Jump to content

கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன்

20200622_112845-960x444.jpg?189db0&189db0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் தமிழ் மக்களின் அரசியல் தீா்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவாா் என நான் நினைக்கவில்லை. அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம்”

இவ்வாறு நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும், புளொட் தலைவருமான த.சித்தாா்த்தன் தெரிவித்தார். மேலும்,

‘நாங்கள் சா்வதேச மட்டத்திலும் உள்ளூரிலும் பேச வேண்டும். அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுதங்களாலும் எமது பக்க நியாயங்களை பேசி எமக்கானதை கேட்டதாலேயே அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. எனவே பேச வேண்டியது கட்டாயம். அது கோட்டாயயவாக இருந்தால் என்ன மற்றவா்களாக இருந்தால் என்ன நாம் பேசுவோம்.’ – என்றார்.

மேலும்,

‘தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நிகரான மாற்று கட்சி இல்லாமையாலும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நீண்டகாலம் ஆதரவளித்தமையாலும் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள். அது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் மீதும், அவர்களுடைய கருத்துக்கள் மீதும் மக்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களுடைய வாக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே என்பதை பல இடங்களில் மக்களே எமக்கு கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே வடகிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பே அதிகூடிய அசனங்களை பெற்றுக் கொள்ளும். இதர கட்சிகள் ஏதோவொரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெறக்கூடும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்தமுறை ஒன்றையும் புதிதாக கூறவில்லை. 70 வருடங்களாக தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், விடுதலை ப்போராட்ட இயக்கங்கள், தமிழீழ விடுதலை புலிகள் கூறியதையே கூட்டமைப்பு இப்போதும் கூறுகிறது.

அதாவது தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை பிரச்சினை, அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள். இதில் பிரச்சினை என்னவென்றால் 70 வருடங்களாக கூறியது அல்லது கேட்டது ஒன்றும் நடக்கவில்லை, கிடைக்கவில்லை. ஆகவே கூட்டமைப்பு புதிதாக ஒன்றையும் கூறவில்லை. 70 வருடங்களாக இதைதான் தமிழ் தலைவர்கள் கேட்கிறார்கள். மேலும் ஒன்றும் நடக்கவில்லை என்றில்லை. 2015ம் ஆண்டுக்கு முன்னர் கிட்டத்தட்ட 600 அரசியல் கைதிகள் இருந்தார்கள்.

இன்று 100 அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தவகையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் வெளியில் தொியாவிட்டாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பே மூல காரணம்.

வலிகாமம் வடக்கிலே 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கிய இடையறாத அழுத்தமே.’ – என்றார்.

 

https://newuthayan.com/கோத்தாபய-தீர்வு-தர-மாட்ட/

 

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும்.

சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்தவர்கள் என்ட வகையில தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இதர கட்சிகள் ஏதோவொரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெறக்கூடும்.

memees.php?w=260&img=c2FudGhhbmFtL3NhbnR

அவ்வளவு பெரிய பகிடி இல்ல இது.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன்

இப்படித்தான் சொல்லி  ஒவ்வொருமுறையும் போய்  கொறட்டை  விடுற கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் தமிழ் மக்களின் அரசியல் தீா்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவாா் என நான் நினைக்கவில்லை. அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம்”

உப்பிடி கதைச்சு சீவியத்தை நடத்துறதை விட.....கோவில் வாசல்லை நிண்டு புக்கை மோதகம் வாங்கி திண்டு வயித்தை வளர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் மீதும், அவர்களுடைய கருத்துக்கள் மீதும் மக்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களுடைய வாக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே என்பதை பல இடங்களில் மக்களே எமக்கு கூறியிருக்கின்றார்கள்.

காலை நீட்டி நல்லாய்த் தூங்குங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.