் சுமந்திரன், சம்பந்தரால் எப்போதோ சிங்கள அரசுகளால் நடாத்தப்பட்டு விட்டது. இப்போ கருணாவை வைத்து நாடகம் ஒன்றும் நடாத்தப்பட வேண்டிய தேவை இல்லை.(அரசுக்கு)

30  வருட போரை வெல்ல  ஒரு காரணியாக இருந்த கருணாவை சிங்கள அரசுகள் தண்டிப்பது என்பது நடக்காது. சி.ஐ டி விசாரணைகள் ஜே.வி.பி சொல்வது போல் ஒரு கண்துடைப்பு. இப்போதைக்கு அம்பாறையில் கருணாவை வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பது, முடிந்தால் வெல்ல வைப்பது போன்ற காரியங்களுக்காக அவர் பயன்படுத்தப்படுவார். தன்னை பிரபல்யமாக்க ஆங்காங்கே கருணா சில வசனங்களை அள்ளி விடுவார்.(தேர்த்தல் தருணத்தில்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.