Jump to content

கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி

June 28, 2020

selvam-adaikalanathan-300x200.jpeg

கிழக்கு மாகாணத்தில் தமிழ் எம்.பி.க்களின் மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்து அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டியவர் கருணா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது;

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்களை செய்துள்ளது. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் என்பவற்றுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்கும் போது கிழக்கிலே கருணா அம்மான் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய மனைவி, பிள்ளைகள் உறவினர்களை கடத்தி வைத்து இந்த அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டுவார். மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்தால் என்ன செய்வது? மனித மனம் அப்படி தானே. ஆனால் அதற்கு கூட நாங்கள் விட்டுக் கொடுக்காது எதிர்த்து வாக்களித்தோம். இப்படி தான் நாம் எமது மக்களுக்காக கஸ்ரப்பட்டோம்.

ஆனால் கூட்டமைப்பு என்ன செய்தது என இப்போது கேட்கிறார்கள். எமது மக்களுக்கெதிரான படுகொலைகள், எமது மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக உலக ரீதியில் எமது குரல்கள் ஒலித்தன. பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அப்பொழுது முப்படைகளையும் கொண்ட பலம் இருந்தது. கடந்த 5 வருடங்களில் ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்தது. அதுவரை காலமும் சிங்கள தேசத்திற்கு எதிராக இருந்தோம். நாங்கள் கொடுக்க தயார். அவர்கள் தான் எதிர்க்கிறார்கள் என்று சொன்னார்கள். அதனால் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தோம்.

மைத்திரியும், ரணிலும் இணைந்து ஆட்சி அமைத்தார்கள். ஜனாதிபதியை உருவாக்க கூடிய வல்லமை சிறுபான்மை மக்களிடம் இருந்தது. அந்த அடிப்படையில் தான் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்த போது அவர்களிடம் உங்களது தீர்வு தொடர்பில் பேசுங்கள் என உலக நாடுகள் கூறின. நாங்கள் உங்களுடைய பக்கம் இருக்கின்றோம் என்றார்கள்.

ஆகவே ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக அந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். அதன் மூலம் நிபுணர் குழு அமைத்து அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபை கொண்டு வருகின்ற போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டு இடை நடுவில் உள்ளது. நாங்கள் இணைந்து செயற்பட்ட போது முழுமையாக விடுபடா விட்டாலும் அதிக காணிகள் விடுவிக்கப்பட்டன. எமது மக்கள் போராட்டங்களை நடத்தக் கூடியதாக இருந்தது. முள்ளியவாய்காலில் மரணித்தவர்களை நினைவு கூரும் போது எந்த தடையும் வரவில்லை. இதன்போது கம்பரலிய போன்றன வருகின்ற போது அதனை பிரித்து செய்தோம்.

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்களை அடைமானம் வைத்து சோரம் போகவில்லை. சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரைக் கெடுக்கும் வகையில் இருக்கிறார்கள் என்பது உண்மை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். அப்படியானவர்களின் பெயரை சொல்லி பெரியாள் ஆக்க விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் களையப்பட வேண்டும்.

இம்முறை தேர்தலில் பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. விமல் வீரவன்ச தமிழர்களின் வாக்கு தேவையில்லை என்கிறார். ஆனால் இங்கு மொட்டு போட்டியிடுகின்றது. பிரதமர் மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழர்களின் இடம் என சொல்ல முடியாது என்கிறார். சிந்தனைகளை பாருங்கள். கருணா காட்டிக் கொடுத்த துரோகி. போராட்டத்தை காட்டிக் கொடுத்து மழுங்கடித்த கருணா அந்த செயலுக்கு இன்று தண்டனையை அனுபவிக்கிறார். அவரை அன்று வைத்திருந்தவர்களே இன்று விமர்சி க்கின்றார்கள் என்றார்.

http://thinakkural.lk/article/49853

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரைக் கெடுக்கும் வகையில் இருக்கிறார்கள் என்பது உண்மை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். அப்படியானவர்களின் பெயரை சொல்லி பெரியாள் ஆக்க விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் களையப்பட வேண்டும்.

ஒரே ஓர் சின்ன பொம் பொறி உருண்டை சைசுல.. மொத்தமும் குளோஸ்..☺️

maxresdefault.jpg

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"""விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் களையப்பட வேண்டும்."""

இவர் கூறுவதனை செயற்படுத்தினால் முதலில் வெளியேற்றப்படுபவர் செல்வமாகத்தான் இருப்பார். 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் கூடவே தமிழ் மக்களின் அபிலாசைகளை குழி தோண்டி புதைத்தவர்  என்ற வகையில் பார்த்தால் சுமத்திரன் தான் முன்னுக்கு நிற்கிறார் .

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

இவர் கூறுவதனை செயற்படுத்தினால் முதலில் வெளியேற்றப்படுபவர் செல்வமாகத்தான் இருப்பார். 😂

அப்ப  சுமத்திரன் நல்லவரோ ?

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி

செல்வம் தான் வெல்லுற வழிய தேடுறார்!

சுமந்திரன் அவருக்கு கிடைச்ச பலியாடு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, spyder12uk said:

அப்ப  சுமத்திரன் நல்லவரோ ?

அதை நீங்கள்தான் கூற வேண்டும். 🤥

நான் யாரையும் தீர்ப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க விரும்புபவன். 😆

Link to comment
Share on other sites

33 minutes ago, spyder12uk said:

அப்ப  சுமத்திரன் நல்லவரோ ?

சுமந்திரனை விட மோசமான அரசியலவாதி இலங்கையில இல்லை!
அதான் செல்வமே நோண்டிப் பாக்கிறார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

செல்வம் தான் வெல்லுற வழிய தேடுறார்!

சுமந்திரன் அவருக்கு கிடைச்ச பலியாடு!

அறிவுசார் அரசியலுக்கும்    உணர்ச்சி அரசியலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். ஆனாலும் இருவரும் அரசியல்வாதிகளே. 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

அறிவுசார் அரசியலுக்கும்

உங்க மொழியில 'அறிவுசார்' என்டா 'சொறிலங்கா இனப்படுகொலைகாரர் கொலைகாரர்சார்' என்டு நல்லாவே விளங்குது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் கூடவே தமிழ் மக்களின் அபிலாசைகளை குழி தோண்டி புதைத்தவர்  என்ற வகையில் பார்த்தால் சுமத்திரன் தான் முன்னுக்கு நிற்கிறார் .

பின்பக்கத்தால் முன்னுக்கு நிக்கிறாரா முன்பக்கத்தால் முன்னுக்கு நிக்கிறாரா ? 🤔

தெளிவுபடுத்துங்கள், தயவு செய்து 🙏

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

பின்பக்கத்தால் முன்னுக்கு நிக்கிறாரா முன்பக்கத்தால் முன்னுக்கு நிக்கிறாரா ? 🤔

தெளிவுபடுத்துங்கள், தயவு செய்து 🙏

எந்த பேய் வந்தாலும் பிரச்னை இல்லை சுமத்திரன் எனும் இனம் வித்து  பிழைப்பு நடத்துபவர்  மட்டும் வந்தால் தமிழன் கதி  அவ்வளவுதான் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

உங்க மொழியில 'அறிவுசார்' என்டா 'சொறிலங்கா இனப்படுகொலைகாரர் கொலைகாரர்சார்' என்டு நல்லாவே விளங்குது.

ஒரு விடயத்தை அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும், அறிவுக்கும் ஏற்ப விளங்கிக் கொள்ளலாம். ஆனாலும் Intellectual politics என்றால் என்னவென்று மிகப் பொதுவாக ஏற்றுக்  கொள்ளப்பட்ட விளக்கம் ஒன்று உள்ளது. அதாவது புலமைசார் அரசியல் என்றால்......

படித்த அரசியல்வாதி, சுமந்திரன் போன்றவர்கள் ""நான் அதச் செய்வேன், இதைச் செய்வேன்"" என்று தனது கல்வி மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வர். 

செல்வம் போன்ற அரசியல்வாதிகள் "" நாங்கள் கல் தொன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி"" என்று உணர்ச்சிகளையூட்டி அரசியல் செய்வர். 

வேறுபாடு இத்தான். 😂😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

படித்த அரசியல்வாதி, சுமந்திரன் போன்றவர்கள் ""நான் அதச் செய்வேன், இதைச் செய்வேன்"" என்று தனது கல்வி மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வர். 

அரசியல் படுமுட்டாளான சுமந்திரனை புகழ்வதற்கு அளவுகணைக்கே இல்லையா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

படித்த அரசியல்வாதி, சுமந்திரன் போன்றவர்கள் ""நான் அதச் செய்வேன், இதைச் செய்வேன்"" என்று தனது கல்வி மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வர். 

விழுந்து விழுந்து சிரிக்கிறேன் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனின் ஒரிஜினல் செர்டிபிகேட்  காட்டுங்க பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

விழுந்து விழுந்து சிரிக்கிறேன் .

செந்தில் ரேஞ்சுல காமடிகள் வரும்போது விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

விழுந்து விழுந்து சிரிக்கிறேன் .

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது உண்மைதானே. 😂

1 hour ago, Rajesh said:

அரசியல் படுமுட்டாளான சுமந்திரனை புகழ்வதற்கு அளவுகணைக்கே இல்லையா.

நான் எங்கே ஐயா சுமந்திரனைப் புகழ்ந்தேன். Intellectual politics / politician  என்பதற்கு உதாரணம் காட்டினேன். எங்கட ஆட்களில வேறு படித்த அரசியல்வாதிகள் இருந்தால் கூறுங்கள் அந்தப் பெயரைப் போட்டுவிடுகிறேன் 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது உண்மைதானே. 😂

சுமத்திரன் வந்தால் அங்குள்ள தமிழருக்கு சிரிப்பது என்பது மறந்து போயிடும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன் வந்தால் அங்குள்ள தமிழருக்கு சிரிப்பது என்பது மறந்து போயிடும் .

இப்போது சிரித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறீர்களோ 😧😧

1 hour ago, nunavilan said:

சிறீதரனுக்கு விடயம் பிடிபட்டுவிட்டது. முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். 😂😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இப்போது சிரித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறீர்களோ

இப்ப உள்ள கொஞ்ச நஞ்ச நிம்மதியும் சுமத்திரன் வந்தால்  இல்லாமல் போகும் அதில் சந்தேகமே இல்லை .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

இப்ப உள்ள கொஞ்ச நஞ்ச நிம்மதியும் சுமத்திரன் வந்தால்  இல்லாமல் போகும் அதில் சந்தேகமே இல்லை .

மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நிம்மதியாக இருக்கிறார்கள் என்கிறீரா 😂😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் சுமத்திரன் வந்த பின் இரண்டும் கிடையாது .  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நான் எங்கே ஐயா சுமந்திரனைப் புகழ்ந்தேன். Intellectual politics / politician  என்பதற்கு உதாரணம் காட்டினேன். எங்கட ஆட்களில வேறு படித்த அரசியல்வாதிகள் இருந்தால் கூறுங்கள் அந்தப் பெயரைப் போட்டுவிடுகிறேன் 😀

சுமத்திரனின் ஒரு  அறிவுசார் அரசியல் அதான் Intellectual politics / politician ஒரு உதாரணத்தை கூறுங்கள் பார்க்கலாம் . மாட்டு பட்டார் 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.