Jump to content

மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு!

14-Secrets-Lawyers-Will-Never-Tell-You-8-960x640.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.

அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கோரியுள்ளனர்.

இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரமும் அந்த இளம் சட்டத்தரணியிடம் இல்லை. அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நாளை சட்டத்தரணிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் மன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

https://newuthayan.com/மது-போதையில்-பயணித்த-இளம/

 

 

Link to comment
Share on other sites

யாழிலுள்ள நிறைய சட்டத்தரணிகளின் நிலை படுமோசமான இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம்.... பொது வெளியில், தண்ணி 🍺 அடிக்க கூச்சப்பட்டு, அலுமாரிக்குள் ஒளித்து வைத்து அடிப்பார்கள்.

இப்போ கூச்சம் இல்லாமல்.... எல்லாம் மரத்துப் போய் விட்டது போலுள்ளது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Gowin said:

யாழிலுள்ள நிறைய சட்டத்தரணிகளின் நிலை படுமோசமான இருக்கு.

நான் ஒரு லண்டனிலுள்ள நண்பருக்கு, யாழ்ப்பாணத்தில் அலுவலகம் போட்டு தொழில் ஆரம்பித்த ஒரு இளம் புரகிராசியாரை அறிமுகம் செய்தேன்.

பெரும் ஆரவாரத்துடன் அப்பொய்ட்மென்ட் எல்லாம் கொடுத்து, ஸ்கேய்பில் பேசினார்.

பிறகு டோட்ஜ் பண்ண தொடங்கி விட்டார். எனது அழைப்புகளுக்கும் பதில் இல்லை. நல்ல காலம் அட்வான்ஸ் வாங்கவில்லை.

பிறகுதான் தெரிய வந்தது. அவர் ஒரு சீனியர்களுக்கு கீழ வேலை செய்யாததால், கோர்ட்டில் பேச அனுபவம் இல்லையாம். உறுதி தயாரிப்பது தான் மெயின் வேலையாம். உண்மையில், ஒரு சீனியர்களும் இவரை தமக்கு கீழே எடுத்து பயிற்சி கொடுக்க முடியாதவாறு, இவரது ட்ராக் ரெகார்ட் இருந்திருக்கிறது. இதைத்தான் சொல்லுறது அட்வான்ஸ் லெவல் படிக்கும்போது, கண்ணா, பின்னா எண்டு திரியக்கூடாது.

இதை முதலிலேயே சொல்ல தைரியம் இல்லை. நண்பர் தப்பினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி என்றில்லை, ஆசிரியர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். ஆனால் அதை உணரும் நிலையில் யாருமே இல்லை. தமிழ் சமூகம் மிக பெரிய சீரளிவிலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

சட்டத்தரணி என்றில்லை, ஆசிரியர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். ஆனால் அதை உணரும் நிலையில் யாருமே இல்லை. தமிழ் சமூகம் மிக பெரிய சீரளிவிலுள்ளது.

கவலையான விடயம், இது வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களும் இதற்கு ஒரு காரணம், பாட்டில் பாட்டிலா வாங்கி கொண்டு போகின்றார்கள் ஊரில் உள்ளவர்களுக்க என,

சிங்களத்திற்கு நல்ல வருமான இதனால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

கவலையான விடயம், இது வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களும் இதற்கு ஒரு காரணம், பாட்டில் பாட்டிலா வாங்கி கொண்டு போகின்றார்கள் ஊரில் உள்ளவர்களுக்க என,

சிங்களத்திற்கு நல்ல வருமான இதனால்...

வருமானம் மட்டுமல்ல, அவர்களின் வேலையை இலகுவாக்குகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது போதையில் இருப்பதை முகத் தோற்றளவில் அறிந்துகொண்ட பொலிசார் ...

எல்லாம் லஞ்சம் குடுக்கயில்ல எண்ட கோபம்தான். 😂😂

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.