• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

4 hours ago, ரஞ்சித் said:

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

ஒரு இனத்தின் பங்காளனாகவும் உரித்தாளனாகவும் நியாயமாகச் சிந்திக்கும் உங்கள் வினாக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நேசிக்கும் பல லட்சம் தமிழ் உறவுகளின் வினாவென்றே கொள்ளமுடியும்.  2009இன் பின் இன்றுவரை மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியாத பலர் இன்றும் கவலைதோய்ந்த முகங்களோடு அமைதியாகத் தாமுண்டு தமது வேலையுண்டு என்று ஒதுங்கியிருக்கும் நிலை தொடர்கிறது. கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிவிடும் என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், யதார்த்தத்தில் அது சாத்தியமா? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மௌனமாக உறங்குவதும்; தனிமையில் அது விழித்து வினா எழுப்புவதுமாகவே காலங்களை நகர்த்துகிறது. நாம் உண்டு உருண்டு உழவுசெய்து வளர்ந்த நிலங்கள் எம்மிடமில்லை என்பது எவளவு வலி நிறைந்தது என்பது புலம்பெயர் உறவுகளால் புரியமுடியாததல்ல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிவிட மனங்கள் மாற்றங்களுள் மறைந்து விடுகிறது. அது இயல்பானதும் கூட. பெருவிருட்சமே வீழ்ந்தபின் சிறு புற்களால் நிமிரமுடியுமா என்ற நம்பிக்கையீனங்கள் ஒருபுறமும்  புலத்திலும் தாய்நிலத்திலுமான கடந்த பதினொரு ஆண்டுகால நகர்வுகள் மறுபுறமுமாக மக்களைக் கலக்கிக் குழப்பிக் கலைத்து வைத்திருக்கிறது. யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்கட்டத்தில் புலத்திலே, ஆங்காங்கே சில இளையோர்கள் அகிம்சை ரீதியில் போராடியபோதும், யுத்தநிறைவின் பின் அவர்கள்போன்றோரை ஒருங்கிணைத்து அரவணைத்து அணியம்செய்யவும் வழிகாட்டவும் திராணியற்ற புலம்பெயர் சூழல். தாயகத்திலே நாடாளுமன்றக் கதிரைகளை நோக்கிய சூழல் மறுபுறமாக யாரையும் எதையும் புரிந்துகொள்ள முடியாத புதிர்நிலை அரசியலைக் கொண்டே அகவொடுக்க நிலைக்கு எமது மக்களை, எமது தலைமைகள் வழியாகவே மேற்குலகும் சிங்களமும் அழைத்துச் செல்வதில் இருந்தே உங்களின் பலவினாக்கள் தோற்றம் பெற்றுள்ளதென்பதே எனது அவதானிப்பாகும். ஆனால் இந்த உலகில் வாழும் உயிரிகளுக்கான பாத்திரம் என்ன என்பதை சூழலும் காலமுமே நிர்ணயம் செய்யுமென்பதை அண்மைய கொரொனோக் காலநிலை தெள்ளளெனச் சுட்டிநிற்கிறது. 

தம்மைத் தாம் வெல்ல வேண்டிய சூழலில் தமிழினம் இன்று நிற்கிறது. வீழ்ந்தவர்கள் வீழ்ந்துகிடந்தவாறு  எழமுயற்சிக்காதிருந்தால்; குறைந்தபட்சம் கையையாவதுநீட்டாது யாரும் கைகோடுக்க வரமாட்டார்கள் என்பதே உண்மைநிலை. இதனைத் தமிழினம் சிந்திக்காதவாறு சிதைந்துபோவதே இன்றை கையறுநிலை.  மே18 நினைவு நிகழ்வு இந்த ஆண்டு நகரங்கள்தோறும் நடைபெற்றது. நிகழ்வுக்காகச் சென்றபோது யேர்மன் அன்பரொருவர் அந்தச் செயற்பாட்டாளர்களுக்குக் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டுவது பொருத்தமென நினைக்கிறேன். இதனை, அதாவது இன அழிப்பை நீங்கள் சரியாகப் பரப்புரை செய்து யேர்மன் மக்களுக்குத் தெரியப்படுத்தித் தொடர்ந்து முன்னெடுங்கள். அப்போது உங்களது நியாயமான போராட்டம் வெல்லும் என்றார். இங்கே போராடுதல் என்பது அனைத்துவழிகளிலும் அனைத்து வெளிகளிலும் நிகழ வேண்டிய காலம். ஆனால் நாமோ யாரோ போராடக்காசைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோராதலால் நானுட்பட இன்றும் அதே எதிர்பார்ப்போடு நகர்கின்றோம்.  

 தமிழ்த் தேசியவாதிகளாக நேற்றிருந்தோர் இன்று சிங்களத்தின் ஏவலாளர்களாக நிற்கின்றனர். தமிழினத்தின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படும்போது  தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும். இதுவே சிங்களத்தின் பெருவிருப்பமாகும். இந்த விருப்பை ஒருவகையிற் தமிழ்த் தலைமைகளே தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றனர்.   

ஆனால் இவற்றையும் கடந்து ஈழத்தீவிலே காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான(அதில் முழு ஈழத்தமிழருக்கான நீதியும் மறைந்துள்ளதையும் மனங்கொள்ள வேண்டும்) நீதியைக் கோரிச் சலிப்பின்றிப் போராடும் ஒரு தரப்பும் உள்ளதென்பதும் சிறுநம்பிக்கையளிப்பதாக உள்ளதையும் நோக்க வேண்டும். விடுதலைக்கான தேவை இருக்கும்வரை போராட்டங்கள் தொடரும் என்பதை இந்த உலகு கடந்தே வருகிறது. இந்த உலகிலே ஒரு சிறிய மக்கட்தொகையைக் கொண்ட இனமாக இருக்கும் நாம் சரியான மதிப்பீடுகளை செய்வதும் மாற்றுவழிகளைத் தேடுவதுமே எமது இருப்புக்கான வழியாகும். புலத்திலே உள்ள இளைய தலைமுறை சிறந்த ஆற்றலாளர்களாக வளர்ந்த வரும் சூழலில் அவர்களுக்கு எமது தேசம் தேசியம் சார்ந்து சரியான புரிதலை ஏற்படுத்தின் நியாயத்தை அவர்களே இந்த நாடுகள் புரியும்வகையிற் பேசுவார்கள் என்பதே நம்பிக்கை. 


இதனை உயிரீகங்களூடாகக் கட்டமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் களநிலை மாறினாலும் போராட வேண்டிய கட்டாயம் இன்றும் அப்படியேதான் உள்ளதென்பதை தமிழினம் புரிந்துகொண்டதாலேயே தமது வாக்கினூடாகவேணும் பதிலளிக்க முனைகிறது. மாவீரர் தினத்திலும் மே18இலும் தடைகளைத் தாண்டிக் திரள்கிறது. இன்று எம்முன் இருப்பது எம்மால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வதும் எமது பிள்ளைகளை குறைந்தபட்சம் இன மொழிப் பற்றுடையோராய் உருவாக்கிவிடுதலுமே.      

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரஞ்சித்
        முதலில் ஒரு மாவீரன் குடும்பத்தவராக உங்களைப் பார்ப்பதில் பெருமையடைகிறேன்.தலை வணங்குகிறேன்.
        சாதாரணமாக இனவிடுதலை போராட்டம் என்று கீழ்மட்ட உதவிகள் செய்தவர்களில் இருந்து எல்லோருக்குமே இன்னமும் நம்ப முடியாமல் என்ன ?எப்படி ? உண்மையா என்று தெரியவில்லை.தெளிவில்லை.
        உங்களை மாதிரி எனக்கும் பல நேரங்களில் இப்படியான சிந்தனைகள்.எங்காவது அடி வளவிற்குள் போய் நின்று ஐயோ என்று கத்தி குளற வேண்டும் போல இருக்கும்.
        ஊரிலே நடப்பதைப் பார்க்க விடுதலை வேட்கை இன்னும் இன்னும் கூடுகிறது.
இன்னும் இவ்வளவு கஸ்டம் துன்பம் சித்திரவதைகளையும் தாண்டி நல்ல தலைமை இருந்தால் போராடக் கூடியவர்களையும் கண்டேன்.நடைமுறைக்கு சாத்தியமில்லாது போனாலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
       பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.
          எனவே எமக்கு மட்டுமல்ல புலிகளுக்கு எதிராக நின்றவர்களுக்கும் இன்றைய நிலையில் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
          என்னைப் பொறுத்த வரை சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது.
 

சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது. இயன்றவரை தியானம் &  வேறுவழிகளில் மனதை திசைதிருப்பினால் நல்லது. இன்றுவரை நம்ப முடியாமலிருக்கு

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

அருமையான கருத்து... அக்னியஷ்த்ரா.

Share this post


Link to post
Share on other sites

 நல்லதொரு கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நொச்சி அண்ணா!, “ தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும்” இந்த  உணர்வைத்தான் நான் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் உணர்வது. 

அதே நேரத்தில் எங்களுக்கு நடந்தவற்றை பேசாமல் எழுதாமல் விடுவதும் இயலாத ஒன்று..இரண்டு உணர்வுகளுக்கிடையில் சிக்கிதவித்தாலும், பரப்புரைகளை செய்வதுடன் இப்போதையநிலையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அவரவரிற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இருப்பைதக்கவைத்துகொள்ளவும், மன உளைச்சலை குறைக்கவும் உதவும் நடவடிக்கைகள். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 30/6/2020 at 04:00, அக்னியஷ்த்ரா said:

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

பாதுகாப்பாக இருந்து இந்தக் குருடர்கள் யானையைத் தடவிப்பார்க்கவும் இந்தியா தான் உயிரோடு இருக்கும்வரை விடாது. யானைக்கு மதம் அதிகரிக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்கும்.😲

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • ஒருநாள் வாழ்விலே... வர வேண்டும் நேரிலே..  
  • ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக. நாதமுனி; சீமான் சிறந்த அரசியல்வாதி .......... ஆசிரியர்; பெயில்  பாடசாலை கண்டின்  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் நான் எப்படி நல்லதாய் எழுதினாலும் என்னை பெயிலாக்கி விட்டுடுவா 😂   அவர் கிறிஸ்தவர் என்பதிலோ அவரது பெயரிலோ எந்த பிரச்சனையும் இல்லை..அதை மறைத்தது தான் பேசும் பொருள் 
  • மிக்கச்சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தன் மாம்பழத் திருவிழா வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (15) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளி வீதியுலா வந்தனர். இந்த மாம்பழ திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார். இதேவேளை, புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது. அதற்கமைய ஒருசமயம் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர். உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்த புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.     https://newuthayan.com/69580-2/