Jump to content

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

"பூமியில் மனிதனின் இருப்பிற்கு ஒரேயொரு பாரிய சவால் வைரசுகளே!" - டாக்டர். ஜோஷுவா லெடபெர்க், (மருத்துவ நோபல் பரிசு 1958).

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் , நாம் இன்னும் சில வைரஸ் நோய்களால் சுவாசப் பாதிப்பிற்குள்ளாவது வழமை. இன்புழுவன்சா எனப்படும் fபுளூ வைரஸ் தான் இந்த குளிர்கால சுவாசத்தொற்றுகளின் பிரதான காரணி. இன்புழுவன்சாவோடு சேர்ந்து முக்கியத்துவம் குறைந்த மூன்று வகையான கொரனாவைரசுகளும், றைனோ வைரஸ் எனப்படும் மூக்கொழுகல் வைரசும், RSV எனப்படும் இன்னொரு வகையான வைரசும் எம்மைக் குளிர்காலங்களில் தாக்குகின்றன.ஆனால், எல்லா வைரசுகளும் ஒன்றாக ஒரே காலத்தில் இப்படி வலம் வரும் போது, கோவிட் தொற்றையும் இவற்றையும் எப்படி இனம்பிரித்து அறிவது? 

இன்புழுவன்சாவுக்கு தனியான பரிசோதனை உண்டு
அதிர்ஷ்டவசமாக இன்புழுவன்சா வைரஸ் எங்கள் மூக்கில்/தொண்டையில் இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளக் கூடிய பரிசோதனைகள் ஏற்கனவே புளக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக வலம் வரும் இன்புழுவன்சா அனேகமானோரில் தீவிரம் குறைந்த நோயை மட்டுமே ஏற்படுத்துவதால், இந்த பரிசோதனையைச் செய்யாமலே இது காலவரை நாம் சமாளித்து வந்திருக்கிறோம். எதிர் வரும் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுவாச அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த இன்புழுவன்சா பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெறும் பரிசோதனையோடு மட்டுமன்றி, மக்களும் சில விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால், கோவிட் இன்புழுவன்சாக் குழப்பங்களைக் குறைக்கலாம்!  

இன்புழுவன்சா தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும், உலகில் வலம் வரும் மூன்று வகையான இன்புழுவன்சா வைரசுகளுக்கெதிராக தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் தயார் செய்து வழங்குகின்றன. இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு, இன்புழுவன்சா தொற்று ஏற்பட்டால் அவருக்கு நோய் வரலாம், ஆனால் தீவிர நோயாக அது இருக்காது. எனவே தான், வருடாந்தம் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50% பேரில் நோய் வந்தாலும் கூட, அது தீவிர நோயையோ, மரணத்தையோ ஏற்படுத்தாமல் தடுப்பதால், இன்புழுவன்சா தடுப்பூசி என்பது ஒரு உயிர் காப்பு மருந்து போலக் கருதப் படுகிறது. இன்புழுவன்சா தடுப்பூசியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு காரணம் herd immunity எனப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி". எந்த சமூகத்திலும் இன்புழுவன்சா நோயினால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஆனால் மருத்துவ காரணங்களால் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியாத மக்கள் சிலர் இருப்பர். அவர்கள் இன்புழுவன்சா நோயினால் தாக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடல் நிலை கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் இன்புழுவன்சா வைரசு பரவுவது குறைந்து, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோர் காக்கப் படுவர்! இது தான் herd immunity இன் பயன் பாடு!

இன்புழுவன்சாவிற்கு மருந்து இருக்கிறது.

1970 களில் இருந்தே இன்புழுவன்சா நோய் தீவிரமாக வரக் கூடிய ஆட்களில் பயன் படுத்தக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பாவனைக்கு வந்து விட்டன. நோய் குணங்குறிகள் வெளிப்பட்ட 48 மணிநேரத்திற்குள் வழங்கப் பட்டால், இந்த மருந்துகள் நோய் முற்றாமல் தடுக்கும் சக்தியுடையவை. சில சமயங்களில், இன்புழுவன்சா தொற்று வராமல் தடுக்க வேண்டிய நோயாளிகளில், முன் கூட்டிய (prophylaxis) தடுப்பு மருந்துகளாகவும்  இவை பயன்படுத்தப் படலாம்!. 

யானையை உதைக்கும் எலியாக இன்புழுவன்சா மாறுமா?
இரண்டு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து வந்திருக்கும் ஒரு தகவல் கோவிட் பற்றிய கவனத்தை கொஞ்சம் குறைத்து இன்புழுவன்சாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. பன்றிகளில் இருந்து வெகுவாக மனிதனுக்குத் தொற்றும் வாய்ப்புள்ள ஒரு இன்புழுவன்சா வைரசு இனங்காணப் பட்டிருக்கிறது. இது மனிதனில் பெருந்தொற்றாக உருவாகும் வாய்ப்பு என்னவென்று தெரியாத போதும், எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில், இன்புழுவன்சா வைரஸ் கோவிட் 19 இனை உருவாக்கும் வைரசை விட 30 மடங்கு வேகமாக மாறக் கூடியது! இதனால் தான் சாதாரண இன்புழுவன்சா வைரசுக்கே ஒவ்வொரு வருடமும் புதிதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. காலத்திற்குக் காலம் இன்புழுவன்சா வைரசு மிக வீரியம் பெற்று பெருந்தொற்றை ஏற்படுத்தி வருவது நடக்கிறது. மிகப் பாரிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் H1N1 என்ற வீரியம் மிக்க இன்புழுவன்சாவினால் உருவானது. முப்பது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தனர். இதே போன்ற இன்னொரு H1N1 வடிவத்தில் வந்த 2009 பெருந்தொற்றில் அரை மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எனவே , இது மீண்டும் நிகழலாம். 

ஆனால், நிலைமை பயப்படும்படி பயங்கரமாக இல்லை. மனிதர்களில் இந்த புதிய இன்புழுவன்சா வராமல், தடுப்பூசி அதற்கெதிராக தயார் செய்து வழங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், இந்த புதிய வைரஸ் இன்புழுவன்சா  எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப் படக்கூடியதாகவே இருக்கும் என்பதால், தீவிர நோய், மரணம் என்பன தவிர்க்கப் படக் கூடியவையாக இருக்கும். 

இதை விடவும், அனைத்து இன்புழுவன்சா வைரசுகளும், கோவிட் 19 இன் வைரசு போலவே சவர்க்காரத்தினாலும், அல்ககோல் கொண்ட தொற்று நீக்கிகளாலும் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை என்பதால், நாம் இப்போது பயன் படுத்தும் தொற்று தடுப்பு முறைகளும் எம்மை எந்த இன்புழுவன்சா வைரசுகளில் இருந்தும் பெரிதும் காக்கும்! 

எனவே, எதற்கும் இந்தக் குளிர்காலத்தில் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், கோவிட் 19 தொற்றுத் தடுப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். சுவாசக் குணங்குறிகள் ஏற்பட்டால் வைத்தியரை நாடி ஒரு தடவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்! இவையே இப்போதைக்கு இன்புழுவன்சா எமக்கு மேலதிக தலையிடி தராமல் இருக்க நாம் எடுக்கக் கூடிய இலகு வழிகள்!  

 தொடர்பு பட்ட செய்தி: https://www.sciencemag.org/news/2020/06/swine-flu-strain-human-pandemic-potential-increasingly-found-pigs-china 

 நன்றி
-ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது.

புளூ வருவது போல இனிமேல் கொரோனாவும் வந்து போகும் என்கிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

புளூ வருவது போல இனிமேல் கொரோனாவும் வந்து போகும் என்கிறார்கள்.
 
இது ட்ரம்ப் குழு கோவிட் வந்த போது ஜனவரியில் சொன்னது! இப்ப கோடை காலமும் வந்து கொரனாவும் எங்களோடு தொடர்ந்து வருகிறது!

கொரனா தானாகப் போகாது! அதனால் சீசனோடு அது வந்து போகும் வாய்ப்புகள் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

 யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!

"பூமியில் மனிதனின் இருப்பிற்கு ஒரேயொரு பாரிய சவால் வைரசுகளே!" - டாக்டர். ஜோஷுவா லெடபெர்க், (மருத்துவ நோபல் பரிசு 1958).

கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் , நாம் இன்னும் சில வைரஸ் நோய்களால் சுவாசப் பாதிப்பிற்குள்ளாவது வழமை. இன்புழுவன்சா எனப்படும் fபுளூ வைரஸ் தான் இந்த குளிர்கால சுவாசத்தொற்றுகளின் பிரதான காரணி. இன்புழுவன்சாவோடு சேர்ந்து முக்கியத்துவம் குறைந்த மூன்று வகையான கொரனாவைரசுகளும், றைனோ வைரஸ் எனப்படும் மூக்கொழுகல் வைரசும், RSV எனப்படும் இன்னொரு வகையான வைரசும் எம்மைக் குளிர்காலங்களில் தாக்குகின்றன.ஆனால், எல்லா வைரசுகளும் ஒன்றாக ஒரே காலத்தில் இப்படி வலம் வரும் போது, கோவிட் தொற்றையும் இவற்றையும் எப்படி இனம்பிரித்து அறிவது? 

இன்புழுவன்சாவுக்கு தனியான பரிசோதனை உண்டு
அதிர்ஷ்டவசமாக இன்புழுவன்சா வைரஸ் எங்கள் மூக்கில்/தொண்டையில் இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளக் கூடிய பரிசோதனைகள் ஏற்கனவே புளக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக வலம் வரும் இன்புழுவன்சா அனேகமானோரில் தீவிரம் குறைந்த நோயை மட்டுமே ஏற்படுத்துவதால், இந்த பரிசோதனையைச் செய்யாமலே இது காலவரை நாம் சமாளித்து வந்திருக்கிறோம். எதிர் வரும் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுவாச அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த இன்புழுவன்சா பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெறும் பரிசோதனையோடு மட்டுமன்றி, மக்களும் சில விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால், கோவிட் இன்புழுவன்சாக் குழப்பங்களைக் குறைக்கலாம்!  

இன்புழுவன்சா தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும், உலகில் வலம் வரும் மூன்று வகையான இன்புழுவன்சா வைரசுகளுக்கெதிராக தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் தயார் செய்து வழங்குகின்றன. இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு, இன்புழுவன்சா தொற்று ஏற்பட்டால் அவருக்கு நோய் வரலாம், ஆனால் தீவிர நோயாக அது இருக்காது. எனவே தான், வருடாந்தம் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50% பேரில் நோய் வந்தாலும் கூட, அது தீவிர நோயையோ, மரணத்தையோ ஏற்படுத்தாமல் தடுப்பதால், இன்புழுவன்சா தடுப்பூசி என்பது ஒரு உயிர் காப்பு மருந்து போலக் கருதப் படுகிறது. இன்புழுவன்சா தடுப்பூசியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு காரணம் herd immunity எனப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி". எந்த சமூகத்திலும் இன்புழுவன்சா நோயினால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஆனால் மருத்துவ காரணங்களால் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியாத மக்கள் சிலர் இருப்பர். அவர்கள் இன்புழுவன்சா நோயினால் தாக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடல் நிலை கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் இன்புழுவன்சா வைரசு பரவுவது குறைந்து, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோர் காக்கப் படுவர்! இது தான் herd immunity இன் பயன் பாடு!

இன்புழுவன்சாவிற்கு மருந்து இருக்கிறது.

1970 களில் இருந்தே இன்புழுவன்சா நோய் தீவிரமாக வரக் கூடிய ஆட்களில் பயன் படுத்தக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பாவனைக்கு வந்து விட்டன. நோய் குணங்குறிகள் வெளிப்பட்ட 48 மணிநேரத்திற்குள் வழங்கப் பட்டால், இந்த மருந்துகள் நோய் முற்றாமல் தடுக்கும் சக்தியுடையவை. சில சமயங்களில், இன்புழுவன்சா தொற்று வராமல் தடுக்க வேண்டிய நோயாளிகளில், முன் கூட்டிய (prophylaxis) தடுப்பு மருந்துகளாகவும்  இவை பயன்படுத்தப் படலாம்!. 

யானையை உதைக்கும் எலியாக இன்புழுவன்சா மாறுமா?
இரண்டு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து வந்திருக்கும் ஒரு தகவல் கோவிட் பற்றிய கவனத்தை கொஞ்சம் குறைத்து இன்புழுவன்சாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. பன்றிகளில் இருந்து வெகுவாக மனிதனுக்குத் தொற்றும் வாய்ப்புள்ள ஒரு இன்புழுவன்சா வைரசு இனங்காணப் பட்டிருக்கிறது. இது மனிதனில் பெருந்தொற்றாக உருவாகும் வாய்ப்பு என்னவென்று தெரியாத போதும், எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில், இன்புழுவன்சா வைரஸ் கோவிட் 19 இனை உருவாக்கும் வைரசை விட 30 மடங்கு வேகமாக மாறக் கூடியது! இதனால் தான் சாதாரண இன்புழுவன்சா வைரசுக்கே ஒவ்வொரு வருடமும் புதிதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. காலத்திற்குக் காலம் இன்புழுவன்சா வைரசு மிக வீரியம் பெற்று பெருந்தொற்றை ஏற்படுத்தி வருவது நடக்கிறது. மிகப் பாரிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் H1N1 என்ற வீரியம் மிக்க இன்புழுவன்சாவினால் உருவானது. முப்பது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தனர். இதே போன்ற இன்னொரு H1N1 வடிவத்தில் வந்த 2009 பெருந்தொற்றில் அரை மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எனவே , இது மீண்டும் நிகழலாம். 

ஆனால், நிலைமை பயப்படும்படி பயங்கரமாக இல்லை. மனிதர்களில் இந்த புதிய இன்புழுவன்சா வராமல், தடுப்பூசி அதற்கெதிராக தயார் செய்து வழங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், இந்த புதிய வைரஸ் இன்புழுவன்சா  எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப் படக்கூடியதாகவே இருக்கும் என்பதால், தீவிர நோய், மரணம் என்பன தவிர்க்கப் படக் கூடியவையாக இருக்கும். 

இதை விடவும், அனைத்து இன்புழுவன்சா வைரசுகளும், கோவிட் 19 இன் வைரசு போலவே சவர்க்காரத்தினாலும், அல்ககோல் கொண்ட தொற்று நீக்கிகளாலும் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை என்பதால், நாம் இப்போது பயன் படுத்தும் தொற்று தடுப்பு முறைகளும் எம்மை எந்த இன்புழுவன்சா வைரசுகளில் இருந்தும் பெரிதும் காக்கும்! 

எனவே, எதற்கும் இந்தக் குளிர்காலத்தில் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், கோவிட் 19 தொற்றுத் தடுப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். சுவாசக் குணங்குறிகள் ஏற்பட்டால் வைத்தியரை நாடி ஒரு தடவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்! இவையே இப்போதைக்கு இன்புழுவன்சா எமக்கு மேலதிக தலையிடி தராமல் இருக்க நாம் எடுக்கக் கூடிய இலகு வழிகள்!  

 தொடர்பு பட்ட செய்தி: https://www.sciencemag.org/news/2020/06/swine-flu-strain-human-pandemic-potential-increasingly-found-pigs-china 

 நன்றி
-ஜஸ்ரின்

ஒரு வேளை இதை எழுதிய ஐஸ்டின் வேறையோtw_lol: உங்களுக்கு நீங்களே நன்றி எல்லாம் சொல்லில் கொண்டு 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு வேளை இதை எழுதிய ஐஸ்டின் வேறையோtw_lol: உங்களுக்கு நீங்களே நன்றி எல்லாம் சொல்லில் கொண்டு 🤣😂

வாசித்தவர்களுக்கு நன்றி என்று முடித்திருக்கிறேன். இப்படி தான் என் எல்லா ஆக்கங்களையும் முடித்திருக்கிறேன்! தமிழ் முறை என்று நினைத்துச் செய்து வருகிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னும் நட் லூசாகி விடவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

வாசித்தவர்களுக்கு நன்றி என்று முடித்திருக்கிறேன். இப்படி தான் என் எல்லா ஆக்கங்களையும் முடித்திருக்கிறேன்! தமிழ் முறை என்று நினைத்துச் செய்து வருகிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னும் நட் லூசாகி விடவில்லை! 

ஓ ...மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.