Jump to content

இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து ஐவர் உடன் நீக்கம்! மாவை சேனாதிராஜா உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள்.

1.”வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க என தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்த 212 மில்லியன் ரூபா எங்கே?’ என்று 28/6/20 ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்;

“சிறீதரன், சுமந்திரனை தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்ற செய்திகள் (மேற்படி 28/06 வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்)

(அ). இச் செய்திகள் தொடர்பில் நேற்றும் இன்றும் தமிழரசு மகளிர் அணித் தலைவர் திருமதி. மதனி, செயலாளர் திருமதி வளர்மதி ஆகியோர் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர்.

(ஆ) நேற்று (28/06) திரு.எம்.ஏ.சுமந்திரன் வேட்பாளர், மற்றும் திரு.சி.சிறிதரன் வேட்பாளர் இருவரும் மேற்படி செய்திகள் பற்றி என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு முறையிடப்பட்ட செய்திகளை யாழ்.ஊடகத்திற்குத் தாமாகவே, தன்னிச்சையாகவே திருமதி. விமலேஸ்வரியும் ஏனைய நால்வரும் சென்று வெளியிட்டுள்ளனர்.

இச் செய்திகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கோ அன்றி கட்சித் தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ நேரடியாகவோ, எழுத்து மூலமாகவேனும் தெரிவிக்கவில்லை.

வெளியிட்டுள்ள செய்திகள் குறிப்பாக நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கட்சியின் பொருளாளர், “அவ்வாறான நிதி வரவு பற்றி கட்சியின் வங்கிக் கணக்கில் வரவே இல்லை.

குறிப்பிடப்பட்ட நிதி தொடர்பிலும் எந்த விபரங்களும் தனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியாது” என்று பதிலளித்துள்ளார். மத்திய செயற்குழு அப்பதிலை ஏற்றுக் கொண்டது.

பத்திரிகைச் செய்தி வெளியிட்டவர்கள் செய்திகளில் குறிப்பிட்டவாறு, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் பொறுப்பிலுள்ளவரும், தற்போது தேர்தல் வேட்பாளரும், முன்பு கனடாவிலிருந்தவருமான திரு.குகதாஸிடமிருந்தோ, திரு.சுமந்திரனிடமிருந்தோ எந்த தகவலும் கட்சிக்குத் தரப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு இச் செய்திகள் வெளியிட்டவர்களும் எந்த ஆதாரத்தையோ, ஆவணத்தையோ, முறைப்பாட்டையோ கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பொதுச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து கனடாவில் இவ்வாறு தெரிவிக்கப்படும் நிதி பற்றி அங்குள்ள எமது கூட்டமைப்புக் கிளை மூலம் விசாரனை நடத்த வேண்டுமென்று தங்களிடம் நினைவூட்டியிருக்கிறேன்.

இது பற்றி எந்த ஒரு ஆதாரமோ, ஆவணமோ, தொடர்பான அறிக்கையோ இதுவரை கிடைக்கவில்லை.

27/06 ஊடகத்துக்குச் சென்ற திருமதி. விமலேஸ்வரி மற்றும் நால்வரும் அதுவும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் கட்சிக்கு அபகீர்த்தியையும், வேட்பாளர்களுக்குப் பங்கமேற்படும் வகையிலும் திட்டமிட்டு ஊடகங்களுக்குச் செய்தி பரப்பியது பாரதூரமான விடயங்களாகும்.

உண்மைக்கு மாறான செய்திகளுமாகும். இவ்விடயம் தொடர்பில் கட்சியும் ஒரு விசாரணை நடாத்தி மக்களுக்குத தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான ஆதாரமற்ற கட்சிக்குப் பங்கமேற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

2020 மார்ச் பகுதியில் பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரித்த காலத்தில் ஊடக மையத்தில் வெளியிட்ட செய்திகளுக்காக திருமதி .விமலேஸ்வரி, திருமதி. மிதிலைச்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தல்கள் இருந்தபோதும் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டும்.

அடுத்து இப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக சுமந்திரன், சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், அறிவிப்புக்கள் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.

கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.

எனவே இக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும், குற்றஞ்சாட்டியவர்கள் பற்றியும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற்று பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் அமைப்பையும் கூட்டி உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் எடுத்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள், ஒழுங்கு நவடிக்கைக் கோவையின் படி விதிமுறைகளையும் மீறியவர்கள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/249795?ref=home-top-trending

Link to comment
Share on other sites

4 minutes ago, பெருமாள் said:

இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார்.

நடக்கவே நடக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மேலிடத்து ஒடரா..? ☺️

hqdefault.jpg

Link to comment
Share on other sites

போராளிகளை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு ஒருநீதி ஏனையோருக்கு இன்னொரு நீதியா?

அப்படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை வரலாற்றில் மிகமோசமான தமிழின விரோதிகள் தமிழரசுக்கட்சியினரே என்பது நிரூபணமாகும்! அதன் பின்னரே சிங்கள/இந்திய அரச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி தொடர்பாக யாழ் கள உறுப்பினர் பெருமாளுடைய கருத்தை அறிய ஆவல் 🤔

24 minutes ago, போல் said:

போராளிகளை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு ஒருநீதி ஏனையோருக்கு இன்னொரு நீதியா?

அப்படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை வரலாற்றில் மிகமோசமான தமிழின விரோதிகள் தமிழரசுக்கட்சியினரே என்பது நிரூபணமாகும்! அதன் பின்னரே சிங்கள/இந்திய அரச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறுவர்.

இதில் சந்தேகம் வேறு இருக்கிறதா உங்களுக்கு 😂

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

ஒரு கேள்விக்குக் கட்சியின் பொருளாளர், “அவ்வாறான நிதி வரவு பற்றி கட்சியின் வங்கிக் கணக்கில் வரவே இல்லை. குறிப்பிடப்பட்ட நிதி தொடர்பிலும் எந்த விபரங்களும் தனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியாது” என்று பதிலளித்துள்ளார். மத்திய செயற்குழு அப்பதிலை ஏற்றுக் கொண்டது.

தி.மு.க கட்சியில், நிதி தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டதால் கட்சி உடைந்தது. தமிழ்நாட்டுத் தமிழருக்கு எம்.யீ.ஆர் தலைவராக வந்தார்.

தமிழரசுக் கட்சியில், நிதி தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, கட்சி உடையுமா? ஈழத் தமிழருக்கு எவர் தலைவராக வருவார்.???? 

பி.கு:

எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை சனீசுவரன்.

q14.jpg?itok=Z_Ecmrt3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்தச் செய்தி தொடர்பாக யாழ் கள உறுப்பினர் பெருமாளுடைய கருத்தை அறிய ஆவல் 🤔

முதலில் சுமத்திரன் காசை சுருட்டிவிட்டார் என்று மாவையின்  மகன்தான் போட்டுடைத்தவர்  இப்ப அவர் என்ன சொல்றார் என்று கேட்டு சொல்லுங்கோ .

மாவையின்  மகனே உளறித்தள்ளி விட்டுது என்றகலக்கத்தில்  சுமத்திரன் உடனே ஓம் தன்னிடம் தான் காசு தரப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்துவிட்டார் பின்பு சுதாகரித்து கொண்டு வழக்கம்போல் இரட்டை நாக்கு விளையாட்டு கதை சொல்லதொடங்கிவிட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முதலில் சுமத்திரன் காசை சுருட்டிவிட்டார் என்று மாவையின்  மகன்தான் போட்டுடைத்தவர்  இப்ப அவர் என்ன சொல்றார் என்று கேட்டு சொல்லுங்கோ .

மாவையின்  மகனே உளறித்தள்ளி விட்டுது என்றகலக்கத்தில்  சுமத்திரன் உடனே ஓம் தன்னிடம் தான் காசு தரப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்துவிட்டார் பின்பு சுதாகரித்து கொண்டு வழக்கம்போல் இரட்டை நாக்கு விளையாட்டு கதை சொல்லதொடங்கிவிட்டார் .

(இதனைக் கூறுவதனூடாக அரசியல்வாதிகளின் ஊழல்களை எந்த விதத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை)

சில வ்டயங்களை புரிந்துகொள்ளுங்கோ பெருமாள்.

இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் சொக்கத் தங்கம் என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயம் காசு போயிருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காசின் தொகையோ , அது யார் மூலம் போனது, யாரிடம் போனது, அந்தக் காசை என்ன செய்தார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்குரிய விடயங்கள்தான். அதை மறுக்க முடியாது. இதனை புரிந்து கொள்ள சிறு பிள்ளையாலும் முடியும்.

ஆனால் இந்தப் பிரச்சனை எப்போது ஆரம்பித்தது, எதற்காகாக ஆரம்பித்தது என்பது முக்கியமல்லவா ? பிரச்சனையைக் கிளப்புபவர்களின் நோக்கம் என்ன. ஏன் தேர்தல் நேரத்தில் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் ? அவர்களின் நோக்கம் என்ன என்பதை நாம் கவனத்திலெடுக்க வேண்டும். அத்துடன் சிலரை மட்டும் குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன என்பதனையும் கவனிக்க வேண்டும். 

எனவே இதய சுத்தியில்லாமல் மேற்கொள்ளப்படும் எந்த நோக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அதிலும் தமிழர் என்கின்ற ரீதியில்,  இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் எம்மை பலவீனப்படுத்த எடுக்கப்படும் எந்த முயற்சியையும் அனுமதிக்க முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடு.

அம்புட்டுதே 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஏன் தேர்தல் நேரத்தில் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் ?

தேர்தல் நேரத்தில் தான் தான் சொக்க  தங்கம் மற்றவர்கள் எல்லாம் சுத்து மாத்து  என்ற தொனியில்  சுமத்திரன் கதைவிட தொடங்க கடைசியில் அவரே  அசிங்கப்பட்டு நிட்பதுதான் காலத்தின் கோலம் .

 

7 minutes ago, Kapithan said:

சிலரை மட்டும் குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன என்பதனையும் கவனிக்க வேண்டும். 

நேரே சொல்லுங்க சுமத்திரன் என்று முதலே சொன்னதுபோல் எந்த ஆளும் வெற்றி பெறட்டும் கவலையில்லை சுமத்திரன் வந்தால் போர் குற்ற விசாரணை நடந்த கதை போல் தமிழரின் அபிலாசைகள் அனைத்தும் சுமத்திரன் உதவியுடன் சிங்களத்தால் புதைக்கப்படும் தமிழர் மூலம் வென்று விட்டு அதே தமிழர்களுக்கு எதிராக சிங்களத்துக்கு சார்பாக நாடு நாடாக பறந்து  பிரச்சாரம் செய்வார் ஏனெனில்  அவருக்கு பணம் ஒன்றே முக்கியம் அத்துடன் சிங்களவர்களின் அரவணைப்பும் .

தமிழர்கள் அவரை வெற்றி பெற விடப்போவதில்லை குறுக்கு வழிகளில் எப்படியாவது  வெற்றி  பெறுவது எனும் முடிவில் அவர் இருக்கிறார் போல் உள்ளது நேற்றும் கருணாவுக்கு வாயால் கல்லெறிந்தவர் அந்த கோமாளியும் அதைக்கேட்டு இசகு பிசகா  எதையாவது கதைத்து  தொலைக்க போவுது .அத்துடன் திமிராகவே தன்னை தோற்கடித்து காட்டுமாறு சவால் வேறு விடுகிறார் நாள் இருக்குத்தானே எதுவும் நடக்கலாம் கடைசி நேரம்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சம்பந்தனும் இந்த நிதி தொடர்பான விடயங்களில் இலங்கையில் இருக்கும் மிகச்சொற்ப சுத்தமான அரசியல் வாதிகள் சிலரில் இருவர்! இந்த மாதிரி சும்மா ஆதாரமற்ற அறிக்கை விட்டு அதை சோசியல் மீடியாக்களில் பெருப்பிக்கும் வேலைகள் பல தடவைகள் செய்யப்பட்ட முயற்சிகள் தான்! என்ன தேர்தல் நெருங்க, சவுண்டும் கூடும்! 😎

தாயக மக்கள் தமக்கு தெரிந்ததை வைத்து முடிவெடுப்பர்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுமந்திரனும் சம்பந்தனும் இந்த நிதி தொடர்பான விடயங்களில் இலங்கையில் இருக்கும் மிகச்சொற்ப சுத்தமான அரசியல் வாதிகள் சிலரில் இருவர்! இந்த மாதிரி சும்மா ஆதாரமற்ற அறிக்கை விட்டு அதை சோசியல் மீடியாக்களில் பெருப்பிக்கும் வேலைகள் பல தடவைகள் செய்யப்பட்ட முயற்சிகள் தான்! என்ன தேர்தல் நெருங்க, சவுண்டும் கூடும்! 😎

தாயக மக்கள் தமக்கு தெரிந்ததை வைத்து முடிவெடுப்பர்!  

தாயக மக்கள் என்ன சம்மந்தரினதும் சுமந்திரன் வீடுகளிலா வாழ்கிறார்கள்?
அவர்களுக்கும் ஊருக்கு தெரிந்ததுதானே தெரியும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.