Jump to content

தீர்வாம் தேர்தலாம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கடைசி ஆயுதத்தையும் 
ஐயா கையில 
எடுத்துப் பார்த்தார் 
சமரச அரசியலோடு 
சமாதானம் வரும் என்று 
சிங்கக் கோ(கொ)டியை 
உயர்த்திப் பிடித்தார் 
ஐயா பாவம் 
இப்போ வெறும் 
கையோடு நிற்கிறார் 
அடுத்த தேர்தலைப் பார்த்தபடி
அது சரி 
அவன் கொடுத்தா தானே 
ஐயாவும் வேண்டித் தருவார்
சும்மா சொல்லுங்கோ ஐயா 
தீபாவழிக்குள் தீர்வு 
கிடைக்கும் என்று 
பாவம் சனம் நம்பி வந்து 
வாக்குப் போடும்
ஏமாந்தே பழகப்பட்ட 
சனம் நாங்க ஐயா 
இந்தியா வரும் என்றே 
இருந்த சனங்க நாங்க ஐயா 
ஆன அவனும்  இவனும் 
முழுசா தின்று முடிச்சான் 
முள்ளிவாய்க்காலை ஐயா 
இன்னும் ஒரு முறை 
ஏமாறுவதில் 
என்ன குறை ஐயா
புலிகள் போனால் 
சமாதானம் வரும் 
என்ற சனத்தையும் 
சந்திச்சுப் பாருங்க ஐயா 
மாற்று வழி ஏதும் 
கேட்டுப் பாருங்கோவன்
மசியுமா சிங்களம் என்று.

பா.உதயன் ✍️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு உதயன், தேர்தல் நேரத்தில் நல்லதொரு கவிதை. இப்படியே அடுத்த தேர்தலும் வந்து போகும், எம் நிலை மாறாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 07:05, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு உதயன், தேர்தல் நேரத்தில் நல்லதொரு கவிதை. இப்படியே அடுத்த தேர்தலும் வந்து போகும், எம் நிலை மாறாது 

சரியாகச் சோன்னீர்கள் உடையார்.எதையுமே தானாக எந்த உரிமையும் சிங்கள ஆதிக்கம் எமக்குத் தராது .இணக்க அரசியல் செய்தால் என்ன சமரச அரசியல் செய்தால் என்ன ஒன்றுக்குமே இறங்கி வர மாட்டார்கள்.அதற்காகா நாம் போராடாமல் இருக்க முடியாது.பல ஆண்டுகளாக போராடுகிறான் பாலைதீனியன் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.சுய உரிமையை வென்று எடுத்த நாடுகளும் உண்டு.சுய உரிமைக்காய் தொடர்ந்து போராடும் மக்களும் உண்டு.சிங்கள மக்களோடு சேர்ந்து எமது உரிமையையோடு வாழ விருப்பம் தான் ஆனால் அவர்கள் தான் எம்மை மரத்தில் படரும் கொடி என்கிறார்களே.எமக்கு எந்த பாரம்பரிய நிலமும்  சொந்தம் இல்லை என்கிறார்களே.இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்களே.வரலாறுகளை எல்லாம் மாறுபட்டு திரித்து சொல்கிறார்களே.அப்போ தமிழர் எப்படி இணக்க அரசியல் செய்வது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.