Jump to content

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து

 

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 01,  2020 10:53 AM
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. 
 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/01105342/Boiler-blast-at-NLCs-second-thermal-power-plant.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி

நெய்வேலி:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர்.


 
இதேபோல் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/07/01114106/1660974/2-workers-died-after-boiler-explosion-at-NLC.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

 

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பதிவு: ஜூலை 01,  2020 16:48 PM
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் தற்போது உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவரை தேடும் பணி நடந்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதனிடையே என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து உயிர் இழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தொழிற்சங்கத்தினர் அனல் மின் நிலையம் முன்பு உரிய நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். பின்னர் என்.எல்.சி. தலைவர் ராகேஷ்குமாருடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த சூழலில் பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/01164827/NLC-7-killed-in-boiler-accident.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்

 

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். மேலும் படுகாயம் அடைந்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பதிவு: ஜூலை 02,  2020 05:45 AM
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது பொதுத்துறை நிறுவனமான ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்‘ (என்.எல்.சி.). இங்குள்ள 3 சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அதன் மூலம் 5 அனல் மின்நிலையங்களில் மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 8 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், 4,500 பொறியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2-வது அனல் மின்நிலையம் 1,470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. மின் உற்பத்தி செய்வதற்கு 7 அலகுகள் உள்ளன. ஒரு அலகிற்கு 210 மெகாவாட் என்கிற அளவில் மின்உற்பத்தி நடைபெறுகிறது.


இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள 6-வது அலகில் கடந்த மே மாதம் 7-ந் தேதி கொதிகலன் வெடித்ததில் 2 நிரந்தர தொழிலாளர்கள், 3 ஒப்பந்த தொழிலாளர்கள் என்று 5 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நடைபெற்று, 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில் நேற்று அங்கு மீண்டும் ஒரு பயங்கர விபத்து நடந்து, 7 பேரின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

2-வது அனல் மின்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் முதற்கட்ட பணி தொடங்கியது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். காலை 8 மணிக்கு 5-வது அலகின் கொதிகலன் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். சற்று தூரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினர்.

கொதிகலன் வெடித்து தீப்பிடித்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த மத்திய தொழிலக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மதியம் 12 மணிக்கு பின்னர் இறந்தவர்களின் உடல்களை ஒவ்வொன்றாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர். இதன் மூலம் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. உடல்கள் முழுவதும் கருகி உருக்குலைந்து காணப்பட்டதால், பலியானவர்களை அடையாளம் காண்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னரே அவர்கள் யார்? என்பது குறித்து தெரியவந்தது.

பலியானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சிலம்பரசன், நெய்வேலி அருகே உள்ள காப்பான்குளம்.

2. பத்மநாபன், மேலக்குப்பம்.

3. அருண்குமார், கொள்ளிருப்பு.

4. ராமநாதன், ஆத்திரிக் குப்பம்.

5. நாகராஜ், நெய்வேலி.

6. வெங்கடேசபெருமாள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கள்ளமேடு கிராமம்.

மேலும் இந்த பயங்கர விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து, பலியானவர்களின் குடும்பத்தினர், அனல்மின்நிலையத்தின் முன்பு திரண்டு, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லக்கூடாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசாரும், மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

சமரச பேச்சை தொடர்ந்து 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நெய்வேலிக்கு விரைந்து சென்று அனல்மின்நிலையத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். அவருடன் நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சகமுரியும் சென்று இருந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்த விபத்தை தொடர்ந்து 2-வது அனல் மின் நிலையத்தின் தலைமை அதிகாரி கோதண்டம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 4, 5, 6 மற்றும் 7-வது அலகுகள் முழு பாதுகாப்பு தணிக்கைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக நெய்வேலி இல்லத்தில் என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் மற்றும் இயக்குனர்களுடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02010518/6-workers-killed-in-boiler-explosion-at-Neyveli-Power.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
பதிவு: ஜூலை 07,  2020 08:08 AM
கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு, 5 அனல் மின்நிலையங்கள் மூலமாக மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 5-வது அலகின் கொதிகலன் கடந்த 1-ந்தேதி திடீரென்று வெடித்துச் சிதறியது.

இதில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 2-வது அனல் மின்நிலைய துணை முதன்மை பொறியாளர் சிவக்குமார்(வயது 53), சி.ரவிச்சந்திரன் (50), செல்வராஜ் (52) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தொடர்ந்து நெய்வேலி 18-வது வட்டத்தை சேர்ந்த நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன்(45), தொப்ளிக்குப்பம் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி இளங்கோ(49), இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம்(48) ஆகியோர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.  இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பேர் 4 கவலைக்கிடமாக உள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07080803/13-dead--in-boiler-explosion-at-NLC-power-plant.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும்; வைகோ

vaiko-urges-to-give-solatium-to-deceased-workers-families வைகோ: கோப்புப்படம்

சென்னை

விபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நேர்ந்த இடத்திலேயே பணிபுரிந்த பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் துணை முதன்மைப் பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் இரவிச்சந்திரன், வைத்தியநாதன், ஜோதிராமலிங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான செல்வராஜ், இளங்கோவன், ஆனந்தபத்மநாபன் ஆகிய 7 பேரும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களில் மேலும் நான்கு பேர் மிகவும் கவலைக்கு இடமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஜூன் 1 ஆம் தேதி என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தும், மேலும் சிலர் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆனால், இந்தக் கருணைத் தொகை ரூ.30 லட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்எல்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

என்எல்சி நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மீறியதாலும், பராமரிப்புப் பணிகளின் அலட்சியத்தாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டபோதும் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அனல்மின் நிலையத்தை இயக்கியதுதான் தொழிலாளர்கள் உயிர் பலியானதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.

தொழிலக விபத்தில் உயிரிழப்பவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை என்பது சட்டபூர்வ உரிமையாகும்.

இந்நிலையில், உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தையும் சேர்த்து வழங்க வேண்டும்.

கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தாலும், உயிரிழப்புக்கு எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/563111-vaiko-urges-to-give-solatium-to-deceased-workers-families-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

 

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
பதிவு: ஜூலை 12,  2020 13:51 PM
சென்னை,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 1-ந்தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூலை 05 -ம் தேதி மேலும் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 ஒப்பந்த ஊழியர்கள், 2 பேர் நிரந்தர ஊழியர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், இந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நெய்வேலி என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/12135136/NLC-Death-toll-in-Boiler-accident-rises-to-14.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.