Jump to content

கண்ணுமில்லை மண்ணுமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்குப் பதிலை

நன்றி கொன்ற உள்ளங்களைக்
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்குப் போடி 
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்குப் போடி 
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

ஆசையில் நான் வைத்த 
பாசத்தில் நேசத்தில்
வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான்
நெஞ்சம் வெந்ததடி 
சோகத்தினில்தான்

பாம்புக்கு பால் வைத்து 
நான் செய்த பாவத்தில்
வந்ததிங்கு 
கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
எந்தன் நெஞ்சம் இங்கு 
நெஞ்சமல்லடி

காருக்கும் பேருக்கும் தேருக்கும் 
ஆசை என்ன
நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் 
மோசம் என்ன

ஊருக்கு நியாயங்கள் 
சொல்லிடும் வேஷம் என்ன
உண்மையைக் கொன்ற பின் 
நெஞ்சுக்கு நீதி என்ன

போகும் பாதை தவறானால்
போடும் கணக்கும் தவறாகும்..ஹோ..

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்குப் பதிலை

நன்றி கொன்ற உள்ளங்களைக்
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்குப் போடி 
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்குப் போடி 
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

தந்தையின் சொல் இன்று 
மந்திரம் தானென்று
கண்டதடி பிள்ளை எந்தன் 
உண்மை உள்ளமே
எந்தன் உள்ளம் எங்கும் 
அன்பு வெள்ளமே

சொந்தத்தில் பந்தத்தில் 
மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை 
இன்று உணர்ந்தேன்
இதைக் கண்டு கண்டு 
இன்று தெளிந்தேன்

பட்டது பட்டது 
என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது 
சட்டிகள் சுட்டதடி

விட்டது விட்டது 
கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது 
ஞானமும் கொட்டுதடி

வானம் பார்த்துப் பறக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே..ஹோ..

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை

நன்றி கொன்ற உள்ளங்களைக்
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்குப் போடி 
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்குப் பதிலை

நன்றி கொன்ற உள்ளங்களைக்
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன"

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே 
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே 
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே 
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே 

(நிலவைப் பார்த்து...)
.
புதியதல்லவே தீண்டாமை என்பது 
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது 
சொன்ன வார்த்தையும் இரவல்தானது 
திருநீலகன்டனின் மனைவி சொன்னது 

(நிலவைப் பார்த்து...) 
.
தாளத்தை ராகம் தொடாத போதிலே 
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே 
தந்தை தன்னையே தாய் தொடாவிடில் 
நானும் இல்லையே இங்கு நீயும் இல்லையே 

(நிலவைப் பார்த்து...)

தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா 
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா 
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை 
நீ அந்த கூட்டமே இதில் அதிசயம் இல்லை  

(நிலவைப்பார்த்து...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?
எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
மனிதன் இருக்கின்றானா?
பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
இறைவன் இருக்கின்றானா?
ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
மனிதன் இருக்கின்றானா?
சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

ஆண் : {சொந்தம் ஒரு கை விலங்கு
நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு
நான் போட்டது} (2)

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

ஆண் : {ஆதாரம் இல்லையம்மா
ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா
தத்துவம் சொல்ல} (2)

ஆண் : பரிகாரம் தேடி இனி
எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா
வானகம் செல்ல

ஆண் : ஒரு நாளும் நான்
இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான்
யாரிடம் சொல்ல

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

பெண் : மாமா…
காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போய்ட்டா…
துன்பப் படுறவங்க எல்லாம்
அந்த கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா…
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்…..

ஆண் : {நானாட வில்லையம்மா
சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும்
விளையாடுது} (2)

ஆண் : பூவாக வைத்திருந்தேன்
மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு
உறவென்றது

ஆண் : அடி தாங்கும் உள்ளம் இது
இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால்
மடி தாங்குமா

ஆண் : சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்

வெளியே கடவுள்
உள்ளே மிருகம்
விளங்க முடியா
கவிதை நான்

மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க
பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே

நந்தகுமாரா
நந்தகுமாரா
நாளை மிருகம்
கொல்வாயா

மிருகம் கொன்ற
எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா

குரங்கில் இருந்து
மனிதன் என்றால்
மனிதன் நிறையாய்
ஜனிப்பானா

மிருக ஜாதியில்
பிறந்த மனிதா
தெய்வ ஜோதியில்
கலப்பாயா

நந்தகுமாரா

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்

வெளியே கடவுள்
உள்ளே மிருகம்
விளங்க முடியா
கவிதை நான்

மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க
பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்

காற்றில் ஏறி
மலையில் ஆடி
கவிதை பாடும்
பறவை நான்

ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு துளியும்
உயிரில் வேர்கள்
குளிர்கிறதே

எல்லாம் துளியும்
குளிரும்போது
இரு துளி மட்டும்
சுடுகிறதே

நந்தகுமாரா
நந்தகுமாரா
மழை நீர் சுடாது
தெரியாதா

கன்னம் வழிகிற
கண்ணீர் துளிதான்
வெந்நீர் துளியென
அறிவாயா

சுட்ட மழையும்
சுடாத மழையும்
ஒன்றாய் கண்டவன்
நீதானே

கண்ணீர் மழையில்
தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன்
நீதானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
மழை வெயில் பாா்க்காமல்
பாா்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள்
கழுத்துக்கு மாலை
மழை வெயில் பாா்க்காமல்
பாா்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள்
கழுத்துக்கு மாலை
மெழுகாக உருகி
தருவாளே ஒளியை
குழந்தைகள் சிாிப்பில்
மறப்பாளே வலியை
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசுரன் பட பாடலை பாடி அசத்திய சிறுமி - குவியும் பாராட்டுக்கள்

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதியென்ன மதமென்ன.........

சமரசம் உலாவும் இடமே 
நம் வாழ்வில் காணா 
சமரசம் உலாவும் இடமே 
வாழ்வில் மேலோரென்டும்
கீழோரென்டும் பேதமில்லாமல் உலகில் 
நம் வாழ்வில் காணா 
சமரசம் உலாவும் இடமே 
எல்லோரும் முடிவில் 
சேர்ந்திடும காடு
தொல்லை இன்றியே 
வாழ்ந்திடும் வீடு 
உலகினிலே இது தான் 
நம் வாழ்வில் காணா 
சமரசம் உலாவும் இடமே 
ஆண்டி எங்கே அரசனும்
இங்கே
அறிஞன் எங்கே
அசடனும் இங்கே 
ஆவி போனபின் 
கூடுவார்கள் இங்கே 
ஆகையினால்  இது தான் 
நம் வாழ்வில் காணா 
சமரசம் உலாவும் இடமே 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

(அம்மம்மா)

“கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு”

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா…. இது நாடகமா…
அது நாடகமா…. இது நாடகமா…
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே

(அம்மம்மா)

“தங்கை என்னும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி”

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ

(அம்மம்மா)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
(இசை)
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
(இசை)

நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா ஆ ஆ Alap
நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
(இசை) 

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? 
(இசை) 

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? 

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியா தப்பா செய்யறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியல அப்பா எனக்கு புரியல அப்பா

கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா (2)

கடவுளை கூட பாக்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா

சரியா தப்பா செய்யறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியல அப்பா எனக்கு புரியல அப்பா

பணம் தான் இல்லைன்னா பாசம் உனக்கு கிடைக்காது காசு தான் இல்லைன்னா காதல் கூட இனிக்காது பெத்த தாய்யிடத்தில் பட்ட கடன் ஏராளம் ஏதோ முடிஞ்ச வரை அடைச்சிடுவேன் எந்நாளும் என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற உருகுறேன் நான் மெழுகுவத்தி அடா ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா அட நிமிர்ந்து பாரு நிலவு கூட சுத்தம் இல்லையடா

சரியா தப்பா செய்யறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியல அப்பா எனக்கு புரியல அப்பா

குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா குற்றம் குறைய சொல்லி மனுஷன தான் பலிக்குதடா மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம் அட நான் இரு பக்கம் அடி வாங்கும் மிருதங்கம் இப்டியான்னு அப்படியான்னு சொல்ல முடியல அத சொல்லிடாம எனக்குளாற மெல்ல முடியல என்ன பத்தி கண்ணன் கிட்ட கேட்டு பார்த்தேன் டா நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான் டா

சரியா தப்பா செய்யறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியல அப்பா எனக்கு புரியல அப்பா

கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்

யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கனும் தோரனமாக
ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு
ஹே மதுரை ராஜியம் என்னது
ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே


ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
தந்தனா பூசுங்க சாமியே
ஏலேலே லே லேலே பாருங்க என்ன
வேணும் அத கேளுங்க
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே

பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஹே போனா போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே

ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
லேலால லேலால லேலே லேல லேலலா
சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க
லேலே லேல லேலலலா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே


ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்க
சாமிய பாத்து கேளுங்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ 
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய் 
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை 
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா...?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்    ம்... ம்... ம்...   ம்... ம்... ம்...   ம்... ம்...   ம்... ம்... 
        எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
        உனக்கென நான் இருப்பேன்

        இசை            பல்லவி

ஆண்    எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
        உனக்கென நான் இருப்பேன்
        உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்
        பெரிதென வாழ்ந்திருப்பேன்
        பூமி தான் டா நம்ம தாயி வீதி தான் டா நம்ம வீடு
        இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு

        எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
        உனக்கென நான் இருப்பேன்
        உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்
        பெரிதென வாழ்ந்திருப்பேன்

        இசை            சரணம் - 1

ஆண்    பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது
        பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது
        தொட்டில் போட்டு ஆட்டும் கையே
        விட்டு விட்டுப் போவதா
        தொண்ட கட்ட அன்னக் குஞ்சு கத்திக் கத்தி சாவதா
        அடி அம்மா அடி அம்மா நீ பேசும் தெய்வமா
        இது பாவம் பெரும் பாவம் இத தெய்வம் செய்யுமா
        இது நியாயம் தானா நீயே சொல்லம்மா

        எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்...

பெண்    நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
        அது எங்கும் போகவில்லே
        நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
        கலங்கிடத் தேவை இல்லே
        பூமி எங்கும் நம்ம வீடு கண்ணில் என்ன நீரின் கோடு
        இனி நாளைக் காலம் என்றும் நம்மோடு

        நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
        அது எங்கும் போகவில்லே
        நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
        கலங்கிடத் தேவை இல்லே

        இசை            சரணம் - 2

பெண்    கல்லு முள்ளு பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது
        பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது
        ஆறு காஞ்சு போன பின்னும் பூமி இங்கு வாழுது
        அன்பு காஞ்சு போயிருந்தா வாழ்க்கை என்ன ஆவது
        அனுதாபம் அபிமானம் அது இன்னும் போகலே
        அது போலே ஒரு தெய்வம் அதை யாரும் பாக்கலே
        நல்ல காலம் வந்து சேரும் வாடாதே

        நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
        அது எங்கும் போகவில்லே
        நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
        கலங்கிடத் தேவை இல்லே
        பூமி எங்கும் நம்ம வீடு கண்ணில் என்ன நீரின் கோடு
        இனி நாளைக் காலம் என்றும் நம்மோடு

        நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
        அது எங்கும் போகவில்லே
        நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
        கலங்கிடத் தேவை இல்லே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SPB : ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)


சரணம் 1

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..


சரணம் 2


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : வெண்மதி வெண்மதியே
நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா
சொல்லு வானம் தான் உன்னுடைய
இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை
ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான்
மறப்பேனே உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

ஆண் : வெண்மதி வெண்மதியே
நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா
சொல்லு வானம் தான் உன்னுடைய
இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை
ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான்
மறப்பேனே உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

ஆண் : அஞ்சு நாள் வரை
அவள் பொழிந்தது ஆசையின்
மழை அதில் நனைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

ஆண் : அது போல் எந்த
நாள் வரும் உயிா் உருகிய
அந்த நாள் சுகம் அதை
நினைக்கையில் ரத்த
நாளங்கள் ராத்திாி வெடிக்கும்

ஆண் : ஒரு நிமிஷம் கூட
என்னைப் பிாியவில்லை
விவரம் ஏதும் அவள்
அறியவில்லை என்ன
இருந்த போதும் அவள்
எனதில்லையே மறந்து
போ என் மனமே

ஆண் : ஓ ஓ ….வெண்மதி வெண்மதியே
நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா
சொல்லு வானம் தான் உன்னுடைய
இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை
ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான்
மறப்பேனே உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

ஆண் : ஜன்னலின் வழி
வந்து விழுந்தது மின்னலின்
ஒளி அதில் தொிந்தது அழகு
தேவதை அதிசய முகமே
ஆ..ஹ ஹா ஹா

ஆண் : தீப்பொறி என
இரு விழிகளும் தீக்குச்சி
என எனை உரசிட
கோடிப்பூக்களாய்
மலா்ந்தது மனமே

ஆண் : அவள் அழகை
பாட ஒரு மொழி
இல்லையே அளந்து
பாா்க்க பல விழி
இல்லையே என
இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே...
இறக்கின்ற தேதி..
இருக்கின்றதென்பது..
மெய் தானே...

ஆசைகள் என்ன..
ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன..
உறவுகள் என்பதும்
பொய் தானே

உடம்பு என்பது..
உடம்பு என்பது..
உண்மையில் என்ன..??
கனவுகள் வாங்கும் பை தானே!! 

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.
காலங்கள் மாறும்.
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
போனது போக..
எது மீதம்..

பேதை மனிதனே
பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவினில் என்னை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது
உனக்கு என் உயிரே ஆரத்தி
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்
ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீரை உன் கைகள் துடைத்து போகுமா
உயிருள்ள கடவுளை உன்னிருவில் பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே...

உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே 
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே  

( நீங்கள்...)

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்

கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்  

( நீங்கள்...)

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்  

( நீங்கள்...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்

அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்

வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதன் கோயில் அவதன் உலகம்

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்றே தான்
பலவித ம்மரங்கள் என்ன மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிற்றில் பிறந்தா நல்லவனே தாண்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.