Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அறிவித்தல்: சித்திரையிலிருந்து எனது குடும்பத்தை காணவில்லை:  காகங்களின் அப்பா வி.வி.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அறிவித்தல்: சித்திரையிலிருந்து எனது குடும்பத்தை காணவில்லை:  காகங்களின் அப்பா வி.வி.

spacer.png
2008 மார்கழி அப்பாவின் திவசம். ....

புதிதாக எனது பல்கலை நகரில் இருந்து துணைவியின் தாயார் வாழும் நகருக்கு நிகர் உள்ள நகரில் குடியேறி இருந்தோம்.  எனக்கு ரொண்டோ பெரும் நகரில் வாழ விருப்பம் இல்லை.  

எனது பல்கலை இருந்த நகரம் நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  இரைச்சல், நெரிசல் இல்லை.  கோப்பி கடையில் வரிசை இல்லை.  நல்ல மக்கள்.  தெருவில் விட்டு கொடுத்து ஓடுவார்கள்.  குப்பை பொறுக்கி சுத்தமாக வைத்திருப்பார்கள்.  நிறைய நகர நிகழ்வுகள் நடக்கும், தெரு கொண்டாட்டங்கள், விளையாட்டு குழுக்கள் என்று ஒரு சமூக ஒற்றுமை இருந்தது.  முக்கியமாக டொரொண்டோ இரைச்சல் இல்லை.

95 ஆம் ஆண்டு கோடை காலத்தில் எனது பல்கலைக்கழகத்தில் நான் வாழும் போது  பெரிதாக ஒரு மாணவர்களும் இருக்கவில்லை.   எனக்கு கணனியில் வோர் கிராப்ட் மற்றும் டூம் விளையாடி சலித்துவிட்டது.
அதனால் எமது கட்டிடத்தின் உச்சியில் இருந்த பருந்து கூட்டை பராமரிக்கும் உதவியாளராக பருந்து இனம் காக்கும் குழுவில் சேர்ந்தேன்.  அந்த நேரம் டி.டி.ரி மருந்தால் பருந்துகளின் முட்டை கோது இளகி அவர்களின் இனம் அழிந்து வந்தது.  

ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிய ஒன்பதாம் மாடி கூரையில் கடற்கரை சொகுசு கதிரை, குடை போட்டு இருந்து அந்த பருந்து சோடிய கவனிப்பேன்.  அதன் பின் குறிப்பெடுத்து மின்னஞ்சலாக குழுவிற்கு அனுப்புவேன்.   சிலவேளைகளில் முட்டை மென்மையாக இருந்தால் அதை எடுத்து பத்திரமாக சூட்டு கூடையில் வைத்து பொரித்து பராமரித்து பின் பறக்கவிடுவார்கள்.   குஞ்சு பலகீனமாக இருந்தால் தாய் தந்தை அதை தவிர்த்து வைரமான குஞ்சுவிற்கு சாப்பாடு கொடுக்கும்.   அவர்கள் இரை தேட செல்லும் போது நான் ஓடிப்போய் அவர்களின் செயற்கை சாப்பாட்டு கலவையை பெரிய வாய் உள்ள ஒரு ஊசியால் அவர்களுக்கு கொடுத்து காப்பாற்றிவிடுவதும் எனது தொழில்.

குஞ்சுகளுக்கு வருத்தம் வந்தால் தாய் இழுத்து கூடையை விட்டு எறிந்து விடுவாள்.  அவர்களை காப்பாற்றி பருந்து காப்பகத்திற்கு கொண்டு செல்வதும் உண்டு.

எமது பல்கலைக்கழகத்தின் முயற்சி பெரு வெற்றி அடைந்து மற்றைய பல்கலைகளும் இந்த முயற்சியை தொடக்கி இருந்தார்கள்.    நான் பருந்துகளுக்கு தந்தையாக தொடர்ந்து சில வருடங்கள் கழிந்தது.

எமது பருந்து குழுவின் தலைவர் நாம் அடுத்ததாக காகங்களின் இனத்தை காப்பாற்ற போவதாக சொன்னார்.  
காகங்கள் இங்கு நிறைய இருந்ததாகவும்  ஐரோப்பிய குடியேறிகள் எல்லாவற்றையும் சுட்டு தள்ளிவிட்டார்கள் என்றும் வருந்தினார்.   பூர்வகுடிகளுக்கு காகம் ஒரு ஆன்மீக பறவை.  அவர்களின் சித்திரங்களில், சிலைகளில் எங்கும் காணலாம்.   அவர்கள் அதை சாவின் தூதுவர் என்று நம்பினார்கள்.  அதனால் அவர்களின் நம்பிக்கையை சிதைக்கவும் தான் சுட்டு பொசுக்கினார்கள்.

இப்ப திரும்பவும் காகத்தை கொண்டுவரவேண்டும்.  ஏன் இதை கட்டுமான பொறியியல் விரிவுரையாளர் வலியுறுத்துருக்கிறார்? ஏன் பூர்வகுடிகளின்  ஆன்மீகத்தை திருப்பி கொடுத்து அவர்களின் கிராமங்கள் குடியாலும் போதையாலும் அழிவதை தடுக்கவா? இல்லை.   பருந்துகள், கழுகுகள், காகங்கள் இல்லாமல் ரோட் கில் என்றழைக்கும் தெருவடி மிருகங்களை அகற்றும் செலவு கூடிவிட்டது.  

மூன்று கிழைமைகளுக்கு நாம் தெருவடி மிருகங்களை அகற்றாவிட்டால் அந்த தெரு பாவிக்கமுடியாமல் போகிறது.   இந்த பிரச்சினையை இயற்கையை திருப்பி அழைத்து தீர்க்க ஆசை.  பின் சில கோடைகளை வோட்டலு பல்கலையின் முன் உள்ள மர தோப்புக்குள் செலவழித்து அவர்களை 2 சோடியில் இருந்து 30+ சோடிகள் ஆக்கினோம்.

எனது தந்தையார் இறந்து அவர்களின் பூசை சாப்பாட்டை நான் அந்த காகங்களுக்கு  வைத்து படைத்து தான் பின் குடும்பம் சாப்பிடும்.

2008 மார்கழி அப்பாவின் திவசம்.... காகத்தை தேடி வோடலு போய் வந்தால் 2 மணிகள் குடும்பம் பசியுடன் காவல் இருக்கவேண்டும்.    எனது நகரை சுற்றி சுற்றி வந்தேன் ஒரு இடமும் காகம் இல்லை.   அப்போது நகருக்கு வெளியே இருந்த ரட்டில் ஸ்நேக் பூங்கா பக்கத்தில் சில காகங்கள் கண்ட ஞாபகம் வந்து அங்கு சென்றேன்.  

பூங்கா செல்லும் மலை குன்று பாதையால் மேலே போனேன்.  மூன்று காகங்கள் தெருவில் வலது பக்கத்தில் இடது பக்க சில்லு போய் குழியாக இருக்கும் இடத்தில் பைன் கொட்டை, வோல் நட் கொட்டை போன்றவற்றை அடுக்கி வைத்துவிட்டு எனது வாகனத்தையும் அந்த கொட்டைகளையும் தெருவோரமாக நின்று அளந்து பார்த்து கொண்டிருந்தார்கள்.  

எனக்கு முக்கியமாக எனது வயிறுக்கு அவைகளை கண்டத்தில் மகிழ்ச்சி.  நான் அவர்களுக்கு பக்கத்தில் வந்து சாப்பாடு போட ஓரங்கட்டினேன்.  அப்போது தடக் பொடக் என்று அந்த கொட்டைகள் எனது இடது சில்களில்  சிதறியது.  நான் இறங்கி படையல் சாப்பாட்டை  தெருவோரமாக வைத்துவிட்டு அவர்களை திரும்பி பார்த்தேன்.   அவர்கள் உடைந்த கொட்டைகளுக்குள் இருந்த விதைகளை ருசித்து கொண்டிருந்தார்கள்.   நான் கா கா என்று கூப்பிட்டு எனது சாப்பாட்டை உண்ண வைக்க பார்த்தேன் ஆனால் முடியவில்லை.   புத்திசாலிகள் என்னை வைத்து தமது மதிய சாப்பாட்டை முடித்திருந்தார்கள்.

அவர்களில் முதிய காகம் வந்து மரக்கறி சாப்பாட்டை பார்த்துவிட்டு முகத்தை திரும்பிவிட்டார்.  எனக்கு குழப்பம்.  ஆனால் அவர் சாப்பாட்டை விட்டு அசையவில்லை.   பசியில் வீட்டில் இருந்து குறுந்தகவலும் அம்மாவும் கூவினார்கள்.   நான் கிளம்பி செல்லும் போது பின் கண்ணாடியை பார்க்கும் போது முதிய காகம் கூப்பிட மற்றைய இரண்டு இளைய காகங்களும் சென்று சாப்பாட்டை பகிர்ந்தார்கள்.

அன்றில் இருந்து நான் ஒரு வாரமாக எனது நகர பகுதிகளில் எல்லா இடமும் உள்ள மரமுள்ள பூங்காக்களை கவனித்தேன்.  காகங்கள் இல்லை.  இந்த மூன்று தான் ஹால்டன் றீயன் உள்ள மொத்த காகங்கள்.  முதிய தலைவர் அண்டங்காகம் மற்றும் இளைய சோடி காகம்.   ஒரு மில்லியன் மக்களுக்கு 3 காகங்கள்.   

வேலை செல்லும் போது எனது டிம் கோர்டன் தேநீரும்,  மஃபின் வாங்கி தான் வாகனம் மற்றைய நகருக்கு வெளிக்கிடும். நான் பெருஞ்சாலையை தவிர்த்து காகங்களின் சாலையால் செல்ல தொடங்கினேன்.   அவர்களும் 7:35 AM பூங்கா முன் உள்ள பெரு மரத்தில் எனக்கு காவல் இருப்பார்கள்.  நானும் அவர்களுக்கு இரண்டு மஃபின் வாங்கி கொண்டு போய் வீசி விட்டு போவேன்.  அவர்கள் எனது வாகனம் 200 அடி தாண்டி சென்றவுடன் இறங்கி பின் அதை சோதித்து தான் உண்பார்கள்.   சந்தேக பிராணிகள்.

நான் கடந்த பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் குரோசோன்ட், பேகல், மஃபின் என்று குறைந்தது பத்து டொலர் செலவிழிப்பேன்.   வார விடுமுறையிலும் தவறாமல் அவர்களுக்கு காலை உணவு கொடுத்து வந்தேன்.   உணவு என்பதிலும் பார்க்க  சிற்றுண்டி என்று அழைக்கலாம்.  அவர்களின் பிரதான சாப்பாடு தெருவில் அடிப்பட்டு இருக்கும் முயல், அணில், ரக்கூன் போன்றவை.   முயல் இறைச்சி தான் அவர்களது ஆட்டிறைச்சி போல்.   அதுவும் முயலின் கண் அவர்களுக்கு குளிர் களி போன்றது ஆனால் அதை உண்ணாமல் காவிக்கொண்டு தலைவரின் கூடு போவார்கள்.

பன்னிரண்டு வருடங்களில் அவர்கள் 6 குடும்பங்களாக வளர்ந்து ஹால்டன் பகுதியில் 30 x 30 கிலோமீட்டர் பகுதியில் 90 ஆக வளர்ந்தது.  அவர்களின் பெரிய கூடு நடுவில் அடர்ந்த காட்டு பகுதியில் இருந்தாலும் அதை சுற்றி உள்ள முக்கிய உயரமான பார்க்க கூடிய மரங்களில் பொய் கூடு கட்டி அவர்களது காவல் காக்கா இரண்டு மற்றும் உளவாளி காக்கா ஒன்று நிக்கும்.   

அவர்கள் ஆபத்து வந்தால் கரைந்து கூட்டில் இருந்து எதிர் திசைக்கு எதிரியை அழைத்து செல்வார்கள்.  சாப்பாட்டை கண்டால் அது பொறியில்லை என்று ஆராய்ந்து பின் குடும்பத்தை கூப்பிடுவார்கள்.  அவர்களின் கூட்டுக்குள் மனிதரை போல் பளிங்கு கற்கள், கண்ணாடிகள், கை சங்கிலிகள் என்று சேர்த்து வைத்திருப்பார்கள்.

எல்லோரும் என்னிடம் சிற்றுண்டி பெற்று எனது உறவுகள் ஆனாலும் தலைவரை பார்ப்பது கடினம்.  நானும் அவர் இருக்கும் காட்டுக்குள் உள்ளட முயற்சி செய்து நுளம்பிற்கு ரத்த தானம் செய்தது தான் மிச்சம்.   மிக பெரிய பைன் மர உச்சியில் கட்டி இருப்பார்கள்.  அடர்ந்த சீடர் மரங்களுள் போய் தொலைந்திருக்கிறேன்.
பின் உளவு காக்கா உதவி தப்பி இருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு மாசி மாதம் எமது பகுதியில் கடின பனி உறை மழை.  அதனால் எனது காகங்களுக்கு ஒரு சாப்பாடும் இல்லை.  அவர்களால் தமது குளிர்கால சேமித்த சாப்பாடுகளையும் எடுத்து தெருவில் உடைக்க முடியாது.

அதனால் நான் வீட்டில், அலுவலகத்தில்,  உணவகத்தில் மிஞ்சிய சாப்பாடுகளை கட்டி தொடர்ந்து ரெண்டு கிழமைகள் எல்லா குடும்பத்திற்கும் மூன்று தடவை சாப்பாடு போட்டேன்.   பனி உறை முடிந்து அடுத்த கிழமை நான் அவர்களது தலைவரின் காட்டு பகுதியால் சென்ற போது இரண்டு கரையும் எல்லா குடும்ப காகங்களும் நின்றன.    திடீர் என்று தலைவர் காகம் நடுவில் தோன்றி ஒரே இடத்தில் நின்று கொண்டு தனது நாலடி அகண்ட இறகுகளை அடித்து கொண்டிருந்தார்.  அவரின் பின் அவரது காவலாளி காகங்கள் நாலு பின்னுக்கு நின்று அடித்து கொண்டிருந்தது.   

நாட்டுப்புற தெருவில் ஒருத்தரும் இல்லை.  எனக்கு கொஞ்சம் பயம்.  இது ஹொலிவூட் பேய் படத்தில் வரும் சீன் போல் இருந்தது.   நான் வாகனத்தை மெதுவாக அவருக்கு கிட்ட விட்டேன்.   அவரின் வாயில் எதோ இருந்தது அவர் அதை கொண்டு வந்து வாகன வாசலில் போட்டு விட்டு அந்தரத்தில் பறந்து கொண்டு என்னை பார்த்தார்.  அவர் அந்த பொருளை போட்டவுடன் எல்லா காகங்களும் ஆர்பரித்தன என்னை பார்த்தன.  

நான் இறங்கி தலைவர் போட்ட நன்றி பரிசை பார்த்தேன்.  அது முயலின் கண்.  ஒரு காகத்தின் குழுவில் தலைவர் மட்டும் தான் கண்ணை ருசிப்பார்.   அதை எனக்கு பரிசாக தந்தது எனக்கு பெருமையாக இருந்தாலும் பச்சையா கிடந்த கண்ணை தொடாமல் ஒரு தேனீர் கடுதாசி குவளையில் அதை அள்ளினேன்.  
எல்லா பறவைகளும் என்னை சுற்றி பறந்து ஆர்ப்பரித்தது.    எனக்கு என்னவோ பேட்மான் படத்தில் அவரை வௌவால்கள் சுற்றுவது போல் இருந்தது.  பெருமையாக இருந்தது எட்டு வருடங்களின் பின் அவர்களின் குடும்பத்தின் கௌரவ தந்தையானதில் பெருமை.

நான் விடுமுறை போனாலும் வடை மாலை போல் பேகல் மாலை கட்டி தொங்கவிட்டு செல்வேன்.   நான் அவர்களை சந்திக்க போகாவிட்டால் நகருக்குள் என் வீடு தேடி வந்து உளவு காகம் கத்தி என்னை கிளப்பும்.  என்னை தொடரும்.   

இந்த முறை ஊர் போய் வந்து பங்குனி கோவிட் பீதி தொடங்கிய நேரம்.   நான் எனது மூன்று மஃபினை வாங்கி கொண்டு 4 கிழைமையாக குடும்பத்தை காணமால் ஆவலுடன் தேடி சென்றேன்.   6 குடும்பத்தில் 3 தான் இருந்தது.  அவர்களிலும் வலிமை உள்ள ஆண்கள் தான் இருந்தார்கள்.  மரத்தின் உச்சியில் இல்லாமல் நிலத்தில் நடந்து திரிந்தார்கள்.  தெருவில் நின்று புல் தரையில் எதையோ தேடினார்கள்.  என்னை தேடி ஆவலாக வராமல் குப்பையை கிளறி கொண்டிருந்தார்கள்.  

தொன்னூறில் இருந்து பதினைந்தாகியது.   நானும் அவர்களை தேடி நூறு கிலோமீட்டர் நான்கு திசையும் சென்று தேடினேன்.   பின் லண்டன் நகர் பக்கத்தில் இருக்கும் சாத்தம் நகருக்கு சென்றேன்.  அங்கு தான் இந்த மாகாணத்திலேயே பெரிய மேர்டர்(காக குழு) இருக்கிறது.   இந்த குடும்பத்தில் அறுபதாயிரம் காகங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு பனி காலமும் அவர்கள் சாத்தம் நகரில் கூடுவார்கள்.   இந்த நகரில் கார் தரிப்பிடத்தில் கூரை இல்லை என்றால் வாகனம் சரி.  கக்கா போட்டு நாசம் பண்ணிவிடுவார்கள்.  அங்கும் சென்றேன் அந்த கூட்டத்தில் இருந்து வருவார்கள் என்று பார்த்தேன்.  ஏமாந்தேன்.

பின் எனது  காகங்கள் முன்பிருந்த மரங்களுக்கு கிட்ட மின் கம்பத்தில் புதிதாக 5ஜி அலைவரிசை உபகரணங்கள் பூட்டி கொண்டு வந்திருந்தார்கள்.    கடைசியாக தலைவர் காகமும் அவரது நான்கு காவலும் தான் மிச்சம்.

5ஜி அலைவரிசையை தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்ற கிழமை  தொடக்கி வைத்தன.  

எனக்கும் விசர் பிடிச்சு நான் ரெண்டு நாளாக மிஞ்சிய குடும்பத்தை பார்க்க  போகவில்லை.  என்னை தேடி முதல் நாள் உளவு வந்து கத்தினவன் அடுத்த நாள் வரவில்லை.   எனக்கு கவலை வர டிம் கோர்டன் சென்று மஃபின் வாங்க சென்ற போது அவனை கண்டேன்.  நான் ஒரு போதும் அவர்களை படம் பிடித்தது இல்லை எமக்குள் இருந்த தொடர்பு வேறு.   

என் குடும்பம் என்னை சுற்றி ஆர்ப்பரிக்கும் போது அல்லது எனது உளவு வீடு வரும் போது படம் எடுத்திருக்கலாம் ஆனால் என்ன பிரயோசனம் ஆறடி முகமூடி அறிவாளிகள் தமது சோம்பேறி தனத்தை இன்னும் மேம்படுத்த ஆராய்ச்சி செய்யமால் இலாப விளம்பர நிறுவனங்களை செய்தி என்று நம்பி ஏமாறுகிறார்கள்.

நான் செல்லும் போது என் உளவு அடிபட்டு அவனே ஒரு ரோட் கில் (தெருவடி பறவையாக) ஆக கிடந்தான்.   எனது தேநீர் கடை முன்பு.  அவன் எனக்கு நேற்று காவல் இருந்திருக்க வேண்டும்.   

 எனக்கு மானிடத்தில் இருந்த கொஞ்ச மதிப்பும் மரியாதையும் போய் விட்டது.   நான் டொரொண்டோ நகரை விட்டு வெளியேறுகிறேன்.  இனி நான் ஒரு கரையோர குக்கிராம  வாசி.

spacer.png

Edited by விவசாயி விக்
 • Like 7
 • Thanks 2
 • Haha 1
 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி. 

நல்ல எழுத்தாக்கமும் நடையும். உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. வாசிப்பவரை இணைந்து பயணிக்கச் செய்கிறது. 

நகரங்கள் இயற்கையை விழுங்கி உயிரிகளையும் உலகெங்கும் அழித்துவருகிறது. ஆனால் அதிலிருந்து காக்க முனையும்  தன்னார்வலர்களது முயற்சிகளும் சில இடங்களிற் சறுக்கிவடும் சூழல். மனித நுகர்வின் கட்டற்ற பாய்சல் உலகை அழித்து வருகிறது. ஆனால் உலக மாந்தரெப்போது சிந்திப்பாரோ. 
 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வளர்ப்பு பிராணிகள் மிகுந்த விசுவாசம்  உள்ளவை  முன்பு வீட்டுக்கு ஒரு சோடி காகங்கள் இருக்கும் தபால் காரன் வரவை தெரிவிக்க 😀. மனிதர் தான் அவைக்கு எதிரி

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விவசாயி
        ஊரில் இருந்த காலங்களில் விரத காலங்களில் பக்கத்து வீடுகளில் மதியம் கா கா கா என்று சத்தம் கேட்டதும் மற்றைய வீடுகளில் 
         அங்கை பார் அந்த வீட்டில் சமையல் முடிந்து காகத்துக்கு சாப்பாடு போடுகினம்.இஞ்சை இப்ப தான் குளிக்க போயினம்.இனி எப்ப வந்து எப்ப சமையல் முடியப் போகுதோ என்று பெரியவர்கள் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிடுவார்கள்.
          விரத நாட்களில் காகத்துக்கு சாப்பாடு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.இப்போ அந்தக் கலாச்சாரத்தைக் காணவில்லை.
          மிகவும் மனதோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

விவசாயி
        ஊரில் இருந்த காலங்களில் விரத காலங்களில் பக்கத்து வீடுகளில் மதியம் கா கா கா என்று சத்தம் கேட்டதும் மற்றைய வீடுகளில் 
         அங்கை பார் அந்த வீட்டில் சமையல் முடிந்து காகத்துக்கு சாப்பாடு போடுகினம்.இஞ்சை இப்ப தான் குளிக்க போயினம்.இனி எப்ப வந்து எப்ப சமையல் முடியப் போகுதோ என்று பெரியவர்கள் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிடுவார்கள்.
          விரத நாட்களில் காகத்துக்கு சாப்பாடு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.இப்போ அந்தக் கலாச்சாரத்தைக் காணவில்லை.
          மிகவும் மனதோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

உயிரோட்டமான கதை, நன்றாக ரசித்து வாசித்தேன், நன்றி விவசாயி.

ஆமாம் ஈழப்பிரியன், அது போட்டி கூட யார் வீட்டுக்கு காகம் முதல் வருகின்றது என்று.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

நன்றி. 

நல்ல எழுத்தாக்கமும் நடையும். உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. வாசிப்பவரை இணைந்து பயணிக்கச் செய்கிறது. 

நகரங்கள் இயற்கையை விழுங்கி உயிரிகளையும் உலகெங்கும் அழித்துவருகிறது. ஆனால் அதிலிருந்து காக்க முனையும்  தன்னார்வலர்களது முயற்சிகளும் சில இடங்களிற் சறுக்கிவடும் சூழல். மனித நுகர்வின் கட்டற்ற பாய்சல் உலகை அழித்து வருகிறது. ஆனால் உலக மாந்தரெப்போது சிந்திப்பாரோ. 
 

மனிதர் தாமும் ஒரு நடமாடும் மரம் தான் என்று உணரும் மட்டும் உலக இயற்கை தின நாளில் சமூக வலையில் அமேசான் காட்டுக்கு பீல் பண்ணிவிட்டு பின் அமேசான்.கொம்மில் பெட்டி பெட்டியா வாங்கி மரத்தை தொடர்ந்து கொல்கிறார்கள்!

6 hours ago, நிலாமதி said:

வளர்ப்பு பிராணிகள் மிகுந்த விசுவாசம்  உள்ளவை  முன்பு வீட்டுக்கு ஒரு சோடி காகங்கள் இருக்கும் தபால் காரன் வரவை தெரிவிக்க 😀. மனிதர் தான் அவைக்கு எதிரி

காகம் தான் பறவைகளில் மிகவும் புத்திசாலியானது.  கிளிகளிலும் பார்க்க பல நூறு வார்த்தைகள் கதைக்கும்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விவசாயி
        ஊரில் இருந்த காலங்களில் விரத காலங்களில் பக்கத்து வீடுகளில் மதியம் கா கா கா என்று சத்தம் கேட்டதும் மற்றைய வீடுகளில் 
         அங்கை பார் அந்த வீட்டில் சமையல் முடிந்து காகத்துக்கு சாப்பாடு போடுகினம்.இஞ்சை இப்ப தான் குளிக்க போயினம்.இனி எப்ப வந்து எப்ப சமையல் முடியப் போகுதோ என்று பெரியவர்கள் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிடுவார்கள்.
          விரத நாட்களில் காகத்துக்கு சாப்பாடு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.இப்போ அந்தக் கலாச்சாரத்தைக் காணவில்லை.
          மிகவும் மனதோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

நான் தோண்ட தோண்ட தெரிந்த்தது தமிழர் ஒன்றையும் மூட நம்பிக்கையாக செய்யவில்லை.  
எல்லாம் காரணத்தோடு செய்தார்கள்.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உயிரோட்டமான கதை, நன்றாக ரசித்து வாசித்தேன், நன்றி விவசாயி.

ஆமாம் ஈழப்பிரியன், அது போட்டி கூட யார் வீட்டுக்கு காகம் முதல் வருகின்றது என்று.

பக்கத்து வீட்டில தமிழர் இருந்தால் என்னத்தில் தான் போட்டி இருக்காது?  

அவை கரைந்தால் தரித்திரங்கள் என்று விறகு கட்டையால் எறிவோம்.

அவை செத்த பிராணிகள், சாப்பாட்டு குப்பைகள் என்று அழுகி துர்நாற்றமாகி நோய் நொடிகள் பரவாமல் எல்லாவற்றையும் முழுங்கும்!

இங்க மிச்ச சாப்பாடு போடும் (பிய்யும்) பச்சை வாளி பைகள் பத்து நான்கு டொலர்கள்.  ஒரு நாலு காகம் இருந்தால் தின்று இலவசமாக ஐந்து நிமிடத்தில் உரமாக்கி விட்டு போய்விடும்.

உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி சகோ!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விவசாயி விக் said:

நான் கடந்த பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் குரோசோன்ட், பேகல், மஃபின் என்று குறைந்தது பத்து டொலர் செலவிழிப்பேன்.   வார விடுமுறையிலும் தவறாமல் அவர்களுக்கு காலை உணவு கொடுத்து வந்தேன்.  

Pin von Hans Waloendy auf filme in 2020 | Die krähe, Rabe, H.i.s Steam Community :: :: Crow

விவசாயி விக், தினமும் 10 டொலருக்கு காகத்துக்கு சாப்பாடு வாங்கி, வைப்பது என்பது....
இயற்கையை காதலிக்கும் ஒருவரால்தான்... இப்படி எல்லாம் செய்ய முடியும்.
பொதுவாக நீண்ட பெரிய பதிவுகளை... நான் வாசிப்பது குறைவு.
உங்களுடைய பதிவை, வாசிக்கத் தொடங்கிய போது... 
அதனை விட்டு விலக  முடியாமல்.... ஒரு கோர்வையாக எழுதியது சிறப்பு.

உங்களுடைய கட்டுரையை வாசித்த பின், 
காகங்களை... அவதானிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
இதனை எழுதிக் கொண்டு  இருக்கும் போது கூட... 
இரண்டு காகம் வெளியே, கா...கா... என்று கரைந்து கொண்டு இருக்கின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Pin von Hans Waloendy auf filme in 2020 | Die krähe, Rabe, H.i.s Steam Community :: :: Crow

விவசாயி விக், தினமும் 10 டொலருக்கு காகத்துக்கு சாப்பாடு வாங்கி, வைப்பது என்பது....
இயற்கையை காதலிக்கும் ஒருவரால்தான்... இப்படி எல்லாம் செய்ய முடியும்.
பொதுவாக நீண்ட பெரிய பதிவுகளை... நான் வாசிப்பது குறைவு.
உங்களுடைய பதிவை, வாசிக்கத் தொடங்கிய போது... 
அதனை விட்டு விலக  முடியாமல்.... ஒரு கோர்வையாக எழுதியது சிறப்பு.

உங்களுடைய கட்டுரையை வாசித்த பின், 
காகங்களை... அவதானிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
இதனை எழுதிக் கொண்டு  இருக்கும் போது கூட... 
இரண்டு காகம் வெளியே, கா...கா... என்று கரைந்து கொண்டு இருக்கின்றது.

உண்மைதான். 

நான் நேற்று இதை படித்துவிட்டுக் காகங்களை எனது சுற்றுவட்டாரத்தில் கண்ணுக்கெட்டும் து}ரம்வரை பார்த்தேன் இல்லை. இன்று காலையிலும் பார்த்தேன் ஏமாற்றமே.  எவளவு தூரம் இயற்கை கெடுக்கபபட்டுவிட்டதென்பதையே இது உணர்த்தகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Pin von Hans Waloendy auf filme in 2020 | Die krähe, Rabe, H.i.s Steam Community :: :: Crow

விவசாயி விக், தினமும் 10 டொலருக்கு காகத்துக்கு சாப்பாடு வாங்கி, வைப்பது என்பது....
இயற்கையை காதலிக்கும் ஒருவரால்தான்... இப்படி எல்லாம் செய்ய முடியும்.
பொதுவாக நீண்ட பெரிய பதிவுகளை... நான் வாசிப்பது குறைவு.
உங்களுடைய பதிவை, வாசிக்கத் தொடங்கிய போது... 
அதனை விட்டு விலக  முடியாமல்.... ஒரு கோர்வையாக எழுதியது சிறப்பு.

உங்களுடைய கட்டுரையை வாசித்த பின், 
காகங்களை... அவதானிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
இதனை எழுதிக் கொண்டு  இருக்கும் போது கூட... 
இரண்டு காகம் வெளியே, கா...கா... என்று கரைந்து கொண்டு இருக்கின்றது.

அண்ணா,  உங்களை போன்ற ஒரு பெரியவர் வாழ்த்தி ஊக்குவிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. 

சிற்றுண்டி வருட செலவு $3800, பின் ஒவ்வொரு நாளும் 900 சதுர கிலோமீட்டரை சுற்றி வரவேண்டும் இரண்டு நாளைக்கு ஒருக்கால் எரிபொருள் நிரப்பவேண்டும். மாதம் $900.  வருட செலவு $10800.
மற்றும் வாகன தேய்மானம்.  வருடத்திற்கு $15000.
12 வருடங்களிற்கு $180,000 + வரி!

சென்ற மாதம் வரை துணைவிக்கு கூட தெரியாது.  எல்லாம் நான் வாழும் நகரில் நிலவும் ஆன்மீகத்தை கூட்டி இயற்கையை திருப்பி கொண்டுவரும் கனவு தான்.

லானவை சுட்டு பொசுக்கிட்டாங்கள் சுந்தரங்கள்!

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

உண்மைதான். 

நான் நேற்று இதை படித்துவிட்டுக் காகங்களை எனது சுற்றுவட்டாரத்தில் கண்ணுக்கெட்டும் து}ரம்வரை பார்த்தேன் இல்லை. இன்று காலையிலும் பார்த்தேன் ஏமாற்றமே.  எவளவு தூரம் இயற்கை கெடுக்கபபட்டுவிட்டதென்பதையே இது உணர்த்தகிறது.

சென்ற மாதம் நானும் திண்ணையில் தேடி பார்த்தேன்.  ஒருத்தரும் பதில் போடாதது கவலை.

ஊக்கத்திற்கு நன்றி சகோ.

Telus selects Vancouver, four other cities, for initial 5G rollout

 
By Tyler Orton | June 18, 2020, 2:47pm

Vancouver-based Telus Corp. is staying close to home with its initial rollout of 5G.

The telecom giant revealed Thursday (June 18) that it’s launching its 5G network in Vancouver, Calgary, Edmonton, Montreal and Toronto.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Weird: Out Of Nowhere, Something Just Rocked Earth's Magnetic Field

 

Profile picture for user Tyler Durden
Fri, 06/26/2020 - 21:05
 
A GLOBAL MAGNETIC ANOMALY:  On June 23rd, Earth’s quiet magnetic field was unexpectedly disturbed by a wave of magnetism that rippled around much of the globe. There was no solar storm or geomagnetic storm to cause the disturbance. So what was it?

மனிதரை சுற்றி நிறைய நடக்கிறது.  தாய்க்கு தெரியும் தன் குழந்தைகளில் அரைபாதி உருகி அழியும் என்று!  இதை தான் மாயன் நாள்காட்டியும் சொன்னது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்து நடை , ஜெயமோகனின் "யானை டாக்டர் " என்னும் கதையை (கதையல்ல நிஜமான சம்பவம்) வாசித்தது போல் இருக்கு உங்களின் காகங்களின் மீது காருண்யம்.....!  👍

இங்கு அருகில் ஆற்றோரம், காடுகளுக்குள் சென்றால் காகங்களை பார்க்கலாம்.எப்போதாவது வீடுகளின் மேலால் பறப்பதுண்டு. மற்றும்படி புறாவும் சின்னக் குருவிகளும்தான். நான் அவைகளுக்கு தினமும் அரிசி போடுவதுண்டு.புரட்டாசி சனி போன்ற விரத நாட்களில் புறாக்களுக்குத்தான் சாப்பாடு......!  😁

 

 • Like 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி.  மனிதரிலும் பார்க்க புத்திசாலிகள்.  மனிதன் பசித்தால் களவெடுப்பான்....ஆனால் காகம்?

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Russian Government Recommended Banning Wi-Fi and Cell Phones in Primary Schools

07-21-20-Russia-bans-wifi-in-schools_Fea
 
Print
 
 

By Dafna Tachover, CHD’s Director of 5G & Wireless Harms Project

 

On July 17th, 2020, the Russian Ministry of Health published recommendations to schools to ban the use of Wi-Fi and cell phones in elementary schools. The Medical Department of the Russian Academy of Sciences and the Russian National Committee on Non-Ionizing Radiation Protection, prepared the recommendations together with the Russian Ministry of Health.

The information was provided to Children’s Health Defense by Professor Oleg Grigoriev, Dr.Sc, PhD, the Chairman for the Russian National Committee on Non-Ionizing Radiation Protection. Professor Grigoriev has been outspoken about the harms of wireless technology and has been leading the recent initiatives by the Russian government to protect children from harm. He also tweeted about the news.

grigoriev-tweet.png

Numerous studies show profound adverse effects from Wi-Fi. Professor Martin Pall’s 2018 meta-analysis paper “Wi-Fi is an important threat to human health” references studies showing Wi-Fi causes oxidative stress, sperm/testicular damage, neuropsychiatric effects including EEG changes, apoptosis (cell death), cellular DNA damage, endocrine changes, and calcium overload. Considering the evidence of harm, scientists and medical associations have calledto ban the use of Wi-Fi in schools and use wired networks instead.

Russia is following other countries around the world that have taken action to reduce the use of Wi-Fi in schools and protect the health of children. In 2013, Israel became the first country in the world to adopt limitations on the use of Wi-Fi in schools. It banned Wi-Fi in kindergartens and limited the use of Wi-Fi in elementary schools. Wi-Fi is allowed for three hours per week in the first and second grade and six hours per week for the third grade. It must be turned off at all other times. In 2017, Cypress banned Wi-Fi in kindergartens and halted the deployment of Wi-Fi in elementary schools. In addition, The Cyprus National Committee on Environment and Child Health initiated a nationwide campaignto raise awareness about cell phone and wireless radiation exposures to children.

In the US, in 2016 the governor-appointed Maryland State Children’s Environmental Health and Protection Advisory Council (CEHPAC), issued a report advising the Department of Education to recommend that local school districts reduce exposure of schoolchildren to wireless devices and radiation, and to provide wired rather than wireless internet connections. No action was taken.

This action by the Russian Health Department follows another recent action by the ministry to encourage the reduction of children’s exposure to wireless devices.  In March 2020, following the outbreak of Covid, Russia’s Department of Health together with the Scientific Research Institute of Hygiene and the Russian National Committee on Non-Ionizing Radiation Protection published Safety Recommendations for Children Who Use Digital Technologies to Study at HomeThe recommendation encourages using the internet via a wired connection rather than Wi-Fi. (Children’s Health Defense also published a “step by step” guide on how to hardwire wireless devices for safe remote learning.)

In the US, the Federal Communication Commission, which regulates the safety of wireless technology, denies that wireless technology causes harm. The FCC health guidelines rely on the obsolete scientific assumption that the non-ionizing radiation emitted by microwave frequencies used for wireless technology can be harmful, only if they cause thermal change in tissue. That assumption has been proven false in thousands of studies, even before cell phones were commercialized in the 1980s. Contrary to the FCC’s position, in the 1970s, the Russians had already acknowledged that the radiation emitted from radio and microwave frequencies based technologies can be harmful at levels that are at least 1,000 times lower than the levels that create thermal effects.

Despite massive evidence of harm, in December 2019, the FCC published a decision that there is no evidence of harm from wireless technology and decided that a review of its health guidelines would not be required. As a result, in February 2020, Children’s Health Defense sued the FCC. The main brief in the case is due on July 29, 2020.

Could WiFi in schools be harming our kids?

Published May 11, 2014
UZH6XFUSBNHIFG4FAIOPZ7TCAE

Why are some Canadian schools installing WiFi while France is limiting exposure?

Naomi Buck/The Globe and Mail

Students in Lindsay Freedman's split Grade 3/4 class at Red Willow Public School are working away on tablets, laptops and iPods. It's Bring Your Own Device day, a regular occurrence here, and supplementing the devices brought from home are 20 school-owned iPads. Freedman walks around the classroom, marvelling at her students' instant embrace of the online presentation app she's just introduced. "They're an instant motivator," she says, referring to the tools in their hands.

Red Willow belongs to the Peel District School Board (near Toronto), one of several across Canada that have adopted WiFi throughout its schools, an embrace of 21st-century technologies designed to "ensure that our students can thrive in a future that can't be predicted," as Peel's promotional brochure puts it.

Though most parents and educators celebrate the move, some are raising concerns about the possible health impacts of the radio-frequency (RF) radiation on which wireless technologies operate. Exposure levels to this kind of radiation, which fall in the same frequency bandwidth on the electro-magnetic spectrum as radios, televisions and mobile phones, continue to rise as wireless technologies become more prevalent.

Story continues below advertisement

Canada's current guidelines on RF exposure are in line with those of the International Commission on Non-Ionising Radiation Protection – the largest regulatory body in this field. But many other jurisdictions have adopted considerably lower limits, either as a precautionary measure or because they view the science differently.

How is it that health agencies reach such different conclusions when faced with the same scientific evidence? Why are some Canadian schools installing WiFi while France is limiting exposure? Switzerland heavily favours wired Internet connections in schools, yet Israel is pulling it out of its lower grades altogether.

THE CAUTIONARY PRINCIPLE

While most Western bodies have deemed the scientific evidence on health effects inconclusive, many European jurisdictions are choosing to err on the side of caution until more is known. In a resolution in 2011, the Council of Europe recommended that the As Low As Reasonably Achievable (ALARA) principle be applied to electromagnetic radiation, fearing "there could be extremely high human and economic costs if early warnings are neglected." It also condemned the "lack of reaction to known or emerging environmental or health risks and virtually systematic delays in adopting or implementing effective preventive measures."

Lichtenstein, Italy and Belgium responded by drastically lowering their exposure guidelines. In France, a bill currently before the Senate insists on a principle of moderation where RF radiation is concerned. If passed, WiFi will be banned from maternity wards and child-care facilities, communities would have to be consulted before any installations in schools, and if installed, all routers would have to be accessible to teachers who could turn them off when not in use. Laurence Abeille, the Green MP behind the bill, had originally proposed a ban in all schools around students up to the age of six. She had to water it down to gain broad support in the National Assembly, but feels public concern in France is rising. This spring, a 32-year-old man received medical benefits from the local health authority in Essonne, south of Paris, for his electro-hypersensitivity – a first in France.

STRICT REGULATIONS

Switzerland prides itself on having among the most stringent regulations on electromagnetic radiation in the world. As of 2000, it has supplemented its exposure limits (which are in keeping with Canada's) with much more restrictive limits for installations of power lines, television and radio transmitters, and mobile phone base-stations in well-frequented locations. The new regulations were accompanied by an aggressive public awareness campaign about the health risks of RF radiation. Swisscom, the national telecom company, promotes its line of low-radiation "Ecomode" phones and routers as "safer" – openly acknowledging the risks inherent in these devices. And for 10 years, Swisscom has been installing wired Internet connections in Swiss schools for free. Why not wireless? As company spokesman Carsten Roetz wrote in an e-mail, "because there's no reason to put a radiation source that isn't absolutely necessary in schools." Of Switzerland's 6,800 schools, Roetz estimates that fewer than 100 have opted for wireless connections.

Story continues below advertisement

In March of this year, the Jerusalem Post reported that the Israeli Education Ministry had ordered radiation testing in all Israeli schools, banned WiFi from pre-schools and kindergartens, and restricted its use to one hour a day for students up to Grade 3. The move came in response to persistent complaints from parents whose children suffer from some form of electromagnetic hypersensitivity.

Russia's exposure limits for RF radiation are 100 times lower than Canada's. While Russian schools can choose to install WiFi, they are the exceptions, says Oleg Grigoriev, chairman of the Russian National Committee on Non-Ionizing Radiation Protection (an expert group that reports to the Russian parliament). He says damage to children's cognitive function caused by long-term exposure to low-strength electromagnetic fields has long since been demonstrated by Russian researchers. Russia, he explains, began experimenting with the impacts of electromagnetic fields on the nervous system a century ago, and, as a result, does not consider its approach precautionary, but rather "science-based."

MANAGING RISK

While faced with the same scientific evidence, these countries have adopted very different rules on exposure. It's all about managing risk. Marc Saner, a professor at the Institute for Science, Society and Policy at the University of Ottawa, affirms that scientific evidence is just one element in the multi-factorial nature of risk management in public policy. "The focus on risk reflects many things – a country's history of science, its trade interests, the pet causes of its movie stars … Policy decisions are always a few steps away from data, there's always an emotional component."

Most Canadian school boards are introducing WiFi, but at a slower rate than Peel – slower not because of concern about exposure, but because installation is more complicated in older schools with thicker walls. Toronto's school board aims to have at least partial WiFi in all its schools by 2016, and is adding zones regularly. Because WiFi exposure has been deemed safe in Canada, the expansion proceeds without notification.

Paradoxically, outside the schools' walls, Toronto's Board of Health insists on a "prudent avoidance policy" with respect to cell tower locations, keeping RF radiation levels in areas of the city "where people normally spend time" 100 times lower than what federal guidelines insist on – much like in Switzerland. The Board argues that as long as radiation sources in the urban environment continue to increase, the cumulative effect is unknown and caution is warranted. The policy has been in place since 1999.

Story continues below advertisement

In Canada, the lack of public concern about WiFi exposure in schools seems at odds with a culture of parenting that's often called hypercautious. Here, public awareness on the issue of exposure has been mainly focused on cellphones. The science at play is beyond the reach of most citizens, and many would rather not entertain the possibility that these incredibly useful technologies may pose a risk.

"We're not just talking about WiFi in schools," Saner says. "We're asking much bigger questions, like what is education? Are these devices good for society generally? Is this speed of innovation a good thing? The stakes here are huge."

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.