Jump to content

கண்ணுமில்லை மண்ணுமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழு: பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


பெ: எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

பெ: மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே

மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்

நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்....


குழு: பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

பெ: ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே

முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே

முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

கேட்குதே…

பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்

பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

 

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்


சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

இரவின் போர்வை என்னை சுழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே
தாயே
தன் உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய்
நீயே
உன் கண்ணில் வழியும்
ஒருதுளி போதும்
கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
*
விண்ணைப் படைத்தான்
மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும்
ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால்
நிம்மதி இல்லை
சாமி தவித்தான்
தாயைப் படைத்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

*

பெண் : பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

*

பெண் : தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : லாலி லாலி….லாலி லாலி….
லாலி லாலி….லாலி லாலி….

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

பெண் : காண்பது எல்லாம் காட்சி அல்ல
கண்கள் அறியாதே
உலகம் முழுதும் தூங்கும் பொழுதும்
உண்மை தூங்காதே
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

பெண் : தேரில் இருந்தாயே இப்போது
தெருவில் விழுந்தாயே
சிறகை இழந்தாயே நெஞ்சோடு
சிலுவை சுமந்தாயே
உண்மை பேசியதால் இன்றே நீ
வார்த்தை இழந்தாயே

பெண் : கண்கள் அறியாமல் கண்ணீரில்
கன்னம் நனைந்தாயே
காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும்
உள்ளம் கலங்காதே
சோகங்களே……….
வாழ்க்கையின் வேதமோ

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

குழு : லாலி லாலி….லாலி லாலி….

பெண் : இரவு முடியாத இப்போது
வெளிச்சம் பிறக்காதா
கதவு திறக்காதா கிளிதான்
சிறகை விரிக்காதா

பெண் : தவறு வரும் முன்னே
இமை வந்தால் தடுக்க நினைக்காதா
இதயம் தோற்றுவிட்டால் இப்போது
மிருகம் ஜெயிக்காதா

பெண் : நீதிக்கு இந்த தண்டனை என்றால்
நெஞ்சம் வலிக்காதா
சோகங்களே…….
வாழ்க்கையின் வேதமோ

பெண் : …………….

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

பெண் : காண்பது எல்லாம் காட்சி அல்ல
கண்கள் அறியாதே
உலகம் முழுதும் தூங்கும் பொழுதும்
உண்மை தூங்காதே
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ

பெண் : கங்கை நதியே…..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே 
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே 
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே 

பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன் 
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து 
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம் 
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே 
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே 
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான் 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே 
இதயமே இதயமே 

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று 
உன் மீது படவில்லை துடித்தேன் 
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் 
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா 
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன் 
ஜீவன் நீயம்மா, என் பாடல் நீயம்மா 
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான் 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே 
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே 
நிலவில்லாத நீல வானம் போலவே 
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே 
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ… கரையை கடந்தவன் யார்

காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவினில் என்னை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா

காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது
உனக்கு என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்

ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீரை உன் கைகள் துடைத்து போகுமா

உயிருள்ள கடவுளை உன்னிருவில் பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

(போனால்)

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

(போனால்)

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...

(போனால்)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...

(போனால்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்

கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

அஞ்சு வருஷம் தீபாவளித் திருநாள்
அசந்தா சூரியன் மேலேயும் போஸ்டர ஒட்டு

கையில காசு வாயில தோச

கையிலுள்ள வாக்குரிமச் சீட்டு
அத வாக்கரிசி போல நீயும் பொட்டியில கொட்டு

கொடிமரங்க ஊரெல்லாம் மொளச்சி
அட நிக்குதடா பொணமாக வெறச்சி

காந்தி அண்ணல் காமராசர் பொழச்சி
வந்திடுவார் நம்மையெல்லாம் நெனச்சி


கட்சி நூறுண்டு
தாவு ராசாவே
தேர்தல் சர்க்கஸ் தான்
ஆஹா கரகோஷம்

நரியின் கனவில்
எலும்பு மழைதாண்டா போ

ஆகா ஆகா இது குடிமகன் பேச்சு

கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

செத்தவனும் ஓட்டுப் போட வருவான்
அசந்தா செத்தவன் கூட ஒண்ணுகூடி கட்சியமப்பான்


கையில காசு வாயில தோச

ஓட்டுப் போடத்தான நாம பொறந்தோம்
நம்ம வயசக்கூட தேர்தல் வச்சே அளந்தோம்

தாய்குலத்து மவுசென்ன குறைவா
கட்சியெல்லாம் கால சுத்தும் உறவா

அலங்காரம் சேரியெல்லாம் புதுசா
அவங்களுக்கும் காட்ல மழ ஒருநா

ஆள நாடில்ல ஆனா நாமதான்
ராசா ஆனோமே போதை போதாதா?

புடிடா தலைவா
குடிடா நறையா நீ!!!!

ஆமாண்டா ராசா இது குடிமகன் பேச்சு!!!


கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர


சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே 
முதலில் உண்டியில காப்பாத்து தாண்டவக்கோனே 
காடு மேடு காவல் காக்கும் தாண்டவக்கோனே 
முதலில் கடவுள் சிலை காப்பாத்து தாண்டவக்கோனே !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி விக்னேஷ் இரங்கல் பாடல் | சரவெடி சரண் | கானா தமிழா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.