Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கோடாலிக்காம்பாக மாறிவிட்டீர்களா? – சிறீதரனிடம் சில கேள்விகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு!

ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது.

சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யார் கோடாலிக்காம்பு என்பதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. திரு. விக்னேஸ்வரன் அந்த காட்டின் மரங்களை காக்கும் ஒருவராக நிற்க, நீங்கள் கோடாலிக் காம்பாக மாறிவிட்டீர்களா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தலைவர் பிரபாகரனையும் புகழ்பாடி வாக்குகளை அள்ளிய நீங்கள் இன்று உங்கள் அரசியல் இருப்புக்காக, அதே விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் மோசமாக பேசும் சுமந்திரனை ஆதரித்து, கோடாலிக் காம்பென ஆகிவிட்டீர்கள்.

இதனை நிரூபிக்கும் விதமாகவே அண்மையில், சுமந்திரனை ஆதரித்துப் பேசிய உங்கள் காணொலி வெளியாகியுள்ளது. உங்கள் அரசியல் பொய்யின்மீதும் சுயநலத்தின்மீதும் கட்டியெழுப்பட்டது என்பதை நிரூபிக்க இதனைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. எந்த அரசியலுக்காக புலிகளையும் தலைவரையும் புகழ்ந்தீர்களோ, அந்த அரசியலுக்காகவே இன்று சுமந்திரனை புகழ்ந்து நியாயம் செய்து, அதற்காக விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் பலியிடத் தொடங்கியுள்ளீர்கள்.

உங்களிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்!

  1. நீலன் திருச்செல்வத்தை யார்? எதற்காக கொன்றார்கள்?. நீலனின் கொலையை ஏற்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருவேறுபட்டவர்கள். அது தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் இடைக்கால அதிகார சபைக்கான யோசனையை தயாரித்திருப்பார் என தலைவர் பிரபாகரன் தளபதிகள் மத்தியில் கூறியதாக நீங்கள் அவிழ்த்துவிட்டிருக்கும் கதை பொய்யல்லவா? புலிகளற்ற இன்றைய நிலையில் இதனை சொல்ல உங்களுக்கு யார் அதிகாரமளித்தது? இப்படி பேசி நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகப் பார்க்கிறீர்களா? தலைவர் தவறு இழைத்துவிட்டார் என காட்டவா இப்படி கதைகளை அவிழ்த்து விடுகிறீர்கள்?
  2. இலங்கை அரசு உலக கிண்ணத்தை பெற்ற போது அதை தலைவர் பிரபாகரன் கொண்டாடினார் என்றொரு கதையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கடுமையாக போர் நடந்த 1996 இல் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட சமயத்தில் இலங்கை கிண்ணத்தை வென்றது. அதனையும் இன அழிப்புக்கும் போருக்குமான பிரசாரமாக அன்றைய அரசு பயன்படுத்தியது. இந்தக் காலத்தில் தலைவர் அந்த வெற்றியை கொண்டாடினார் என்பது எப்படியான பொய்யாக இருக்கும்? அப்படியொரு சமயத்தில் தலைவர் வெற்றியை கொண்டாடினார் எனப் பொய்யுரைத்து தலைவரை மோசமாக சித்திரிக்க பார்க்கிறீர்களா?
  3. தலைவர் பிரபாகரனை கெட்டவர் என்று நீங்கள் கூற வருகிறீர்களா? இலங்கை அரசு கிண்ணம் வென்றதை தலைவர் கொண்டாடியவர் என்றும் ‘அவர் அவ்வளவு தூரம் பிழையானவர் இல்லை’ என்றால், அவர் ஓரளவுக்கு பிழையானவர் என்பதல்லவா அர்த்தம். ஆக பிரபாகரன் பிழையானவர் என்பதால், பிரபாகரனையும் போராட்டத்தையும் ஏற்காத, சரியான சுமந்திரனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? மூச்சுக்கு முந்நூறு தரம் உங்கள் அரசியலுக்காக உச்சரித்த பிரபாகரன் பெயரை இன்றைக்கு உங்கள் அரசியலுக்காக ‘பிழையானவர்’ எனக் கொச்சைப் படுத்தி சுமந்திரனை விஞ்சுகிறீர்களா?
  4. தலைவரை பிழையானவர் என்றும் போர் நடந்த காலத்தில் இலங்கை அரசு கிண்ணம் வென்றதை கொண்டாடியவர் என்றும் இழிவுபடுத்திய நீங்கள், கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தையும் விடவில்லை. சுமந்திரன் பாலா அண்ணாவைப் போன்றவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது எவ்வளவு அதிர்ச்சியானது. எங்கள் போராட்டத்தின் பிதாமகனை, அரசியல் ஆலோசகரை, தத்துவஞானியை எதிரிகூட இவ்வாறு அசிங்கப் படுத்தவில்லை. மிக மோசமாக போராட்டத்தை இழிவுபடுத்தும் சுமந்திரனை தேசத்தின் குரலுடன் ஒப்பிட்டதை மானமும் புத்தியும் அறிவும் உள்ள எந்த தமிழனும் – மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

மேற்குறித்த விடயங்கள் பொய்யாக மாத்திரமின்றி ஒரு விடுதலைப் போராட்டத்தை பாரதூரமான அளவுக்கு இழிவுபடுத்தும் இழி செயல்களாகவும் அமைந்துள்ளன. இதனை நீங்கள் நன்கு திட்டமிட்டு செய்வதாகவே தெரிகின்றது. எதிரிகளும் கற்பனை செய்யாத விடயங்களை கூறுகிறீர்கள். புத்திசாலித்தனம் என்றும் அறிவாளித்தனம் என்றும் காட்டி, எதிரிகளும் சிதைக்க முடியாத புலிகளின் வரலாற்றை நீங்கள் சிதைக்கிறீர்க்ள. அழிக்கிறீர்கள். இதுவா உங்களின் நிகழ்ச்சி நிரல்? சுமந்திரன் தெற்கில் சிங்கள ஊடகங்களில் பேசி போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் தலைவரையும் கொச்சைப்படுத்த நீங்களோ, பொய்களைகூறி, வரலாற்றை திரிவுபடுத்தி ஆதாரமற்ற அரசியலை செய்து சுமந்திரனின் வேலையை செய்கிறீர்கள்!

முள்ளிவாய்க்காலை விட்டோடிய நீங்கள், முள்ளிவாய்க்கால் என்றும் பிணங்கள் என்றும் மாவீரர்கள் என்றும் தலைவர் என்றும் போராளிகள் என்றும் பேசிப் பேசியே தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு, இன்றைக்கு சுமந்திரனின் அரசியல் கால்களைக் கழுவ அதே போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

எதையும் செய்துவிட்டு பிரபாகரன் பெயர் சொல்லி தப்பி, வாக்குகளை அள்ளலாம் என் உங்கள் கனவு பொய்க்கத் தொடங்கிவிட்டது. இதுவரை உங்களை ஆதரித்த ஊடகங்களும் ஆதரித்த உங்கள் கட்சி ஆதரவாளர்கள் உங்கள் உண்மை முகம் கண்டு கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்கள் அயோக்கியத்தனமான அரசியலுக்கு இந்த முறை தேர்தலில் எம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

தமிழ்க்குரல் – ஆசிரியர்பீடம்

https://thamilkural.net/thesathinkural/views/45811/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒரு கருணா.!.

Sreetharan-620x330.jpg

இப்போது இலங்கைத் தீவில் இரண்டு நபர்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன. அந்த இரண்டு நபர்களும் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கும் இழைக்கும் துரோகங்களைப் பற்றித்தான் அனைவரும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர் கருணா. மற்றையவர் முன்னாள் எம்.பி சிறீதரன்.

துரோகம் என்பது நம்பிக்கைக்கு மாறாக செயற்படுவது, நம்பியவர்களின் கழுத்தை அறுப்பது. துரோகத்திலும் பெரிய துரோகம் என்னவென்றால், ஒரு சமூகத்திற்கும் இனத்திற்கும் செய்யும் துரோகம்தான். அது ஒரு சமூகத்தை குழி தோண்டி புதைத்துவிடும். துரோகத்தின் பின்னால், தனிபட்ட சுயநலனும் பேராசைகளும்தான் இருக்கும்.

கருணா, தனது அற்ப நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து சிங்கள அரசில் இணைந்து கொண்டார். அவரது காட்டிக் கொடுப்பு, ஒரு விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுத்த இயக்கத்தையும் அழித்ததுடன் லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும் காவு கொள்ளக் காரணமாக இருந்தது. அது வரலாறு முழுவதும் பழியாக தொடரத்தான் போகின்றது.

துரோகம் வரலாற்றில் ஒருபோதும் மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகவே கருதப்படுகின்றது. இன்றைக்கு கருணா என்னவோ எல்லாம் பேசிப் பார்க்கிறார். எனது தலைவர் பிரபாகரன் என்றும் சொல்கிறார். அமைச்சராக இருந்து என்னவோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் இன்றுவரை மக்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை. அதுதான் துரோகத்தின் பரிசு. அதுதான் துரோகத்தின் விளைவு.

அண்மையில் கருத்து தெரிவித்த கருணா, ஆனையிறவில் மூவாயிரம் இராணுவத்தை ஒரே இரவில் கொன்றேன் என்று பேசினார். இப்படிச் சொன்ன கருணாவை சிலர் புலி வீரனாக சித்திரிக்க முயன்றனர். அத்துடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அவரைப் புலியாக காண்பிக்க முயற்சிகளை செய்தனர். ஆனால் கருணாவின் நோக்கம் வேறு.

கருணாவின் வாக்குமூலம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சியம் என்றும் புலிகளே போர்க்குற்றவாளிகள், இராணுவமல்ல என்பதையே கருணா சொல்ல வருகிறார் என்றும் மகிந்தவும் அவர் சார்ந்தவர்களும் இப்போது சொல்லி வருகின்றனர். உண்மையில் கருணாவின் நோக்கம் இதுதான். யானை செத்தாலும் ஆயிரம் பொன் என்பது போல கருணா எதைச் சொன்னாலும் அதன் நன்மை இலங்கை அரசுக்கே.

இப்போது இதேவேலையை செய்யத் தொடங்கியுள்ளார் வடக்கில் ஒரு கருணா. புலிகளின் புராணத்தைப் பாடிப் பாடியே அரசியல் செய்து வந்த சிறீதரன் தனது உண்மை முகத்தை காண்பிக்கத் தொடங்கியுள்ளார். அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் எந்த துரோகத்தையும் செய்யத் தயார் என்பதை சிறீதரன் நன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.

முள்ளிவாய்க்கால் தெரியாத சிறீதரன், தனது குடும்பத்தை கப்பலின் ஊடாக  விரைந்தெடுதத்துவிட்டு, மக்களின் இனப்படுகொலை காயம் ஆறுவதற்கு முன்பாகே அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சென்று தனக்கு ஆசனம் வழங்குமாறு கேட்டார். எதற்கெடுத்தாலும் முள்ளிவாய்க்கால் பிணங்கள் கண் முன்னே நிற்பதாகவும் புலிகளின் நினைவுகளை நெஞ்சில் சுமப்பதாகவும் பேசிப் பேசியே வாக்குகளை அள்ளினார்.

இன்றைக்கு தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாறாக சிறீதரன் பயணிக்கிறார். விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஏற்க மாட்டேன் என்று சொன்ன சுமந்திரனை இன்று சிறீதரன் ஆதர்ச தலைவராக ஏற்று ஆதரிப்பதே இந்த துரோகம் ஆகும். சிங்களர்களுடன் வாழ ஆசைப்படுகின்ற, ஒற்றையாட்சியை விரும்புகின்ற சுமந்திரனைதான் சிறீதரன் இன்றைக்கு ஆதரிக்கின்றார்.

அவர் சுமந்திரனை ஆதரிப்பதுகூட அவர் விருப்பமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அதற்காக பொய்களையும் புரட்டுக்களையும் கூறி ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் உதவி பெற்றிருக்கலாம் என தலைவர் கூறியதாக ஒரு பொய், இலங்கை அரசு கிரிக்கெட் கிண்ணம் வென்றபோது தலைவர் அதைக் கொண்டாடினார் என்று ஒரு பொய்.

இந்த இரண்டு பொய்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்ற தலைவர் பிரபாகரனை மிக மோசமாக அவமதிக்கின்ற மிகப் பெரும் துரோகங்கள் ஆகும். அத்துடன் தலைவர் அவ்வளவு பிழையானவரல்ல என்று கூறி அவரை பிழையானவராக்கியதும் பாலா அண்ணாவைப் போன்றவர் சுமந்திரன் என்று கூறி தேசத்தின் குரலை அவமதித்ததும் விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பெரும் துரோகங்கள்.

எதற்காக இப்படி சிறீதரன் பேசினார்?

சுமந்திரன் தரப்பில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பெருமளவு நிதி சிறீதரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லுகின்றனர். அத்துடன்  இம்முறை தேர்தலில் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனும் தோற்க மாவையின் இடத்தை சிறீதரனும் சம்பந்தனின் இடத்தை சுமந்திரனும் கைப்பற்ற திட்டம் வகுக்கப்படுகின்றது. தங்கள் சுயநல அரசியலுக்காக தமிழ் இனத்திற்கு மாத்திரமின்றி சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைக்கும் மோசமான திரைமறைவு வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இங்கே சுமந்திரனைவிட சிறீதரன் ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஏனென்றால் சுமந்திரன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வருகின்றார். ஆனால் சிறீதரன் தன்னை தமிழீழ தேசியத் தலைவர் போலா வேடமிட்டு புலிகளை புகழ்ந்து அரசியல் செய்துவிட்டு இன்றைக்கு அதே தலைவரை பிழையானவர் என்று காட்டி புலிகளை இழிவுபடுத்தி சுமந்திரனை புனிதப்படுத்தும் நாசகார வேலையை செய்வதே மக்களின் அதிருப்திக்கு காரணம் ஆகும்.

சுமந்திரனை ஆரம்ப காலத்தில் கடுமையாக சிறீதரன் எதிர்த்து வந்தார். தனது ஆதரவாளர்கள் யாரும் சுமந்திரனை ஆதரிக்க கூடாது என்றும் கிளிநொச்சிக்குள் சுமந்திரனை அழைத்து வருபவர்கள் துரோகிகள் என்றும் கூறினார். இதனால் ஒரு பிரதேச சபை உறுப்பினருடன் கோபித்துக்கொண்டு அவரை துரோகி என்றார். அத்துடன் கிளிநொச்சியில் உள்ள பலரை கொண்டு சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரங்களை செய்யத் தூண்டினார். சிறீதரனை நம்பி சுமந்திரனை எதிர்த்தவர்கள் இன்று அனாதை ஆகியுள்ளனர்.

சிறீதரனை துரோகி என நாம் சொல்லவில்லை. சுமந்திரன் பிழையானவர் என்றும் அவரை ஆதரித்து கிளிநொச்சிக்கு அழைத்து வருபவர்கள் துரோகிகள் என்றும் சொன்னவர் சிறீதரன். அவரது கூற்றுப்படியே சிறீதரன் இன்று துரோகி ஆகியுள்ளார். இலங்கையில் மாத்திரமின்றி உலகம் முழுதும் பரந்து வாழும்  மக்கள் சிறீதரனின் சுமந்திரன்மீதான திடீர் காதலை எதிர்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள். அத்துடன் சுமந்திரனுக்காக தேர்தல் தோல்வியை ஏற்கத் தயார் என்று சிறீதரன் கூறியுள்ளார். இத்தகையவர்களை அகற்றி, தமிழ் தேசிய அரசியலை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்.

https://thamilkural.net/thesathinkural/views/46475/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.