Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்!

01.jpg?189db0&189db0

 

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார்.

இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

 

https://newuthayan.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நடரா/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to post
Share on other sites

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

 

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார்.

தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார்.

இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.

´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ´கற்பனைகள் கலைவதில்லை´ என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்;
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.
  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார்.

 

ஆழ்ந்த இரங்கல்கள். எமது காலத்து மனிதர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக விடை பெறுகிறார்கள்.1973 இல் மாத்தளையில் இருந்து கொழும்பு சென்று சிறுவர் நிகழ்ச்சியில் "தங்கமான குட்டி" கதை சிறுவர் நிகழ்ச்சியில் நான் சொன்னது நினைவுக்கு வருகிறது. திரு நடராஜசிவமும், திருமதி யோகா தில்லை நாதனும்  அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.