Jump to content

இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி!


Recommended Posts

இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி!

இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி!

 

 
 
பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத் தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆகஸ்டில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான சூழல் தற்போது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலால் இந்த நிலை உள்ளதாகக் கூறியுள்ளது. எனவே ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்த டெஸ்ட் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது. எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தகவல் வௌியிட்டுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.