Sign in to follow this  
nunavilan

24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா

Recommended Posts

24 மணி நேரத்தில் மட்டும்  42,000 பேருக்கு கொரோனா

24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா

 

 
 
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 355 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 126,123 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

அங்கு இதுவரை 2.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1.12 இலட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் தாய் என்று உன்னைத் தான் - 2 பிள்ளைக்குக் காட்டினேன் மாதா   மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2 மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா   காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2 கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2 அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா    
    • கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ.. எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் ஓஓஒ ஓஒ பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே (கடவுள் தந்த) நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது கோடையில் இன்று இலையுதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி...  
    • நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும்  
    • கருணா ஆண் மகனாக இருந்தால் நிரூபித்து காட்டட்டும் – செல்வம்   போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணாவால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.” – என்றார். https://newuthayan.com/கருணா-ஆண்-மகனாக-இருந்தால/