Jump to content

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏபிரகாம் சுமந்திரன் அவர்களும் ஒரு தராசின் சம எடைகளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏபிரகாம் சுமந்திரன் அவர்களும் ஒரு தராசின் சம எடைகளா?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு நிகரானவர்தான் சுமந்திரன் அவர்களும் என்ற பொருள்பட ஆற்றிய உரை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்களிடம் டான் தொலைக்காட்சி வினவியபோது அவர் அளித்த பதிலின் காணொளி வடிவம்

 

 

 

Link to comment
Share on other sites

திரு .அன்ரன் பாலசிங்கத்தை சுமந்திரனோடு ஒப்பிட முடியாது என்பது எனது அபிப்பிராயம். அவர்  உயிரோடு இருந்திருந்தால் புலிகளின் அரசியல் துறை முன்யோசனையின்றி விட்ட  தவறுகளை தனது திறமையால் சரி செய்து முள்ளிவாய்க்கால்  அழிவை ஒரு வேளை அவர்  தடுத்து நிறுத்தி இருக்கும் சாத்தியக் கூறு இருந்திருக்கும் என்றே தான் நம்புகிறேன்.

சர்வதேசத்திற்கு முன்னால் பயங்கரவாத அமைப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் சார்பில் உலக ராஜதந்திரிகளை சந்தித்து,  விடுதலைப்புலிகளின் ஒரு சில சிக்கலான,  உலகத்தின் பார்வையில் அப்பட்டமான அரசியல் கொலைத்  தாக்குதல் நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்னால், சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் முன்னால் நியாயப்படுத்துவத்தென்பது சுலபமான பணியன்று.   மிக மிக கடினமான பணி. அதை அவர் சிறப்பாக  இரண்டு  தசாப்தத்துக்கு  மேலாக செய்தார்.  அதை சுமந்திரன்  போன்றவர்களால் நிச்சயமாக அதைச்  செய்யமுடியாது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அர்த்தத்தில் சிறிதரன் இருவரும் ஒரே மாதிரி என்று கருதினார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்!  இருவரும் ஒன்றல்ல என்பதே என் அபிப்பிராயம். 

ஆனால், சொன்னதால் பாலசிங்கத்தை அவமதித்து விட்டார் என்று துள்ளுவதெல்லாம் ஓவரியாக்ஷன்! தேர்தல் நெருங்கி வரும் போது இப்படி துரும்பைத் தூக்கிப் பூதம் காட்டுகிற வேலைகள் அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3:30ஆவது நிமிடத்திலிருந்து கூறும் கருத்து மிக மிக உற்றுநோக்க வேண்டியது.இளைய தலைமுறைக்கு பாலா அண்ணா என்றால் யாரென்று சரியான புரிதல் இல்லாதநிலையில் ஓ சுமந்திரனைப் போன்ற ஒரு சராசரி அரசியல்வாதியா? என்ற வினாவே தோன்றும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.