Jump to content

புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நால்வர் கைது!

புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர்

coronavirus-is-weakening-could-disappear-on-its-own-italian-doctor  

மார்ச் மாதத்தில் புலியாக இருந்த கரோனா வைரஸ் தற்போது பூனையாகி வலுவிழந்துவிட்டது என்று இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி இத்தாலியில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவராக உள்ளார்.

நீண்ட நாட்களாக கரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், கரோனா வைரஸ் வலுவடைந்துவிட்டதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேட்டியோ பாஸ்செட்டி கூறும்போது, “ வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச் , ஏப்ரல் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் கரோனா புலியாக இருந்தது ஆனால் தற்போது பூனையாகிவிட்டது. தற்போது 80 வயதை கடந்தவர்கள் கரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் கரோனா வலிவிழந்துவிட்டது, விரைவில் கரோனா தானாகவே மறையக் கூடும்” என்றார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை அதன் இயல்பு வாழ்கையிலிருந்து நகர்த்தியுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மார்ச் மாதத்தில்அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலியில் கரோனா தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

https://www.hindutamil.in/news/world/560730-coronavirus-is-weakening-could-disappear-on-its-own-italian-doctor-1.html

 

Link to comment
Share on other sites

கொவிட்-19 வைரஸ் வலுவிழந்துவிட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்

 

 

 

     by : Anojkiyan

matteo_bassetti-720x450.jpg

மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது 80 வயதை கடந்தவர்கள் கொரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கொரோனா வலுவிழந்துவிட்டது. விரைவில் கொரோனா தானாகவே மறையக் கூடும்’ என கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி, இத்தாலிக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டதும், பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் துரிதமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி முழு வீச்சில் முடுக்கி விட்டது. சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது.

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி வரை பெரும்பாலான நாடுகளைப் போல் இரண்டொரு மரணங்கள், நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு என்றிருந்த இத்தாலியில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது.

ஆனால், தற்போது பெருந் தொற்று குறைந்துள்ளதால், அங்கு அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 238,720பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,657பேர் உயிரிழந்துள்ளனர்.

http://athavannews.com/கொவிட்-19-வைரஸ்-வலுவிழந்து/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை ஆகினால் சந்தோசம்.

ஆனால் புலி பதுங்கி திரும்பி பாயாமல் இருக்க வேணுமே.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🐯“புலி... 🐅பதுங்குவது,  பாய்வதற்காக” என்ற தமிழ் பழமொழியை... 

இத்தாலி 🇧🇬மருத்துவருக்கு.... ஆராவது மொழி பெயர்த்து சொல்லிபிடுங்களேன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

பூனை ஆகினால் சந்தோசம்.

ஆனால் புலி பதுங்கி திரும்பி பாயாமல் இருக்க வேணுமே.


 

எந்த நேரமும் காசு அது இது என்று கொல்லுப்பட்ட நம்ம புலம்பெயர் தமிழரையும் இந்த கொரனோ  வந்து மாத்தி போட்டுது .குடும்ப உறுப்பினரை காணும் நேரம் குறைவாக காலில் சில்லுக்கட்டினவர்களை  உறவு என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது . ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது  .மாடிப்படி ஏறினால்  தஸ்புஸ் என்று மூச்சை விட்டு எடுத்தவர்கள் பாய்ந்து ஏறி இறங்க வைத்துள்ளது தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வைத்துள்ளது . மக்கும் kfc யும் தான் சாப்பாடு என்றிருந்தவர்களை  வீட்டு சாப்பாடு அதிலும் சத்து மிகுந்த உணவுகளை தேடி உண்ண  சொல்லிக்கொடுத்துள்ளது .சூரிய வெயிலை கண்டால் நிழலில் ஒதுக்கியவர்களை  வெயிலை நாடி உடலை  உறுதிபட செய்துள்ளது .தூங்குவதை கடமையாக கொண்டவர்களை ஆழ்ந்த தூக்கம் என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது .

இனி கொரனோ  இப்படியானவர்களின்  உடம்பில் இறங்குவதுக்கு  அஞ்சும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

German authorities in North Rhine-Westphalia are bringing back local lockdown measures after a coronavirus outbreak linked to a meatpacking plant.

More than 1,500 employees of the Tönnies plant have tested positive.

State premier Armin Laschet said the "preventative measures" in Gütersloh district, home to about 360,000 people, would last until 30 June.

It is the first such move since Germany began lifting its lockdown restrictions nationwide in May.

The country has been praised for its response to the crisis, but there are fears infections are rising again.

https://www.bbc.co.uk/news/world-europe-53149762

ஒரு இறைச்சி பொதி தயாரிக்கும் ஜெர்மனி   ஆலையில் வேலை செய்பவர்களுக்கு   1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரனோ  வைரஸ் தொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கோட்டர்ஸ்லோ மாவட்டத்தில் "தடுப்பு நடவடிக்கைகள்" ஜூன் 30 வரை நீடிக்கும் என்று மாநில பிரதமர் அர்மின் லாஷெட் கூறினார். மே மாதத்தில் ஜெர்மனி தனது பூட்டுதல் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீக்கத் தொடங்கிய பின்னர் இதுபோன்ற முதல் நடவடிக்கை இதுவாகும். நெருக்கடி சமாளிப்பு திறனில் ஜெர்மன்  நாடு பாராட்டப்பட்டது, ஆனால் தொற்றுநோய்கள் மீண்டும் உயரும் என்ற அச்சங்கள் மீண்டும் எழுந்துள்ளன .

ஆக்கம் பெருமாள் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது 

 

3 hours ago, பெருமாள் said:

ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது

ஒன்றாய் இருந்தோ அல்லது தனிமையாகவோ உணவருந்தும் போது, உணவிலும், அதை ரசித்து ருசித்து அருந்துவதிலும், மற்றவர்களையும் மட்டுமே கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதை, எம்மவரின் வளர்ந்தோருக்கும், இளையோருக்கும் சொல்லிக கொடுத்ததா?

குறிப்பாக, உணவருந்தும் நேரத்தையும் screeன்-time ஆக மாற்றி, தொலைக்காட்சி, மொபைல், tablet பார்ப்பதை தவறு என்று அறிந்தும், தாமும் பார்த்து, இளையவர்களை கண்டிக்க தொகுத்து இல்லாதவர்களாக மாறிக் கொண்டிடுக்கும் எம்மவர்கள்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன கொரனாவைரஸ் பலமிழந்து வருவதாகக் காட்டும் எந்த விஞ்ஞான ஆதாரங்களும் இது வரை வரவில்லை. இந்த இத்தாலிய மருத்துவர் ஒரு மாதத்திற்கு முன்னர் இப்படியான ஒரு அவதானிப்பைச் செய்திருந்தார் ஆனால் இது அவதானிப்பு மட்டுமே! நவீன கொரானாவைரசின் பரம்பரை அலகுகள் மாறுகின்றனவா என்று தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள், இது வரை மாற்றங்கள் இல்லை!. 

நான் ஏற்கனவே எனது கொரானா வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய கட்டுரையில் சொன்னது போல, எல்லா வைரசுகளும் மாறும், ஆனால் அது மாறும் போது நமக்கு ஆப்பாகவும் முடியலாம் வாய்ப்பாகவும் அமையலாம்! இது இந்த வைரசில் இது வரையில் நடக்கவில்லை என்பது தான் உண்மை! எனவே தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டியது எமது கடமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.