Jump to content

தொல்நிலம் – போகன் சங்கர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது.

ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட அனுமதிக்கப்படாத மக்கள் இருக்கிறார்கள். அரசியல்சரி என்னும் பருவமழைக் காலத்துக்கு மறைவுப் பிரதேசத்தில் இருப்பதால் கவனத்தின் ஈரம் துளி கூடப்படாது உலர்ந்துபோய் காணாது மறைந்துவிட்ட பெருங்கூட்டங்கள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி இன்று பேசுவது என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்போக்காக பேசப்படும் நீதியின் குரல்களுக்கு சங்கடம் அளிக்கும் என்பதால் இருக்கலாம்.

ntca012-300x225.jpgaboriginals_1906-656x381-300x174.jpg

பாலஸ்தீனியத் துயரம் பற்றிப் பேசும் பலருக்கு ஆர்மீனியப் படுகொலைகள் பற்றியோ இன்னமும் அந்தத் துயரம் பதில் அளிக்கப்படாமலேயே இருக்கிறது என்பது பற்றியோ தெரிவதே கூட இல்லை. இவ்வளவுக்கும் ஆர்மீனியர்கள் நம் நடுவில் வாழ்ந்திருக்கிறார்கள். சென்னையில் அவர்கள் வாழ்ந்த தெரு அரண்மனைத் தெருவாகி இருக்கிறது. ஆர்மீனியர்கள் தொழுத தேவாலயம் இப்போது சரித்திரத்தின் குப்பைகளை மட்டும் தேடி வருகிற நபர்கள் வந்து போகிற ஓரிடமாக இருக்கிறது.

அமெரிக்கக் கறுப்பினத்தவர் துயரங்கள் குறித்து தெரிந்த நமக்கு நமது அடியில் இருக்கும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் அழித்தொழிப்பு பற்றிய போதம் முற்றிலும் இருக்காது. நமது கவிதைகளில் ஒரு மறைமுகத் துயரமாகவோ கூட இவர்களைப் பற்றிய குறிப்புகளை நீங்கள் காண்பதரிது.

சரித்திரம் குறித்த நமது குருட்டுத்தனம் புதிதல்ல. ஆனால் இந்தக் குருட்டுத்தனம் வழி தப்பி அலைவதல்ல. நாம் எவற்றின் மீதெலாம் கண்மூடிக்கொள்கிறோம் கண்திறந்து பார்க்கிறோம் என்பதில் ஒரு தேர்வு உள்ளது.

கேப்டன் குக் ‘1770 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த போது‘ அங்கே ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் குறைந்தது பதினைந்து இலட்சம் பேராவது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கேப்டன் குக் இங்கிலாந்து ராணிக்கு அது ஒரு ‘மனிதர் வாழாப் பிரதேசம்‘ என்று எழுதி அனுப்பினார். ஆகவே, இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்றும்.

aborigenal-300x199.jpg26dca2eb1d7db7b85642855f3e6b918b-300x300.jpg

வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சும்மா போகவில்லை. பெரியம்மை போன்ற தொற்று வியாதிகளையும் பால்வினை நோய்களையும் பரிசாகக் கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு சக்தி இல்லாத பூர்வகுடி மக்களில் 70 சதவீதம் பேர் அழிந்தனர். மிச்சமிருந்தவர்கள் வெள்ளையர்கள் செயற்கையாக ஏற்படுத்திய பஞ்சத்தினால் அழிந்தனர். இந்தியாவில் அவர்கள் ஏற்படுத்திய பஞ்சங்களிலிருந்து இது சற்றே வேறுபட்டது. பூர்வகுடிகள் நாடோடிகள் ஆனதால் அவர்களுக்கு நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மீது உரிமைகள் கிடையாது என்று வெள்ளையர்கள் சொன்னார்கள். எனினும் அப்படி உரிமை கோருகிறரவர்களுக்கு ‘வெள்ளையர்  நீதி‘யின் படி ஒரு வாய்ப்பும் கொடுத்தனர். அதாவது, அவர்கள் ஒரு நிலத்துக்கு சிப்பாய்களுடன் செல்வார்கள். அங்கிருக்கும் பூர்வகுடிகளை நோக்கி  ராணியின் பேரால் சரண் அடையும்படி மூன்றுமுறை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அவர்கள் சரணடையாவிட்டால் சுட்டுவிடுவார்கள். பிறகு அந்த நிலம் அவர்களுக்கே சட்டப்படி சொந்தமாகிவிடும். இப்படி அவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதுமே கிடைத்தது.

ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவில் நடந்து கொண்ட முறையுடன் உள்ள ஒற்றுமை இங்கு கவனிக்கத்தக்கது. இங்கே ராணி என்றால் அங்கே பைபிள். தென் அமெரிக்காவைக் ‘கண்டுபிடிக்கச் சென்ற‘ கார்டெஸ் அஸ்டெக் ராஜாவிடம் பரிசுப்பொருளாக ஒரு பைபிளைக் கொடுத்தார். ஒரு புத்தகத்தையே அதுவரை பார்த்திராத செவ்விந்திய அரசர் பயந்து அதைக் கீழே எறிந்தார். அவர் விவிலியத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று அவரை சிறைப்பிடித்துக் கொன்றார்கள். இவ்வாறு பூர்வகுடிகள் வளமான பகுதிகளை விட்டுத் துரத்தப்பட்டு பாலைவனங்களில் அலைந்து திரிய வேண்டியிருந்தது. அவர்களில் யாராவது ஒருவர் அந்திக்குப் பிறகு நகரத்தில் காணப்பட்டால் எந்தக் கேள்வியுமின்றி அவரைச் சுட ஒரு வெள்ளைக்காரருக்கு அனுமதி இருந்தது. அவர்களில் மிச்சமிருந்த வாலிபர்களும் வெள்ளையர்கள் கொண்டு சென்ற போதை மருந்துகளினால் அடிமையாகி சீரழிந்தனர்.

26dca2eb1d7db7b85642855f3e6b918b-300x300

இருப்பினும் பூர்வகுடிகள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கவே செய்தனர். ஆனால் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. மேலும் அவ்வாறு எதிர்ப்பவர்கள் வெள்ளையர்களால்  கொடூரமாகத் தண்டிக்கபட்டார்கள். அவர்களது தலைகளை வேட்டையாடும் வீரர்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பூர்வகுடிகளின் குழந்தைகளின் தலைகளை மண்ணில் புதைத்துவிட்டு கோல்ப் போல ஒருவரால் எவ்வளவு தொலைவு அந்தத் தலைகளை உதைத்துச் செலுத்த முடியும் என்று போட்டி நடத்தினார்கள். ஆண்கள் பெண்களின் கழுத்தை அறுத்துவிட்டு அவர்கள் அலறிக்கொண்டே ஓடி வீழ்வதை ரசிப்பதும் குழந்தைகளை உயிரோடு நெருப்பில் எறிவதும் கூட நடந்தது.

இது போதாதென்று அவர்களது பண்பாட்டை அழிப்பதும் முக்கியமெனக் கருதப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன. அமெரிக்காவில் நடந்தது போலவே மிசனரிகள் வரவழைக்கப்பட்டு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரு காலனிய அரசு தனது காலனியில் செய்யும் முதல் அறிவுப்பூர்வமான ஆக்கிரமிப்பு அதன் தொன்மங்களைத் தாக்குவது என்கிறார் பனான். ஜே சி குமரப்பா ‘ஆக்கிரமிக்கிறவர்களின் மதம் என்பது அந்த நாட்டின் ராணுவத்தின் ஒரு பகுதிதான்’ என்கிறார். ஆஸ்திரேலியாவிலும் அவர்கள் அதையே செய்தார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் பெரிய பலன் எதுவும் இல்லாதிருக்கவே பூர்வகுடிகளின் குழந்தைகளைப் ‘பண்படுத்துவதற்காக’ அவர்களைப் பெற்றோரிடமிருந்து வலுவாகப் பிடுங்கிப் பயிற்றுவிக்கும் சட்டமும் அவர்களை அடைத்து வைக்க கொட்டடிகளும் தோன்றின. 1962 வரை இது அமலில் இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்ட இந்த கொட்டடிகளில் அவர்கள் தங்களது தாய்மொழியில் ஒரு சொல் பேசினாலும் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

aboriginals_1906-656x381-300x174.jpg

வலுக்கட்டாயமாக அவர்கள் மீது ஒரு கலாச்சார மறதியும் தாழ்வுணர்ச்சியும் சுமத்தப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் நிலத்தோடு பிணைந்த ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். அவர்களது ஆன்மீகமும் நிலத்தோடு இணைந்ததே. வெள்ளையர்கள் அவர்கள் நிலத்தையும் நிலம் சார்ந்த ஆன்மாவையும் சேர்த்தே ஆக்கிரமித்தார்கள். மாயர்களின் மொழியை அழித்தது போல அவர்களது மொழி, தொன்மங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அவர்கள் தங்களது வாய்மொழிக்கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தாங்கள் இழந்த வரலாற்றைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருந்தார்கள்..

சமகாலத்தில் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் நூல்கள் வெளியாகத் துவங்கி இருக்கின்றன.1929 ஆம் ஆண்டு David Unaipon எழுதிய ‘நாட்டுக்கதைகள்’ தான் முதல்முதலாக ஒரு ஆஸ்திரேலிய பூர்வகுடி எழுத்து வடிவில் கொண்டுவந்த படைப்பாகும். கேத் வால்கர் என்ற ஆங்கிலப் பெயரும் Oodgeroo Noonuccal என்ற பூர்வகுடிப் பெயரும் கொண்ட பெண்தான் பூர்வகுடிகளின் முதல் கவி. அதன்பிறகு Colin Johnson-ன் நாவல் என்று பூர்வகுடிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர். எனினும் இவை ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலம் பேசும் சில நாடுகளிலும் மட்டும் சிறிய அலைகளை எழுப்பி ஓய்ந்துவிட்டன. குறிப்பாக, ஏறக்குறைய இதே போன்றதொரு வரலாற்றினைக் கொண்ட ஆங்கில இலக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் அப்படியே சுவதந்தரித்துக் கொள்ளும் நம்மிடையே இந்த நூல்கள் பற்றிய சிறிய குறிப்புகள் கூட எழுதப்படவில்லை என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. ஆனால் யோசிக்கையில் நமது நீதியின் இலக்கியத்தின் கருணையின் போக்குகளை தீர்மானிக்கிறவர்கள் தான் ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிகளை ஒடுக்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் இது இப்படித்தான் நிகழும். வேறு வழி இல்லை.

david_unaipon_0-300x169.jpg

டேவிட் உனைபோன்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நிகழ்ந்த நல்ல விசயங்களில் ஒன்று காலனி ஆதிக்க நாடுகளின் பிடி சற்றே தளர்ந்தது. ஒதுக்கப்பட்ட குரல்கள் சற்றே உயர்த்தப்பட முடிந்தது. இன்றைய சூழலில் இருக்கும் பெரும்பாலான தேசியங்கள் இப்படி உருவானவையே. ஆனாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் இன்னமும் வனாந்தரங்களில் திரிகிறவர்களாகவே இருக்கிறார்கள். தோலின் நிறத்தைத் தவிர பிற எல்லா வகைகளிலும் வெள்ளைப்படுத்தப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப்படி தங்களை மாற்றிக் கொண்டவர்களும் சம மதிப்பு கொண்டவர்களாக ஆகிவிடுவதில்லை என்ற இரட்டை நிலைதான் இன்னமும் அங்கு இருந்து வருகிறது.

kk-300x169.jpg

இப்படி தாங்கள் எல்லா தளங்களிலும் அழித்தொழிக்கப்படுவதை கேத் வால்கரின் ‘நாங்கள் போகிறோம்‘ என்ற இந்தக் கவிதை அடையாளப்படுத்துகிறது

“அவர்கள் அந்த சிறிய நகரத்துக்குள் வந்தார்கள்.
ஒரு அரை நிர்வாணக் கூட்டம். அமைதியாக அடங்கி..
அவர்களது இனக்குழுவின் மிச்சம்..

அவர்கள் அவர்களது பழைய போரா நிலத்துக்கு வந்தார்கள்.
அங்கே இப்போது வெள்ளையர்கள் அங்குமிங்கும் எறும்புகள் போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் முகவரின் ‘இங்கே  குப்பை கொட்டலாம்’ என்ற அறிவிப்பு அங்கே இப்போது தொங்குகிறது.

அது அவர்களது போரா வட்டங்களை பாதி மறைத்து விட்டது.

அவர்கள் குழப்பத்துடன் அமர்கிறார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளியே சொல்ல முடியாது.
நாம் இப்போது இங்கே அந்நியரைப் போல. ஆனால் உண்மையில் வெள்ளையர்தான் இங்கு அந்நியர்கள்.
நாம் இங்குள்ளவர்கள். பழைய வழியைச் சார்ந்தவர்கள்.
நாம்தான் போரா குலம். நாம்தான் போரா நிலம்.
நாம் நமது புனிதச் சடங்குகள், மூத்தோரின் சட்டங்கள்.
நாம் கனவு நேரத்தின் அற்புதங்கள் என்று நமது தொல்கதைகள் சொல்லின.
நாம் கடந்த காலம். சிரிப்புப் போட்டிகள், வேட்டை மற்றும் நடக்கும் வெட்டவெளி முகாம்களின் கணப்புத் தீமூட்டங்கள்.
நாம் கபம்பா மலைகளின் அப்புறம் ஒளிரும் பயங்கர வேகமுடைய மின்னல்கள்.
பிறகு தொடரும் பெருத்த இடிச் சத்தமும். அந்த ஓசையிடும் நபர்….
நாம் குளத்தை வெளிறச் செய்யும் அமைதியான காலை விடியல்கள்.
நாம் முகாம் நெருப்புகள் தணியும் போது ஊர்ந்து வரும் நிழல் பூதங்கள்.
நாம் இயற்கை. நாம் கடந்த காலம். சென்று ஒழிந்து சிதறிவிட்ட பழைய வழிகள்.
புதர்கள் போய்விட்டன. வேட்டை போய்விட்டது. சிரிப்பு போய்விட்டது.
கழுகு போய்விட்டது. ஈமுவும் கங்காருவும் இந்த இடத்தை விட்டுப் போய்விட்டன.
போரா வட்டம் போய்விட்டது.
போரா திருவிழா போய்விட்டது.
நாங்களும் போகிறோம்.”

உலகில் பின்காலனிய ஆய்வுகளின் மீதான கவனம் ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய பூர்வகுடியினரின் வாய்மொழிக் கதைகளையும் பாடல்களையும் கவிதைகளையும் தொகுக்கும் உந்துதல் அவர்கள் நடுவில் எழுந்தது. பூர்வகுடிகளின் குரல்களில் முக்கியமான ஒருவரான கெவின் கில்பர்ட் விராஜ்டுரி ‘கருப்பு ஆஸ்திரேலியாவின் உள்ளே‘ என்ற ஒரு தொகுப்பை வெளியிட்டார்.

கெவின் கில்பர்ட் தனது வெள்ளையின மனைவியைக் கொன்றதாக அவரது இருபத்து மூன்றாவது வயதில் குற்றம் சாட்டப்பட்டு பதினான்கு வருடம் சிறைப்படுத்தப்பட்டார். அது குறித்து அவர் சொல்வது, ‘’நான் இதுபற்றி ஒன்று மட்டுமே சொல்ல முடியும். நான் ஒரு கறுப்புப் பையன். ஒரு வெள்ளை நீதிமன்றத்ததில் நீதிபதி, ஜுரி, வக்கீல் எல்லோருமே வெள்ளையராக இருந்த ஒரு நீதிமன்றத்தில் நான் ஒரு கறுப்புப் பையன். எனக்கு என்ன நீதி கிடைத்திருக்க முடியும் ?’

kevin-gilbert-thumb-300x200.jpg

கெவின் கில்பர்ட்

கெவின் கில்பர்ட் எட்டு உடன்பிறந்தோர் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாக 1933 ல் பிறந்தார். ஏழு வயதில் பெற்றோர் இருவரையும் இழந்தவர். நிறவெறி கடுமையாக இருந்த அந்தக் காலகட்டம் பற்றி இவ்வாறு அவர் நினைவு கூர்கிறார்.

’’இரவு சினிமாவுக்குப் பிறகு நாங்கள் நகருக்குள் தங்கக் கூடாது. வெள்ளையர்க்கும் எங்களுக்கும் ஒரு தடுப்புக் கயிறு எல்லா இடங்களிலும இருக்கும். நாங்கள் மருத்துவமனைகளின் உள்ளே செல்ல முடியாது. வராண்டாவில்தான் கிடக்க வேண்டும். அங்கிருக்கும் தலையணை, போர்வைகளில் ‘கறுப்பர்!’ என்று எழுதி இருக்கும். 1950கள் வரை நாங்கள் மக்கள் தொகைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பண்படுத்துவதற்காக தனியாக மிசனரிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொட்டடிகளில் இருக்கும் எங்கள் சகோதரர்களைக் காண நாங்கள் அனுமதி வாங்க வேண்டும். பல நேரங்களில் அது கிடைக்காது. குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுவாகப் பிடுங்கப்பட்டார்கள். எங்களது நாய்களை குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்கு வெள்ளையர்கள் பயன்படுத்துவார்கள். சில நகரங்களுக்கு பத்து மைல் சுற்றளவில் கூட நாங்கள் போக முடியாது. இரண்டாம் உலகப்போரில் வெள்ளையர் சார்பில் போரிட்ட எங்கள் இனத்தவருக்கும் இதே கதிதான்.

ஆம். நான் கருப்பாய்ப் பிறந்தேன். எங்களைத் தகரக் கொட்டகைகளிலும் பாலைநிலங்களிலும் வாழ நிர்ப்பந்தித்துக் கொண்டே அடிக்கடி ‘நீதி, ஜனநாயகம், கிறித்துவ அன்பு‘ என்றெல்லாம் கூச்சமிலாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையர் சமூகத்தின் நடுவே கருப்பராய்ப் பிறந்தேன். ஆனால் அவ்வளவு வறுமையிலும் கந்தலிலும் மிகச் சிலவேயான உடமைகளிலும் கூட எங்களது அன்பு தூய்மையாகவே இருந்தது. எங்களது உண்மை கலப்படமில்லாததாகவே இருந்தது. எங்களது ஆன்மிகம் இந்த வெள்ளைக் கிறித்துவர்கள் எவரிடமிருந்ததை  விடவும் உயர்வானதாகவே இருந்தது.”

“கருப்பு ஆஸ்திரேலியாவின் உள்ளே” மிக முக்கியமான ஒரு கவிதைத் தொகுப்பாகும். ஆஸ்திரேலிய பூர்வகுடிக் கவிஞர்களில் முக்கியமான குரல்களை உள்ளடக்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகன் சங்கரின் எழுத்துக்கள் பிடிக்கும். இந்தக் கட்டுரை எந்தத் தளத்தில் வந்தது மருதர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

போகன் சங்கரின் எழுத்துக்கள் பிடிக்கும். இந்தக் கட்டுரை எந்தத் தளத்தில் வந்தது மருதர்?

உண்மையிலேயே தெரியவில்லை ....
இண்டர்நெட்டில் மேயும்போது எப்படியோ அங்கு போய்விட்டிட்டேன் 

இன்னொருமுறை சென்றால் இங்கு இணைத்தது விடுகிறேன்.
நான் நினைக்கிறன் இது யாழ் கள விதி மீறல் என்று 

உண்மையில் மூலம் தெரியவில்லை (எழுதியவர் பெயர் இருப்பதால் ஓகே என்று நினைக்கிறன்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

உண்மையிலேயே தெரியவில்லை ....
இண்டர்நெட்டில் மேயும்போது எப்படியோ அங்கு போய்விட்டிட்டேன் 

இன்னொருமுறை சென்றால் இங்கு இணைத்தது விடுகிறேன்.
நான் நினைக்கிறன் இது யாழ் கள விதி மீறல் என்று 

உண்மையில் மூலம் தெரியவில்லை (எழுதியவர் பெயர் இருப்பதால் ஓகே என்று நினைக்கிறன்) 

தேடிப்பார்த்தால் நான் அடிக்கடி போகும் இணைய இதழில்தான் வந்துள்ளது. 😮

http://tamizhini.co.in/2019/01/13/தொல்நிலம்-போகன்-சங்கர்/

ஆனால் சிறுகதைகளையும், கவிதைகளையும் படிப்பதால் தவறவிட்டுவிட்டேன்.

கட்டுரையின் அடியில் இருந்த கவிதை.

spacer.png

அதிலிருந்து ஒரு கவிதை இது.

W.S .Russell எழுதிய ‘வளர்ச்சிப் பணியாளர்கள்‘ என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.

“எனது இருதயத்தின் ஆழத்தில் செலுத்தப்படும் ஒரு ஈட்டி போல
ட்ரில் நிலத்தைத் துளைக்கிறது.
யுலு குடியினர் ஆன்மாவை விடுவிப்பது போல
கம்பெனியினர் நிலத்தைக் களிப்புடன் கொல்கின்றனர்.

ஒரு கேடயத்தைப் போல நான் இப்போது
வார்த்தைகளைக் கையாள்கிறேன்.
என்னால் செரிக்க முடியாத விஷயங்களைக் காண நேரிடும்போது!

நான் இந்த நிலம். இந்த நிலம் என்னுடையது.
என்னால் இதை மாற்ற முடியாது.
கம்பெனியை என்னுடையதாக நினைக்கவோ
எனது நிலத்தை உங்களுக்கு வழங்கவோ முடியாது.

ஒருவேளை நீங்கள் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளும் போது
நீங்கள் அதனுள் வாழ முடிகிற போது
நீங்கள் அதனைப் புரிந்துகொள்கிறோம்
என்று பெருமையுடன் சொல்லமுடிகிறபோது….

இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன்.
அது எனது சொந்தமல்ல.
யாரால் தாயைத் தரமுடியும்?

ஆனால் அதைப் பெருமையுடன் உன்னுடன் நான் பகிர்ந்து கொள்ளமுடியும்.
பிறகு உன்னை என் சகோதரன் என்று அழைக்கவும்…..”

 

போகன் சங்கரின் “போக புத்தகம்” கிண்டிலில் படித்த்பிருந்தேன். அதில் கொப்பி பண்ணிய மேற்கோள்.

நிறையப் படிக்கிறவனும் எழுதுகிறவனும் சாதாரண மனிதர்களைவிட அதிகம் பதில்களை வைத்திருப்பான் என்றுமனிதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அவனிடம் அதிகக் கேள்விகளே இருக்கின்றன. அவற்றிற்குச் சாதாரண மனிதர்களிடம் இருக்கிற பதில்கள், சமாதானங்கள்கூட அவன் பையில் இருப்பதில்லை. மற்றவர்களைவிட அவன் தன் போதாமையை, முட்டாள்தனத்தை மிக அதிகமாக, மிகத் தீவிரமாக ஒவ்வொருநொடியும் உணர்ந்தபடியே இருக்கிறான்.”

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி மருதர்...நானும் வாசித்தேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

தேடிப்பார்த்தால் நான் அடிக்கடி போகும் இணைய இதழில்தான் வந்துள்ளது. 😮

http://tamizhini.co.in/2019/01/13/தொல்நிலம்-போகன்-சங்கர்/

ஆனால் சிறுகதைகளையும், கவிதைகளையும் படிப்பதால் தவறவிட்டுவிட்டேன்.

கட்டுரையின் அடியில் இருந்த கவிதை.

spacer.png

அதிலிருந்து ஒரு கவிதை இது.

W.S .Russell எழுதிய ‘வளர்ச்சிப் பணியாளர்கள்‘ என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.

“எனது இருதயத்தின் ஆழத்தில் செலுத்தப்படும் ஒரு ஈட்டி போல
ட்ரில் நிலத்தைத் துளைக்கிறது.
யுலு குடியினர் ஆன்மாவை விடுவிப்பது போல
கம்பெனியினர் நிலத்தைக் களிப்புடன் கொல்கின்றனர்.

ஒரு கேடயத்தைப் போல நான் இப்போது
வார்த்தைகளைக் கையாள்கிறேன்.
என்னால் செரிக்க முடியாத விஷயங்களைக் காண நேரிடும்போது!

நான் இந்த நிலம். இந்த நிலம் என்னுடையது.
என்னால் இதை மாற்ற முடியாது.
கம்பெனியை என்னுடையதாக நினைக்கவோ
எனது நிலத்தை உங்களுக்கு வழங்கவோ முடியாது.

ஒருவேளை நீங்கள் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளும் போது
நீங்கள் அதனுள் வாழ முடிகிற போது
நீங்கள் அதனைப் புரிந்துகொள்கிறோம்
என்று பெருமையுடன் சொல்லமுடிகிறபோது….

இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன்.
அது எனது சொந்தமல்ல.
யாரால் தாயைத் தரமுடியும்?

ஆனால் அதைப் பெருமையுடன் உன்னுடன் நான் பகிர்ந்து கொள்ளமுடியும்.
பிறகு உன்னை என் சகோதரன் என்று அழைக்கவும்…..”

 

போகன் சங்கரின் “போக புத்தகம்” கிண்டிலில் படித்த்பிருந்தேன். அதில் கொப்பி பண்ணிய மேற்கோள்.

நிறையப் படிக்கிறவனும் எழுதுகிறவனும் சாதாரண மனிதர்களைவிட அதிகம் பதில்களை வைத்திருப்பான் என்றுமனிதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அவனிடம் அதிகக் கேள்விகளே இருக்கின்றன. அவற்றிற்குச் சாதாரண மனிதர்களிடம் இருக்கிற பதில்கள், சமாதானங்கள்கூட அவன் பையில் இருப்பதில்லை. மற்றவர்களைவிட அவன் தன் போதாமையை, முட்டாள்தனத்தை மிக அதிகமாக, மிகத் தீவிரமாக ஒவ்வொருநொடியும் உணர்ந்தபடியே இருக்கிறான்.”

 

நன்றி 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையல் செய்த கெடுமைகள் பல, இன்னும் அவர்கள் அதிலிருந்து மீளவில்லை,

இப்பதான் கொஞ்சம் முன்னேறி வருகின்றார்கள், ஆனா பலர் குடிக்கு அடிமை,

கலையே குடிக்க தொடங்கிவிடுவார்கள், கடைகளுக்குள் இவர்கள் போனால் பின்னால் ஒருவர் திரிவார். கையில் பணமில்லையென்றால் களவெடுப்பார்கள் அல்லது போகிற வருகின்றவர்களிடம் கேட்பார்கள்.

நான் வந்த புதிதில் காலை வேலைக்கு போக பஸ் ஏற நின்ற என்னிடம் பணம் கேட்க எனக்கு புதிதாக இருந்திச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

வெள்ளையல் செய்த கெடுமைகள் பல, இன்னும் அவர்கள் அதிலிருந்து மீளவில்லை,

இப்பதான் கொஞ்சம் முன்னேறி வருகின்றார்கள், ஆனா பலர் குடிக்கு அடிமை,

கலையே குடிக்க தொடங்கிவிடுவார்கள், கடைகளுக்குள் இவர்கள் போனால் பின்னால் ஒருவர் திரிவார். கையில் பணமில்லையென்றால் களவெடுப்பார்கள் அல்லது போகிற வருகின்றவர்களிடம் கேட்பார்கள்.

நான் வந்த புதிதில் காலை வேலைக்கு போக பஸ் ஏற நின்ற என்னிடம் பணம் கேட்க எனக்கு புதிதாக இருந்திச்சு

  அப்படியொரு நிலையை இவர்கள் திட்டம் இட்டுத்தான் உருவாக்கி இருக்கிறார்கள் 
எதிர்கால எதிர்பார்ப்புக்கள் இல்லமால் எல்லா உரிமைகளையும் பறித்துவிட்டு 
பின்பு தாராள மதுபானம் கொடுத்து ஆண்களை அடிமை செய்வதன் மூலம் 
ஒரு சமூகத்தை அடிமைப்படுத்திவிடலாம்.

இது இப்போது ருஷ்ய எல்லைப்பகுதிகளில் நடக்கிறது 
அமெரிக்க இராணுவம் ஓபியத்துக்கு காவல் காக்கவே ஆப்கானிஸ்தானில் இப்போ இருக்கிறது  
அதிக அளவான ஓபியம் ஆப்கானிஸ்தானில் இருந்து ருஷ்ய எல்லைப்பகுதி ஊடாக 
ருஸ்யாவுக்கு செல்கிறது பண கஷ்ட்டம் எதிர்பார்ப்பு அற்ற இளைய தலைமுறை 
ஒப்பியத்துக்கு அடிமையாகிறது 

ஹிட்லர் யூதர்கள்மீது சிறுவயதிலேயே அதிக வெறுப்பு கொள்ள அதுதான் காரணம் 
ஆஸ்திரிய அரசியல்வாதிகளை யூத பெண்களை விலைமாதராக்கி பெண்ணுக்கும் மதுவுக்கும் 
அவர்களை அடிமைபடுத்தி தமக்கு சாதமானது அனைத்தையும் சாதித்து வந்தார்கள் 
உண்மையான ஆஸ்திரியர்களும் ஜெர்மனியர்களும் ஏழைகள் ஆகிக்கொண்டு வந்தார்கள் 

தமிழர்களுக்கும் இதுதான் மதம் மூலம் நடந்தது 
இந்து மதம் என்று இல்லாத ஒன்றை உருவாக்கி இங்கிருந்ததையும் 
அதுக்குள் கலந்து கொத்துரொட்டி போட்டு கொடுத்தார்கள் 
இப்போ முட்டாள் தமிழர்கள் ஆடசியும் இன்றி அரசும் இன்றி 
இல்லாத இந்துமதத்துக்கு முண்டு கொண்டு இருக்கிறார்கள் 
வடமொழி சம்ஸ்கிருதம் கலந்து தமிழ் மொழியையும் ஒரு கொத்துரொட்டி 
மொழியாக்க எடுத்த முயற்சி மட்டும் பெரிதாக வெல்லவில்லை 
அதை இப்போ ஆங்கில மோகம் ஊட்டி செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.