உடையார்

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு

Recommended Posts

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு

 

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பதிவு: ஜூன் 24,  2020 04:45 AM
சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறி உள்ளனர்.

மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

திடீர் சாவு

நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சாலை மறியல்

போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்திய சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கடைகள் அடைப்பு

மேலும், சாத்தான்குளம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உடன்குடி, மெஞ்ஞானபுரம், பேய்குளம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போலீசார் தாக்கியதால் தான் தந்தை-மகன் இறந்ததாகவும், எனவே, சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆறுதல்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் வந்து ஆறுதல் கூறினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜெயராஜின் மனைவி செல்வராணிக்கு ஆறுதல் கூறினார். மேலும் கனிமொழி எம்.பி. தொலைபேசி மூலம் செல்வராணியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ., வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோரும் ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/24021518/Arrested-for-defying-the-ban-opened-up-shop-in-sattamkulam.vpf

 

Share this post


Link to post
Share on other sites

கடையை.. திறந்ததற்காக, ஒரு குடும்பத்தையே...   பாவிகள் அழித்து விட்டார்கள்.  😮

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

104952264_3188862147837259_4399430306631846254_o.jpg?_nc_cat=1&_nc_sid=9267fe&_nc_eui2=AeGJcbcDmdSTUcSL4dPuf4wQ2YNKSkdMLZDZg0pKR0wtkLxIqfz0aVNwlfyJIjpH6OE6e3-xzlo6O3rQqVTWI2LL&_nc_ohc=L1sz0mwiAL8AX8bksbH&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7348dd03f0835ead59467bd082b9c446&oe=5F19888E

 

105797477_3131177223643044_4832642356724347973_o.jpg?_nc_cat=1&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeHpuGqLjTyr-Y7P7R1PVOT-chqFtfENt6xyGoW18Q23rF4CbiZ5U0gTYJqhZ_nWLkQLWvDd72rR5EPW8xiQTymR&_nc_ohc=Bn47zmA6TF0AX9pnni9&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e7afd7e5e771b3e699c8811b5027c342&oe=5F16D0CA

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம்: சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரிக்க முறையீடு
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம்: சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரிக்க முறையீடு
 

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம் தொஅடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூன் 24,  2020 12:47 PM
சென்னை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறி உள்ளனர்.

மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தை, மகன் உயிரிழப்பு - முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? எனதிமுக எம்பி கனி மொழி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இதில்சம்பந்தப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு உத்தரவிட்டது.

மனித உரிமை ஆணைய டிஜிபி இதுகுறித்து நேரடியாக விசாரித்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு, போலீசார்  அடித்து கொன்றதாக ஊர்மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்
உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடைபெறுகிறது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வருகை மருத்துவ கல்லூரி முதல்வருடன், மாஜிஸ்திரேட் ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் இந்த முறையீட்டைச் செய்தார். 

“மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் அவரது முறையீட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.

பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/24124740/Father-and-son-die-in-Kovilpatti-prison-Appeal-against.vpf

Share this post


Link to post
Share on other sites

மருத்துவரின் மரண அறிக்கைகள் உண்மையை வெளியிடுமா? காவற்துறைக்கு சாதகமாகுமா.? கொரோனாபற்றிக் குறிப்பிட்டிருப்பதால் சந்தேம் ஏற்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம்-ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள்

சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம்-ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள்

சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறி உள்ளது.
பதிவு: ஜூன் 24,  2020 14:04 PM
சென்னை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறி உள்ளனர்.

மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தை, மகன் உயிரிழப்பு - முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? எனதிமுக எம்பி கனி மொழி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இதில்சம்பந்தப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு உத்தரவிட்டது.

மனித உரிமை ஆணைய டிஜிபி இதுகுறித்து நேரடியாக விசாரித்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர்

காவல் உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ்  மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு கொரோனா காலத்தில் போலீசார் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.

மாஜிஸ்திரேட் விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்க கூடாது" பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் "மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய கூடாது" சாத்தான்குளம் சம்பவம்  போல்  தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறி உள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/24140454/Like-the-Sathankulam-incident-No-longer-happening.vpf

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

105420441_3133233853437381_4070355298441950413_n.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=fZZ6Mp6urRkAX_RzG4l&_nc_ht=scontent-frt3-1.xx&oh=ce0eebf1549454c8064819e9f09687da&oe=5F1A761D

ஒரு  செல் போனுக்காக... ரெண்டு உசிரை அநியாயமா கொன்னுட்டிங்களே..!

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளம்... தந்தை, மகன் கொலையில் நடந்தது என்ன என்பதை, இந்தக் காணொளி விவரிக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு

சென்னை:

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

அவர்களை சாத்தான்குளம் போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
 
விசாரணைக் காவலில் தந்தை, மகன் என இரண்டு வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.


 
இந்நிலையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மருந்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக்கடைகள் மூடப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று காலையில் மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடையடைப்பை தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகனுக்கு மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/26084926/1639937/Sathankulam-father-and-son-died-in-custody-Shops-across.vpf

 

 

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஜூன் 26,  2020 17:55 PM
சென்னை,

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது,மிகவும் வேதனைக்குரியதுமாகும்.

இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தை மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.

மேலும் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/26175527/To-the-family-of-Jayaraj-who-died-in-saththankulam.vpf

சாத்தான்குளம் சம்பவம் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு இணையானது..... திரைப்பிரபலங்கள் கண்டனம்

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 
 
தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:
 
இயக்குனர் சேரனின் டுவிட்
 
 
நடிகர் ஜெயம் ரவியின் பதிவு
 
கார்த்திக் சுப்புராஜின் பதிவு 
 
நடிகர் சாந்தனுவின் பதிவு 
 
நடிகை அதுல்யாவின் பதிவு 
 
இயக்குனர் பா.இரஞ்சித்தின் பதிவு 
 
நடிகை குஷ்பூவின் பதிவு 
 
நடிகை மகிமா நம்பியாரின் பதிவு 
 
நடிகர் பால சரவணனின் பதிவு 
 
இயக்குனர் ரத்னகுமாரின் பதிவு 
 
பாடகி சுசித்ராவின் பதிவு 

Share this post


Link to post
Share on other sites

தந்தை, மகன் பொலிஸ் காவலில் பலி; கொலையா? – வலுக்கிறது கண்டனம்!

 

EbcYKyeUcAYcy5h-960x540.jpeg?189db0&189db0

தமிழகம் – தூத்துக்குடியில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிறையில் இருந்த தந்தையும், மகனும் 22, 23ம் திகதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜ் ப்ளெய்ட் படுகொலைக்கு இணையானது எனத் தெரிவித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையில், குறித்த சம்பவம் இந்தியாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் இவ்வாறு பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ் (55-வயது), அவரது மகன் பென்னிக்ஸ் (31-வயது) ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

டுவிட்டரில் ’#JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

‘தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் குறித்த பகுதியில் பனைமரக்கட்டைகள் விற்பனை செய்யும் கடையொன்றை நடத்திவந்துள்ளார். அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையின் கடை அருகிலேயே கைத்தொலைபேசி விற்பனை நிலைமொன்றை நடத்தி வந்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில உள்ள நிலையில் கடந்த 19ம் திகதி இரவு அந்த பகுதிக்கு ரோந்து நடடிவக்கையில் ஈடுபட்ட பொலிஸார், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள கடைகளை மூடுமாறு தெரிவித்துள்ளனர். இதற்கு பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதையடுத்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் மீது சாத்தான்குளம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 22ம் திகதி இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், இதையடுத்து அவர் கோவில்பட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜூக்கு கடந்த 23ம் திகதி காலை 6 மணியளவில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மறுநாள் உயிரிழந்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகனின் அடுத்தடுத்த திடீர் மரணம் பொதுமக்கள் இடையே பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பொலிஸார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பாக வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் இறப்புக்கு நீதி வேண்டி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

https://newuthayan.com/தந்தை-மகன்-பொலிஸ்-காவலில/

 

Share this post


Link to post
Share on other sites

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

sathankulam-jayaraj-bennix-s-death-the-cpm-all-india-general-secretary-sitharam-yechury-condemned  

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை, மகன் இறந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததற்காக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் மரணம் தமிழகம் தாண்டி தேசிய அளவிலும் எதிரொலித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ் (கொலைக் குற்றத்திற்காக) வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்குக் கொடுங் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களைக் காவல் அடைப்பு (ரிமாண்ட்) செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, (அருகேயே சிறை இருந்தநிலையில் அங்கே அடைக்காமல்) வெகுதூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது.

மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியது மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் கொடுங் காயங்களைக் குறித்துக்கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/561398-sathankulam-jayaraj-bennix-s-death-the-cpm-all-india-general-secretary-sitharam-yechury-condemned-1.html

 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ...தமிழனே ,தமிழனை அடித்து கொலை செய்யும் சம்பவம் வேறு எங்கும் நடக்க கூடாது ...அதுவும் ஒன்றுமேயில்லாத ஒரு விசயத்திற்கு அடித்துக்  கொலை செய்து இருக்கிறார்கள் ..இந்த போலீசார் சிங்கள ஆமியை விட கொடிய அரக்கர்கள் ...இந்தியாவில் மனிதாபிமானமே மரத்து போயிட்டுது 

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, ரதி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ...தமிழனே ,தமிழனை அடித்து கொலை செய்யும் சம்பவம் வேறு எங்கும் நடக்க கூடாது ...அதுவும் ஒன்றுமேயில்லாத ஒரு விசயத்திற்கு அடித்துக்  கொலை செய்து இருக்கிறார்கள் ..இந்த போலீசார் சிங்கள ஆமியை விட கொடிய அரக்கர்கள் ...இந்தியாவில் மனிதாபிமானமே மரத்து போயிட்டுது 

த‌மிழ் நாட்டு ஏவல்துறையில் கூட‌ பிராடுக‌ள் அக்கா ,
காசு கொள்ளை அடிக்கும் திருட‌ர்க‌ள் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையில் , 

கொஞ்ச‌ நாளுக்கு இந்த‌ கொடிய‌ ச‌ம்ப‌வ‌த்த‌ ப‌ற்றி க‌தைப்பின‌ம் , பிற‌க்கு இதுவும் காற்றோடு காற்றாய் போயிடும் 😡,

த‌மிழீழ‌ காவ‌ல்துறையின் அறிவு பொறுமை அன்பு , இவை அனைத்தும் த‌மிழ் நாட்டு ஏவ‌ல்துறையிட‌ம் இல்ல‌ 😎

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
50 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டு ஏவல்துறையில் கூட‌ பிராடுக‌ள் அக்கா ,
காசு கொள்ளை அடிக்கும் திருட‌ர்க‌ள் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையில் , 

கொஞ்ச‌ நாளுக்கு இந்த‌ கொடிய‌ ச‌ம்ப‌வ‌த்த‌ ப‌ற்றி க‌தைப்பின‌ம் , பிற‌க்கு இதுவும் காற்றோடு காற்றாய் போயிடும் 😡,

த‌மிழீழ‌ காவ‌ல்துறையின் அறிவு பொறுமை அன்பு , இவை அனைத்தும் த‌மிழ் நாட்டு ஏவ‌ல்துறையிட‌ம் இல்ல‌ 😎

அங்கிருக்கும் மக்கள் சுயநலவாதிகள் ...கொஞ்ச நாளைக்கு போராடுவினம் ...பின்னர் தங்கள் வேலையை பார்க்க போயிடுவினம் 

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளம் முதல் செல்லூர் வரை... காவல்துறையால் தொடரும் மர்ம மரணங்கள்!

கோவில்பட்டி கிளைச்சிறை

சாத்தான்குளம் சம்பவம் மிகக் கொடுமையானது. இதுவரை சித்ரவதைக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தில் நம் நாடு கையொப்பமிடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸும் அவர் தந்தை ஜெயராஜும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறையினர் தாக்கியதால்தான் மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
தமிழகத்தில் இதுபோன்று காவல்துறை விசாரணையிலும், சிறையில் இருக்கும்போதும் கைதிகள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். தவறு செய்யும் காவல்துறையினருக்கு அதிகப்பட்ச தண்டனையாக ஆயுதப்படைக்கு மாற்றுவது சடங்காக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று நடக்கும் மர்ம மரணங்கள் அரசியல், சமூகப் பின்னணி இருந்தால் வெளியில் தெரிகிறது. சாமானியர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் வெளியே வருவதில்லை, 

சமீபத்தில் மதுரை மத்திய குற்றப்பிரிவு வழக்கு விசாரணைக்குச் சென்ற தவிட்டுச்சந்தையைச் சேர்ந்த 65 வயதான அழகர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அழகர் 
அழகர்
ஈ.ஜெ.நந்தகுமார்
இதுபற்றி அழகரின் மகன் ஆனந்த் நம்மிடம், ''என் தந்தை ரியல் எஸ்டேட் தரகராக இருந்தார். மதுரையில் ஜவுளிக்கடை ஒன்றுக்கு நிலம் வாங்கிக் கொடுத்ததில் அவர்களுக்கும் மற்றொரு ஜவுளி நிறுவனத்துக்கும் பிரச்னை உண்டானது. இந்த வழக்கு சம்பந்தமாக என் தந்தையை விசாரணைக்கு வருமாறு மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைத்திருந்தனர். கடந்த ஜுன் 11-ம் தேதி மாலை விசாரணைக்காக சென்றார். இரவு 7.30 மணிக்கு என் தந்தை இறந்து விட்டதாகவும் உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் சொன்னார்கள். நல்ல விதமாக விசாரணைக்குச் சென்றவரை காவல்துறையினர் தாக்கியதில்தான் இறந்திருக்கிறார்.

அவர் உடல் நலமில்லாமல் இருந்ததாகவும், விசாரணை முடிந்து செல்லும்போது மயக்கமடைந்து விழுந்து விட்டதாகவும் உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள். உண்மையிலேயே அவர் மயங்கி விழுந்திருந்தால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கலாம். அதைவிட்டு நீண்ட நேரம் கழித்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். நாங்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை. அதனால் நீதிமன்றம் செல்லப் போகிறோம்'' என்றார்.  

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், ''மூத்த பேராசிரியர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. வீடியோ செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்து அடுத்து டி.ஆர்.ஓ விசாரணை நடத்துவார்'' என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஜெயராஜ்,பெனிக்ஸ் உறவினர்கள் 
ஜெயராஜ்,பெனிக்ஸ் உறவினர்கள்
சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது காவல்துறையா, நீதித்துறையா?
Also Read
சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது காவல்துறையா, நீதித்துறையா?
இதேபோல் சில மாதங்களுக்கு முன் அவனியாபுரத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற பாலமுருகன் என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு தந்தை முத்துக்கருப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், திடீரென்று வழக்கை வாபஸ் பெற்றார். காவல்துறை மிரட்டியதால் அவர் வழக்கை வாபஸ் பெற்றதாக நீதிபதி கவனத்துக்குக் கடிதம் ஒன்று சென்றது. இதனால் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்தது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது கருப்பாயூரனியில் ரோந்து வந்த காவலர்கள் விரட்டியதால் கோழிக்கடை நடத்தி வந்த அப்துல் ரகீம் என்ற பெரியவர் கீழே விழுந்து மரணமடைந்தார். காவல்துறையை எதிர்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். பின்பு காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் இறந்தவரின் குடும்பத்தினர் புகார் ஏதும் அளிக்காமல் உடலை வாங்கிக் கொண்ட சம்பவமும் நடந்தது.

கோவில்பட்டி கிளைச்சிறை 
கோவில்பட்டி கிளைச்சிறை
அதற்கு சில மாதங்களுக்கு இரவில் இருசக்கர வாகனத்தில் நண்பரை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த விவேகனந்தகுமார், செல்லூர் அருகே  விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். இது எதிர்பாராத விபத்து அல்ல, அங்கிருந்த டெல்டா பிரிவு காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் லத்தியை வீசியதால் விவேகானந்தகுமார் தடுமாறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக புகார் சொல்லப்பட்டது. அவர் குடும்பத்தினரும் சமுதாயத்தினரும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் சிலர்  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். சில நாள்களில் அது விபத்துதான் என்று வழக்கை முடித்தது காவல்துறை. விவேகானந்தகுமாரின் குடும்பம் ஆதரவில்லாமல் நிற்கிறது.

சாத்தான்குளம்:`இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்!’ -ராகுல் காந்தி முதல் தவான் வரை
Also Read
சாத்தான்குளம்:`இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்!’ -ராகுல் காந்தி முதல் தவான் வரை
இப்படி பல சம்பவங்கள்... இதைத் தடுக்க என்ன வழி?  என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமம் குடிமக்கள் இயக்கத்தின் தலைவருமான சி.ஜே.ராஜனிடம் கேட்டோம், ''இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் சர்வதேச சித்ரவதைக்கு எதிரான தினம் உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால்,  சித்ரவதைக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தில் நம் நாடு இதுவரை கையொப்பமிடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். சாத்தான்குளம் சம்பவம் மிகக் கொடுமையானது. அப்பாவை போலீஸ் அடிக்கும்போது அதை ஒரு மகன் கேள்வி கேட்கக் கூடாதா?

பொது மக்கள் கேள்வி எழுப்பினாலே போலீஸுக்குக் கோபம் வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதால் தங்கள் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் காவல்துறையின் சித்ரவதையால் மூச்சு முட்டுகிறது என்று கூறி மரணமடைந்த கறுப்பின இளைஞருக்காக உலகமே போராடியது. போலீஸ் அப்படி நடந்துகொண்டது தவறுதான் என்று அமெரிக்கக் காவல்துறை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால், இங்கு போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பதற்கு சங்கடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

சி.ஜே.ராஜன் 
சி.ஜே.ராஜன்
ஈ.ஜெ.நந்தகுமார்
இழப்பீடு அறிவித்துவிட்டு மூச்சுத் திணறலால் இறந்தாக அறிக்கை விடுகிறார். நீண்ட காலமாக காவல்துறையின் சித்ரவதையால் பல மரணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சரியான தண்டனை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அரசுகள்தான்.

1995-ல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மனித உரிமை ஆணையங்கள் உருவாகின. இவை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டாலே காவல்துறை சித்ரவதைகள் தடுக்கப்படலாம். குற்றம் நிகழந்தவுடன் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது வழக்கு பதிவு செய்திருக்கலாம். இப்போது நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் சில விஷயங்கள் நடந்து வருகின்றன. அடுத்து கீழ்நிலைக் காவலர்களுக்கு மனித உரிமை சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். மக்கள் உங்கள் நண்பர்கள் என்று அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். சாதி, மதம், பார்த்து மக்களிடம் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதையெல்லாம் நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க முடியும்'' என்றார்.

https://www.vikatan.com/government-and-politics/crime/from-sathankulam-to-sellur-mysterious-police-custodial-deaths

 

Share this post


Link to post
Share on other sites

சாத்தான்குளம் சம்பவம் : அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் - சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் சம்பவம் : அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் - சூர்யா அறிக்கை

 

சாத்தான் குளம் சம்பவத்தில் அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க சீர்திருத்தங்கள் தேவை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூன் 28,  2020 09:19 AM
சென்னை,

சாத்தான் குளம் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணைபோனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடு பொதுமக்களில் ஒருவனாக தாமும் காத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மன்னிக்க முடியாத குற்றங்களைச்செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல் இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.

போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல் இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை.

இத்தகைய கடமை மீறல் செயல்கள் ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற துயர மரணங்கள் ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக நடக்கிறது.

ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால் போலீசாரின் இந்த கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தில் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்த கொடூர மரணத்தில் தங்களுடைய கடமையை செய்யத்தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல, தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக நமது அதிகார அமைப்புகள், அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்குப்பிறகும், உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டுமே ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது தண்டனை கால பணியாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்கிறது.

இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இது தான் தண்டனையா? என்று எழுந்த விமர்சனத்திற்கு பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன், ஒட்டு மொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். கொரோனா யுத்தத்தில் களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன். அதேநேரம் அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்த்திருத்தங்களை அரசும்,நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/28091956/JusticeForJayarajandBennick-The-end-to-the-abuse-of.vpf

Share this post


Link to post
Share on other sites

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான் குளம் காவல் ஆய்வாளராக சேவியர் நியமனம்

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான் குளம் காவல் ஆய்வாளராக சேவியர் நியமனம்

 

சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பதிவு: ஜூன் 28,  2020 10:20 AM
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 


இதனிடையே, கோவில்பட்டி கிளைச் சிறையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்  உயிரிழந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா கிளைச் சிறையில் விசாரணை மேற்கொண்டார்.  நேற்றிரவு எட்டரை மணிவரை விசாரணை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அதன்பின்னர் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தட்டச்சு இயந்திரங்களுடன் பணியாளர்களும் கிளை சிறைக்குள் விசாரணைக்காக சென்றனர்.

சிறையில் உள்ள கைதிகள்,  சிறை காவலர்கள், சிறை உதவி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறையில் உள்ள ஆவணங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ள காட்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டு சேகரித்தனர்.

இந்தநிலையில் தூத்துக்குடியில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/28102042/Santhankulam--As-a-police-inspector-Savior-Appointment.vpf

Share this post


Link to post
Share on other sites
இரண்டு வியாபாரிகளையும் நிர்வாணமாக்கி இரண்டு நாட்கள் சித்ரவதை செய்து, ஆசன வாயில் குச்சியை உள்ளே செலுத்தி மலக்குடலை கிழித்து ரத்தம் பீறிட வைத்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது என்று மூத்த விசாரணை அதிகாரி சொன்னதாக இன்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குற்றம் செய்த அதிகாரிகளை அவர்கள் செய்தது போல சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டும். அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக அந்த குற்றம் செய்த அதிகாரிகள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். தீயவர்கள் அழிய வேண்டும். அவர்கள் செய்த தீவினையாலும் மக்களின் சாபங்களாலும் தீயவர்கள் நோய்வாய்ப்பட்டு துன்பப் பட்டு அழிந்து போவார்கள்
 

Share this post


Link to post
Share on other sites
On 27/6/2020 at 13:13, ரதி said:

அங்கிருக்கும் மக்கள் சுயநலவாதிகள் ...கொஞ்ச நாளைக்கு போராடுவினம் ...பின்னர் தங்கள் வேலையை பார்க்க போயிடுவினம் 

எங்க‌ளை மாதிரி துணிவோடு போராட‌ கூடிய‌ ப‌ல‌ர் இருக்கின‌ம் அக்கா , த‌மிழ் நாட்டு ஏவ‌ல்துறை பொய் வ‌ழ‌க்குக‌ள் போட்டு அவ‌ர்க‌ளின் எதிர் கால‌த்த‌ நாச‌ம் ஆக்கி போடுவாங்க‌ள் , 

அத‌ வைச்சு தான் சொன்னான் இந்த‌ ச‌ம்ப‌வ‌வும் காற்றோடு காற்றாய் போகும் என்று ,

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.