Jump to content

ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

இது யங்கா, இருக்கேக்க எடுத்த படமக்கோய்... கீழ இருப்பது தான் இப்ப எடுத்தது.

இதுகள ஜொள்ளுவிட்டு பிரயோசனம் இல்லை. சிங்கிளா, ஆண்நண்பர்கள் இல்லாமல் இருக்கவேண்டும்  எண்டது முக்கியம் கண்டியளே.😎

கதவை திறந்தாப் பிறகு, கொழும்பார் என்ன நிலைமைல இருக்கிறார் எண்டு தெரியவில்லை.

யாராவது போனைப் போட்டு கேளுங்கோப்பா.. 

சாத்தி மூலையில் போட்டுவிட்டார்கள்.எழும்பிய பின் சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இது யங்கா, இருக்கேக்க எடுத்த படமக்கோய்... கீழ இருப்பது தான் இப்ப எடுத்தது.

இதுகள ஜொள்ளுவிட்டு பிரயோசனம் இல்லை. சிங்கிளா, ஆண்நண்பர்கள் இல்லாமல் இருக்கவேண்டும்  எண்டது முக்கியம் கண்டியளே.😎

ஓமென  நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன் ...ஆண்கள் இப்ப திருமணம் முடித்து கணவனோடு இருக்கும்  பெண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😉

நான் ஒரு பெண்ணாயிருந்து சொல்கிறேன் அவவின் வயசிற்கு இளமையாய் இருக்கிறா ...ஏற்றுக் கொள்ளத் தான் வேணும் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓமென  நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன் ...ஆண்கள் இப்ப திருமணம் முடித்து கணவனோடு இருக்கும்  பெண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😉

பெண்கள் இப்ப திருமணம் முடித்து இருக்கும்  ஆண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பெண்கள் இப்ப திருமணம் முடித்து இருக்கும்  ஆண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😎

 உண்மை தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

உஷ் இந்த  கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை ...நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தூக்குமாப் போல விடிஞ்சா ,பொழுது பட்டா கருணா 😠

நீங்களும் பார்க்க இளமையாய் இருப்பீங்கள் என்று சொல்கிறீர்கள் 🙂

தங்கச்சி றால் போட்டு சுறாபிடிக்குது. ஆரெண்டு நினைச்சியள் என்ரை தங்கச்சியெல்லே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஆண்கள் இப்ப திருமணம் முடித்து கணவனோடு இருக்கும்  பெண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😉

3 hours ago, Nathamuni said:

பெண்கள் இப்ப திருமணம் முடித்து இருக்கும்  ஆண்களைத் தான் கூட்டிக் கொண்டு ஓடினம் 😎

உந்த சிஸ்டம் இப்ப ஜேர்மனியிலை பிரபல்யமாகிட்டுது. சோலியும் இல்லைத்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 13:55, Nathamuni said:

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

நீஙகள் சொல்வது மிகவும் சரிதான்.

ஆனாலும், ஒரு சில தருணங்களில், அந்த அம்மணிக்கு உங்கள் வேலை பிடித்து விட்டால், நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றத்துக்கு நன்கு உதவுவார்.

மற்றது, உங்களுக்கு அந்த அம்மணியை பிடித்து, அவரும், சிங்கிள் எண்டால், நாயாக வாலை ஆட்டிக் கொண்டு உள்ளமுருகிப் போய் வேலை செய்வீர்கள். பென்டு நிமித்தினாலும், நிண்டு பிடிப்பியள். 😜

ஈழத்தில் மட்டுமல்ல, எங்குமே அதுதான் நிலை.

On 27/6/2020 at 13:20, colomban said:

கஸ்தூரி அம்மணிக்கு வாழ்த்துக்கள். 

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பொஸ் ஆக இருந்தால் அங்கு வேலை செய்வது கஸ்டம். பெண்களுக்கு கீழ் பெண்களே வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அதே போல் ஆண்களும் நிண்டு பிடிக்க மாட்டார்கள். அனுபவத்தில் சொல்கின்றேன்.

எனது அனுபவத்தில் நிர்வாக துறையில் பெண்கள் திறமைசாலிகள் 
நிதி கையாள்வது போன்ற விடயங்களில் மற்றும் புதிய மாற்றங்கள் கொண்டுவருவதை 
அவ்வாறான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பார்கள். ஆண்கள் கொஞ்ச நாட்களின் பின்பு 
சோம்பேறித்தனம் இருக்கும் ஒரே வடிவில் சக்கரம் சுத்திகொண்டு இருக்கும் 

ஆனால் எனக்கு பெண்கள் டீச்சராக வந்தால் கண்ணிலும் காட்டபடாது 
முடிந்த அளவுக்கு பெண்கள் எடுக்கும் பாடங்களை தவிர்த்துவிடுவேன் 
ஆனால் அடிப்படை பாடங்களான  எழுத்து (writing)  .... பேச்சு (Public Speaking) ... சைக்கோலஜி (psychology)
போன்றவற்றில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள் வேறு வழியில்லாமல் போய் மாட்ட வேண்டியதுதான்.

தேவையானதை படிப்பிப்பதில் இருக்கும் கவனத்தை விட ..... 
தேவையற்ற விடயங்களை பெரிதுபடுத்தி மதிப்பெண்களுக்கு ஆப்பு வைத்துக்கொண்டு 
இருப்பார்கள். கிளாஸுக்குள் ஒரு நிமிடம் பிந்தி போவது ..... வீடு பாடம் கொடுக்க ஒரு நிமிடம் பிந்துவது போன்றவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
I sincerely apologize to Kasthuri Wilson for the incorrect use of the word magnanimous. It was never intended to malign her great achievement. Thanks very much to all those who illustrated the mistake.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 23:12, nilmini said:

கல்வி, பதவி, பணம், இவை  மூலமாகத்தான் நாம் ஈழத்தில் அதிகாரம் செலுத்த முடியும் . கஸ்துரி எனது பள்ளிக்கூடம் தான். கூடைப்பந்தாட்ட தலைவியாகவும் இருந்தவ. பெண் உரிமை போன்ற விடயங்களில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

என்ன இருந்தாலும் சிங்களவனின் கண்ணை உறுத்தாமல் சீவிக்க வேணும் அக்கா  .
இதுவெல்லாம் முதலிலேயே அளவுக்கு அதிகமாக  இருந்ததால் தான் பொறாமை தலைக்கேறி இனக் கலவரம் என்ற பெயரில்  கூட்டி அள்ளிக்கொண்டுபோய் குப்பை மேட்டில் போட்டவன்கள். 
திரும்ப அதே நிலைமைக்கு வந்தால் அவனுகளுக்கு ஒரு நைட் போதும் வழிச்சு துடைச்சு போட  
 
Quote

பெண்கள் அட்டாவதானிகள். ஒரே நேரத்தில் பல விடயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாளவும் முடியும்.

எல்லா பக்கமும்  அவதானங்கள் அளவுக்கு மீறி கூட்டிப்போய்  இருப்பதால்  ஒரு விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துதல் படு கஷ்ட்டம் ,
steering wheel பின்னாடி உவிங்களை இருத்துவதிலும் உள்ள சிக்கல் இதுதான், நண்பனின் மனைவி அவதானம் கூட்டிப்போய் தெருவோரம் நின்றுகொண்டிருந்த   டிப்பர்இல் கொண்டுபோய் இடித்த இடியில் 9 லகரங்கள் போச்சு , புது வாகனம் வேற நண்பனின் மூஞ்ச வேற பாக்கணுமே. சிவந்து வெடிக்காதது மட்டும்தான் குறை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

இந்த படத்துக்கும், முதல் படத்துக்கும் சரியான வித்தியாசம்.

23 வயதில் கலியாணம், 26 வயதில் 2 பிள்ளைகளுடன் சிங்கிள் மதர்....

இதுதான் பெண்களின் பிரச்னை. வேலையில் அதிக கவனமெடுப்பின், நேரமின்மையால் உறவில் பிரச்னை வரும். வேலையில் முன்னேறியவர், தனிப்பட்ட வாழ்வில் சந்தோசமில்லா நிலைமை.

நான் வேலை செய்த ஒரு கம்பெனி வோடபோன். இதன் நியூபுரி தலைமையகத்தில், ஒரு பெண், மிக சிறந்த வேலையாளர்... உயர் பதவி.

ஒரு நாள் கணவரால் கொலையாகி, கணவரும் தன்னையும் சுட்டுக் கொண்டு விட்டார். காரணம்.... உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணுக்கு, தன்னிடம் பேசக்கூட நேரமில்லை. இறுதியில், தான் அலுவலகத்தில் வேறு ஒருவரை விரும்புவதாகவும், அவரை விட்டு விலக்கபோவதாகவும் சொல்ல, கொலையானார்.

இன்னுமொரு பெண், கணவனுடன் மிக தெளிவாக பேசினார்.  நீ குறைந்த சம்பளம் எடுப்பதால், அதனை விட்டு, வீட்டினை, பிள்ளைகளை, என்னை கவனி. நான் வெளியே போய் உழைத்துக் கொண்டு வருகிறேன். தனது நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்த அந்த பெண், அது குறித்து சொல்லும் போது, ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது உண்மையானால், எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் தான் இருந்தார். அவரது மகத்தான ஒத்துழைப்பு, பேராதரவு இன்றி நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார்.

சிறந்த வேலையிட வெற்றியாளர், இன்னொரு விடயத்தில் தோல்வி அடையக்கூடாது. நாம் வேலை செய்வது, குடும்பத்துக்காக என்ற சிந்தனை இருந்தால், அந்த ஒத்துழைப்பினை பெறுவோம் என்றார் அவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இந்தப் பெண்ணின்.... யோசனை நன்றாக இருந்தாலும்.... 

கணவன் வீட்டில் இருந்து... 🧺 உடுப்பு தோய்த்து, அயர்ன் பண்ணி, ஜன்னல் துடைத்து, 🧹 வீடு கழுவி, 🥘சமைத்துக் கொண்டு 🍳இருப்பதை.... பார்க்கும் கணவனின் உறவினர் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கின்றீர்களா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தப் பெண்ணின்.... யோசனை நன்றாக இருந்தாலும்.... 

கணவன் வீட்டில் இருந்து... 🧺 உடுப்பு தோய்த்து, அயர்ன் பண்ணி, ஜன்னல் துடைத்து, 🧹 வீடு கழுவி, 🥘சமைத்துக் கொண்டு 🍳இருப்பதை.... பார்க்கும் கணவனின் உறவினர் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கின்றீர்களா? 😎

இது நம்மூர் பார்வை.

இங்கே பணம் எங்கே கூடுதலாக வருகிறது என்பதே அந்த குடும்பத்தின் முக்கிய கவனமாக இருந்து, ஒன்று சேர்ந்து முடிவு செய்துள்ளார்கள். அவர் வெளியே சென்று கொண்டு வரக்கூடிய பணம், குழந்தைகளை கவனிக்கும், பேபி சிட்டர் செலவுக்கே போதுமானது என்பதால், அவர் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனித்தார்.

இன்னுமொரு முக்கியமான விசயம். விவாகரத்து விசயம். புதிய சட்டங்களின் படி, கலியாணத்தின் பின்னர் ஆணோ, பெண்ணோ உழைக்கும் பணத்தில் சேர்த்த சொத்தில், பாதி உரிமை கணவனுக்கோ, மனைவிக்கோ செல்லும். அவர் வீட்டில் தான் இருந்தார், நான் தான் வெளியே போய் உழைத்தேன் என்று கதை சொல்ல முடியாது.

வீட்டில் இருந்தது, ஒரு 'சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு' என கருதப்பட்டு, அந்த முடிவின் படி, வீட்டினை, பிள்ளைகளை ஒருவர், அடுத்தவர்களின் கடமையினையும் சேர்த்து பார்க்க, அடுத்தவர், வேலைக்கு போய் உழைத்து கொண்டு வருகிறார். ஆகவே பாதி, பார்ட்னருக்கு சொந்தம்.

இந்த சட்டத்தினால் அண்மையில் பாதி சொத்தினை இழந்தவர் அமேசான் பாஸ் ஜெப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:
I sincerely apologize to Kasthuri Wilson for the incorrect use of the word magnanimous. It was never intended to malign her great achievement. Thanks very much to all those who illustrated the mistake.

இது அவர்களுக்கும் (கஸ்தூரி) தெரியாமல், அரசு-corporate உத்தியோக பூர்வமற்ற கட்டமைப்பால்  ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவா? 

மேற்கில் கூட, system த்தால் குறிப்பிட்ட நபருக்கு தெரியாமலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை உணர்ந்து கண்டு இருக்கிறேன்.

கஸ்தூரியின் தனிப்பட்ட திறமை மற்றும் தகுதியை இங்கு விமர்சிக்கவில்லை .

Link to comment
Share on other sites

21 hours ago, ரதி said:

உஷ் இந்த  கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை ...நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தூக்குமாப் போல விடிஞ்சா ,பொழுது பட்டா கருணா 😠

உஷ் இந்த ஒப்பாரி வைப்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. சொறிநாய் கண்டதுக்கெல்லாம் குரைப்பது போல கருணாபற்றிய உண்மையை சொன்னால் சிலருக்கு இருப்பு கொள்ளாது! 🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2020 at 05:08, Nathamuni said:

இந்த படத்துக்கும், முதல் படத்துக்கும் சரியான வித்தியாசம்.

23 வயதில் கலியாணம், 26 வயதில் 2 பிள்ளைகளுடன் சிங்கிள் மதர்....

இதுதான் பெண்களின் பிரச்னை. வேலையில் அதிக கவனமெடுப்பின், நேரமின்மையால் உறவில் பிரச்னை வரும். வேலையில் முன்னேறியவர், தனிப்பட்ட வாழ்வில் சந்தோசமில்லா நிலைமை.

நான் வேலை செய்த ஒரு கம்பெனி வோடபோன். இதன் நியூபுரி தலைமையகத்தில், ஒரு பெண், மிக சிறந்த வேலையாளர்... உயர் பதவி.

ஒரு நாள் கணவரால் கொலையாகி, கணவரும் தன்னையும் சுட்டுக் கொண்டு விட்டார். காரணம்.... உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணுக்கு, தன்னிடம் பேசக்கூட நேரமில்லை. இறுதியில், தான் அலுவலகத்தில் வேறு ஒருவரை விரும்புவதாகவும், அவரை விட்டு விலக்கபோவதாகவும் சொல்ல, கொலையானார்.

இன்னுமொரு பெண், கணவனுடன் மிக தெளிவாக பேசினார்.  நீ குறைந்த சம்பளம் எடுப்பதால், அதனை விட்டு, வீட்டினை, பிள்ளைகளை, என்னை கவனி. நான் வெளியே போய் உழைத்துக் கொண்டு வருகிறேன். தனது நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்த அந்த பெண், அது குறித்து சொல்லும் போது, ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது உண்மையானால், எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் தான் இருந்தார். அவரது மகத்தான ஒத்துழைப்பு, பேராதரவு இன்றி நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார்.

சிறந்த வேலையிட வெற்றியாளர், இன்னொரு விடயத்தில் தோல்வி அடையக்கூடாது. நாம் வேலை செய்வது, குடும்பத்துக்காக என்ற சிந்தனை இருந்தால், அந்த ஒத்துழைப்பினை பெறுவோம் என்றார் அவர். 

இன்போசிஸ் Infosys கொம்பனியிலும் இது நடந்தது என்று எண்ணுகிறேன் 
மனைவிதான் மிக சிறப்பாக முன்னெடுத்து சென்றார் ... பின்பு பிள்ளைகள் 
வாழ்வு வீணாகிவிடும் என்று கணவர் வீடு பொறுப்பை ஏற்றுக்கொண்டு 
மனைவியிடமே ஒப்படைத்தார் .......... பின்பு சமூக சிக்கல்கள் சீண்டுதலால் 
மனைவி ஒதுங்கிகொண்டு மீண்டும் கணவன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 
அவர்கள் இருவரிடமும் பரஸ்பரியமும் புரிந்துணர்வும் இருந்தும் .... பெரிய கொம்பனியை 
நிர்வகிக்கும் நிலையில் இருந்தும்  ... முடியாமல் போவது என்பது விசித்திரமானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Maruthankerny said:

யாஹூ நிறுவனத்தின் சிஈஓ வாகி திறமையாக நடாத்தி புகழ் அடைந்த பெண் ஒருவரும், தீடீரென தனது பிள்ளைக்கு தாயாக இருப்பதே முக்கியமாக உள்ளது என விலகிக்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2020 at 06:08, Nathamuni said:

இந்த படத்துக்கும், முதல் படத்துக்கும் சரியான வித்தியாசம்.

23 வயதில் கலியாணம், 26 வயதில் 2 பிள்ளைகளுடன் சிங்கிள் மதர்....

இதுதான் பெண்களின் பிரச்னை. வேலையில் அதிக கவனமெடுப்பின், நேரமின்மையால் உறவில் பிரச்னை வரும். வேலையில் முன்னேறியவர், தனிப்பட்ட வாழ்வில் சந்தோசமில்லா நிலைமை.

நான் வேலை செய்த ஒரு கம்பெனி வோடபோன். இதன் நியூபுரி தலைமையகத்தில், ஒரு பெண், மிக சிறந்த வேலையாளர்... உயர் பதவி.

ஒரு நாள் கணவரால் கொலையாகி, கணவரும் தன்னையும் சுட்டுக் கொண்டு விட்டார். காரணம்.... உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணுக்கு, தன்னிடம் பேசக்கூட நேரமில்லை. இறுதியில், தான் அலுவலகத்தில் வேறு ஒருவரை விரும்புவதாகவும், அவரை விட்டு விலக்கபோவதாகவும் சொல்ல, கொலையானார்.

இன்னுமொரு பெண், கணவனுடன் மிக தெளிவாக பேசினார்.  நீ குறைந்த சம்பளம் எடுப்பதால், அதனை விட்டு, வீட்டினை, பிள்ளைகளை, என்னை கவனி. நான் வெளியே போய் உழைத்துக் கொண்டு வருகிறேன். தனது நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்த அந்த பெண், அது குறித்து சொல்லும் போது, ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது உண்மையானால், எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் தான் இருந்தார். அவரது மகத்தான ஒத்துழைப்பு, பேராதரவு இன்றி நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார்.

சிறந்த வேலையிட வெற்றியாளர், இன்னொரு விடயத்தில் தோல்வி அடையக்கூடாது. நாம் வேலை செய்வது, குடும்பத்துக்காக என்ற சிந்தனை இருந்தால், அந்த ஒத்துழைப்பினை பெறுவோம் என்றார் அவர். 

வெற்றியின் இரகசியமே இதுதான். 👍

குடும்பத்தைத் தொலைத்துவிட்டு வெற்றிபெறுவதால் பயன் என்ன ☹️

எங்கள் பெண்டிர் பலருக்கு இது தொடர்பான புரிதலில் தெளிவில்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் கழித்துப் யாழ்கள கணவான்களது கருத்தை பார்த்தால், பெண்கள் வீட்டில் இருப்பது  தான் சரி என்பது போல் உள்ளது 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கூட்டிக் கழித்துப் யாழ்கள கணவான்களது கருத்தை பார்த்தால், பெண்கள் வீட்டில் இருப்பது  தான் சரி என்பது போல் உள்ளது 😉

நீங்கள் கூட்டவில்லை (மறந்து விட்டீர்கள்போல்)
கழித்து ... திரும்பவும் கழித்து இருக்கிறீர்கள் 

கணக்கை இன்னொரு முறை செய்து பாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

கூட்டிக் கழித்துப் யாழ்கள கணவான்களது கருத்தை பார்த்தால், பெண்கள் வீட்டில் இருப்பது  தான் சரி என்பது போல் உள்ளது 😉

உங்கள் வழக்கமான பதிவு தானே.

ஆண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தினை கவனிப்பது குறித்தும் பேசுகிறோம்.

ஆணோ, பெண்ணோ.... தனிப்பட்ட வாழ்வில் தோல்வி அடைய கூடாது. பக்கத்தில் இருந்து, நல்லது, கெட்டதுக்கு மனம் விட்டு பேச துணை தான் தேவை அன்றி, பாஸ் அல்ல.

அவர்களுக்கு தேவை இல்லை என்ற அடுத்த நொடியே, துண்டை வெட்டி அனுப்பி விடுவார்கள். அந்த நிதர்சனம் இருந்தால், குடும்பத்தின் முக்கியம் புரியும்.

கபித்தான் சொன்னது உங்களுக்கு இல்லை, கஸ்தூரி பத்தி.

19 minutes ago, Kapithan said:

எங்கள் பெண்டிர் பலருக்கு இது தொடர்பான புரிதலில் தெளிவில்லை. ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.