Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்பாத்திக் கள்ளியின் உயர்ந்த மருத்துவ குணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்திக் கள்ளியின் உயர்ந்த மருத்துவ குணம்.

SAPPATHTHI.jpg

சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தியைப் போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும்.

இந்த மூலிகைச் செடியில் ஆங்காங்கே முட்கள் காணப்படுவதால் ஆடு, மாடுகள் நெருங்காது. ஆகவே பெரும்பாலும் கிராமப்புறத்து வயல் வெளிகளிலும், நகர்ப்புறத்து தோட்டங்களிலும் வேலிகளில் வளர்ப்பார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும்; ரோஸ் மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் பழங்கள் பழுக்கும்.

சப்பாத்திக் கள்ளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துகளும் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிக்கு, தனி இடம் உண்டு. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாகத் திகழும் சப்பாத்திக் கள்ளி, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக பெரிதும் உதவிபுரியும். குறிப்பாக, முதுமையில் ஏற்படும் `அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி நோய்க்கு சரியான மருந்தாக விளங்குகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோயைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கவும் ஒரு மெய்க்காப்பாளனாக விளங்குகிறது சப்பாத்திக்கள்ளி.

சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள அஸ்கார்பிக் என்ற அமிலம் நம் உடலில் இருக்கும் நல்ல செல்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டு செல்லும். அதேநேரத்தில் புற்றுநோய் செல்களுக்கு செல்லும் ஆக்சிஜனை தடை செய்து புற்றுநோய் செல்களை அழித்துவிடும். உடலில் வரக்கூடிய அனைத்து கட்டிகளையும் கரைக்க சப்பாத்திக் கள்ளி பயன்படும்.

சப்பாத்திக் கள்ளி பழம் வெயிலில் ஏற்படும் நாவறட்சியைப் போக்கும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் போக்கும்.

சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்து உடல்பருமனைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை நன்றாகப் பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி உள்ள இடத்தில் மேல்பூச்சாகப் பூசினால் சீக்கிரம் குணம் தெரியும். ரத்த அழுத்தம், இதய நோய் வராமல் பாதுகாக்கும் தன்மை உள்ளது. பார்வைக் குறைபாட்டைப் போக்குவதுடன் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பூச்சிக்கடி, வண்டுக்கடி விஷத்தை நீக்கும்.

சப்பாத்திக் கள்ளியை முள் நீக்கி சுத்தம் செய்து பசையாக்கி 20 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சூடாக மலம் வெளியேறுவது, மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் விலகிச் செல்லும். இதன் பழச்சாற்றில் மணப்பாகு செய்து சாப்பிட்டால் கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சப்பாத்திக் கள்ளி பழம் மட்டுமல்லாமல் அதன் சதைப் பகுதியும்கூட நல்ல மருந்துதான். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சப்பாத்திக் கள்ளியின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பிரச்சினை உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும். இதன் பூக்களை நசுக்கி கட்டிகளின்மீது கட்டி வந்தால் கட்டிகள் உடைந்து குணம் கிடைக்கும்

https://www.vanakkamlondon.com/சப்பாத்திக்-கள்ளியின்-உய/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா விசயம்.... யாரு சப்பாத்தியினை, களவு எடுத்து விட்டார்களோ என்று பார்த்தேன்.

நம்மூரில் நாகதாளி என்று அழைப்போம் ஆனாலும் நீலநிறமாக மேலே இருப்பது வேறு இனமோ என்று நினைக்க வைக்கிறது. 

  • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
    • இப்படி ஏதாவது செய்தால்த் தான் பணக்காரனாகலாம்.
    • ஒரு கிராமத்தில்  முதலாளி ஒருவர்   இருந்தார் . அவருக்கு கீழே   சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் .  ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு  செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன்      செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம்  அவருக்கு விருப்பமான, வார்  அறுந்த செருப்பு  காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று  ஏய்  இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார்.  அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில்   கை வைத்து   ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன்  சற்று  தயங்கி  ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட  நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறாயா ? என்று காரை  கிளப்பி சென்று விட்டார்.   மீண்டும் அந்த வழியால் திரும்பி வரும் போது   பையனின்  கடை  பூட்டி இருந்தது . நான்காம் நாள்  அவன் கடையை திறந்து .வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.  தூரத்திலே பஸ் தரிப்பில் , முதலாளியை போன்ற உருவம் உள்ள ஒருவர்  காணப்படடார்    . பையன்  செருப்பை கடதாசிப் பையில் சுற்றிக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தான் அது அவரே தான். இவனைக் கண்டதும்   ஏன் உன் கடை சில நாடளாய்   பூட்டி இருந்தது  என்றார். அவன் ஐயா என் தந்தை, நோயாளி, அன்று  அவருக்கு மருந்து வாங்க தான் அந்த பத்து ரூபாய் கடன் கேட்ட்டேன் ,, இறந்து  விடடார் . அவரது காரியங்களை முடிக்க வேண்டி இருந்தது அதனால் தான் கடைப் பூடடப்பட்ட்து.. என்றான். . சரி என்று மீண்டும் முன் சடடைப் பையில் காசு எடுக்க முற்படடார். மீண்டும் நூறு ரூபா தாளைக் காட்டி தம்பி என்னிடம் சில்லறை இல்லையே என்றார். பையன் பரவாயில்லை ஐயா, ..மீண்டும் உங்களை காணும் போது தாருங்கள் என்றான்.  அவனிடம்(கூலி கொடாமல் )  கடன் பட்ட்து  . அவருக்கு செருப்பால் அடித்து போன்ற ஒரு பாடத்தை தந்தது. .பரவயில்லை என்று அந்த நூறு ரூபாயை கொடுத்திருக்கலாம் அவரது வசதிக்கு. ஆனால் கஞ்சத்தனம் இடம் கொடுக்க வில்லை. .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.