• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

Recommended Posts

சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

InShot_20200629_220922217-1-960x573.jpg?189db0&189db0

இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது டிக்டொக், ஹலோ, கேம் ஸ்கானர், செயார்இட், யு.சி. பிரௌசர் போன்ற பிரபமான செயலிகள் மற்றும் கிளாஸ் ஓப் கிங்ஸ் விளையாட்டு உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்:

Screenshot_20200629-221310-1.jpg?189db0&

 

https://newuthayan.com/சீனாவுடனான-மோதல்-டிக்/

 

 

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, உடையார் said:

 

ஆக, சீனாவால் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட இந்திய இராணுவத்தினரின் பெறுமதி என்பது 59 apps தான் 😂😂😂

இன்னும் கொஞ்சம் இராணுவத்தினரைக் கொன்றால் இன்னும் நாலு apps ஐ தடை செய்வார்கள் அம்புட்டுதே 😜

Share this post


Link to post
Share on other sites

என்ன சீவா செய்யுற .. ஓட்டோ கண்ணாடிய திருப்பினா எப்படிப்பா ஸ்ராற் ஆகும்.? 👌

Chaos+1.png 

Share this post


Link to post
Share on other sites

லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு – கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கியை நிறுத்தியது இந்தியா

   by : Dhackshala

202006301255203866_Tamil_News_India-depl

லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்தியுள்ளது.

துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் திகதி ஊடுருவ முயன்ற சீன இராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பாக இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை மீளப்பெற இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளன. மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளமை அந்த படங்களில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/லடாக்-எல்லையில்-சீனாவின்/

Share this post


Link to post
Share on other sites

tiktok-720x405.jpg

டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பு

டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. அதற்கமைய அந்த செயலியை நடத்தி வரும் தனியார் நிறுவனம் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என உறுதி அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொலைபேசிகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய அரவு அறிவித்தது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி லடாக் பகுதியில் நடந்த இந்திய-சீன போரின் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டிக் டாக் செயலி இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதென்பதால், இது தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் மறுக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதன் இந்திய தலைவர், தனிநபர் தகவல்களை டிக்டாக் செயலி என்றும் திருடும் செயலில் ஈடுபட்டது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட முப்பது இலட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் டிக்டாக் செயலி கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/டிக்டாக்-செயலியை-மீண்டும/

Share this post


Link to post
Share on other sites

59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு

59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு

59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது
பதிவு: ஜூலை 02,  2020 07:06 AM
வாஷிங்டன்

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.


சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதரவளித்துள்ளார்.  அவர் கூறி இருப்பதாவது:-

சீனாவிலிருந்து "சில மொபைல் பயன்பாடுகளுக்கு இந்தியாவின் தடையை நாங்கள் வரவேற்கிறோம், இந்த நடவடிக்கை "இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் அதிகரிக்கும்" என கூறினார்

அமெரிக்காவும் இந்தியாவின் பாதையை பின்பற்றி சில சீன நிறுவனங்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02070643/Pompeo-Welcomes-Indias-Sweeping-Ban-on-Chinese-Apps.vpf

Share this post


Link to post
Share on other sites

தடை எதுவும் இல்லை என்கிறார் ஆய்வாளர்.

 

டக்டாக்கிடம் 30 கோடி வாங்கியுள்ளார் மோடி.

இன்றும் 300 மில்லியன் டாலருக்கு சீன கம்பனியுடன் கையெழுத்திட்டுள்ள இந்தியா.

https://www.hindustantimes.com/business-news/chinese-firms-inks-deal-with-adani-to-invest-300-million-in-gujarat/story-9JwsdqAIyNnu3BHjNIboPI.html

India’s Adani Group inked a deal with East Hope Group, one of China’s largest companies, which will invest over $300 million to set up a manufacturing unit for solar power generation equipment in Gujarat.

“The MoU signed between the two leading companies from India and China proposes to set up manufacturing units in Mundra SEZ, Gujarat to produce solar power generation equipment, chemicals, aluminum and animal feed, and to put in place East Hope Group’s engineering and industrial integration chain to recycle and economise the product cost at Mundra SEZ,” said a statement.

An estimated investment of more than $300 million is expected to be made by East Hope Group in India, as part of the proposed cooperation between the two conglomerates.

East Hope Group, a 70 billion yuan company, is one of the largest corporate houses in China.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this