• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

அழகே அழகே தமிழ் அழகே

Recommended Posts

தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும்

 

ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களின் மனதும் கணப்பொழுதில் தமிழகத்தில் சங்கமித்து விடுகிறது. இந்தச் சூழலில்தான் தமிழக சினிமாப்பாடல் வரலாற்றில் ஒரு பாடல் பூத்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இது தனித்துவம் என்பதை நிராகரிக்க முடியாதுதானே. தமிழில் இடையின எழுத்தாக தன்னை காட்டிக்கொள்ளும் “ள” கரந்தான் இதற்கு காரணம் “ள” செய்த சாதனையை பார்த்தீர்களா? ஆனால் இந்த பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் அதே தமிழகத்தில் உற்பத்தியாகியது. இது பலருக்குத் தெரியாது. இந்தப்பாடலிலும் தமிழின் இடையின எழுத்தாகிய “ழ”கரம் ஆட்சி செய்கின்றது. ஏந்தப்பாடலில் தனித்துவம் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே. “ழ” கரம் என்பது தமிழ் மொழிக்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பான எழுத்து என்பது தமிழறிஞர்கள் கருத்து. இரண்டு பாடல்களையும் ஒவ்வொரு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓன்று தமிழக சினிபாப் பாடல் மற்றையது தமிழீழ விடுதலைப்பாடல். இரு கவிஞர்களும் தமிழக சினிமாவிலும் தமிழிலும் அறியப்பட்டவர்கள்தான்.

 

இனியவளே இளையவளே

ள…ள…ள…ள………….

அறிந்தவளே தெரிந்தவளே

தள்ளித்தள்ளி இருந்தவளே

எள்ளி எள்ளி சிரித்தவளே

துள்ளித் துள்ளி நடந்தவளே

கள்ளி கள்ளி அவளிவளே

 

அட ளகரத்தில் இன்னும் எத்தனை அழகுச்சொற்கள் உண்டு என்றும் சிலர் அங்கலாய்ப்பீர்கள். இதுதான் அந்தப்பாடலின் பல்லவி. இப்படி பல்லவியை தொடங்கயவர் யார்? கவிஞர் பா. விஜய் அவர்கள்தான். சாதனைப்பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் எப்படியோ ளகரத்தை உச்சரித்து சாதனை படைத்து விட்டார். தற்கால சினிமாப்பாடல்களில் சினிமாவில் இலக்கணம் இறந்துவிடவில்லை என்று இந்தப்பாடல் ஆறுதல் வேறு சொல்கிறது. நிச்சயமாக பலரும் இந்தப்பாடலை கேட்டு இருப்பார்கள். பா.விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள்

 

(சரணத்தைப்பார்க்க முன்பு ) இப்போது மறுபக்கம் திருப்புங்கள். இதைக் கேட்டிருக்கின்றீர்களா? இல்லையேல் வாசியுங்கள்.

 

அழகே அழகே தமிழ் அழகே

பழகிட ழகரம் எளிதழகே

அழகே அழகே அழகே

அழகு அழகு அழகு அழகு

 

இப்படி அந்தத் தமிழீழப் பாடல் பல்லவியுடன் தன் பயணத்தை தொடர்கிறது. இதில் முக்கிய விடயம் பா.விஜய் அவர்களின் ளகரம் பாடல் வெளிவருவதற்கு சில வருடங்களுக்கு முன்பே இந்தப்பாடல் வெளிவந்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் இரத்தம் ஓடும் தமிழர்கள் மனங்களில் வேரூன்றி நிற்கும் தனித்துவமான கவிஞர்தான் அறிவுமதி. அந்த மதிக்குள் (நிலவுக்குள்) இருந்து வெளிவந்த அறிவின் வெளிப்பாடுதான் இது. “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை” என்று சொல்லி புகழடைந்த நித்தியஸ்ரீ அவர்களின் குரலிலும் “ தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியவிட்டு” பொம்மை செய்த கிருஸ்ணராஜ் அவர்களும் இணைந்துதான் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். ஆயுத எழுத்தும் (ஃ) ழகரமும் தமிழ் மொழிக்கு மட்டும் சிறப்பான எழுத்துக்கள் அல்லவா? பா.விஜய் பாடலின் சரணத்தைக் கேட்க முன்பு அறிவுமதி அவர்களின் பாடலின் முதற் சரணத்தைக் கேட்போமா?

 

மொழி அழகு வழி அழகு

அழகு அழகு அழகு

தமிழ் மொழி அழகு புலி விழி அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

 

ஆகா எத்தனை அழகு. தமிழ் மொழிக்குத்தான் எத்தனை அழகு. தமிழ் இனத்திற்குத்தான் எத்தனை அழகு. அந்த தமிழ் மொழியை காத்தல்தானே தமிழருக்கு அழகு. இல்லையேல் எமக்கு பெரும் இழிவு. இல்லையேல் எம்மொழிக்கும் அழிவு. இப்படியெல்லாம் கணப்பொழுதில் சிந்தனை வரவேண்டுமே.

 

இனி இதைக் கேளுங்கள். (பாருங்கள்) இது பா.விஜய் அவர்களின் “இனியவளே இளையவளே” பாடலின் சரணம் (ஏற்கனவே பல்லவியை பார்த்து விட்டோம்) மேலும் ளகர அலைகள் அடிப்பதை அவதானியுங்கள்.

 

உள்ளம் உள்ளம் உள்ளம் -அது

துள்ளும் துள்ளும் துள்ளும்

வெள்ளம் வெள்ளம் வெள்ளம் -உயிர்

அள்ளும் அள்ளும் அள்ளும்

வெள்ளை வெள்ளை நிலவு –அதில்

கொள்ளை கொள்ளை கனவு

பிள்ளை பிள்ளை மனது எனக்குள்ளே

கள்ளம் கள்ளம் ஏது – சிறு

பள்ளம் பள்ளம் ஏது

குள்ளம் குள்ளம் ஏது எனக்குள்ளே

மேளம் கொட்டும் நன்னாள்

தாளம் கேட்கும் பொன்னாள்

அந்த நாளும் எந்நாள் நமக்குள்ளே.

 

ஏத்தனை ளகரம் ஆட்சி செய்கிறது என்பது தெரிகிறதுதானே. இந்த ளகர சொற்கள் புதுமையான சொற்களா? ஏற்கனவே அடிக்கடி தினமும் எப்டியோ உச்சரிக்கும் அல்லது கேட்கும் சொற்கள்தான். ஆனால் பாடல் வடிவில் தனித்துவமான ளகரமாக வந்ததால் பாடற் சந்தையில் இதற்கு கிராக்கி ஏற்பட்டது ஏன்னவோ உண்மைதான். பா.விஜய் இப்படி முடிக்கின்றார்.

 

ளகரம் இது போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

 

சரி இன்னும் கொஞ்சம் ளகரம் தேவையெனில் புதுமை ளகர சொற்களை அள்ளிக்கொடுக்கும் கவிவள்ளளா பா.விஜய். (வள்ளல்) பா.விஜய் தனது கவியிலே பல சந்தர்ப்பங்களில் எப்படியோ தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் இந்தப்பாடல் “பொய்” என்ற பெயரில் வெளிவந்த ஒரு தமிழக திரைப்படத்தில் இடம்பெற்றது. படத்தின் பெயர்தான் பொய். பாடல் பொய்யல்ல. உண்மைத்தமிழ.; வித்தகக் கவிஞரின் வரிகளுக்கு வித்தியாசாகர் இசை வழங்கியுள்ளார்.

 

இனி இந்த வரிகளை சுவைப்போம். அறிவுமதி என்றால் அவரது உணர்வுக்கவிகளில் (அதாவது வியாபாரம் சாராத)தமிழ் வாசம் வீசுவது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படைக்கருத்து. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழகம் இ தமிழீழம் இ பிற சர்வதேச நாடுகளில் வெளிவந்த விடுதலைப் போராட்ட பாடல்களுள் இந்தப்பாடல் ஒரு புரட்சிசெய்தது என்றால் மிகையாகாது.

 

யாழழகு குழழழகு

அழகு அழகு அழகு

வரும் யாழ் அழகு

சுடும் குழல் அழகு

அழகு அழகு அழகு

 

என்று இரண்டாவது சரணம் ஒலிக்க மூன்றாவது சரணம் இப்படி ஒலிக்கின்றது.

 

சூழல் அழகு ஈழம் அழகு

அழகு அழகு அழகு

போர்ச்சூழல் அழகு

தமிழீழம் அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

அறிவுமதி என்ற மரத்தில் இருந்து உதிர்ந்த கவிதைப்பூக்கள் எத்தனை அழகு அந்த அழகுப்பாடல். “ஒளிமுகம் தோறும் புலி முகம்” என்ற இசைத் தொகுப்பில் உலாவரும் பாடல். கவி இசையமைக்க நித்தியஸ்ரீ கிருஸ்ணராஜ் இணைந்து பாடலைப் பாடினாhகள்;. யாழழகு என்றும் வரும் யாழ் அழகு. ஏன்றும் அறிவுமதி அசத்தும் இரண்டு யாழும் எதுவென்று புரிந்ததா? “துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை” என்பார்கள். இங்கு பார்த்தீர்களா? இந்தப்பாடலை வைத்து இப்படி ஒரு பொன்மொழி உருவாக்கலாமா? “துணிந்த கவிஞனுக்கு சுடும் குழலும் அழகாம்” சரி புல்லாங்குழல் பற்றி அவர் பேசவில்லையா?

 

எது அழகு? ஈழம் அழகு. ஈழத்தின் சூழல் அழகு. இ எம்மொழி அழகு. இ தமிழின் வழியும் தமிழனின் வழியும் அழகு. அறிவுமதி அவர்களுக்கும் அழகை கூட்டி இருக்கின்றது. இந்தப் பாடல். நிச்சயம் இதைக் கேளுங்கள். உச்சரிப்பு பிரமாதம். உணர்வும் பெருவானம். ஏங்கள் இனிய வாழ்வு தொடுவானம். தமிழ் காக்க கொடுப்போம் உயிர்த்தானம். இனி போகாது மொழி மானம். அதற்கு சாட்சி இந்தக்கானம்.

 

- புரட்சி -

 

Share this post


Link to post
Share on other sites

இதுவும் "ல கரம்" கவிஞர்  கண்ணதாசன்,   m . s . விஸ்வநாதன், s . b . பாலசுப்பிரமணியம்........!

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
 
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
 
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
 
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா........!

 

 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்……

தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப்புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே…
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…..ஆ….ஆ…..ஆ….
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்…..
ஆ…..ஆ….ஆ…..

செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..தமிழ் மொழியாம்)

கம்பன் நாட்டாழ்வாரும் கவி அரசி ஔவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…ஆ….ஆ..ஆ…
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம்மொழி நம் மொழி…அதுவே……

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்….
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ…ஆ…)
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ..ஆ…..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ்மொழியாம்…தமிழ்மொழியாம்..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழியாம்…)
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் (ஆ…ஆ….ஆ…)
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..

Share this post


Link to post
Share on other sites

 

Saravanan A
9 months ago
மலையாளத்திலும் "ழ" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் "ழகரம்" மற்றும் "ற" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி "ஹளெ கன்னட" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில்  இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த "ப" (pa) "ஹ" (ha) வாக "வ" (va) "ப" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli),  புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). 

தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர.  தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை)  இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். 

முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் "ழ" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்

 

Share this post


Link to post
Share on other sites

அன்னைத் தமிழுக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா 

 

Share this post


Link to post
Share on other sites

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே  
நீயும் பெண்தானே  - அடி  
நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு  
கேட்டால் சொல்வேனே  - நீ  
கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு  
எழுந்தால் அருவி  
நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி  
மணந்தால் மனைவி  
பெற்றால் தாயல்லோ  


சிறு நதிகளே  
நதியிடும் கரைகளே  
கரைதொடும் நுரைகளே  
நுரைகளில் இவள் முகமே தினம் மோதும் கரை தோறும்  
அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும்  
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும்  
அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும்  
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
.
காதலி அருமை பிரிவில்  
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும்  
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே  


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே  
வட்டமிடும் நதியே  
வளைவுகள் அழகு  - உங்கள்  
வளைவுகள் அழகு

ஹோ  
மெல்லிசைகள் படித்தல்  
மேடு பள்ளம் மறைத்தல்  
நதிகளின் குணமே  - அது  
நங்கையின் குணமே 
.

சிறு நதிகளே  
நதியிடும் கரைகளே  
கரைதொடும் நுரைகளே  
நுரைகளில் இவள் முகமே 

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி  
பூக்களிலே தேனாகி  
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி  
தலைவனிடம் பாயாகி  
சேயருகே தாயாகும் பெண்ணே  


பூங்குயிலே பூங்குயிலே  
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால், பெண் நினைத்தால்  
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
.
நதியே நதியே காதல் நதியே  
நீயும் பெண்தானே  - அடி  
நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு  
கேட்டால் சொல்வேனே  - நீ  
கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 

Share this post


Link to post
Share on other sites

தமிழின் 247 எழுத்துக்களும் இசை வடிவில்

 

Share this post


Link to post
Share on other sites

தாயே தமிழே வணங்குகிறோம்' - தமிழ்தாய்க்கு ஒரு புது வாழ்த்து.

 

Share this post


Link to post
Share on other sites

 

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2)
சுகம் பல தரும் தமிழ்ப் பா  (2)
சுவையொடு கவிதைகள் தா  (2)
தமிழே நாளும் நீபாடு  (2)
{அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா}
தமிழே நாளும் நீபாடு
தமிழே நாளும் நீபாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊண்மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணம் ஏது
என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

Share this post


Link to post
Share on other sites

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்

 

 

Share this post


Link to post
Share on other sites

தாயே தமிழே வணக்கம்

 

 

Share this post


Link to post
Share on other sites

மல்லி மலர் மணமே அல்லி அலர்கவினே

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

எங்கள் தமிழ்மொழி! ...

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே!

  

மகாகவி  சுப்பிரமணிய பாரதியார்

 

 

Share this post


Link to post
Share on other sites

காப்பியனை ஈன்றவளே 

 

Share this post


Link to post
Share on other sites

புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகப் பாரதிதாசன் இயற்றிய “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்று தொடங்கும் பாடல் 1971-ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! 
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! 
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே 
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! 

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? 
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? 
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் 
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? 

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! 
செயலினை மூச்சினை உனக்களித்தேனே! 
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு 
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! 

முந்திய நாளினில் அறிவும் இலாது 
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது 
செந்தாமரைக் காடு பூத்தது போலே 
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

 

Share this post


Link to post
Share on other sites

ஈழம் - நாட்டுப்பண்

வான்முட்டும் எழில்கொண்டு
வளமாகவும் - இன்பத்
தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து
 நலமாகவும்

யாழ்ப்பாண நகரோடு 
பெரும்கல்வியும் - எம்மை
வாழ்விக்க உணவூட்டும்
திருவன்னியும்

மட்டு வாவிக்குள் மீன்பாடும்
இசை சந்தமும் - வெற்றி
மேவும் வெண் தீவெங்கும்
 உயிர் சொந்தமும்

கிளிநொச்சி வளமுல்லை
அம்பாறையும், தெள்ளத்
தெளிந்தோடும் பொன்னருவி
ஆற்றோரமும்

சூழ்கொண்ட மன்னாரின்
முத்தாரமும் - எங்கும்
சுடரேற்றும் திருகோண
மலை மொத்தமும்

நாளும் நிலை உயர்வாக
செயலாற்றுவோம் - எங்கள்
ஈழத்தமிழ் திருநாட்டின்
புகழ்போற்றுவோம்

வாழிய வாழிய வாழியவே
எங்கள் ஈழத் தமிழ்த்
திருநாடு வாழியவே!

  ராகம் : மத்தியமாவதி

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தாய் வாழ்த்து

 

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மொழியின் சிறப்பு கவிதை | Tamil mozhiyin sirappu kavithai speech | தமிழ் கவிதைகள் | Vishnoo

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஓர் சீரான இடைவெளியில் வாக்குகளை பெற்றிருப்பது கூட்டமைப்பும் முன்னணியுமே.
  • ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 
  • டக்ளஸின் ஈபிடிபி போல ஒன்றிரண்டுக்கு மேல் போகாது. அங்கயன் யாழ்ப்பாணத்தில் அதிவிருப்பு வாக்குகளையும், பிள்ளையான் மட்டக்களப்பில் அதிவிருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மக்களைக் “கவனித்து” தம் வாக்குவங்கியை இன்னும் வளர்ப்பார்கள். தாமரைமொட்டு அரசும் சகல ஊக்குவிப்புக்களையும் செய்யும். எனவே, மக்கள் முன்னணி கூட்டமைப்பு, மக்கள் கூட்டணி வாக்குகளைத்தான் பங்குபிரிக்கலாம். உதிரிக்கட்சியாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்.
  • ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.
  • தேர்தல் பின்னடைவுகளை மறைப்பதற்காக“ஒற்றுமை”யின் பெயரால் கூட்டமைப்பு நாடகம்: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும், பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களாக நாம் எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களுக்கும், கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது. இவ்வாறான நிலையில் “ஒற்றுமை” யான செயற்பாடு என்ற பெயரில் பின்னடைவுகளை மறைத்து சுயலாப அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகமாடுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் தான் உருவக்கப்பட்டது. இருப்பினும் அதில் இருப்பவர்களால் தனிநபர் சார்ந்த செயற்படுகளால் தான் பிளவுகள் ஏற்பட்டன என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள  வேண்டும். அதற்கு பின்னர் பல்வேறு முயற்சிகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது கூட்டமைப்பு அனைத்தையும் முடக்கியது. சரி, அந்த வரலாற்றை நாம் விடுவோம். மிக அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சிங்கள மக்கள் தமது தெரிவை சிங்கள, பேரினவாத பௌத்த சித்தாந்தத்தினை மையப்படுத்தி தீர்மானித்து விட்ட நிலையில் தமிழ் மக்களின் இருப்பினையும், பாதுகாப்பினையும், அடிப்படையாக வைத்து தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான முயற்சியை எடுத்தார்கள். அந்த சமயத்தில் நாங்கள் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றியே பங்கேற்றோம். நியாயமான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காக கொண்டு செயற்பட்டோம். ஏனைய தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்த நிபந்தனைகளை நாம் ஒவ்வொன்றாக வலுப்படுத்தினோம். அச்சமயத்தில் தான் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். தமிழரசுக்கட்சி ரணில் அரசுடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை அவர்களே நிராகரிப்பது என்பது சங்கடமான விடயம். அதனால் அவர்கள் அதற்கு உடன் பட்டிருக்கவில்லை. அதில் நியாயம் உள்ளது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ,பி.ஆர்.எல்.எப், விக்கினேஸ்வரன் ஆகியோர் இடைக்கால அறிக்கைவெளியானதும், அது ஒற்றையாட்சியை அடியொற்றியது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள். அத்தகையவர்கள் நாம் முன்வைத்த நிபந்தனையின் நியாயத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகக்குறைந்தது ஆதரிக்கவுமில்லை. அமைதியாக இருந்தார்கள். இதனால் தான் நாம் அந்த நிபந்தனையில் கையொப்பம் இடுவதை தவிர்த்து வெளியேறினோம். தமிழ் அபிலாஷைகளை ஒருநாளும் ஒற்றையாட்சிக்குள் வென்றெடுக்க முடியாது. ஆனால் தமிழரசுக்கட்சி அதனையே செய்ய விளைந்தது. அதேபோன்று தான் ஜெனீவா விடயத்திலும் நடந்து கொண்டது. இப்படியான நிலைமைகள் காணப்படுகின்றன என்பதை நாம் எமது மக்களுக்கு படிப்படியாக எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினோம். எமக்கான தேசம் அவசியம் என்பதையும், இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதற்கான முறைமைகளையும் சுட்டிக்காட்டினோம். கூட்டமைப்பு விடுகின்ற அனைத்து சுத்துமத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்தினோம். எமது அரசியல் கோட்பாடுகளுக்கு அமைவாக நாம் நேர்மையாக செயற்பட்டோம். அதன் பிரதிபலிப்பே தற்போது எமக்கான ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். ஒரு தசாப்த போராட்டத்திற்கு கிடைத்தவொரு முதற்கட்ட வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். அவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வாக்கு வங்கி மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. பிரதிநித்துவங்களும் இழக்கப்பட்டாகிவிட்டது. இவ்வாறான நிலையில் கொள்கையிலிருந்து விலகியதாலேயே தமக்கு பின்னடைவுகள் ஏற்பட்டது என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறைப்பதற்காக தற்போது ஒற்றுமையாக தமிழ் மக்கள் சார்ந்து பாராளுமன்றிலும், வெளியிலும் செயற்படுவோம் என்று அழைப்பு விடுகின்றார்கள். இதுவொரு அரசியல் நாடாகமாகும். ஆகவே எமது மக்கள் அளித்த வாக்குகளை மறந்து அவர்களுக்காக நாம் வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு கூட்டமைப்பின் பின்னால் சென்று மீண்டும் ஒரு தவை ஏமாறமுடியாது. எமது மக்களையும் ஏமாற்றமுடியாது. ஆகவே அவர்கள் எவ்விதமான நடந்துகொள்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்கள் எமதுகொள்கைகளை ஏற்று இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்றார்.   https://www.virakesari.lk/article/87732