nunavilan பதியப்பட்டது June 26, 2020 Share பதியப்பட்டது June 26, 2020 ஆயிரம் ரூபாய் கைகளுக்கு கிடைக்கும் வரை எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – இராதாகிருஷ்ணன் by : Vithushagan 5 வருடங்களாக ஆயிரம் ரூபாய் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்தது. ஆனால், அது இன்னும் சாத்தியப்படவில்லை. தற்போது 2020 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்தும் ஆயிரம் ரூபா பற்றியே பேசப்படுகின்றது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என பிரச்சாரம் செய்கின்றனர். என்று ஆயிரம் ரூபாய் கிடைக்கின்றதோ அன்று சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றோம். தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குமாறு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் இதற்கு முன்னர் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, 22 கம்பனிகளும் முன்வந்து, வழங்கினால்தான் சாத்தியமாகும். தேர்தல்மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கே எமது கூட்டணி முயற்சிக்கின்றது. எனவே, ஆளுங்கட்சிக்கு தாவவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாம் தாவுவோம் என கூறுபவர்களையும் எமது ஆட்சியின்கீழ் இணைத்துக்கொள்வோம். ஆயிரத்துடன் நின்றுவிடக்கூடாது. அதற்குமேல் வருமானம் உழைக்கும் வழிமுறைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதே சஜித் பிரேமதாசவின் எண்ணமாக இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை வருமானம் உழைக்கும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.” – என்றார். http://athavannews.com/ஆயிரம்-ரூபா-கைகளுக்கு-கி/ Link to comment Share on other sites More sharing options...
Gowin Posted June 26, 2020 Share Posted June 26, 2020 20, 30 வருஷமா அரசுகளுடன் பங்காளிகளாக இருந்துவரும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்காம ஆராவது சுயேட்சையா நின்றா எல்லாரும் வாக்களியுங்கோ. பிரச்சினை தீரும் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted January 1, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted January 1, 2021 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைப்பதில் சிக்கல்- ரமேஷ் பத்திரண 28 Views பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கவில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.” என்று கூறியுள்ளார். இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல், ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது. தமக்கு அடிப்படை நாள் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது பற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. https://www.ilakku.org/?p=38272 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted January 1, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted January 1, 2021 1000 ரூபாய் விவகாரம்; இதொகா மறுத்ததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு! மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று (31) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு, தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்த திருத்தம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடந்த 21ம் திகதி தொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த 17ம் திகதி கண்டியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரம உள்ளிட்ட சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜீவன் தொண்டமானுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் ஏனையவர்களுக்கான பி.சி.ஆர் அறிக்கை கிடைக்கவில்லை. இதனால் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என காங்கிரஸ் தீர்மானித்தது. இதன்காரணமாகவே பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/1000-ரூபாய்-விவகாரம்-இதொகா-மற/ Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.