• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

யாழ். தேர்தல் பிரச்சாரத்தில் த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி! ஓட.. ஓட.. விரட்டும் பகீர் காணொளி

Recommended Posts

வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன.

இதோ ஒரு சம்பவம்:

வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி வேட்பாளரும், ஆதவாளரும் விரட்டப்படும் காட்சி:

 

பிரச்சாரம் செய்யச் சென்ற குறித்த த.தே.ம.முன்னணியினருக்கு இவ்வாறான விளக்கமொன்றை இளைஞரொருவர் வழங்குகிறார்.

அதேபோன்று தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்..

இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் வருவார் என்ற விடயம்.

அத்துடன் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சென்று பாருங்கள் ரெக்கோட் காணப்படுகிறது. உங்கள் கதைகள் அனைத்தையும் விடுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் கதைகளும் எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/249722?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, பெருமாள் said:

அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமார் கோஸ்ட்டியின் சதிகாரா, நாசகார வேலைகளை சாதராண மக்களும் நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறாங்கள்!

Share this post


Link to post
Share on other sites

இது  திட்டமிட்டு எடுக்கப்பட்ட காணொளியாகத் தோன்றுகிறது.  சிறீதரனின் அண்ணாவினது ஊடகத்திற்காகத் திட்டமிடப்பட்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

Share this post


Link to post
Share on other sites

காணொளி எடுத்தவருக்கு நிஜ அரசியல் தெரியாமல் நிற்கிறார்.

2005 இல இயக்கம் வாக்குப் போட வேண்டாம் என்று சொல்லி மகிந்த வந்தார் என்றால்.. 2010 தில் வாக்குப் போடச் சொல்லியும் மகிந்த தானே வந்தார். அப்புறம்.. 2015 இல் வாக்குப் போடச் சொல்லி.. மகிந்த போய் ரணில் வந்தார். என்னத்தை எடுத்தியள்...????!

அதேபோல்.. 1995 இல்.. வாக்குப் போடச் சொல்லி சந்திரிக்க வந்தார்.. மீண்டுக் 2000 ஆண்டில்.. வாக்குப் போடாமலும் அவரே வந்தார்.

அதேபோல். 1989 இலும் நீங்கள் போட்டு.. ஈரோஸ் வந்தும்.. என்னத்தை சாதிச்சம்..???!

யார் வந்தாலும் வராவிட்டாலும்... சிங்கள பெளத்த பேரினவாத,,, அரசின் தேர்தல்களில்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் இல்லை என்ற புரிதலற்ற உளறல் தான் காணொளியை எடுத்தவரிடம். இன்னும் எம்மவர்களுக்கு எமக்கான.. அரசியல் என்ன என்பதே தெரியவில்லை. இதுகளுக்காக ஒரு இயக்கம் போராடி.. அழிந்தது தான் பேரவலம். 

Share this post


Link to post
Share on other sites

இனி யார் என்றாலும் தீர்வு பொதி என்டு வந்தால் ஓட ஓட விரட்ட வேனும்.

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, சுவைப்பிரியன் said:

இனி யார் என்றாலும் தீர்வு பொதி என்டு வந்தால் ஓட ஓட விரட்ட வேனும்.

😂 இவர்களின் தீர்வு பொதி எந்தளவு size கொண்டது

Share this post


Link to post
Share on other sites

என்ன ஒரு கவுரவமான அரசியல்கட்சியாய் இருந்த கூத்தமைப்பை இப்படி சந்தி  சிரிக்கிறது போல் மாத்திய பெருமை எல்லாம் சுமத்திரனையே சேரும் .

பின்கதவால் ஆளை உள்ளே கொண்டுவரும்போது இதே யாழில் கட்டுசோத்துக்குள் பெருச்சாளி அல்ல பேயை சம்பந்தன் கொண்டுவருகிறார் என்று எழுதியபோது  அந்த கருத்து தூக்கபட்டத்துடன் அமைதியாக இருங்கள் என்று வேண்டுகோளும் விடப்பட்டது .இப்ப இருந்த ஒரு நம்பிக்கை கூத்தமைப்பையும் நாசம் பண்ணியுள்ளது பின்கதவால் வந்த பேய் .

Share this post


Link to post
Share on other sites

"ஓட ஓட விரட்டியது" என்பது மிகைப் படுத்தல்! அவர் மரியாதையாகத் தான் அனுப்பி வைக்கிறார்! ஆனால், இந்த வீடியோவில் கேள்வி கேக்கிற சகோதரம் போலத் தான் தாயக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களின் அரசியல் திசை பற்றி புலம் பெயர்ந்த நாம் கவலைப் பட அவசியம் குறைவு! 

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர் சிலரின் அரசியல் ஞானம் தான் கொஞ்சம் கேலிக் கூத்தாக இருக்கிறது! தமிழர்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு மூலம் ரணிலை விழுத்தி "யதார்த்த வாதியான" மகிந்தவை புலிகள் வெல்ல வைக்கிறார்கள். அவர் புலிகளை அழித்த கையோடு தேர்தலுக்குப் போக பாரிய வெற்றி சிங்களவர்களால் கிடைக்கிறது!  இந்த 2010 வெற்றி, மகிந்தவுக்கு 2005 இல் புலிகளால் வழங்கப் பட்ட வாய்ப்பின் தொடர்ச்சி என்பதைக் கூட விளங்கிக் கொள்ள இயலாத புலம்பெயர் தீவிர தேசியர்கள், தாயக மக்களுக்கு அரசியல் படிப்பிக்க முயல்வது பெரிய வேடிக்கை! 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this